வீடு வீடாக நேரடி காய்கறி விநியோக தொழிலை தொடங்குவது தொடர்பான வழிமுறைகள்
வீட்டுக்கு வீடு நேரடி காய்கறி விநியோக தொழில் என்றால் என்ன இந்த காய்கறி வினியோக தொழிலை தொடங்குவது எப்படி அதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்கள் என்ன போன்றவற்றை விவரமாக இந்த கட்டுரையில் காணலாம். வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்யும் தொழிலில் அனைத்து துறையிலும் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டுள்ளது. ஒரு சிலரின் சோம்பேறித்தனமும் நேரமின்மையும் இந்தத் தொழில் இவ்வாறு அதி வேகமாக வளர்ச்சி அடைவதற்கான காரணமாக உள்ளது. இந்த சேவையை ஒரு சிலரது தொழிலாக செய்வதனால் சாதாரண மக்கள் இதற்காக செலவிடும் நேரத்தை பயன்படுத்தி தங்களது சொந்த நிறுவனத்திலும் அலுவலகத்திலும் உபயோகப் படுத்தி பொருள் ஈட்டுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த விநியோக கட்டண சேவை அவர்களுக்கான அதிகப்படியான பணிச்சுமையை குறைக்கிறது. முக்கியமாக அதிகப்படியான வீட்டு வேலைகளை மேற்கொள்ளும் குடும்பத் தலைவிகள் இத்தகைய வீடுவீடாக காய்கறி வினியோகம் செய்யும் நபர்களுக்கு அதிகப்படியான ஆதரவும் அன்பும் அளித்து வருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்குத் தேவையான ஒரு சில காய்கறிகள் கூட தேவையான நேரத்தில் வீட்டின் வாசல் படியிலேயே கிடைக்கிறது என்பதால் மட்டுமே.
நீங்களும் இதே போல் வீடுவீடாக காய்கறி விநியோகம் செய்யும் தொழில் செய்ய விரும்பினால் முதலில் அந்த தொழில் செய்ய தேவையான நுணுக்கங்கள் மற்றும் அந்த வணிக சந்தை பற்றிய அறிவும் இருக்க வேண்டும்.
வீடுவீடாக செய்யும் வியாபாரம் என்றால் என்ன?
இதை சுலபமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு சிறு குழு அடங்கிய மக்கள் அல்லது நிறுவனம் தங்களுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்ப்பது ஆகும். அவ்வாறு மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கான பொருளின் தேவையை உடனடியாக கொண்டு சேர்த்து விடுவதால் பெரும்பாலான மக்கள் இதற்கு மாறிவிட்டனர். இவ்வாறு மக்களின் வீட்டுக்கே சென்று பொருட்களை கொண்டு சேர்ப்பதால் அவர்களின் தேவைகளை எளிதில் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் மார்க்கெட்டிங் செய்ய முடியும்.
எந்தெந்த பொருட்களை விநியோகம் செய்ய முடியும்?
நல்ல தரமான புத்தம் புதிய காய்கறிகளை பெரும் பண்ணை முதலாளி இடமோ அல்லது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யலாம். இவ்வாறாக நேரடியாகவே நீங்கள் கொள்முதல் செய்வதால் காய்களில் உள்ள தரத்தை திறமையாக பரிசோதித்து வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான காய்கறி தேர்ந்தெடுத்து நேரடி விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு புது காய்கறிகளை நன்றாக பிரஷ்ஷாக தந்து வாடிக்கையாளர்களின் அனுமானத்தை பெறுவதன் மூலம் அதிகப்படியான வணிகத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த தொழில் தொடங்க என்னென்ன நடவடிக்கைகள் மற்றும் தகுதிகள் தேவை:
1) தொடர்ந்து எங்கு இருந்து காய்கறிகளை பெறுவது என்பதை பார்க்க வேண்டும்
இந்தத் தொழிலை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு பார்க்க வேண்டியது என்னவென்றால் உங்களால் உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து விதமான காய்கறிகலும் எங்கிருந்து கிடைக்கும் என்பதை பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். பல்வேறு விதமான மொத்த காய்கறி விற்பனையாளர்களை அணுகி அவரிடம் உங்களது தொழில் பற்றிய செய்திகளைக் கூறி அவர்கள் இடம் நீங்கள் ஆதரவு கோர வேண்டும். அனைவரின் ஆதரவும் இந்த தொழில் செய்வதற்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், பலதரப்பட்ட காய்கறிகள் பல்வேறு இடங்களில் நீங்கள் பெற வேண்டியது அவசியம். ஒரு இடத்தை நம்பி உங்களது காய்கறி விற்பனை வணிகம் இருந்தால் பிற்காலத்தில் தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். சிறிய முறையில் சிறு பகுதியை மட்டும் சார்ந்து நீங்கள் இந்த வணிகத்தில் ஈடுபட விரும்பினால் உங்கள் பகுதியை சார்ந்த ஒருசில இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மூலம் உங்களுக்கு தேவையான காய்கறிகளை அன்றாடம் பெற்றுக் கொள்ள முடியும். உங்களிடம் காய்கறி இருந்தால் தான் உங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வழங்க முடியும் ஆகவே இதை எளிதாக கருதாமல் இது சம்பந்தப்பட்ட காரியங்களில் திறம்பட செயல்பட்டு அனைத்து நேரங்களிலும் காய்கறி கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்.
2) தொழிலில் சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல் அவசியம்
காய்கறி எங்கிருந்து நிரந்தரமாக பெற வேண்டும் என்பதைப் பற்றிய முடிவு எடுத்த பின்னர் நீங்கள் அடுத்து சிந்திக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால் அதை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஆகும். மக்களிடம் உங்களது புதிய காய்கறி வினியோக தொழிலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை செய்ய வேண்டும். பெரிய அளவில் இந்த தொழிலை செய்ய விரும்பினாலும் சரி அல்லது சிறிய அளவில் இந்தத் தொழிலை செய்ய விரும்பினாலும் சரி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை இடைத்தரகர்களிடம் உங்களுக்கு நல்ல தொடர்பு இருப்பது அவசியமாகும்.
3) திறம் வாய்ந்த சந்தைப்படுத்துதல் திட்டத்தை அமல் படுத்துதல்:
காய்கறிகளை சந்தைப்படுத்துதல் பற்றிய அனுபவம் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் எந்தக் காய்கறிகளை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். பேனர்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற பழைய பாரம்பரிய மார்க்கெட்டிங் முறை மற்றும் தொலைக்காட்சி, சமூக வளைதளம் போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகளை நடத்தலாம். டிஜிட்டல் முறையில் உங்களது காய்கறி விநியோக வணிகத்தின் சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை தெரியப்படுத்தும் போது குறைந்த நேரத்தில் அதிக மக்களை சென்றடையும். உங்கள் மார்க்கெட்டிங் முறையின் இறுதி படியாக உங்களுக்கென்று தனி இணையதளத்தை உருவாக்கி அதில் உங்களது காய்கறி விநியோக விற்பனையின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கலாம்.
4) போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கு சரியான வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும்:
உங்களது காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக அமைக்கும் சேமிப்புக் கிடங்கு நகரத்தின் முக்கியமான பகுதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு தகுந்த இடத்தில் அமைய வேண்டும். காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கு கனரக வாகனங்கள் மற்றும் அதை வீடு வீடாக விநியோகம் செய்வதற்கு இலகுரக வாகனங்கள் என வெவ்வேறு வகைகள் தேவைப்படும். இத்தகைய வாகனங்களை தேர்ந்தெடுக்கும்போது அதிக மைலேஜ் கொண்ட வாகனமாகவும் அதிக நாள் நீடிக்க கூடிய நல்ல வாகனமாகவும் வாங்குவது அவசியமாகும். சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் குளிரூட்டப்பட்ட வசதி தகுந்தமுறையில் மின்சார சிக்கனம் ஏற்படும் வகையில் அமைக்க வேண்டும்.
காய்கறி விநியோக தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை படிகள்:
1) உங்கள் வாடிக்கையாளரை அடையாளம் காணவும்:
எந்த இடத்தில் உள்ள மக்கள் இந்த மாதிரியான டோர் டெலிவரி சேவையை அதிகம் விரும்புவார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்கு உங்களது காய்கறி விநியோக சேவை எந்த வகையில் உதவி செய்யும் என்பதை தெரியப்படுத்தும் உத்தியை கையாள வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் புதுப்புது வாடிக்கையாளர்களாக இணைத்து உங்களது வினியோக சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு திட்டங்களை வகுக்க வேண்டும். புதுப்புது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் உங்கள் காய்கறி விநியோக சேவையை தொடர்ந்து பயன்படுத்த கூடிய அளவில் திட்டங்களை உருவாக்கும் சிறந்ததொரு மார்கெட்டிங் டீம் அமைவது முக்கியம். எந்த நேரத்தில் மக்கள் காய்கறி பெற அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் உங்களது தொழில் திட்டத்தை வகுக்க வேண்டும்.
2) சரியான இடத்தை இடத்தை தேர்வு செய்யவும்:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் மற்றும் இடத்தைப் பொறுத்தே உங்களது காய்கறி நிர்வாக சேவையின் தொழில் வளர்ச்சி அமையும். மிகப்பெரிய காய்கறி சந்தை ஏற்கனவே அமைத்து அதன் அருகேயே குடியிருப்புகள் இருக்கக்கூடிய இடத்தில் நீங்கள் இந்த விநியோகம் செய்ய முற்பட்டால் அது உங்களது தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையாது. ஆகவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் அதிக குடியிருக்கும் உறுப்பினர்களை கொண்ட இடமாகவும் இந்த காய்கறி தொழில் செய்யக் கூடியவர்கள் குறைவாக இருக்கும் இடத்திலும் அமைய வேண்டும்.
-
வேலையாட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இலக்கு அமைக்க வேண்டும் :
ஒரு தொழிலில் முன்னேற வேண்டும் என்றால் அதனுடைய முதலீட்டாளர் மட்டும் திறமையாக வேலை செய்தால் பத்தாது. அதே வேலை செய்யக்கூடிய அனைத்து வேட்பாளர்களும் தங்களது இலக்கை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வேலை செய்யும்போது மட்டுமே அந்த நிறுவனம் பெரிய வளர்ச்சி அடையும். அதேபோல் அங்கு வேலை செய்யக்கூடிய வேலையாட்களுக்கு சிறந்த வகையில் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் செய்யக்கூடிய பயிற்சிகளை அளித்து ஊக்குவிக்க வேண்டும்.
-
உங்கள் வாடிக்கையாளருக்கு பாதுகாப்பான சேவையை தரமுடியும் என்பதை உணர்த்துங்கள்:
சில மக்களுக்கு இத்தகைய காய்கறி விநியோக சேவை தேவைப்பட்டாலும் அவர்கள் இதில் ஆர்வம் காட்ட பாதுகாப்பின் காரணமாக தயங்குகிறார்கள். அன்னியருக்கு தங்களது முகவரி மற்றும் கைபேசி எண்களை தர வேண்டுமா என்பதைப் பற்றி யோசிக்க கூடிய மக்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஏதேனும் ஒரு புகாரை கொண்டுவர நேர்ந்தால் காய்கறி விநியோகித்தவரை அணுகி என்ன பிரச்சினை என்பதை தெளிவாக விசாரித்து வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பதிலும் இழப்பீடும் அளித்து வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற வேண்டும்.
நன்மைகள்:
- வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் அவர்களை அனுப்புவதால் உங்களுக்கும் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை. குறைந்தபட்ச ஆட்களை வைத்துக்கொண்டு தொலைபேசியில் வாடிக்கையாளருக்கு தகுந்த முறையில் பயிர் இருக்கக்கூடிய வேலையாட்களை மட்டும் நிரந்தர ஆட்களாக தேர்வு செய்தால் போதுமானது.
- நேரடி வணிகத்தில் ஈடுபடும்போது சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் அளவை மாற்றி மாற்றி தெரியப்படுத்தி நேரத்தை அதிகம் எடுப்பார்கள். இந்த வகையான ஆர்டரில் அத்தகைய சிக்கல்கள் இல்லை.
- உங்கள் இணைய வழி தளத்தை பிரபலப் படுத்தி அதன் மூலம் விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்கள்வாடிக்கையாளர்கள் தங்கள் கடைக்கு வந்து வரிசையில் நின்று நேரத்தை செலவழிக்க தேவை இல்லை.
தீமைகள்:
- இத்தகைய ஆன்லைன் காய்கறி விற்பனை நிலையத்தை நிறுவ வேண்டும் என்றால் உங்களுக்கு அதிகப்படியான முதலீடு தேவை.
- பெரும்பாலான சிறு-குறு காய்கறி விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை நீங்கள் பாதிப்படைய செய்யக் கூடும்.
- ஒரு சிறு தவறு நேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் காய்கறி வழங்க முடியாவிட்டால் உங்களுக்கான கெட்ட பெயர் மிக அதிகமாக பரவக் கூடும்.
முடிவுரை
காய்கறிகள், பழங்கள், மருந்து, உணவு மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் இவை அனைத்தையும் வீட்டிற்கே சென்று கொடுக்கக்கூடிய வகையில் நமது வணிக வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களுக்கும் இத்தகைய காய்கறி விநியோக சேவை திருப்திகரமாக இருப்பதால் இதற்கு பெரும் ஆதரவும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். ஒரு இடத்தில் கடையை நிறுவி அங்கு உள்ள மக்களின் காய்கறி தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல் இந்த முறையில் காய்கறி விநியோக விற்பனை செய்யும் போது உங்களுடைய வளர்ச்சிக்கு அளவே இல்லாமல் அனைத்து இடங்களிலும் விஸ்தரிக்க முடியும். பிக் பாஸ்கெட் போன்ற பிரபலமான தொழில் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் காய்கறி விற்பனை இருந்தாலுமே உங்களுக்கு இந்தத் தொழிலை செய்யக்கூடிய ஆர்வமும் நுட்பமும் தெரிந்தால் நீங்களும் இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.