தேனீ வளர்ப்பு தொழில் தொடங்குவது எப்படி!
உலகம் முழுவதும் இப்பொழுது பல்வேறு நாடுகளில் தேனீ வளர்ப்புத் தொழில் என்பது அதிக லாபம் சம்பாதிக்கின்ற தொழில்களில் ஒன்றாக மிக பிரபலமாகி வருகிறது. இதற்கு முன் தேனீக்கள் இயற்கையாக மரம், உயர்ந்த கட்டிடம், மலைகள் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய அளவில் தேன் கூடுகளை கட்டி தேனை சேகரித்து வந்த நிலையில் இப்போது தொழிலுக்காக அவை தேனீ பண்ணைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு அந்த தேன்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறான தேனீ பண்ணை வளர்ப்பு முறையில் குறைந்த அளவிலான முதலீடும், குறைந்த ஆட்களும் மட்டுமே போதும் என்ற நிலையில் இந்த தொழிலை நடத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு வகையான முறையில் தேனீக்கள் கட்டும் கூட்டிலிருந்து தேனை எடுக்கும் பொழுது அதற்காக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்படுகிறது. ஆனால் தேனீ பண்ணை வளர்ப்பில் ஈடுபடும் பொழுது தினந்தோறும் தேனீக்களுடன் பழகுவதால் இது போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வளர்பவருக்கு தேவைப்படாது. தேனீக்களை பராமரிப்பவருக்கும் தேனீக்களுக்கும் இடையே ஏற்படும் புரிதல் இந்த தொழிலில் மற்றுமொரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் நீங்கள் தேனீ வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பின் அதற்க்கு அதிக அளவிலான இடமும் குறைந்த முதலீடு மட்டுமே போதுமானது. புதிதாக தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இங்கு நாம் காண்போம்.
தேனீ வளர்ப்புப் பண்ணை வைப்பதற்கான தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்தல்!
பூச்சி இனங்களிலேயே தேனீக்கள் மிகவும் தனித்தன்மையும் புத்திசாலி தன்மையும் வாய்ந்தவை. அவை எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுக்கு தகுந்தவாறு அங்கு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் தன்மை அதற்கு இயல்பிலேயே உள்ளது. இதனால்தான் இயற்கையிலேயே உருவாகும் தேனீக்கள் ஓரிடத்திலிருந்து தேன்கூடுகள் கலக்கப்படும் போது மிக எளிதாக மற்றோரு இடத்திற்குச் சென்று அங்கு புதிதாக தேன் கூடுகளைக் கட்டி குடியேறுகிறது. இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த தேனீக்கள் தேனை உருவாக்குவது மட்டுமல்லாமல் பல்வேறு வகையிலும் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் மற்றும் பல உயிரினங்களுக்கும் நன்மை செய்து வருகின்றது.
வீட்டின் மொட்டை மாடி பால்கனி, மரக்கிளைகள், மரப் பொந்துகள், உயரமான குகைகள் என எங்கு வேண்டுமானாலும் தேனீக்கள் தங்களது இருப்பிடத்தை மிக எளிதாக உருவாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதற்கு நகரம், கிராமம், நாடு என எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. இந்த நிலையில் தேனீ வளர்ப்புப் பண்ணை வைக்கும்போது அதில் சில முக்கியமான படிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
தேனீக்கள் வளர்க்கும் இடமானது கட்டாயமாக உலர்ந்த இடமாக இருக்க வேண்டும், ஈரப்பதத்துடன் இருக்கும் இடங்களில் தேனீக்கள் தங்களது இனப்பெருக்கத்தை செய்யாது. ஒருவேளை பண்ணை அமைக்கும் இடமானது ஈரப்பதம் மிகுந்ததாக இருக்குமாயின் அது தேனீக்களை தேனை சேகரிப்பதில் இருந்து தடுப்பதோடு, தேனீக்கள் அந்த இடத்தைவிட்டு நீண்ட தூரத்திற்கு பறந்து சென்று விடும். மேலும் ஈரப்பதமான இடத்தில் தேனை சேகரிக்கும் போது அந்தத் தேன் மிக விரைவிலேயே கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். நவீன தேனீ வளர்ப்பு பண்ணை தொழில் தொடங்கும் முன் பண்ணை அமையப்போகும் இடமானது கட்டாயமாக ஈரப்பதம் இல்லாத சூழ்நிலையில் இறக்கின்றவறு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தேனீக்கள் இயற்க்கையாக தங்களது இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கும் இடங்கள் பொதுவாக நிழல் தரும் இடங்களாகவும் அதிலும் மிக முக்கியமாக அதிக மரங்களை அருகாமையில் கொண்டுள்ள சுற்றுச்சூழல்களைப் பார்த்து அமைத்துக் கொள்கின்றன. ஒருவேலை அதிக அளவு காற்று வீசினாலும் அவை தேன்கூட்டை அவ்வளவு எளிதில் பாதித்து விடாது. தேனீக்கள் பொதுவாக சுத்தமான நீரையே விரும்புகிறது. அவ்வாறு தேனி வளர்ப்புத் தொழில் தொடங்கும்போது சுத்தமான அதேசமயம் சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்தும்போது தேனீக்கள் அதிக அளவிலான தேனை உற்பத்தி செய்ய ஏதுவாக அமைகிறது. எந்த அளவிற்கு சுத்தமான தரமான தண்ணீரை தேனீக்களுக்கு அளிக்கின்றோமோ அதைப் பொறுத்தே தரமான தேனும் கிடைக்கும். எனவே தேனீ வளர்ப்பு முறையில் சுத்தமான மற்றும் தரமான தண்ணீரைப் பயன்படுத்துவது தரமான தேனை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
தேனீ வளர்ப்பு இடத்தில் பழைய தேன் கூட்டின் சிறிய துண்டை வைத்து வளர்ப்பதன் மூலம் தேனீக்கள் பராமரிப்பவரை தங்களது நண்பர் போல பாவித்து அவர்களை சீண்டுவதில்லை ஒருவேளை இயற்கையான தேன்கூடு கிடைக்கவில்லை என்றால், செயற்கையாக மரத்தினால் செய்யப்பட்டபிரேம்களை பயன்படுத்தி சிறிய செயற்கை தேன் கூட்டை உருவாக்கி வைத்துவிடலாம். தேனீக்கள் மகரந்தத் தூள்களில் இருந்து தேனை சேகரிக்க எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேன் இருக்கின்ற மகரந்தத்தை தேடி செல்லும். செயற்கை முறையில் தேனீ பண்ணை வைத்து வளர்க்கும் போது தேனீக்களுக்கு தேவைப்படும் மகரந்த செடிகள் அருகில் உள்ளவாறு இருக்கும் சுற்றுச்சூழலை தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் தேனீக்கள் அதிக தரம் கொண்ட தேனை மிக விரைவாக சேகரிக்க உதவுகிறது. அதேபோல தேனீக்களை வளர்க்கும் இடமானது மிக தாராளமாக இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தேனீக்கள் மிக எளிதாக தரமான தேனை சேகரிக்கும்.
பாரம்பரியமான முறையில் தேன் சேகரிப்பது எப்படி!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் இன்றளவும் பாரம்பரிய முறைப்படி தேன் சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாரம்பரிய முறையில் ஒரு இடத்திலிருக்கும் தேன் கூட்டிலிருந்து தேனை எடுப்பதற்காக பல்வேறு வகையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தேனை எடுத்து வருகின்றனர். அதில் மிகப் பழமையான ஒன்று துணியால் முகம், கைகள் உள்ளிட்டவைகளை நன்கு மறைத்துக்கொண்டு உயரமான மலைப்பகுதி அல்லது மரம் உள்ளிட்டவைகளில் இருக்கும் தேன்கூட்டை சிறிது சிறிதாக கலைத்து தேன் சேகரிப்பது பாரம்பரிய முறையாக கொண்டுள்ளனர். அவ்வாறு சிறிது சிறிதாக சேகரிக்கப்பட்ட தேன்கூடு துண்டுகளை பிளிந்து அல்லது மிக இதமான சூட்டில் வெப்பப்படுத்தி தேனை அதில் இருந்து பிரித்து எடுக்கின்றனர்.
இவ்வாறான பாரம்பரிய முறையில் இயற்கையாக தேனீக்கள் கட்டியிருக்கும் கூட்டிலிருந்து தேனை எடுக்க முற்படும் போது அதில் ஒரு சிலர் நெருப்பு மற்றும் புகை உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதால் அவை தேனீக்களை மிகக் கொடூரமாக பாதிப்பதோடு பல நூற்றுக்கணக்கான தேனீக்கள் இறந்தும் விடுகின்றன.
நவீன முறையில் தேன் சேகரிப்பது எப்படி!
நவீன முறையில் தேன் சேகரிப்பு என்பது பாரம்பரிய முறைப்படி தேன் சேகரிப்பதை விட மிக எளிதாகவும் தரமான தேனை உற்பத்தி செய்யவும் ஏதுவாக அமைகிறது. இவ்வாறான நவீன முறை தேன் உற்பத்தி தொழிலில் பல்வேறு வகையான மரப் பெட்டிகளைக் கொண்டு அதன் உள்ளே மரத்தாலான பிரேம்காளை சாய்வாகவோ செங்குத்தாகவோ வைத்து அதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேன் கூடுகளின் உதிரிகளை வைத்து தேனீக்களை வைக்கும்போது அவை சிறிது சிறிதாக தேன் கூட்டை கட்டி மிக விரைவிலேயே தரமான தேன் கூட்டை உருவாக்கிவிடுகிறது.
எத்தனை வகையான செயற்கை தேன் சேகரிப்பு முறைகள் தேன் வளர்ப்புத் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது!
இப்பொழுது பரவலாக அனைத்து இடங்களிலும் தேன் பண்ணை வைத்து தொழிலை நடத்தி வருபவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு அதேசமயம் தேவைக்கேற்றவாறு பல்வேறு வகைகளில் இயற்கை தேன் சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். செயற்கை தேன் சேகரிப்பு முறைகளை உருவாக்க நமக்கு மிகக் குறைந்த செலவில் சில அடிப்படைப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
டாப் பார் ஹைவ்:
இந்த வகையான செயற்கை தேன சேகரிப்பு முறையில் பராமரிப்பில் ஒரு நீளமான பெட்டிக்குள் வெளியில் மிக எளிதாக எடுக்கின்ற வகையிலான சிறிய சிறிய மரபிரேம்களை உள்ளே வைத்து அடுக்கி அதே சமயம் உள்ளே இருக்கும் தேனீக்களுக்கு மிகத் தாராளமான இடவசதியும் அமைத்து வைத்திருப்பதால் தேனீக்கள் மிக விரைவாக ஒவ்வொரு மரபிரேம்களைகளிலும் கூடுகளைக்கட்ட ஏதுவாக இருக்கின்றன.
லாங்ஸ்ட்ரோத் :
இந்த மாதிரியான தேன் சேமிப்பு முறை தொழில் 1852 களில் இருந்தே பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வகையான தேன்கூடு பெட்டிகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாதிரி தேன் சேமிப்பு முறை பெட்டிகள் சற்று விலை உயர்ந்தவை. இதில் மரபிரேம்களானது செங்குத்தாக வைத்து பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மரபிரேம்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி தேனீக்களுக்கு மிக வசதியாக இருக்கின்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். இதுபோன்று வடிவமைக்கப்பட்ட தேன் சேகரிப்பு பெட்டிகள் மிக எளிதாகவே பெரும்பாலான கடைகளில் கிடைக்கின்றன
வாரே ஹைவ்:
வாரே ஹைவ் தேன் சேகரிக்கும் முறையில் பெட்டிகள் சதுர வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வகையான தேன் சேகரிப்பு வடிவமைப்பில் தேனீக்கள் தங்களது இயற்கையான இருப்பிடத்தில் இருப்பது போன்று உணரும் வகையில் உருவாக்கப்பட்டது அதாவது காலியான இடத்தை போன்று இதில் இடம்பெற்றிருக்கும் பெட்டிக்கு ஒவ்வொன்றுக்கும் உள்ளே சிறிய அதே சமயம் எடை குறைவான பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வடிவிலான தேனீக்கள் சேகரிப்பில் மேல்பகுதி கூரை போன்று அமைக்கப்பட்டு உள்ளே ஒவ்வொரு பெட்டிகளுக்குள்ளும் மரபிரேம்கள் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும்.
ரோஸ் ஹைவ்:
ரோஸ் ஹைவ் தேனீக்கள் சேகரிப்பு முறையில் மிக அதிக அளவிலான இடவசதி தேவைப்படுகிறது, ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் பெட்டி மிகவும் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் இயற்கையாகவே இந்த பெட்டிகள் பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒவ்வொரு பகுதிகளிலும் பல பெட்டிகளை வைக்கின்ற வசதியும் படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையான தேனீக்கள் சேகரிப்பு முறையில் இருக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் இதற்கு முன் பார்த்த வகைகளில் பிரேம் பை பிரேம் ஆக தேன் கூடுகளை வெளியில் எடுத்து சேகரிக்கும் வகையில் இருக்கும் ஆனால் இந்த வகையான தேன் சேகரிப்பு முறையில் எல்லாமரபிரேம்களையும் ஒரே தடவையிலேயே வெளியில் எடுத்துக்கொள்ளலாம்.
தேனீக்களின் வகைகள்!
ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பெண் தேனீக்கள் என மொத்தம் மூன்று வகையான தேனீக்கள் உள்ளன. இதில் ஆண் தேனீக்கு ஒன்பது மாதங்களும், பெண் தேனீக்களுக்கு ஏழு மாதங்களும் மற்றும் ராணித் தேனீக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும் ஆயுள் காலமாக இருக்கின்றது. இந்த மூன்று வகையான தேனீக்களில் சிறப்பு வாய்ந்தவையாக கூறப்படுவது ராணித் தேனீ. ராணித் தேனீக்கள் மட்டுமே இதில் முட்டையிடுகின்றன, ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்காகவும் தேன் கூட்டை பாதுகாப்பதற்காகவும் இருக்கின்றன. உணவு சேகரித்தல், தேன்கூட்டை கட்டுதல், தேனை பக்குவப்படுத்துவது, தேன்கூட்டை சுத்தமாக பராமரிப்பது, என பெரும்பாலான வேலைகளை பெண் தேனீக்களே செய்கின்றன.
இவ்வாறு பல்வேறு சிறப்பு வாய்ந்த அதேசமயம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவைப்படுகின்ற தேன் உற்பத்தி தொழிலானது மிகக்குறைந்த செலவிலேயே அதிக லாபத்தை ஈட்டக்கூடிய வகையிலாதனால் பலரும் ஆர்வமாக இந்த தொழிலை எடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இவ்வாறு தேனீ வளர்ப்பு பண்ணை தொழிலில் ஈடுபடுவதற்கு அதிக முதலீடு, அதிக அளவிலான பொருட்செலவு தேவைப்படுவது இல்லை. மிக எளிதாக வீடுகளிலோ அல்லது இதற்காக தனி பண்ணை அமைத்தோ தேனீ வளர்ப்பில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.