இணைப்பணியாற்றும் அலுவலக இட தொழில் தொடங்குதல்!
இணைப்பணியாற்றும் இடம் என்பது பல நிறுவனங்கள் ஒன்றுகூடி இயங்கும் ஓர் பொதுவான இடத்தைக் குறிப்பதாகும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் நவீனமயமாகி வருவதை தொடர்ந்து பல்வேறு பொறியியல் நிறுவனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி அதில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பொதுவாக ஒரு தொழில்துறை நிறுவனம் தொடங்கும் பொழுது அது பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் அவர்களுக்கான ஒரு பகுதியில் பணியாற்றுவார்கள். அவ்வாறு பணியாற்றும் இடத்தில் அனைவரும் ஒன்றிணைந்து வசதிக்கு தகுந்தாற்போல் இணைப்பணியாற்றும் பொழுது தனியறையில் பணியாற்றும் ஊழியர்களும், கலகலப்பாக வேறொரு சுற்றுச்சூழலை கொண்டு பணியாற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து ஒரே இடத்தை பகிர்ந்து கொள்வார்கள்.
இது போன்ற இணைப்பணியாற்றும் இடங்கள் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இனி வரும் காலங்களில் படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட அறைக்குள் அல்லது அலுவலகத்திற்குள் வேலை செய்துவந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மிகத் தாராளமான இட வசதி கொண்ட இடத்தில் அவர்களின் வசதிக்கு தகுந்தார்போல் இடத்தைத் தேர்ந்தெடுத்து பணியாற்றிக் கொள்வதன் மூலம் அவர்களின் திறன் மேலும் மேம்படுகிறது.
மேலும் இது போன்ற இணைப்பணியாற்றும் இடங்கள் அனைத்து வகையான அலுவலக வசதிகளையும், ஆலோசனை அறைகளையும், தேநீர் விடுதி, சமையலறை என அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் மற்றும் ஹாட் டெஸ்க் உள்ளிட்ட பல வசதிகள் இதுபோன்ற இணைப்பணியாற்றும் இடத்தில் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல நேரங்களில் முழு நேர பணியாற்றக்கூடிய மற்றும் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றக்கூடிய பலருக்கும் இது போன்ற இடவசதி கொண்ட இணைப்பணியாற்றும் இடமானது பேருதவியாக இருந்து வருகிறது. இவ்வாறு இப்போதுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்த இணைப்பணியாற்றும் கலாச்சாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் இதில் தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இணைப்பணியாற்றும் அலுவலக இட தொழிலை எவ்வாறெல்லாம் தொடங்கலாம் என்பதைப்பற்றி இங்கு நாம் காண்போம்.
இணைப்பணியாற்றும் இடம் அமையும் சூழலையும் இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளுதல்!
ஒரு நிறுவனத்தில் இணைப்பணியாற்றும் இடத்தை அமைப்பதற்கு முன் அந்த இடம் அவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்குமா என்பதை நன்கு ஆராய்ந்து தொடங்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் தொடங்கிவிட்டால், அது ஒரு சில சமயம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பயன்படாத வகையிலும், அவர்களுக்கு நாட்டமில்லாத வகையிலும் செல்லும்போது அதனுடைய பயன் அங்கு வீணாகிறது. எனவே இணைப்பணியாற்றும் இடம் அமையப்போகும் இடத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அங்கு அமைப்பது மிகச் சிறந்த தேர்வாகும். இணைப்பணியாற்றும் இடம் பார்ப்பதற்கு முன் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களிடமும் நண்பர்களுடனும் கலந்து ஆலோசித்துவிட்டு அவர்களுக்கு தகுந்தாற்போல் அந்த இடத்தை தேர்வு செய்து கொள்வது மிகவும் பயனுள்ள வகையிலும் அவர்களை திருப்திபடுத்த கூடிய வகையிலும் இருக்கும்.
இணைப்பணியாற்றும் இட தொழிலில் இருக்கும் போட்டிகளைப் பற்றி ஆய்வு செய்தல்!
எந்த ஒரு தொழிலிலும் அதில் இருக்கும் போட்டிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தொழில் தொடங்குவதற்க்கு முன் செய்யவேண்டிய முக்கிய செயலாகும். அவ்வாறு நாம் தொடங்க இருக்கும் தொழிலை பற்றி முழுமையாக அலசி ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் முடிவுகளிலேயே தெளிவாக தெரிந்துவிடும் இவை நமக்கு தகுந்த தொழிலா இல்லையா என்று. அதுமட்டுமல்லாமல் இவ்வாறு ஆய்வு செய்யும் போது நமக்குத் தெரியாத பல உத்திகள் நமக்குத் தென்படும் அது தொழில் சார்ந்த முடிவெடுக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.
செயல்பாடுகளில் முதலில் கவனம் செலுத்துதல் பின் தொழிலைத் தொடங்குதல்!
பெரும்பான்மையான நகரங்கள் முழுவதும் இப்பொழுது மேன்மைப் படுத்தப்பட்டு முழுவதுமாக மாறி மேற்கத்திய கலாச்சாரங்களுடன் தோன்றியபடி பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக இதுபோன்று நிறுவனங்களில் இணைப்பணியாற்றும் அலுவலக இடங்களிலை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு தேவையான முதலீடு என்பது எதிர் பார்த்ததை விட சற்று அதிகமாகவே தேவைப்படும். எனவே நாம் தொடங்கும் தொழிலில் லாப நோக்கு எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல அதில் தனித்தன்மை வாய்ந்த எண்ணங்கள் பார்ப்போர் அனைவரையும் கவரும் வகையில் இருத்தல் அதைவிட முக்கியமாகும்.
சரியான இடத்தை தேர்ந்தெடுத்தல்!
இணைப்பணியாற்றும் தொழில் என்பது அனைத்து இடங்களுக்கும் பொருத்தமானது அல்ல, குறிப்பிட்ட நிறுவனங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏதுவாக அமைகின்ற வகையில் இத்தகையான இணைப்பணியாற்றும் இடமானது அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கும் இடமானது மிகத் தாராளமான இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும், அதனுடன் சேர்ந்து பாதுகாப்பான இடமாக இருக்கும் பட்சத்தில் மிகவும் நல்லது. மிகப்பழமையான கட்டிடம் மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடம் என எந்த ஒரு இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இணைப்பணியாற்றும் இடம் அமைக்கும் அளவிற்கு மிக தாராளமாக இடவசதி இருத்தல் வேண்டும்.
தனித்துவமான உள்கட்டமைப்பை வடிவமைத்தல்!
ஒவ்வொரு தொழிலும் தனித்துவமான உள்கட்டமைப்பு வடிவமைத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும் அதிலும் இணைப்பணியாற்றும் தொழிலில் சற்று கூடுதலாகவே கவனம் தேவை. அங்கு வந்து செல்பவர்களுக்கு வசதியாகவும் அதேசமயம் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்பட்சத்தில் அது அனைவரையும் கவர்வதோடு அந்த இடத்திற்கான மதிப்பும் பன்மடங்கு கூடுகிறது. அவ்வாறு உள்கட்டமைப்பு வதிகளில் அமைக்கப்படும் மேஜை, நாற்காலி, விளக்குகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தும் ஊழியர்களின் வசதிக்கு ஏற்றவாறு மற்ற இடங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகின்ற வகையிலும் உருவாக்கும்போது நற்பெயர் ஏற்படுவதோடு மேலும் பலர் உங்களை பரிந்துரைக்க பெரும் பக்கபலமாக அமைகிறது.
அதேபோல் இன்றைய காலகட்டத்தில் இணையதள வசதி இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை, எனவே அதிவேக திறன்கொண்ட இணையதள வசதியுடன் இதுபோன்ற இணைப்பணியாற்றும் இடம் அமைக்கப்பட வேண்டும் என்பது பெரும்பாலான ஊழியர்களின் விருப்பமாக உள்ளது. அதேபோல இந்த தொழிலில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் பொழுது உங்களின் தனித்துவம் வெளிப்பட அது உங்களது நிறுவனத்தின் பெயருக்கு சிறப்பு சேர்க்கிறது. அதேபோல வாடிக்கையாளர் நம்மிடம் எந்த அளவுக்கு தனித்துவமான கட்டமைப்பு வசதிகளையும் வேலைப்பாடுகளையும் எதிர்பார்க்கிறார்களோ அதேபோல அதற்கு ஆகின்ற செலவுகளையும் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட செலவுக்குள் செய்து முடிக்க எதிர் பார்க்கும் போது அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
சந்தைப்படுத்துதல்!
ஒரு நிறுவனத்தின் பொருள் என்னதான் தரமாக இருந்தாலும் அதை சந்தைப்படுத்துதல் முறையில் தான் அதன் மீதி வெற்றி உள்ளது. அவ்வாறு சரியான முறையில் சரியான இடங்களில் தேவையான அளவு விளம்பரங்களின் மூலம் சந்தைப்படுத்துவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பலரும் இதை பற்றி அறிய நேரிடும். தனித்துவமான வேலைப்பாடுகள் தரமான அமைப்பும் என அனைத்தும் இருக்கும் பட்சத்தில் இதற்க்கு குறைந்த அளவு முதலீட்டுடன் சந்தைப்படுத்துதல் போதுமானதாகும்.
அதேபோல் இதர செலவுகளை விட சந்தைப்படுத்துதலில் மிக அதிக அளவிலான பணத்தை சேமிக்க முடியும், ஆனால் பலரும் அதை கடைப்பிடிக்காமல் பல்வேறு வகைகளில் சந்தைப் படுத்துவதற்காக பணத்தை வீணாக செலவழித்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக எடுத்த எடுப்பிலேயே அதிக அளவிலான பணத்தை விளம்பரங்களில் செலவிடுவது நல்லதல்ல. இந்நிலையில் இப்பொழுது முன்னணி நிறுவனங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் தங்களது விளம்பரங்கள் மற்றும் சந்தைப் படுத்துதலில் கிட்டத்தட்ட 70% நிறுவனங்கள் தங்களது பெயரை பிரபலப்படுத்த ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் என்ற முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வாறு ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட்டை பயன்படுத்தும்போது அது மிகவும் பயனுள்ளதாகவும் அவ்வாறு மிச்சப்படுத்தும் பணமானது தொழிலில் பயன்படுத்தவும் உதவியாக இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்து கொள்ளுதல்!
நாம் செய்யும் வேலை யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நாம் யாருக்காக செய்கிறோமோ இந்த வாடிக்கையாளர்களை கட்டாயம் கவர்ந்திருக்க இருக்க வேண்டும். அவ்வாறு அவர்களை ஈர்க்க வேண்டுமானால் முதலில் வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான இணைப்பணியாளர்கள் பணியாற்றும் இடத்தை தேர்வு செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார்போல் தனித்துவமான முறையில் அவர்கள் இணைப்பணியாற்றும் இடமானது உருவாகின்ற நிலையில் அது பலரையும் மிக எளிதில் கவர்வதோடு பின்னாளில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று தர உதவியாகவும் இருக்கிறது.
குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாகவே செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுகளை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப அந்த ஒரு கட்டுப்பாடுகளுமின்றி இணைப்பணியாற்றும் இடமானது உருவாகும் போது அங்கு வந்து செல்லும் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களின் மனநிலை மாறுவதோடு அது அவர்களை மேலும் வேலையின் மீதான கவனத்தை செலுத்த பெரும் உந்துசக்தியாக அமைகிறது.
இணைப்பணியாற்றும் இடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள்!
இணைப்பணியாற்றும் இடமானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டும் வந்து செல்லும் ஒரு இடம் அல்ல. இங்கு நிறுவனத்தில் பணியாற்றும் பலதரப்பட்ட ஊழியர்கள் வழக்கமாக இருக்கும் அறை மற்றும் கேபின் போன்ற பழைய முறை பணியாற்றுதலில் இருந்து சற்று வெளியே வந்து மிகப் புதுமையான சுற்றுச் சூழலுடன் பணியாற்ற ஆசைப்படும் நிலையில் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் முன்னணியில் இருப்பது அதிவேக இணையதள வசதி. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டே போக இணையதளத்தை பயன்படுத்துவோரின் பட்டியலும் அதன் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போக அதிக வேகம் கொண்ட இணைய தள இணைப்பு என்பது நிறுவனத்தின் ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான வசதியாகும்.
ஊழியர்களுக்கு தங்கு தடையின்றி அவர்களது வேலையை தொடர்ந்து செய்ய அதிவேக இணைய வசதி எந்த அளவிற்க்கு அடிப்படை தேவையோ அதே போல அனைவரும் வந்து செல்லும் இடம் மிகத் தூய்மையாகவும், மாசு, தூசு, துர்நாற்றம் உள்ளிட்டவைகள் எல்லாம் இல்லாமல் அடிக்கடி இணைப்பணியாற்றும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்போது அந்த இடம் தனிக்கவனம் பெறுகிறது
பணிச்சூழலியல் நாற்காலிகள்!
நிறுவனங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணியாற்றுவதை விரும்பாத ஊழியர்கள் இது போன்ற இணைப்பணியாற்றும் வசதியுள்ள இடத்தை தேடி வரும்போது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளானது அனைவருக்கும் தகுந்தாற்போல் சொகுசாகவும், வசதியாகவும் இருப்பது மிக மிக முக்கியமாகும். அவ்வாறு ஊழியர்கள் நாற்காலிகள் வசதியாக இருப்பதாக நினைக்கும் பட்சத்தில் அங்கு அவர்கள் அதிக நேரம் பணியாற்ற வாய்ப்புள்ளது. அதேபோல இணைப்பணியாற்றும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதர வசதிகளும் பார்க்க அழகாகவும் படுத்துவதற்கு எளிதாகும் இருக்கின்ற வகையில் இருப்பது மிக மிக முக்கியமாகும்.
தேநீர் மற்றும் குடிநீர்!
இணைப்பணியாற்றும் இடத்தில் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றும் பொழுது சில மணி நேரங்களிலேயே அவர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளது. அதனால் சில நேரங்களில் அவர்கள் தூங்கவும் வாய்ப்புள்ளது. எனவே அருகிலேயே தானியங்கி தேனீர் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் தங்களது வேலையை தொடங்க அவர்களது பணியில் நல்ல பலன் கிடைப்பதோடு சோர்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்ய ஏதுவாக இருக்கும். எனவே இணைப்பணியாற்றும் இடத்திற்கு அருகில் தேனீர் மற்றும் குடிநீர் வசதி அமைப்பது என்பது மிகவும் அவசியமாகும்.