பகுதி நேர தொழிலில் ஈடுபடுவதற்கான பிஸினஸ் ஐடியாக்கள்
குடும்ப பொருளாதார நிலை, தனி மனித வருமானம், வங்கி கடன், குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களின் அடிப்படையில் பகுதிநேர தொழில் செய்ய விரும்பும் தனிநபர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும், பெருநகரங்களில் பகுதி நேர தொழில் செய்வது என்பது அவசியம் என்ற அளவில் செலவினங்கள் பெருகியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் எந்த செலவுகளையும் குறைக்க இயலாது என்பதால் வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளை தான் அனைவரும் தேடி ஓடுகின்றனர். பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற அடிப்படையில் பகுதிநேர தொழில் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
கணினி தொழில்நுட்பம்
இந்த தொழில் பிரிவு தற்காலத்திற்கு மிகவும் ஏற்ற ஒன்றாக உள்ளது. சி ப்ரோக்ராம், சி.பிளஸ்.பிளஸ் ப்ரோக்ராம், ஜாவா ப்ரோக்ராம், டாட் நெட் ஃப்ரேம்வொர்க் ப்ரோக்ராம், எச்.டி.எம்.எல் மற்றும் டெல்பி போன்ற கணினி மொழியில் ப்ரோக்ராம் எழுத கூடிய திறன் பெற்றவர்களுக்கு பிரகாசமான பார்ட் டைம் தொழில் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேர உழைப்பின் மூலமாக ஒரு மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் ஈட்ட முடியும்.
லோகோ கிரியேஷன்
கம்ப்யூட்டர் தொடர்பான இந்த துறையிலும் பகுதி நேர பணி வாய்ப்புகள் இருக்கின்றன. நகர்ப்புறங்களில் நிச்சயம் கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் கூடுதலாக சில பயிற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பகுதி நேர தொழிலை செய்து வரலாம். கிராபிக்ஸ் டிசைன், போட்டோ எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி லோகோ வடிவமைப்பு பணியை செய்து வரலாம். அதாவது, தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் தங்களை அடையாளப்படுத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு லோகோ டிசைன் செய்ய வேண்டியது இருக்கும். அதன் அடிப்படையில் கிரியேட்டிவிட்டி உள்ள தனி நபர்களுக்கு இந்தத் துறையில் தொடர்ந்த வாய்ப்புகள் உண்டு.
விர்ச்சுவல் அசிஸ்டன்ட்
பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இதர பகுதிகளில் அமைந்துள்ள பெரிய தொழில் நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு நேர்முக உதவியாளராக பகுதி நேரத்தில் தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். அதாவது, அவர்களுடைய தினசரி சந்திப்புகள், அன்றாட வேலைகள், வரக்கூடிய மின்னஞ்சல் விபரங்கள் மற்றும் அதற்கான பதில்கள் ஆகியவற்றை தகுந்தமுறையில் கவனித்துக் கொள்வதற்கு இந்த தொழில் பிரிவு வாய்ப்பினை அளிக்கிறது. தனி நபர்களின் அணுகுமுறையை பொறுத்து பெருநிறுவன அதிகாரிகள் அவர்களை இந்த பணிக்கு நியமனம் செய்து கொள்கிறார்கள். பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற நிலையில் இது ஒரு நவீன தொழில் பிரிவு ஆகும்.
பார்ட் டைம் ரைட்டர் ஜாப்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தொழில் முயற்சி மற்றும் அதற்கான வியூக வடிவமைப்பு, குறிப்பிட்ட தயாரிப்பை வாடிக்கையாளரிடம் அறிமுகப்படுத்துவது, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பல்வேறு வகையான எழுத்து துறை சம்பந்தமான பணிகளை செய்வதற்கு தனிநபர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கின்றன. மேலும், இ-புத்தகம் மற்றும் கதைகள் ஆகியவற்றை இணைய தளங்களில் வெளியிடுவதற்காக தனி நபர்களை அணுகக்கூடிய பல்வேறு இணைய தளங்களும் இருக்கின்றன. அவற்றின் மூலம் பகுதி நேர ரைட்டர் என்ற முறையில் பணியாற்றி வருமானம் பெற முடியும்.
செல்லப்பிராணிகள் ஸ்டோர்
பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற வகையில் இந்த தொழில் பிரிவு குறிப்பிட்ட அளவு முதலீடு போட்டு பகுதிநேர தொழிலாக செய்ய வேண்டிய ஒன்றாகும். நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மக்கள் தங்களுடைய வளர்ப்பு பிராணியாக நாய், பூனை, கிளி, புறா உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறார்கள். அவற்றிற்கான பராமரிப்பு மற்றும் உணவு வகை ஆகியவற்றிற்காக தனிப்பட்ட கடையை அணுகி தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். அதன் அடிப்படையில் பகுதிநேரமாக இந்த தொழிலை முதலீட்டாளர்கள் செய்து வர முடியும். மேலும், வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் செல்போன் மூலம் தரும் ஆர்டர்களுக்கு டோர் டெலிவரியும் கொடுக்க இயலும். அதற்கு ஒரு பணியாளர் இருந்தால் கூட போதுமானது.
கார்டனிங் பிசினஸ்
இந்த தொழில் பிரிவு பெரிய போட்டிகள் இல்லாத நிலையில், பார்ட் டைம் முறையில் செய்யக்கூடிய விதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டிய பிரிவு ஆகும். நகரங்களில் உள்ள வீடுகளில் விதவிதமான செடி, கொடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதுடன் தோட்ட பகுதியையும் ஆர்வமாக பராமரிக்கும் பெரிய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். என்னதான் ஒரு தோட்டக்காரர் மூலம் பராமரித்து வந்தாலும் கூட ஹார்ட்டிகல்ச்சர் டெக்னாலஜிஸ்ட் என்ற நிலையில் ஒருவருடைய தனிப்பட்ட ஆலோசனைகளை அனுசரித்து பல மாற்றங்களை செய்து கொள்ள பலரும் விரும்புவார்கள். அதன் அடிப்படையில் தண்ணீர் விடுவது, உரம், வாராந்திர மற்றும் மாதாந்திர பராமரிப்பு. பூச்சிக்கொல்லி. புதுமையான தாவரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தாவரவியல் தொழில்நுட்பங்களை அளித்து பகுதி நேர தொழிலாகவும் இந்த பிரிவை செய்து வரலாம்.
மார்க்கெட்டிங் கன்சல்டன்சி
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் மார்க்கெட்டிங் கன்சல்டன்சி என்ற தொழில் பிரிவை பகுதி நேரமாக செய்யலாம். முதலில் சமூக வலைதளங்களில் ஆரம்பித்து படிப்படியாக தனி நபர்களிடம் தொடர்ந்து ஆலோசனைகளை அளித்து வருவதன் மூலம் தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், வங்கிக் கடன் விவரங்கள், இயந்திரங்கள் வாங்க கூடிய முறை, இதர அரசு சார்ந்த லைசன்ஸ் வகைகளை பெறுவதற்கான முறை உள்ளிட்ட அடிப்படையான பல்வேறு விஷயங்களை தங்களுடைய அனுபவம் சார்ந்து தனி மனிதர்களுக்கு அளிப்பதன் மூலம் இந்த பிரிவில் வருமானம் பெற இயலும்.
சிறு தானிய பிஸ்கட் தயாரிப்பு
நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது என்பது பொதுமக்களுடைய பொதுவான வழக்கமாக ஆகிவிட்டது. அந்த வகையில் சத்துக்கள் நிரம்பிய பிஸ்கட் வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தும் ஒருவகையில் பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற வகையில் பலருக்கும் வருமானத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக இருக்கும். அந்த அடிப்படையில் சிறுதானிய பிஸ்கட் தயாரிப்பு மூலம் வாடிக்கையாளர்களை கவர இயலும். இதற்கு பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் எதுவும் இல்லை. பெரிய அளவிலான குக்கர் மற்றும் பிஸ்கட் அளவுகளை பொருத்தமாக அமைப்பதற்கான தட்டுகள் இருந்தால் மட்டும் போதும். பல்வேறு சிறு தானிய வகைகளை கொள்முதல் செய்து வைத்து தகுந்த பக்குவத்தில் அவற்றை குக்கரில் இட்டு வேகவைத்து பிஸ்கட் வடிவத்தில் எடுத்து விற்பனைக்கு அனுப்ப இயலும். மூலப்பொருள் என்ற வகையில் சாமை, திணை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்கள் தவிரவும் நாட்டுச் சர்க்கரை, வெண்ணை மற்றும் ஏலக்காய் ஆகிய பொருட்கள் இருந்தால் அழகாக சிறுதானிய பிஸ்கட் தயார் செய்து கொள்ளலாம்.
இடியாப்ப பிசினஸ்
இந்த தொழில் எல்லா காலங்களிலும் வர்த்தக வாய்ப்புகளை கொண்டுள்ள பிரிவாகும். அலுவலகம் செல்பவர்களுக்கு காலை உணவு என்ற வகையில் இடியாப்பம், தேங்காய் பால் அல்லது பாயா ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிறிய உணவகங்கள், மெஸ், கேண்டின் அல்லது திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு நிச்சயமான ஆர்டர் கிடைக்கக்கூடிய தொழில் பிரிவும் இதுவாகும். பகுதிநேரமாக ஆரம்பித்து செய்யக்கூடிய தொழிலாக இருந்தாலும் முழு நேர தொழிலாக மாறக் கூடிய சந்தர்ப்பம் இந்த பிரிவுக்கு இருக்கிறது. இடியாப்பம் தயாரிப்பதற்கான சிறிய அளவில் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் உள்ளன. அதை பயன்படுத்தி அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகிய வித விதமான வழிகளில் இடியாப்பம் தயார் செய்து வாடிக்கையாளர்களை கவர இயலும். கூடுதலாக ஒரு பணியாளர் நியமனம் செய்துகொண்டு ரெகுலர் பிசினஸ் ஆகவும் செய்து வர இயலும்.
மளிகை பொருட்கள் பேக்கேஜிங்
பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற வகையில் எளிய ஒரு பிரிவு மளிகை பொருட்கள் பேக்கேஜிங் செய்து கொடுப்பதாகும். சிறு நகரங்கள் மட்டுமல்லாமல் பெரு நகரங்களிலும் கூட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மளிகை கடைகளுக்கு பொருட்களை பேக்கேஜிங் செய்து தருவதற்கு தனி நபர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் வீட்டில் உள்ள ஓய்வு நேரத்தில் இந்த தொழில் பிரிவை மேற்கொண்டு வருமானம் பெற முடியும். இதற்கான தொழில் முதலீடு என்பது பெரிய அளவில் இல்லை. பாலித்தீன் கவர்களை அழகாக ஒட்டக்கூடிய சிறு எந்திரம் இருந்தால் போதுமானது. அது தவிர ஒரு எடை போடக்கூடிய சிறிய எந்திரமும் தேவை. மற்றபடி பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்களை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட மளிகை பொருளையும் எடைபோட்டு தந்து விடுவதுடன், அவற்றை எடுத்துச் செல்லும் போதும் எடையைக் குறித்துக்கொண்டும் எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
குஷன் தலையணை தயாரிப்பு
அனைவரது வீடுகளிலும் சிறிய அளவிலான சோபா அல்லது நாற்காலிகள் நிச்சயம் இருக்கும். பல வீடுகளில் உள்ள சாதாரணமான மர சோபா கூட அழகாக காட்சியளிக்கும். அதற்கு காரணம் அதில் போடப்பட்டுள்ள குஷன் தயாரிப்பு ஆகும். இந்த குஷன் தலையணை தயாரிப்பில் ஈடுபடுவதற்கு அதிக நேரம் தேவைப்படாது. பகுதி நேர வேலையில் அதிக போட்டி இல்லாத ஒரு பிரிவு இதுவாகும். தொழில் முதலீடு என்ற வகையில் வெல்வெட் துணி, நைலான் பஞ்சு, தைப்பதற்கான ஊசி மற்றும் பல்வேறு நிறங்களில் நூல் ஆகியவை இருந்தால் போதுமானது. ஒருவருடைய தனிப்பட்ட கலைத்திறனை பயன்படுத்தி வெவ்வேறு டிசைன்கள் கொண்ட குஷன் அமைப்புகளை தயார் செய்து அதை அழகாக போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விற்பனை வாய்ப்பை சுலபமாக உருவாக்கிக் கொள்ள இயலும். அதற்கான கூடுதல் பயிற்சிகள் தேவை என்றாலும் கூட குறைவான கட்டணத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திறமை உள்ளவர்களுக்கு விற்பனை வாய்ப்புகள் நிச்சயம் அதிகரிக்கக்கூடும்.
தேன் பூச்சி வளர்ப்பு
நகர்ப்புறங்களில் நிச்சயம் செய்யக்கூடிய தொழில் பிரிவு இதுவாகும். ஏனென்றால், அனைத்து நகரங்களிலும் நிறைய மரம் செடி கொடிகள் ஏராளமாக வளர்ந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் தேனீ வளர்ப்பு என்பது பார்ட் டைம் பிசினஸ் ஐடியாஸ் என்ற வகையில் போட்டி இல்லாத தொழில் பிரிவாக உள்ளது. இதை அறிந்த தொழில் முனைவோர் நிச்சயம் தங்களுக்கான தொழில் வாய்ப்பை பெறுவார்கள். நகர்ப்புறங்களில் இதற்கான பயிற்சியை குறைந்த கட்டணத்தில் அளிப்பதுடன், தேனீ வளர்ப்புக்கான உபகரணங்களையும் குறைந்த செலவில் வீட்டிற்கே வந்து அமைத்துத் தரக்கூடிய தனிநபர்களும், அமைப்புகளும் செயல்பட்டு வருகிறார்கள். வீட்டின் மேல் மாடியில் இடம் இருப்பவர்கள் மிக எளிமையாக இந்த தேன் பூச்சி வளர்ப்பு மூலம் தேன் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம். அருகில் உள்ள மளிகை கடைகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றிலும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை சுலபமாக பெறலாம். கண் முன்னே தயாரிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் நிச்சயம் வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய ஒரு நுகர் பொருளாக, உங்கள் வீட்டில் உருவாகும் தேனுக்கு நல்ல வர்த்தக மதிப்பு உருவாவது நிச்சயம்.