மிகச்சிறந்த எளிதான மற்றும் லாபகரமான குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய கெமிக்கல் சார்ந்த வணிகங்கள்
கெமிக்கல் சார்ந்த சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கான உதவிகரமான தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் உலகத்தில் உள்ள நம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பல பொருட்களில் கெமிக்கல் சார்ந்த உலகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்கின்றன. இந்தியாவின் உற்பத்தியில் 6 சதவீத பொருட்கள் இத்தகைய கெமிக்கல் சார்ந்த தொழில் நிறுவனங்களால் அடையப் பட்டுள்ளது. இந்த ஆறு சதவீதம் என்பது அமெரிக்காவின் ஜிடிபியில் உள்ள 5 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்த கெமிக்கல் துறை சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் அல்லது வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபட்டு மிகப் பெரிய லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா இந்தியாவை காட்டிலும் சீனா தான் இந்த கெமிக்கல் சார்ந்த பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழில்களின் உலகுக்கே ராஜாவாக திகழ்கிறது என்பது நிதர்சனமான உண்மை. உலகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களில் 25 சதவீதத்திற்கும் மேலான பொருட்கள் சீனாவில் மட்டுமே தயாரித்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முழு காரணம் என்னவென்றால் அங்குள்ள அரசாங்கமும் மக்களும் சிறிய முதலீட்டில் செய்ய கூடிய பல்வேறு தரப்பட்ட தொழில்களை உற்பத்தி நோக்கில் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களும் பொருளாதார வளர்ச்சி பெற்று சீனா நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பெரிதும் கை கொடுக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய வளர்ச்சி இல்லாததற்கு காரணம் கெமிக்கல் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படும் என்ற தவறான கண்ணோட்டம் மக்களிடையே இருப்பதாலும் அரசாங்கத்தின் மூலம் விழிப்புணர்வு சரியான வகையில் இல்லாதிருப்பதும் காரணம்.
மிகக் குறைந்த செலவில் ஆரம்பிக்கக் கூடிய ரசாயன சம்பந்தப்பட்ட தொழில்களின் பட்டியல் தொழில் முனைவோர்களுக்கு பயன்படும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
-
சோப்பு பவுடர் உற்பத்தி
கையால் துணி துவைக்க பயன்படும் சோப்பு மற்றும் இயந்திரங்களில் துணி துவைக்க பயன்படுத்தப்படும் சோப்பு பவுடர் போன்றவற்றின் தயாரிப்பை ஒரு சிறிய முதலீடு கொண்ட தொழிற்சாலை அமைப்பதன் மூலம் ஆரம்பிக்க முடியும். இன்றைய மார்க்கெட்டில் பல்வேறு விதமான சோப்பு பவுடர் மற்றும் சோப் சார்ந்த பிராண்டுகள் இருந்தாலும் இது கலக்கப்படும் ரசாயன பொருட்களின் அளவு மாற்றத்தை சரியான வகையில் சேர்ப்பதன் மூலம் உங்களது பொருட்களுக்கும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெறும் வாய்ப்பு உள்ளது.
-
வாசனை திரவியங்கள் தயாரிப்பு
இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் அலுவலக பணிக்கு செல்லும்போது பல்வேறு விதமான நறுமணம் கொண்ட வெவ்வேறு பிராண்டுகளின் வாசனை திரவியங்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு பெரிதும் விரும்பும் நறுமணம் என்னவென்று கண்டறிந்து அதற்கேற்றவாறு ரசாயன மூலப் பொருட்களை கலந்து விட்டால் நீங்களும் நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளர் வளரும் வாய்ப்பு உள்ளது.
-
நெயில் பாலிஷ் தயாரிப்பு
நாம் அனைவரும் நம் குழந்தை பருவத்தில் பல்வேறு வண்ணங்களில் உள்ள நெயில் பாலிஷ் பயன்படுத்தியும் நகங்களை அழகுபடுத்தி மகிழ்ந்து இருக்கிறோம். இந்த மகிழ்ச்சியே இந்த தொழிலில் இறங்கி நாம் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது. கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் விழாக்களில் தங்களது உடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் உள்ள நெயில் பாலிஷை நகங்களுக்கு இட்டு அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
-
லிக்யூட் சோப் தயாரிப்பு
இயந்திரங்களில் சோப்புகள் பயன்படுத்தப்பட்டு துணி துவைக்கும் முறையில் சில இடர்பாடுகள் மற்றும் சிக்கல்களை களைவதற்காக உருவாக்கப்பட்டதே இத்தகைய லிக்யூட் சோப். இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்படும் அனைத்து இயந்திரங்களும் இத்தகைய லிக்யூடு மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. ஆகவே இத்தகைய லிக்யூட் சோப்பு உற்பத்திக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
-
தீப்பெட்டி தொழிற்சாலை
நல்லதொரு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி குறைந்த முதலீட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையாக தீப்பெட்டி தொழிற்சாலை இருக்கிறது. தீப்பெட்டிகள் நம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாக இருப்பதால் தொழில் வளர்ச்சியில் எந்தவித ஐயப்பாடும் இருக்கத் தேவையில்லை. தீக்குச்சி தொழிலில் ஈடுபடும் பல்வேறு விதமான மக்கள் பகுதிநேரமாக இதை செய்து வாழ்வில் முன்னேறுகிறார்கள்.
-
ரப்பர் பேண்ட் உற்பத்தி
மக்களின் வாழ்வியல் நடைமுறையில் மிக அதிகமான பயன்பாடுகளுக்கு ரப்பர் பேண்ட்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய ரப்பர் பாண்டுகள் தேவை நாளடைவில் அதிகரித்தாலும் அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதய ரப்பர் பேண்ட் தயாரிப்பை தொழிற் சாலைக் கட்டமைப்பு அமைக்காமல் வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் சிறிய குடிசை தொழிலாக அமையும்.
-
அகர்பத்தி மற்றும் கற்பூரம் தயாரிப்பு
அகர்பத்தி மற்றும் கற்பூரம் போன்ற பொருட்கள் அதிகமான பூஜை சார்ந்த நிகழ்வுகளில் பயன்படுத்தும் இந்துக்களை பெரும்பான்மையான மக்களாக கொண்ட நாடான இந்தியாவில் அதிகமாக தேவைப்படுவதால் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆண்டு முழுவதும் இத்தகைய பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் பண்டிகை காலம் என்பது வெவ்வேறு மாநிலத்திற்கு வெவ்வேறு வகையான விழாக்கள் கொண்டாடப் படுவது ஆகும்.
-
நீர் சுத்திகரிப்பு சாதனம் தயாரித்தல்
நீர் சுத்திகரிப்பு சாதனங்களை உருவாக்க மிகப்பெரிய தொழிற்சாலை மற்றும் முதலீடு தேவை என்ற தவறான கண்ணோட்டம் மக்களிடையே இருப்பதால் இத்தகைய சாதனங்களை உருவாக்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவதில்லை. அயோடின் அல்லது குளோரின் டை ஆக்சைடு கொண்டு செயல்படக் கூடிய நீர் சுத்திகரிப்பு சாதனத்தை எளிய செயல் முறையில் குறைந்த முதலீட்டில் செய்துவிட முடியும்.
-
பூச்சிக்கொல்லி உற்பத்தி
அதிக லாபம் தரக்கூடிய மற்றும் மிக எழிமையான தொழில் கட்டமைப்பைக் கொண்ட கெமிக்கல் வணிகமாக பூச்சிக்கொல்லி உற்பத்தி இருக்கிறது. பூச்சிக்கொல்லி தயாரிப்பிற்கு தகுந்த அனுபவம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அறிவு இருந்தால் விவசாயத்திற்கு பயன்படும் பல்வேறு விதமான பூச்சிக்கொல்லி தயாரிப்புகளை தயாரித்து சிறந்த லாபம் பெறலாம்.
-
நைலான் உற்பத்தி
உலகளவில் நைலான் சார்ந்த பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் இத்தகைய நைலான் தயாரிப்புகளின் தேவை நாளடைவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மற்ற கெமிக்கல் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவதை விட இந்த நைலான் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு சற்று அதிகமான முதலீடு தேவைப்படும் என்பதால் அதிகமான மக்கள் இதில் இறங்குவதற்கு தயங்குகிறார்கள். ஆகவே இத்தகைய உற்பத்தியில் போட்டி குறைவு என்பதால் சரியான சந்தைப்படுத்துதல் முறையின் மூலம் வெற்றியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நைலான் உற்பத்தியில் அதிகம்.
-
கழிவறை சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரித்தல்
எந்த ரசாயனங்களை எத்தனை சதவீதத்தில் கலந்து ஆசிட், பினாயில், துடைப்பான் போன்ற கழிவறை சுத்திகரிப்பு சாதனங்களை செய்யலாம் என்ற சிறிய நுண்ணறிவு இருந்தால் வீட்டிலேயே இத்தகைய பொருட்களை தயாரித்து அருகிலுள்ள கடைகளுக்கு விற்று மிகுந்த லாபம் அடைய முடியும். தனிநபரால் குறைந்த முதலீட்டில் கூட இந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய முடியும்.
-
சானிடைசர் தயாரிப்பு
கொரோனா கால கட்டத்திற்குப் பின்னர் சானிடைசர் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாத அளவுக்கு உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்றாட பயன்படுத்த வேண்டிய பொருளாக மாறிவிட்டது. பல்வேறு விதமான வண்ணங்களில் பல்வேறுவிதமான நிறுவனங்களில் இத்தகைய சனிடைசர் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதன் பின்னணி என்றால் இந்த தொழில் செய்வதற்கான வாய்ப்பு ஏழை மக்களுக்கும் இருப்பதே ஆகும்.
-
டிஷ் வாஷ் பார் மற்றும் லிக்யூட் தயாரித்தல்
வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பிடிக்காமல் இருக்கும் ஒரே வேலை என்னவென்றால் அது பாத்திரம் கழுவும் வேலை ஆகும். அத்தகைய வேலையை எளிதாக்கும் வகையில் பல்வேறு வகையான சோப்பு மற்றும் லிக்யூடு மார்க்கெட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த பண முதலீட்டில் சிறு தொழிலாக இந்த டிஷ் வாஷ் பொருட்களை தயாரிக்க முடியும் என்பதால் தாங்களும் இந்த கெமிக்கல் சார்ந்த தொழிலை முயற்சி செய்து பார்க்கலாம்.
-
மூலிகை சோப்பு தயாரித்தல்
மூலிகைப் பொருட்களில் உள்ள நன்மைகளைப் பற்றி உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைந்து வருவதோடு மட்டுமல்லாமல் அது சார்ந்த பொருட்களை தேடிப்பிடித்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இத்தகைய மூலிகை சோப்பு தயாரிக்கும் முறை மிகவும் எளிதாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் எளிய பொருட்களை கொண்டு சிறிய ரசாயன கலவை சேர்த்து சோப் தயாரித்து விட முடியும்.
-
ஹேர் டை தயாரித்தல்
ஆண்களும் பெண்களும் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் தலைமுடியில் உள்ள வெள்ளை முடிகளை மறைப்பதற்காகவும் அழகான வண்ணங்களில் முடியின் தோற்றத்தை மாற்றுவதற்காகவும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சிகளில் இதைப் பற்றிய விளம்பரங்கள் அடிக்கடி ஒளிபரப்புவதில் இருந்து அறிய முடிகிறது. சிறிய ரசாயன கலவை மூலம் இத்தகைய ஹேர்டை உற்பத்தியை எளிதாக செய்து சந்தைப்படுத்தி விற்க முடியும்.
-
பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனை
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களில் மிக அதிகமான முதலீடு கொண்டு தயாரிக்கப்பட்ட கூடிய தொழிலாக இந்த பெயிண்ட் தயாரிப்பு தொழில் உள்ளது. மற்ற தொழில்களை விட இந்த பெயிண்ட் தயாரிப்பு தொழிலுக்கு முதலீடு அதிகம் தேவைப்பட்டாலும் அதற்கு ஏற்ற லாபமும் வணிகமும் உங்களுக்கு இருக்கும். நண்பர்களுடன் கூட்டாக தொழில் செய்வது அல்லது அரசாங்கத்திடம் கடன் உதவி பெற்று தொழில் செய்வதன் மூலம் பன் மடங்கு வருமானத்தை குறைந்த நாட்களில் பெரும் வாய்ப்பை பெறுவீர்கள்.
-
ஃபேஸ் வாஷ் கிரீம் தயாரிப்பு
சுத்தம் சுகாதாரம் மற்றும் அழகு போன்ற அனைத்து அம்சங்களிலும் மக்கள் பெரிதும் அக்கறை எடுத்துக் கொண்டு தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி தினமும் இரண்டு முறை சுத்தம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக வீட்டில் மற்றும் அலுவலகத்தில் இத்தகைய ஃபேஸ் வாஷ் கிரீம் மற்றும் லோஷன்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தாங்களும் இதன் உற்பத்தியில் ஈடுபடலாம்.
-
பேனா மை மற்றும் பேனா தயாரிப்பு
பேனா மை மற்றும் பால்பாயிண்ட் பேனா முக்கியத்துவம் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நம் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய விஷயமாகும். மிகப்பெரிய லாபகரமான கெமிக்கல் சார்ந்த வணிகமாக இந்த பேனா மை மற்றும் பால் பாயிண்ட் பேனா தயாரிப்பு இருந்திருக்கிறது. இந்த வகை பொருட்களைத் தயாரிப்பதற்கு குறைந்த முதலீடு தேவை என்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவு சட்ட சிக்கல்கள் மற்றும் அனுமதி சான்றிதழ்கள் தேவையில்லை.
-
மூலிகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர் தயாரிப்பு
மூலிகை சார்ந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதால் இத்தகைய கெமிக்கல் சார்ந்த சிறு தொழிலை முன்னெடுத்து தாங்கள் நடத்தலாம்.
-
பற்பசை உற்பத்தி
உலகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் அன்றாடம் காலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய பற்பசை தயாரிக்கும் முறை மிகவும் எளிதானது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய பற்பசைகள் மற்றும் பவுடர்கள் தயாரித்து சரியான சந்தைப்படுத்துதல் மூலம் மக்களிடம் கொண்டு சென்றால் அதிகளவு லாபம் தரக்கூடிய கெமிக்கல் தொழிலாக இது விளங்கும்.