written by | October 11, 2021

காகித தட்டு வணிகம்

×

Table of Content


பேப்பர் பிளேட் தொழிலை தொடங்குவதற்கான செயல்திட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அடிப்படை விஷயத்தை தனிமனிதர் முதற்கொண்டு அரசாங்கம் வரை உணரக் கூடிய சூழலை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தொழில் வளர்ச்சிகள் காரணமாக இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை சற்று தாமதமாக தான் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். எல்லாவிதமான பொருட்களையும் இயற்கை சார்ந்ததாகவே பயன்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம். அதனடிப்படையில் வரையறை செய்யப்பட்ட தர நிலைகள் கொண்ட வகையில் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி அன்றாட வாழ்க்கைக்கான பொருட்களை தயார் செய்வது அவசியம். அதன் அடிப்படையில் சமீப காலங்களில் பேப்பர் பிளேட் பிசினஸ் என்ற தொழில் பிரிவு அதற்கான வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத நிலையிலும், பயன்படுத்திய பின்னர் அகற்றுவது சுலபம் என்ற வகையிலும், இந்த பிசினஸ் தற்போது விரைவான வர்த்தக வாய்ப்புகளை பெற்று வரும் தொழில் பிரிவாக வளர்ந்து கொண்டுள்ளது. கண்கவரும் தோற்றத்துடனும், வாழை இலை தட்டுப்பாடு மற்றும் பிளாஸ்டிக் பிளேட் ஆகியவற்றுக்கான மாற்று என்ற நிலையில் பேப்பர் பிளேட் தயாரிப்பு என்பது ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் மாறி இருக்கிறது. 

பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேப்பர் தட்டு, கப்புகளுக்கு டிமாண்ட் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சாலையோர தள்ளு வண்டிகள் தொடங்கி, வீட்டு விசேஷங்கள் வரை பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டில் வைக்கும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் ஆகியவை தவிர்க்கப்பட்டு விடுவதால், பேப்பர் தட்டுகளும், பேப்பர் கப்புகளுக்கும் சந்தை மதிப்பு விரைவாக உருவாகி வருகிறது.

குறைவான போட்டிகள்

தற்போதைய சூழலில் பெரிய அளவிலான போட்டிகள் இல்லாத ஒரு தொழிலாக பேப்பர் பிளேட் பிசினஸ் உருவாகி இருக்கிறது. இந்த தொழிலில் மூலம் செய்யப்படும் உற்பத்தியானது உள்ளூர் அளவிலான தேவைகளை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதில்லை. பொதுமக்களுக்கான பேப்பர் பிளேட் தேவையை உள்ளூர் தயாரிப்பாளர்களே முற்றிலும் பூர்த்தி செய்ய இயலவில்லை. அதனால் வெளியூர்களிலிருந்து அவற்றை விற்பனைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்கள் அது கருத்தாகும். இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு கல்வி என்பது அவசியம் இல்லை. சிறந்த தொழில்நுட்ப அறிவு வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஈடுபாடும், உழைப்பும் அளிக்க முடிந்த எந்த ஒரு தனிநபரும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளிகள் கொண்ட நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் இந்த தொழிலில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை பல தொழில் முனைவோர்கள் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள்.

பேப்பர் பிளேட் பிசினஸ் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் அடிப்படையான பயிற்சிகளை பெற்று இருந்தாலே போதுமானது. தங்களுடைய தனிப்பட்ட செயல் திறனை பயன்படுத்தி சுலபமாக வீட்டிலேயே இந்த தொழிலை ஆரம்பித்து செய்ய முடியும். மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு ஆகியவை பேப்பர் வடிவத்தில் இருப்பதால் நாளடைவில் கெட்டுப்போய்விடும் என்ற சிக்கல்கள் இந்த தொழில் துறையில் இல்லை. இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு உற்பத்தியை தொடங்கலாம் அல்லது பல நபர்கள் செயல்படும் நிறுவனமாகவும் தொழிலை ஆரம்பித்து செய்து வரலாம் என்ற சுலபமான செயல்முறை கொண்ட தொழிலாக இது இருக்கிறது. இதற்கான இடமும் பெரிய அளவில் தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த தொழிலில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு உபயோகப்படும் விதத்தில் பல்வேறு வகையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தேவையான லைசென்ஸ்

தனிப்பட்ட உரிமையாளர் என்ற நிலையில் அதற்கான தொழில் பதிவு முறையை கடைபிடிக்க வேண்டும். தொழில் கூட்டாளிகள் மூலம் செயல்படும் நிறுவனம்  என்ற நிலையில் நிறுவனங்களுக்கான பதிவுச் சட்டத்தின் மூலம் தொழிலை ரெஜிஸ்டர் செய்வது அவசியம்.

ஜி.எஸ்.டி ரெஜிஸ்ட்ரேஷன்

தொழிலை தொடங்கி நடத்துவதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு மேற்கொள்வதற்கான பதிவு எண்ணை முறைப்படி அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வது அவசியம்.

டிரேடு லைசென்ஸ்

பிசினஸ் தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கான உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வணிக வரி வசூலிப்பதற்காக டிரேடு லைசன்ஸ் பெற்றுக்கொண்டு தொழிலை செய்வது முக்கியம்.

எம்.எஸ்.எம்.ஐ அல்லது எஸ்.எஸ்.ஐ பதிவு

அரசாங்கத்தின் சிறு தொழில் நிறுவனம் மூலம் பதிவு செய்யப்பட்ட தொழிலாகவோ அல்லது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் பதிவு செய்யப்பட்ட தொழிலாகவோ இந்த தொழில் பிரிவை செய்வதன் மூலம் பல்வேறு அரசாங்க நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

தொழில் தொடங்க இடவசதி

பேப்பர் பிளேட் பிசினஸ் உற்பத்தி பிரிவுக்கு குறைந்தபட்ச அளவாக 500 சதுர அடி இடவசதியே ஆரம்பகட்டத்தில் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலான இடம் காலப்போக்கில் தேவைப்படக்கூடும். வர்த்தக ரீதியாக செயல்படக்கூடிய எந்த ஒரு நிறுவனத்துக்கும் போக்குவரத்து வசதி இன்றியமையாதது. அதன் அடிப்படையில் சாலை வசதி கொண்ட பகுதியாகும், மின்சாரம், தண்ணீர் வசதிகள், கழிவுநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இந்த தொழில் பிரிவுக்கு தேவையானவை. மேலும், மூலப்பொருளான பேப்பர் சேமித்து வைப்பதற்கான தனிப்பட்ட அறை, உற்பத்தி செய்வதற்கான பகுதி மற்றும் தயாரிக்கப்பட்ட பேப்பர் பிளேட் வகைகளை பாதுகாப்பாக வைக்க கூடிய அறை ஆகியவையும் முக்கியம்.

தேவையான இயந்திரங்கள்

இன்றைய சந்தை நிலவரத்தில் பேப்பர் பிளேட் தயாரிப்பதில் செமி ஆட்டோமேட்டிக் மிஷின் மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மிஷின் ஆகிய இரண்டு வகையில் இயந்திரங்கள் கிடைக்கின்றன. தொழில் முனைவோர் தங்களுடைய முதலீட்டுக்கு ஏற்ப அவற்றை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த வகையில்  பேப்பர் கட்டிங் மெஷின், டபுள் டை பிரஸ் மெஷின், பேக்கேஜிங் மெஷின், வெயிட் ஸ்கேல் ஆகிய நான்கு விதமான இயந்திரங்கள் அவசியம். 

எந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்

பேப்பர் பிளேட் தயாரிப்பு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அமைந்துள்ள பெரு நகரங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இணைய தளங்கள் மூலமாக அவற்றின் முகவரியை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மூலப்பொருளான பேப்பர் வகைகளான பாலிகோட் ஒயிட், சில்வர் திக், சில்வர் நைஸ் ஆகியவற்றை பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ளலாம்.

தயாரிப்பு முறை 

பேப்பர் பிளேட் பிசினஸ் புரொடக்‌ஷன் எந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் செய்யும் மெஷின். இரண்டாவது, பேப்பர் பிளேட் டை மெஷின். இந்த இரண்டுமே இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை ஆகும். தயாரிக்க வேண்டிய பிளேட் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்தி, வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கி கட்டிங் செய்ய வேண்டும். அப்போது, வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். அவற்றில், மெல்லிய ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையிலும், கெட்டியான ரகம் என்றால் 30 முதல் 40 வரை எண்ணிக்கையிலும் வைத்து கட்டிங் செய்ய இயலும். அதன் பின்னர், கட்டிங் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் கச்சிதமாக வளைக்கப்பட்டு பிளேட் கிடைக்கிறது. பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். சுமாராக, ஒரு நிமிடத்திற்கு 30 பிளேட்கள் தயாராகும். 40 முதல் 50 பிளேட்களாக சேர்த்து வைத்து, கச்சிதமாக பேக்கிங் செய்து கொள்ள வேண்டும். 

உற்பத்தி மற்றும் வருமானம்

பேப்பர் பிளேட் பிசினஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 36 லட்சம் பிளேட்டுகளைத் தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் சுமார் 3 லட்சம் பிளேட்டுகளைத் தயாரிக்கலாம். ஒரு நாளில் 12 ஆயிரம் பிளேட்டுகள் உற்பத்தி செய்யலாம். இதற்கான மூலப்பொருளான பேப்பருக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் ரூபாய் செலவாகலாம். ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் என்று கொண்டால், தினசரி லாபம் சுமார் ரூ. 2 ஆயிரம் என்ற நிலையில் 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்று பொதுவாக கணக்கிடலாம்.

விற்பனை வாய்ப்பு

தயாரித்து முடித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பேப்பர் பிளேட் வகைகளை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வது முதல் முயற்சியாக இருக்க வேண்டும். இதற்கான காரணம் வெளிப்படை. இதன் அடுத்த கட்டமாக மொத்த விற்பனை என்ற நிலையில் நிறுவனங்களுக்கு அல்லது வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம். இன்றைய தொழில்நுட்ப வாய்ப்புகள் ஆன ஆன்லைன் வர்த்தக முறையை கடைபிடித்தும் வர்த்தகத்தை விரிவு செய்து கொள்ள முடியும்.

கேட்டரிங் தொழில் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அரசியல் கூட்டங்கள், கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். பேப்பர் தட்டுகள் அனைத்து விசேஷங்கள் மற்றும் விழாக்களில் அதிகமாக வரவேற்கப்படுவதால் விற்பனை மூலம் நல்ல லாபம் பெறலாம். தரமான தயாரிப்பாகவும், வாடிக்கையாளரிடம் நேரடி அணுகுமுறையும் இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும். சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு  ஒரு நாளைக்கு 500 முதல் 1000 கப்கள் தேவைப்படக்கூடும்.

வங்கி கடன் மற்றும் அரசு மானியம்

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருக்க கூடிய இந்த தொழில் பிரிவுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. தொழில் முயற்சிகளில் மிகவும் நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு இந்த துறைக்கு தேவையில்லை என்பதுடன், தொழிலை ஒருவர் எளிதாக கற்றுக் கொள்ள இயலும் என்ற நிலையிலும் வங்கிகள் கடன் வழங்க முன் வருகின்றன. மேலும். பேப்பர் பிளேட் பிசினஸ் என்பது பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் அரசாங்கத்தின் மானியம் கிடைக்கிறது. அதனால் முதலீட்டு தொகையில்  நகர்ப்புற பகுதிகளுக்கு 25 சதவிகிதமும்,  கிராமப்புற பகுதிகளுக்கு 35 சதவிகிதமும் மானியம் அளிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த மானியத் தொகை சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் அது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள கால அவகாசத்திற்குள் பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி அந்த தொகையை கடனுக்கான தொகையில் கழித்துக் கொள்ளும். அதன் பின்னர் மானியத் தொகை போக மீதமுள்ள கடன் தொகை மட்டும் வட்டி செலுத்தி வந்தால் போதுமானது.

சுற்றுச்சூழல் குறித்து இன்று நம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால், பேப்பர் பிளேட் தயாரிப்பு தொழிலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பதால் சிறுதொழில் செய்ய விரும்புவோருக்கு சாதகமான தொழில். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தத் தொழிலில் வாய்ப்புகளும் அதிகம். உள்ளூர் சந்தை நிலவரத்துக்கு 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள பிளேட் அல்லது கப்புகள் போதுமானது. ஏற்றுமதி செய்யும் நிலையில் 330 ஜி.எஸ்.எம் அளவு என்ற நிலையில் ஒவ்வொரு நாட்டுக்கும் தரம் மாறுபடக்கூடும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.