உடனடி சமையல் பொருள் தொழிற்சாலையை எவ்வாறு நிறுவுவது
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகள், சில நிமிடங்களில் சமைக்கக்கூடிய பொடி மற்றும் மாவு வகைகள் போன்ற உணவிற்கான வரவேற்பு அதிகரிக்க பல வகையான காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான காரணம் நம் நாட்டில் சமைக்கத் தெரியாத பல இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலை காரணமாக தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை அதிகரித்திருப்பதே ஆகும். மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் புதிய வகை உணவுகளை ருசித்து பார்க்கும் ஆர்வம் இதற்கு இரண்டாவது காரணமாக அமைகிறது. நகரம் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள சிறுசிறு மளிகை கடைகளில் இத்தகைய இட்லி தோசை சப்பாத்தி போன்ற உடனடி உணவு பொருட்களை விரும்பி வாங்கும் மக்களின் ஆர்வம் இதனுடைய வளர்ச்சியை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மளிகை பொருட்களை வாங்கி சுத்தம் செய்து ருசியாக சமைத்து சாப்பிட நேரம் இல்லாமல் இருப்பதும் இதற்கு அடுத்தபடியாக காரணங்களில் உள்ளன. எனவே இத்தகைய ரெடிமேட் உணவுகளை சிறு தொழிலாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ள இந்த நிலையில் அதற்கு தரமான இன்கிரடியன்ட்ஸ் என்று சொல்லப்படும் மூலப்பொருட்களை முன்வைக்கின்றன.
ரெடிமேட் உணவுகளைத் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்குவது எளிது என்ற நிலையில், இதில் கிடைக்கக்கூடிய லாபத்தை கணக்கிட்டு பல முன்னணி பிராண்டுகள் இதில் ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. தேசிய அளவில் உள்ள பல நிறுவனங்கள் இதற்காக போட்டிபோட்டுக்கொண்டு தொழிலை ஆரம்பித்து கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள நிறுவனங்களும் சிறிய அளவில் தொடங்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. அவர்களைப் போல சிறிய அளவில் தொடங்கப்பட சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், இடியாப்பம் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரித்து பேக்கிங் செய்ய தகுந்த இயந்திரங்கள் அவசியம்.
உடனடி சமையல் பொருள் தயாரிப்பு தொழிலின் வளர்ச்சி
இந்தியாவைப் பொருத்தவரை இந்த துறையின் வளர்ச்சி வருடத்திற்கு 20 முதல் 25 சதவீதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உணவு என்பது மனிதர்களின் அடிப்படை ஆதாரமான விஷயங்களில் ஒன்றாக விளங்குவதால் சுத்தம் சுகாதாரம் போன்ற உடல் நலம் சார்ந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் எந்த நிறுவனமும் வெற்றி பெறும். ஆரம்பத்திலேயே இந்த தொழிலில் பெரிய முதலீடு இட தயக்கம் காட்டும் நபர்களுக்கு தஞ்சாவூரில் உள்ள பயிர் பதன ஆராய்ச்சி மையத்தில் சிறந்த வழிகாட்டுதல் வழங்கி அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது. இங்குள்ள எந்திரங்களில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் சோதனைக்கு இங்குள்ள அதிகாரிகள் உதவுகின்றனர். சமையலுக்கான நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டும் அல்லாமல் வீட்டில் சமைத்து சாப்பிடக் கூடிய செலவிற்கும் இத்தகைய ரெடிமேடு உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடிய செலவிற்கும் பெரிய ஒரு வித்தியாசம் இல்லாமல் இருப்பது முக்கிய காரணியாக இருக்க வேண்டும். வெந்நீரை கலந்தால் வேலை முடிந்தது என்ற அளவில் இன்று சமையலுக்காக செய்யக்கூடிய நேர அளவு இன்று மிகவும் குறைந்துள்ளது. இட்லி தோசைக்கான ஈரமாவு, இடியாப்பம் புட்டு மற்றும் அடை போன்ற உணவு தயாரிப்பதற்காக உலர் மாவு என அனைத்து விதமான சமையலுக்கும் தயாரான இன்ஸ்டன்ட் சமையல் பொருள்கள் வந்தாகிவிட்டது.
உடனடி சமையல் பொருள் தயாரிப்பிற்கான முக்கியத்துவம் என்ன?
சாதாரண சமையல் என்பது அன்றாடம் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வைத்து சமைத்து உண்ணக் கூடியதாக உள்ளது. ஆனால் ஆபத்து மட்டும் பேரிடர் காலங்களில் இத்தகைய பொருட்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சமாளிக்க ஆரம்பிக்கப்பட்டது உணவு பதப்படுத்துதல் மற்றும் உடனடி சமையல் பொருட்கள் ஆகும். ஆனால் நாளடைவில் இத்தகைய உடனடி சமையல் பொருட்கள் மக்களின் அன்றாட தேவையாகவே மாறிவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள் தங்களது வியாபார நோக்கத்துடன் பல்வேறு விதமான உடனடி சமையல் பொருட்களை மக்களிடம் கொண்டு சென்று வருகிறார்கள்.
இந்தியாவில் இத்தொழிற்சாலை நிறுவுவதில் உள்ள நன்மைகள்:
- இந்தியாவில் எண்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க குடும்ப சூழ்நிலை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட வீட்டில் உள்ள ஆண்கள் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியது இருப்பதால் சமையல் செய்வதற்கான நேரமின்மை அதிகமாக இருக்கிறது. எனவே இத்தகைய உடனடி சமையல் பொருட்களை சந்தைப்படுத்துவதில் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை ஏதும் இராது.
- உடனடி சமையல் பொருட்களுக்கான மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதாக கிடைக்கும்.
- மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆரம்பிக்கும் உணவுப்பொருள் சம்பந்தமான தொழிற்சாலைகளுக்கு குறைவு
- அனைத்து விதமான அனுபவமுள்ள தகுதியான வேலையாட்களை உங்களது உணவு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணியமர்த்த முடியும்.
- இந்திய அரசாங்கம் இத்தகைய உணவு சார்ந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு விதமான சலுகைகள் மற்றும் புதுப்புது திட்ட வடிவங்களை வழங்குகின்றது.
- கிராம சமிதி யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் உங்களது தொழிற்சாலைக்கு பத்து லட்சம் வரையிலான மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலையை எவ்வாறு தொடங்குவது?
இதே அரசு ஏற்கனவே இத்தகைய உணவு தொடர்பான தொழிற்சாலை தொடங்குவதற்கு பல்வேறு வகையான கொள்கை முடிவு, திட்டங்களையும் வகுத்து கொடுத்துள்ளது. இந்தியாவில் உணவு தொடர்பான எந்த ஒரு தொழிலையும் எந்த இடத்திலும் தொடங்க வேண்டுமென்றால் FSSAI உரிமம் கட்டாயமாகும். FSSAI- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம், உங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இறுதி உணவு வடிவத்தைப் பொறுத்து பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் VAT, GST போன்ற வரி கட்டுப்பாடு அரசு அலுவலகங்களிலும் NOC சான்றிதழ் போன்றவற்றை தொழிற்சாலை அமைக்க கூடிய இடத்தின் கிராம அலுவலகத்திலும் பெறுவது அவசியம் ஆகும். இது பற்றிய முழு விளக்கவுரை கீழே உள்ள தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில் பற்றிய ஆய்வு மற்றும் சந்தை நிலவரத்தை அறியவும்:
உணவு தொழில் மட்டுமில்லாமல் எந்த ஒரு தொழிலை நீங்கள் புதிதாக ஆரம்பித்தாலும் அடிப்படை கள ஆய்வு செய்து, அதற்கு ஏற்றவாறு உங்களது வியாபார மற்றும் தொழில் நுணுக்கங்களை பயன்படுத்தி இறங்குவதே நல்லதாகும். உங்கள் முதலீடு புரிந்து கொண்டு எந்த வகையான மார்க்கெட்டிங் செய்யலாம் மூலப் பொருட்களை எந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் வாங்கலாம் எந்த வகையான உணவுப் பொருளை நீங்கள் தயாரித்து விற்கலாம் போன்றவற்றை மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு செயல் படுத்த வேண்டும். நீங்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை ஏற்கனவே யார் யார் தயாரித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் தங்களது புது நிறுவனத்தைக் கொண்டு போட்டி போட்டு வெற்றி பெற முடியுமா என்பதை யோசித்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். எந்த ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றால் அதனுடைய இலாபம் மற்றும் பயன்களை கவனிக்கக் கூடிய அளவு அதனுடைய பாதகமான சூழ்நிலையை மற்றும் இக்கட்டான சூழ்நிலை போன்றவற்றை நாம் யோசித்தால் தான் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
தொழிற்சாலையின் இடம்:
உங்கள் உணவு சார்ந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு நீங்கள் எடுக்கக் கூடிய மிக முக்கியமான முடிவு தொழிற்சாலை அமையக்கூடிய இடத்தை நிர்ணயிப்பது ஆகும். தொழிற்சாலைக்கு பொருத்தமான இடத்தை நிர்ணயிக்க போக்குவரத்து எளிதாக இருப்பது வேலையாட்கள் தொடர்ந்து கிடைப்பது, மின்சார இணைப்பு உடனடியாக கிடைப்பது, தகுந்த நீர்வளம் இருப்பது, மற்றும் மூலப்பொருட்கள் கிடைப்பது போன்ற பல முக்கிய காரணிகளை ஒருங்கிணைத்து எடுக்க கூடிய முடிவாகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் ஆரம்பிக்கும் இத்தகைய உணவு சார் தொழிற்சாலைகளுக்கு மானியம் மற்றும் இதர சலுகைகளை வழங்குகிறது. இத்தகைய அரசு உதவிகளையும் கருத்தில் கொண்டு நீங்கள் ஆரம்பிக்கும் தொழிற்சாலை இடத்தை தேர்ந்தெடுத்து நடத்த வேண்டும்.
வணிகத் திட்டம் மற்றும் உத்திகள்:
ஆரம்பத்தில் தொழிற்சாலையை அமைக்க கூடிய யோசனைகளை மட்டுமே சிந்திக்காமல் அதற்கு அடுத்த படியாக அதை சிறப்புற நடைபெற என்னென்ன திட்டம் வேண்டும் என்பதையும் சிந்தித்து அதற்கு ஏற்றார் போல் நம்முடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உங்களது தொழிற்சாலையை மேலும் மேலும் வளர்ந்து கொண்டு செல்லும்போது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனை இருப்பது அவசியமாகும். இத்தகைய வருங்கால திட்டங்களை தோராயமாக முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு புதிய கொள்கைகள் மற்றும் உத்திகள் கொண்ட நிரந்தர வரையறையை செய்ய வேண்டும்.
நிதி திட்டங்கள்:
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தொழிலதிபர்கள் தங்களது தொழிலில் தோல்வி அடைவதற்கு அவர்களிடம் உள்ள நிதி மேம்பாட்டு திட்டத்தில் உள்ள குறைகள் ஆகும். எந்த ஒரு புது தொழில் செய்யும் போதும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒவ்வொரு காலகட்டத்திலும் முதலீடு செய்தால் மட்டுமே அது சிறு நிறுவனமாக இருந்து பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடையும். போக்குவரத்துக்கான நிதி, ஊழியர்களுக்கான நிதி, மூலப்பொருட்கள் வாங்குவதற்கான நிதி, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான நிதி என பல்வேறு வகையான நிதித் திட்டங்களை வகுத்து செயல்படுவதன் மூலம் லாபத்தை சரியான அளவில் கணக்கிட முடியும்.
சட்டரீதியான வழிமுறைகள்:
உங்கள் தொழிற்சாலை வருவதற்கு முன்பும் பின்பும் வாங்க வேண்டிய அனைத்து விதமான அனுமதிகளையும் அதற்கு தகுந்த அரசு அலுவலகத்தில் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் – 2006 மற்றும் நிலையான மற்றும் எடை அளவீட்டுச் சட்டத்தின் கீழ் காப்புரிமைகள், பதிப்புரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய ஐபிஆர் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனமாக இருக்க வேண்டும்.விற்பனை வரி, கலால் மற்றும் சுங்க வரி, சேவை வரி போன்ற பல்வேறு வகையான வரி நிர்ணயத்தின் கீழ் உங்களது தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்களது தொழிற்சாலைக்கான தனி வர்த்தக முத்திரை மற்றும் உங்களது தொழிற்சாலையில் உணவுமுறை இதற்கான பேட்டன் ரைட்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது உங்களுக்கு நல்லது ஆகும். இந்தியா போன்ற உணவு சார் தொழிலில் வளர்ந்து வரக்கூடிய நாட்டில் உங்களது தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்றால் பல்வேறு வகை உரிமங்களான வர்த்தக உரிமம், உணவு உரிமம், தொழில்துறை உரிமம் போன்ற சான்றிதழ்களைப் பெற்று நடத்துவது உங்களுக்கு சட்ட சிக்கல்கள் வராமல் தவிர்க்க உதவும். மற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை விட இத்தகைய உணவு சார்ந்த தொழிற்சாலைகளை நடத்தும் போது நீங்கள் அதிகப்படியான வழக்கு மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஆகையால் ஒரு சட்ட வல்லுனரை எப்போதும் தங்கள் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனையின்படி செயல்படுவது உசிதமாகும்.