written by | October 11, 2021

தொலைக்காட்சி பழுதுபார்க்கும் வணிகம்

×

Table of Content


தொலைக்காட்சி  பழுதுபார்க்கும்   தொழிலை  தொடங்குவது  எப்படி!

தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழிலை தொடங்குவதற்கு மிகுந்த ஆர்வமும் அபாரமான நுணுக்கங்களுடன் திறமையும் கொண்டிருந்தால் கண்டிப்பாக தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் தொடங்குவது என்பது மிகச்சிறந்த திட்டம் ஆகும்தொலைக்காட்சிகள் காலத்திற்கு தகுந்தாற்போல் அதன் உருவமும் வடிவமும் அதிலுள்ள பயன்களும் நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே போக அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உலக அளவில் பல மடங்காக உயர்ந்துள்ளதுபொழுதுபோக்கு சாதனங்களாக நவீன கைபேசி, மடிக்கணினி என பலவற்றை நாம் குறிப்பிட்டாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே  அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி அன்று முதல் இன்று வரை அனைவரின் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து வருவதோடு எல்லா விதமான சூழ்நிலைகளிலும் அனைத்து விதமான குடும்பங்களிலும் தொலைக்காட்சி கட்டாயமான சாதனமாக இருந்து வருகிறது

ஒவ்வொரு குடும்பத்திலும் தொலைக்காட்சி பயன்படுத்தும் வகைகள் மட்டுமே வேறுபடுமே தவிர அதன் பயன்பாடு ஒன்றுதான். ஏழைகள் முதல் மிகப்பெரிய பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய தொலைக்காட்சி என்பது இப்பொழுது பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறான சூழ்நிலையில் தொலைக்காட்சியின் வளர்ச்சி என்பது கருப்புவெள்ளைகளில்  ஆரம்பித்து பிளாஸ்மா, கலர் டிவி, எல்சிடி,எல்இடி என  அதன் பரிமாண வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்துடன் வளர்ச்சி அடைந்து இப்பொழுது பல்வேறு வசதிகளுடன் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் ஸ்மார்ட் டிவியில் 4k  தரத்துடன் பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொலைக்காட்சிகளை வெளியிட்டு வருவதோடு மக்கள் பலரும் இதனை ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

என்னதான் தொலைக்காட்சியின் வடிவம், வசதிகள், விலை என அனைத்தும் மாறி இருந்தாலும் அதை பயன்படுத்தும் மக்களின் ஆர்வம் மட்டும் சிறிதளவு கூட குறையாமல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவ்வாறு தொலைக்காட்சி புரட்சியில் எந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கிறதோ  அதே அளவிற்கு அதை பாதுகாப்புடன் கையாளும் பொறுப்பும் உள்ளதுஇந்நிலையில் தொலைக்காட்சிகளில் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேப் போக அதில் பழுது பார்க்கும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதுஎனவே தொலைக்காட்சி பழுதுபார்க்கும் கடைகளை தேடிவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருவதால் இந்த தொழிலில் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது அதிகரித்து வருவதை பரவலாக காணமுடிகிறது. குறைந்த முதலீட்டில் நல்ல திறமை மற்றும் ஆர்வம் கொண்டு தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலை தொடங்க  நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இங்கு சில அடிப்படை வழிமுறைகளை நாம் காண்போம்.

தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் என்றால் என்ன!

தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் என்பது தொலைக்காட்சிகளில் ஏற்படும்  கோளாறுகள் மற்றும் சேதாரங்களை தகுந்த உபகரணங்களை கொண்டு சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு அந்த தொலைக்காட்சியை கொண்டுவருவது இந்தத் தொழிலின் முக்கிய நோக்கமாகும். தொலைக்காட்சியை சரி செய்யும் தருணத்தில் அதற்கு குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படுவதோடு ஒரு சில பாகங்கள் புதிதாக மாற்றப்பட்டு இருந்தால் அதற்கும் சேர்த்து உண்டான செலவை கட்டணமாக  பெற்றுக் கொள்ளப்படுகிறது

தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலை பற்றி திட்டமிடுதல்!

சுய தொழில்  தொடங்குபவர்கள் மிகத் தெளிவான திட்டமிடுதலுடன் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு திட்டமிட்டபடி அந்த தொழில் தொடங்கப்படுமேயானால் அதில் குறிப்பிடுகின்ற வகையில் எந்த ஒரு உயரிய நிலையையும் மிக விரைவிலேயே எட்டமுடியும்.   இந்நிலையில் இதுபோன்ற தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலை தொடங்குவதற்கு மற்ற தொழில்களை ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைவான அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. மேலும் இந்த தொழிலை வீட்டில் இருந்தோ அல்லது  தனியாக கடை அமைத்தோ நடத்திக் கொள்ளலாம்

இப்போதுள்ள தொலைக்காட்சிகள் பலவும் அதிநவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு வசதியுடன் இருப்பதால் அதில் ஏற்படும் பழுதுகளையும் கோளாறுகளையும்  கண்டறிய பல்வேறு புதிய ரக உபகரணங்களை வாங்க வேண்டியது உள்ளதால் அதன் ஆரம்ப முதலீடு என்பது சற்று அதிகமாகவே இருக்கின்றது. ஏனெனில் இப்போது வரும் தொலைக்காட்சிகளில் பல மென் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய பல ஆயிரம் செலவிடப்பட்டு பழுதுபார்க்கும் கருவிகளை வாங்க வேண்டியுள்ளது.

மேலும் ஒரு சில சமயங்களில் சில வாடிக்கையாளர்கள் தங்களது தொலைக்காட்சி அளவில் மிகப் பெரியதாக இருப்பதால் அதை கடைக்கு எடுத்து முடியாது எனக் கூறும் பொழுது நேரடியாக வீட்டிற்கே சென்று பழுது பார்ப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு சென்று பழுது பார்க்கும் பொழுது சாதாரண கட்டணத்தைவிட இதற்கு கட்டணம் சற்று கூடுதலாக வசூலிக்க வேண்டும்.

பொருளாதார வகையிலும்சுற்றுச்சூழல் வகையிலும் மிக விழிப்புணர்வுடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் அவர்களின் தொலைக்காட்சியில் பழுது ஏற்படும் பொழுது புதிய தொலைக்காட்சியை வாங்க செல்லாமல் பழைய தொலைக்காட்சியையே பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டவர்கள். அதேசமயம் ஓய்வில்லாத வேலையில் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்கள் போன்றவர்களையும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் அவர்களின் தொலைக்காட்சி எந்த நிலையில் பழுது பார்க்கும் வேலை வந்தாலும் அவர்களாக கடையை தேடி வந்து பழுது பார்க்க சொல்லாமல், அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வரவழைக்கும் போது அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

தொலைக்காட்சி பழுதுபார்த்தலின் மூலம் எவ்வாறு அதிக லாபம் பெறுவது!

ஏற்கனவே சொன்னது போல இப்போது வரும் தொலைக்காட்சிகள் முற்றிலும் நவீன படுத்தப்பட்டு பல  விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் இதில் ஏதாவது ஒரு கோளாறு ஏற்படுமாயின்  அதனை சரிசெய்ய ஆகும் செலவு என்பது முன்பு இருந்த தொலைக்காட்சிகளைக்  காட்டிலும் சற்று விலை உயர்ந்ததாகவே இருக்கிறது. எனவே அதை பழுது பார்க்கும் போது  ஆகும் பொருட்செலவு மற்றும் ஆட் செலவு மொத்தமாக ஒரு பெரும் தொகையை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். இதுபோன்ற சமயத்தில் ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களது தொலைக்காட்சியை நேரடியாக கடைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் படி கூறுவதும்ஒரு சிலர் வீட்டுக்கு வந்து  பார்க்கும்படி கூறுவதும் என இவ்விரண்டுக்கும் பெறப்படும் கட்டணமானது வேறுபடும்.

தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலை இலாபகரமாக இயக்குவது எப்படி!

தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலை வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் இயக்குவதற்கு மிக தொழிலில் மிக சாமர்த்தியமான நபராக இருக்க வேண்டும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது வாடிக்கையாளர்களை கவர்வது. குறித்த நேரத்திலோ அல்லது குறித்த நேரத்திற்கு முன்பாகவோ வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி பழுதை சரி செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் விரைவில் அதனை எடுத்துச் செல்லும் வகையில் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது வாடிக்கையாளர்கள்  வைக்கும் நம்பிக்கையை என்பது பல மடங்கு உயர்த்துகிறது

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி புரிய வைப்பதுடன்  ஒருமுறை பழுது பார்த்து  எடுத்துச் செல்லப்பட்ட தொலைக்காட்சி மீண்டும் அதே  கோளாறு வராமல் இருக்கும்படி தொழிலை மிகச் சிறப்பாக செய்யும் பட்சத்தில்  வாடிக்கையாளர்களுக்கு உங்களின் மீது பெரும் நம்பிக்கை வருவதோடு தொடர்ந்து ஒத்துழைப்பையும் அளிப்பார்கள். மேலும் இதன் மூலம் தொலைக்காட்சி பழுதுகள் எதுவாயினும் உங்களின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக உங்களைத் தொடர்ந்து அணுகி பலன் பெற விரும்புவார்கள். மேலும் ஒரு சில சமயங்களில் வாடிக்கையாளரின் நண்பர்கள் வட்டாரத்திலும் உங்களின் கடையைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடனும் நற்ப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் குறிப்பிடும்போது  பல வாடிக்கையாளர்கள் அதன் மூலம் கடையைத் தேடி வர வியாபாரமும் பெருகுவதோடு அதிக அளவிலான லாபத்தை ஈட்ட இதுவும் ஒரு மறைமுக காரணமாக இருந்து வருகிறது.

இவ்வாறு தொலைக்காட்சியின் பழுது எதுவாக இருந்தாலும் கச்சிதமாக கண்டறிந்து பழுது பார்த்து மீண்டும் பழையபடி வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்போது அது அவர்களை திருப்திப்படுத்துவதோடு தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் தொழிலில் வெற்றி அடையவும் வழிவகை செய்கிறது. எனவே இந்த தொழிலை பொறுத்தவரையிலும் வெற்றி என்பது வாடிக்கையாளர்களின் மனநிறைவை பொருத்தே அமைகிறது

தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தல்!

தொலைக்காட்சி என்பது அனைவரது வீட்டிலும் இருக்கின்ற அடிப்படை தேவைகளில் ஒன்றாக இன்றைய உலகில் மாறி வருகின்ற நிலையில்அதேசமயம் தொலைக்காட்சிகளில் ஏற்படும் பழுதுகளையும் கோளாறுகளையும் பார்ப்பதற்கு ஏற்கனவே அந்தப் பகுதியில்  பல கடைகள் இருக்குமாயின் அவர்களுக்கு போட்டியாக அதே இடத்தில் தொழிலை தொடங்காமல்  எங்கு வாடிக்கையாளர்களுக்கு சேவை தேவைப்படுகிறதோ அந்த இடத்தை தேர்வு செய்து சொல்லுதல் என்பது மிகச்சிறந்த செயலாகும்அவ்வாறு மிகக்குறைவான போட்டி இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து தொழிலைத் தொடங்கும் பட்சத்தில் அங்கு தொடர் வாடிக்கையாளர்களை பெற்று கடையின் பெயரை மிகப் பிரபலம் அடைய செய்து பின் பல்வேறு இடங்களில் அதன் கிளைகளில் நிறுவுவது என்பது உங்களை தொழிலில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும் மிகச்சிறந்த காரணியாகும். எனவே இந்த தொழிலை பொறுத்தவரையிலும் தொழில் தொடங்கும் இடம் என்பது போட்டி குறைவாகவும் அதுவே சமயம் வாடிக்கையாளர்களை கவருகின்ற வகையிலும்  இருக்குமாயின் அவையே சரியான தேர்வாகும்.

சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் தனித்துவமான உத்திகளை பயன்படுத்துதல்!

இவ்வாறு போட்டிகள் குறைவான இடத்தைத் தேர்ந்தெடுத்து தொழிலைத் தொடங்கும் பட்சத்தில், அந்த தொழில் மேலும் விருக்தி அடைய மிக முக்கியமானது சந்தைப்படுத்துதல்தொழிலை சந்தைப்படுத்தும் முறையில் பல்வேறு வகைகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட வகையான சந்தைப்படுத்தும் முறை என்பது பலருக்கும் பயன் அளித்துள்ளது. அவையாவன இணையதளத்தில் விளம்பரப்படுத்துதல், சமூக வலைதளங்களில் உங்களிடம் உள்ள  சிறந்த சேவைகளைப் பற்றி பலரும் அறியச் செய்யும் வகையில் பல பதிவுகளை பதிவிடுவது. மேலும் இப்போது  பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் யூ டியூப் உள்ளிட்ட வலைத்தளங்களில் உங்களுக்கான தனி பக்கத்தை உருவாக்கி கொண்டு இதில் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிடும் பொழுது அவை உங்களின் மீதும் உங்கள் கடையில் மீதும் மேலும் நம்பிக்கையை கூட்டும்.

தொலைக்காட்சி பழுதுகளை சரி செய்ய தேவையானஉபகரணங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்!

பழைய தொலைக்காட்சி முதல் இப்பொழுது பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன தொலைக்காட்சிகள் வரை அனைத்து வகையான பழுதுகளையும் சரி செய்கின்ற வகையில் தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை ஏற்படுவதோடு அவை வியாபாரத்தின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கின்றது.

இவ்வாறு இப்பொழுது உலக அளவில் மிகப் பிரபலமாக வளர்ந்துவரும் தொலைக்காட்சி வளர்ச்சியில் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட விரும்பும் பலரும் மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு அட்டகாசமான தொழிலை தொடங்க இவை மிகச்சரியான தேர்வாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.