written by | October 11, 2021

உள்ளூர் சந்தைப்படுத்தல் வணிகம்

×

Table of Content


வணிக வளர்ச்சிக்கு லோக்கல் மார்க்கெட்டிங் முறையின் முக்கியத்துவம்  

ஒரு குறிப்பிட்ட நகரத்தை அல்லது ஊரை மையப்படுத்தி துவங்கும் பல்வேறு வகையான தொழில்கள் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கு காரணம் அவர்களிடம் உள்ள சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள் ஆகும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தை மையப்படுத்தி செய்யப்படும் மார்க்கெட்டிங் உத்திகள் லோக்கல் மார்க்கெட்டிங் என்றழைக்கப்படுகிறது. 

லோக்கல் மார்க்கெட்டிங் முறையின் முக்கியத்துவம் 

துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள், பழுது பார்க்கும் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு மிக முக்கிய தொழில் வளர்ச்சி உத்தியாக இத்தகைய லோக்கல் மார்க்கெட்டிங் இருக்கிறது. ஏனென்றால் இத்தகைய கடை வைத்திருப்பவர்களுக்கு அந்த நகரத்தை சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் தங்களது வியாபாரம் பற்றிய விவரங்களை சென்று அடையக்கூடிய வகையில் சந்தைப்படுத்துதல் முறையைக் கையாளுவது அவசியம். நீங்கள் எந்த ஒரு கடை வைத்து வியாபாரம் செய்பவராக இருந்தாலும் குறைந்தது 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு உங்களது கடை பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சென்று சேர்ந்தால் மட்டுமே உங்களது தொழில் வளர்ச்சி அடையும். 

ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த வணிக நிறுவனம் வேறொரு பகுதியில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அங்கு ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டு இருக்கும் பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலமான வணிக நிறுவனங்கள் உடன் போட்டி போட்டுக்கொண்டு சந்தைப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் இணையதளத்தை பயன்படுத்தி தங்களுக்கு அருகாமையில் உள்ள சிறந்த வணிகத்தின் தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். ஆகவே நீங்கள் செய்யும் வணிகத்தை பிரபலமடையச் செய்ய வேண்டுமென்றால் பாரம்பரிய சந்தைப்படுத்துதல் மட்டுமன்றி இணையவழி லோக்கல் மார்க்கெட்டிங் வழிகளையும் பயன்படுத்தவேண்டும். 

பல்வேறு வகையான லோக்கல் மார்க்கெட்டிங் முறைகள் மூலம், குறிப்பிட்ட நகரத்தை மையப்படுத்தி செய்யக்கூடிய தொழில்களின் வெற்றிக்கு வழி வகுக்கிறார்கள். இதில் பொதுவாக பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட வகை லோக்கல் மார்க்கெட்டிங் உத்திகளைப் பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பிற வணிகர்களுடன் நல்லதொரு நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

நீங்கள் ஏதேனும் புதிதாக தொழிலை ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தொடங்க விரும்பினால் அங்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வணிகர்களிடம் சென்று நல்லதொரு நட்பை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் இருந்தது தொழிலுக்கு ஏற்ற உதவிகளை பெற முயற்சிக்க வேண்டும். அதற்கு ஈடாக நீங்களும் உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொழில் பற்றியும் கூறி மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பட்ட வணிகர்களிடம் நல்ல நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தி ஒரு நெட்வொர்க் ஆக செயல்படும் போது அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற வழிவகுக்கும். இத்தகைய முடிவுகளை தாங்கள் முன்னின்று செயல்படுத்தும்போது மிகப்பெரிய நட்பு வட்டாரத்தையும் சகோதரத்துவத்தையும் பிற வணிகர்களிடம் உங்களது வணிகத்தை சிறப்படைய வாய்ப்பு இருக்கிறது. பல்வேறுவிதமான சாதக பாதக சூழ்நிலைகளை கலந்தாலோசித்து செயல்படுத்துவதன் மூலம் நஷ்டங்களை குறைக்க முடியும்.

அடிப்படை மற்றும் பாரம்பரிய மார்க்கெட்டிங் முறையை பின்பற்ற வேண்டும் 

காலம் காலமாக எந்த ஒரு வணிக நிறுவனம் வைத்திருப்பவரும் புதிய மனிதர்களை சந்திக்கும் போது தங்களது விசிட்டிங் கார்டு எனப்படும் வணிக அட்டையை கொடுத்து தங்களது வணிகத்தை பற்றிய தகவல்களை சொல்வார்கள். இவ்வாறு விசிட்டிங் கார்டு அனைவருக்கும் கொடுப்பதன் மூலம் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உங்களது அலுவலக விலாசத்தை அல்லது தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக்கொள்ள உதவும். பெரும்பாலும் மொபைல் போன் தகவல்கள் மூலம் இத்தகைய விவரங்களை எளிதில் அறிந்து கொள்ள முடிந்தாலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இத்தகைய வணிக அட்டையை பயன்படுத்தும் முறை இன்றளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.  

லோக்கல் மார்க்கெட்டிங் என்பது நகரத்தில் உள்ள 100 சதவீத மக்களுக்கும் உங்களது வியாபாரத்தைப் பற்றி தெரிய வைக்க வேண்டியது என்பது இல்லை. உங்களது தொழில் சார்ந்த உங்களது வணிகம் தேவை உள்ள அனைத்து மக்களையும் சென்று அடைவதே இதனுடைய நோக்கமாகும். ஆகவே அத்தகைய வாடிக்கையாளர்களை கண்டறியக் கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதற்கு நன்கொடை வழங்கி உங்களது வணிகத்தின் அடையாளத்தை தெரிவித்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உங்களது வணிகம் உணவகம் சார்ந்த வணிகமாக இருக்குமேயானால் சமையல் திருவிழா, உணவுத்திருவிழா, சாப்பாட்டு போட்டி, விழாக்கால சலுகை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து பலன் அடைய முயற்சிக்க வேண்டும்.  

ஆன்லைன் விற்பனை மிகவும் பிரபலம் அடையாத காலகட்டத்தில் வணிகர்கள் சிறு குலுக்கல் முறை பரிசுப் போட்டி நடத்தி வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரிகளை பெற்று அவ்வப்போது தங்களது சலுகைகள் பற்றிய தகவல்களை பரப்பி கொண்டுவந்தார்கள். இத்தகைய செயல்பாட்டு உத்திகள் மூலம் அவர்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை தேவையான காலகட்டத்தில் பெற்று வணிக வளர்ச்சி அடைந்தார்கள். இணையத்திற்கு முந்தைய நாட்களில், பல சிறு வணிகங்கள் மக்களை தங்கள் வீட்டு வாசல்களில் சேர்ப்பதற்கு சில அழகான நிலையான தந்திரங்களை பயன்படுத்தின.  

ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்த வேண்டும் 

நாம் அனைவரும் அறிந்த படி உலகத்தில் உள்ள 70 சதவீதமான மக்கள் இணைய பயன்பாட்டு முறைகளை தகவல் பரிமாற்றத்திற்கு அல்லது பொழுதுபோக்கிற்காக  பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இத்தகைய மார்க்கெட்டிங் உத்திகளை சர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங் மற்றும் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் மற்றும் ஈமெயில் மார்க்கெட்டிங் போன்ற பல்வேறு பரிமாணங்களில் செய்து வருகின்றனர். நீங்கள் தொழில் செய்யும் நகரத்தை மையப்படுத்தி உள்ள அனைத்து விதமான சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களின் இமெயில் முகவரிகள் தொலைபேசி எண்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் மூலம் உங்களது வணிகத்தின் சாராம்சம் மற்றும் சிறப்புகளை விவரிக்க முடியும். 

கூகுளில் உள்ள மை பிசினஸ் மற்றும் ஜஸ்ட் டைல் போன்ற இணைய தளங்களில் தங்களது வணிகத்தை பற்றியான தகவல்களை தெரிவிப்பதன் மூலம் குறிப்பிட்ட இடம் சார்ந்த வணிகத்தை தேடும் நபர்களுக்கு உங்களது வணிகத்தை பற்றியான தகவல்கள் சென்றடைய வாய்ப்பு உள்ளது. உங்களது நகரம், ஊர் போன்ற இடம் சார்ந்த குறியீடுகளை இணையதளங்களில் தெரிவிப்பதன் மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. 

கூகுள் மேப்ஸில் உங்களது வணிகம் இடம் பெறுவது மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான லோக்கல் மார்க்கெட்டிங் உத்தியாக கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நகர விரிவாக்கம் காரணமாக உள்ளூரில் உள்ள சில இடங்களையே பெரும்பாலான மக்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இத்தகைய மக்களுக்கு உங்களது வணிகத்தை வந்து அடைவதற்கான வழிகாட்டியாக கூகுள் மேப் செயல்படுவதால் தவறாமல் இதை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். 

வணிக நிறுவனத்திற்கான இணைய தளத்தை உருவாக்க வேண்டும் 

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து வகையான தொழில்களும் தங்களுக்கு என்று ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் தங்கள் தொழில் சார்ந்த தகவல்களை அவ்வப்போது வெளியீட்டு வருகிறார்கள். இவ்வாறு இணைய தளத்தை ஆரம்பித்து தகவல்களை வெளியிடுவதன் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் அவர்கள் தொழில் சார்ந்த தகவல்களை கூகுள் இணையதளத்தில் ஒருவர் தேடும்போது தங்களது இணையதளத்தை முன்னிலை படுத்துவதற்காக செய்கிறார்கள். தங்களது நிறுவனத்தின் இணையதள பக்கங்களில் குறிப்பிட்ட நகரத்தின் பெயரையும் உங்களது தொழில் சார்ந்த தகவல்களையும் மையப்படுத்தி கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் உங்களது இணையதளம் கூகுள் தேடுதல் பக்கங்களில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களது வலைதளங்களில் இடப்படும் கட்டுரைகளை அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலும் பகிர்வதன் மூலம் வெவ்வேறு வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடிய வாய்ப்பை எந்த ஒரு விளம்பர கட்டணங்கள் இல்லாமலும் செய்யமுடியும்.

உங்களது தொழில் சார்ந்த சொற்களை பயன்படுத்தி கூகுள் இணையதளத்தில் தேடும் பொழுது உங்களது போட்டியாளர்களின் இணையதள பக்கங்கள் முன்னிலை வகிக்கிறது என்றால் அவர்கள் என்ன மாதிரியான தகவல்கள் மற்றும் உத்திகளை கையாண்டு முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு போட்டியாளர்களின் உத்தியை தெரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு ஈடான இணையதளத்தை உருவாக்கி தாங்களும் முன்னிலை பெற முடியும். ஒவ்வொரு முறையும் பல்வேறு வகையான வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் அருகாமையில் உள்ள வணிக நிறுவனத்தை தேடும் போது உங்களது நிறுவனம் முன்னிலை வகிக்க ஏற்படுமேயானால் நீங்கள் மிகச்சிறந்த வெற்றியை எளிதில் அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தகவல்களை இணையதளத்தில் பகிர்ந்து கூகுளில் முதலிடம் பிடிப்பது ஏதேனும் சிரமம் இருந்தால் இதற்காக செயல்பட்டு வரும் எஸ்சிஓ நிறுவனங்களை தொடர்பு கொண்டு உங்களது தேவையை தெரிவித்து அவர்களது கட்டண சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

கட்டண விளம்பரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 

பிரபலமான நகரில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்களுக்கு இடையில் புதிதாக ஒரு தொழிலை தொடங்கி மக்களிடம் குறைந்த நாளில் அதிக வரவேற்ப்பை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லாமல் இருப்பதால் அனைத்து விதமான கட்டண விளம்பரங்களையும் உங்களது தொழில் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்ளவேண்டும். கூகுள் தேடலில் உங்களது வலைதளத்தை முன்னிலைப் படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும் என்பதாலும் போட்டி காரணமாக முதலிடம் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி இல்லாமல் இருப்பதாலும் கூகுளின் கட்டண சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை உங்களது வலைதளத்திற்கு வரவைக்க முடியும்.  

சமூக வலைதளங்களிலும் இதேபோன்றதொரு கட்டண விளம்பரங்கள் மூலம் உங்களது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வகையை கட்டண சேவைகளில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த நேரத்தில் எத்தகைய வயதுடைய வாடிக்கையாளர்களை அணுக வேண்டும் போன்ற விவரங்களின் அடிப்படையில் கட்டண சேவையைப் பயன்படுத்தலாம். சமூக வலைத்தளங்களில் உங்களது வணிகத்தை பற்றியான பக்கங்களை உருவாக்கி அந்த பக்கங்களில் மூலம் உங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து பயன்பெற முடியும்.  

என்னதான் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் அதிகரித்திருந்தாலும் இன்றளவிலும் நாளிதழ் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வழங்கப்படும் விளம்பரம் மூலமாக பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களை சென்றடைந்து தங்களது வியாபாரத்தில் வெற்றியை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் குறிப்பிட்ட செய்யக்கூடிய வியாபாரத்திற்கு மொத்த மாநிலம் மற்றும் மொத்த நாட்டில் முழுவதும் ஒளிபரப்பாக கூடிய தொலைக்காட்சிகளில் அதிக கட்டணம் செலுத்தி விளம்பரப் படுத்துவதில் எந்த ஒரு பயனும் இல்லை. ஆகவே தகுந்த வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் உங்கள் வணிகம் சார்ந்த விளம்பரங்களை செய்து பயன்பெறுங்கள். 

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.