இந்தியாவில் வன்பொருள் தொழிலை வெற்றிகரமான தொடங்குவது எப்படி!
உலக அளவில் பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியா வணிக சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை நாளுக்கு நாள் எட்டி வருகிறது. இந்நிலையில் இங்கு பல்வேறு லாபகரமான தொழில்களில் மிகச்சிறிய முதலீடுகளில் தொடங்கி படிப்படியாக முன்னேறிய பல முதலாளிகள் இன்று நமக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மிகச் சிறிய அதேசமயம் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக கருதப்படுவது வன்பொருள் வணிகம்.
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் வன்பொருளின் பங்கு இல்லாமல் எதுவும் இருக்காது அந்த அளவிற்கு அன்றாட வாழ்வில் முக்கியமான அங்கமாக வன்பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சிறந்த சிறு தொழில் தொடங்க வன்பொருள் வணிகத்தை தேர்ந்தெடுப்பது மிகச் சரியான தேர்வு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதுபோன்ற வன்பொருள் தொழிலை தேர்ந்தெடுக்கும் முன் இதில் உள்ள தொழில் நுணுக்கங்களையும் எவ்வாறு வெற்றியுடன் நடத்த வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கவிருக்கும் வன்பொருள் சார்ந்த வணிகத்தை வெற்றிகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு நாம் காண்போம்.
மற்ற கடைகளில் எந்த மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுதல்!
இந்தியாவில் வன்பொருள் சம்பந்தப்பட்ட சிறு மற்றும் பெரிய அதில் விற்பனை செய்யக்கூடிய பல கடைகள் ஏராளமாக உள்ளன. இவ்வாறு நீங்கள் எந்த பகுதியில் வன்பொருள் தொழில் செய்ய விரும்புகின்றீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் கடைகளில் எந்த மாதிரியான அடிப்படை வன்பொருட்களை விற்பனை செய்கின்றார்கள் மக்கள் எந்தெந்த பொருட்களை அதிக அளவு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கவனமாக அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
மேலும் பெரும்பாலான வன்பொருள் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களான பவர் டூல்ஸ், ஹாண்ட் டூல்ஸ், பில்டிங் மெட்டீரியல், பாஸ்ட்னர்ஸ், சாவி, பூட்டு, சங்கிலிகள், மின்சாரப் பொருட்கள், ப்லம்பிங் பொருட்கள், சுத்திகரிப்பு தயாரிப்புகள், ஹவுஸ்வேர்ஸ், வண்ண பெயிண்ட்கள் மற்றும் பல இதர பொருட்கள் என அனைத்தும் பெரும்பாலான வன்பொருள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யக்கூடிய அனைத்து பொருள்களையும் வைத்து புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இதன் மூலம் தங்களது தொழிலை லாபகரமாக நடத்த முடியுமா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் 10 சதவீத கடைகளில் மட்டுமே தினந்தோறும் நல்ல லாபத்துடன் இயங்குவதாகவும், மீதம் 80 சதவீதம் பேர் இதுபோன்ற வன்பொருள் தொழிலை தொடங்கி பணப்புழக்க நெருக்கடி காரணமாக இரண்டு மூன்று வருடங்களிலேயே தொழிலை விட்டுச் செல்வது மிக சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் இத்தொழிலை தொடங்க குறைந்த அளவிலான முதலீடு மட்டுமே இருந்தால் போதும் என்பதால் பலரும் இதை ஆர்வத்துடன் செய்து வருவதோடு அதில் கடுமையான போட்டிகளும் நிலவுகின்றன.
சாதாரணமாகவே ஒரு பகுதியை எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் நான்கு ஐந்து கடைகள் வன்பொருள் தொழில் செய்யும் கடைகளாக இருக்கும்பட்சத்தில் தொழிலில் போட்டியும் கடுமையாக இருக்கும் என்பதனால் பலரும் இதனை பாதியிலேயே விட்டு செல்லும் நிலைமை ஏற்படுகிறது. எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் அவ்வாறு பாதியிலேயே செல்லாமல் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்துகொண்டு வன்பொருள் தொழிலை தொடங்குவது மிகவும் நல்லது. எனினும் சமீபத்திய நடைமுறையை பொருத்து பார்க்கும்பொழுது வன்பொருள் தொழில் மிகச் சிறப்பாகவும் அதிக லாபம் கொண்டும் இயங்கி வருகிறது.
சந்தை நிலவரத்தை அறிந்து கொண்டு வன்பொருள் தொழில் முதலீட்டில் ஈடுபடுதல் !
இந்தியாவில் வன்பொருள் சந்தை மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு இணையாக தொழிலில் பல போட்டிகளும் அதற்கு தகுந்தாற்போல் உருவாகியுள்ளது. அதனை பக்குவமான முறையில் அணுகி சிறந்த முறையில் தொழிலை முன்னோக்கி எடுத்து செல்வது சாமர்த்தியமான முறையாகும்.
இவ்வாறு போட்டிகள் நிறைந்த இந்தத் தொழிலில் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது எடுத்த எடுப்பிலேயே நாம் முதலிடத்திற்கு சென்றுவிட வேண்டும் என எண்ணுவது தான். இரண்டாவதாக உங்களுடைய செலவு செய்யும் திறன் எவ்வளவு என்பதை தீர்மானத்துக்கு கொண்டு, வன்பொருள் சந்தையில் எவ்வளவு செலவிட தயாராக உள்ளீர்கள் என்பதை மிகத் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
நீச்சல் தெரியாத ஒருவன் ஆற்றிலே இரண்டு கால்களையும் வைத்து நடப்பது எவ்வளவு முட்டாள்தனமான காரியமோ அதேபோல, புதிதாக வன்பொருள் தொழில் தொடங்க நினைப்பவர்கள் கடைக்குத் தேவையானவை அனைத்து பொருட்களையும் வாங்கி செலவு செய்யும் முதலீட்டுக்கான அளவை மீறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை ஆரம்ப முதலீடே திட்டமிட்ட அளவைவிட அதிகமாகும் பட்சத்தில் இது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வன்பொருள் தேவை அதிகமாகவும், போட்டி குறைவாகவும் இருக்கும் இடத்தை தேர்வு செய்தல் !
ஒரு தொழிலின் வெற்றிக்கு அது அமையப்போகும் இடம் மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து தொழிலைத் தொடங்கும் பொழுது நாம் மிக எளிதாக வெற்றி பெறலாம். வன்பொருள் வணிகத்தை பொருத்தவரையில் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும் போட்டிகள் நிலவுவதால் தேர்ந்தெடுக்கும் இடமானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக தேவை அதே சமயம் போட்டி குறைவாக இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு தொழில் தொடங்குவது என்பது சரியான தேர்வாகும். அவ்வாறு முதன்முறையாக வன்பொருள் தொழில் தொடங்கும் பட்சத்தில் சமீபத்தில் புதிதாக சந்தையில் அறிமுகமாகியிருக்கும் பொருட்களை பற்றியும் அறிந்திருப்பது தொழிலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
வாடிக்கையாளர்களின் கட்டண சேவையை எளிமைப் படுத்துதல் :
பொருட்களை வாங்க வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் கையில் தொகையுடன் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பெரும்பாலானோர் கையில் தொகையை கொண்டு செல்லாமல் ஏடிஎம் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் உள்ளிட்டவைகளை பெரும்பாலும் பயன்படுத்திக் கொண்டு வருவதால் அதற்கு தகுந்தார்போல் அதற்கான சேவையை தயார் நிலையில் வைத்திருப்பது இன்றைய சூழ்நிலையில்
வாடிக்கையாளர்களை மிக எளிதாக கவரும் யுத்திகளில் ஒன்றாகும். ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு வசதி இல்லாத வகையில் கிரெடிட் கார்டு இதர ஆன்லைன் பேமென்ட் வசதிகள் இல்லாமல் நேரடி பணப்பரிமாற்றம் முறையை மட்டுமே பின்பற்றி வந்தால் அது வாடிக்கையாளர்களின் இழப்பையும், விற்பனையின் எண்ணிக்கையையும் பெருமளவு பாதிக்கும்.
எனவே இப்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு தகுந்தவாறு அனைத்து வகையான பரிமாற்ற முறையை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருப்பது பழைய வாடிக்கையாளர்களை இழக்காமல் புது வாடிக்கையாளர்களையும் கவர்வதோடு கடையின் மீதான நம்பிக்கையும் பெருமளவு கூடி தொடர்ந்து சேவையை நாடி வருவார்கள்.
சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை ஊக்குவித்தல்!
வன்பொருள் கடை உள்ளூர் வாடிக்கையாளர்களை மட்டுமே பெரும்பாலும் நம்பி இருப்பதால் அதிக அளவு இல்லை என்றாலும் ஓரளவாவது உள்ளூர் வாசிகளை கவரும் வகையில் கடை அமைந்திருக்கும் குறிப்பிட்ட பகுதிக்குள் சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி அனைவரையும் கவரும் வகையில் விளம்பரங்களை ஊக்குவிப்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்குவதோடு வன்பொருள் கடையின் பெயரும் மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி மனதில் பதிந்துவிடும்.
சந்தையில் அவ்வப்போது அறிமுகமாகும் புதுப்புது பொருட்களை வாங்கி விற்க முற்படும் பொழுது அதன் பயன்பாடுகளைப் பற்றியும் புதிதாக வந்திருக்கிறது என்பதை தெரிவிக்கும் வகையிலும் அதைப்பற்றிய ஒரு சில விளம்பரங்களாவது உங்கள் பகுதியைச் சுற்றி கடையின் பெயருடன் இணைத்து சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் துண்டுச்சீட்டு என அனைத்து சாத்தியமான எளிய முறையிலும் விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தானாக அந்தப் பொருளைத் தேடி உங்கள் கடையை நோக்கி வர விற்பனையும் அமோகமாக இருக்கும்.
உள்ளூர் வாடிக்கையாளர்களை தவிர பலரிடமும் உங்களின் கடையின் பெயரும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் உருவாக்கும் விதத்தில் இப்பொழுது பல ஆன்லைன் வலைதளங்களும் விளம்பர சேவையை படு ஜோராக தொடங்கியிருப்பதால் அதன் மூலமும் விளம்பரப்படுத்தி தொழிலை மேலும் பெருக்கிக் கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைனில் விளம்பர உலகில் மிகப் பிரபலமாக இருக்கும் வலைதளங்களான பில்போர்ட்ஸ், எல்லோ பேஜ் ஆட்ஸ் மற்றும் இமெயில் மார்க்கெட்டிங் உள்ளவைகள் உள்ளுரை கடந்து விளம்பரங்கள் செய்ய பேருதவியாக இருக்கும்.
அதிகம் விற்பனையாகும் பொருட்களின் மீது கவனம் செலுத்துதல்!
வன்பொருள் தொழிலை பொருத்தவரையில் பவர் டூல்ஸ், ஹாண்ட் டூல்ஸ், பில்டிங் மெட்டீரியல், பாஸ்ட்னர்ஸ், சாவி, பூட்டு, சங்கிலிகள், மின்சாரப் பொருட்கள், ப்லம்பிங் பொருட்கள், சுத்திகரிப்பு தயாரிப்புகள், ஹவுஸ்வேர்ஸ், பெயிண்ட்கள் என எக்கச்சக்கமான பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுவதால் அனைத்து முதலீட்டையும் இவ்வனைத்து பொருட்களின் மீதும் செலவிடுவதை விட இதில் அதிக அளவு எந்த பொருட்கள் விற்பனை ஆகிறதோ அதன் மீது தனி கவனம் செலுத்தி முதலீடு செய்வது தொழிலின் வளர்ச்சியில் உள்ள ரகசியமாகும்.
சிமெண்ட், ஸ்டீல் பார்ஸ் மற்றும் ராட்ஸ், நைல்ஸ், வெயிட் சிமெண்ட், டோர் ஹிங்கிஸ், ரூபிங் நைல்ஸ், ப்ளோரிங் டைல்ஸ், வெல்டிங் ராட்ஸ், பிளம்பிங் மேட்டீரியல்ஸ் உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் பலராலும் அனைத்து காலகட்டத்திலும் தொடர்ந்து படுத்தப்பட்டு வருவதால் இந்தப் பொருட்களின் மீது அதிகம் கவனம் செலுத்துவதால் பெரும் லாபத்தை ஈட்டுவதோடு தேவையில்லாத நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.
வாடிக்கையாளர்களை கவரும் தள்ளுபடிகளை வழங்குதல் !
என்னதான் வாடிக்கையாளர்கள் தரத்தையும் கடையின் மீதுள்ள நம்பிக்கையினாளும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தாலும் அவர்களை அவ்வப்போது மகிழ்விக்கும் வகையில் குறைந்த பட்சம் சிறிய அளவிலான தள்ளுபடி அல்லது பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவதுடன் முன்பை காட்டிலும் அதிக அளவு ஆதரவு தர ஆர்வம் காட்டுவார்கள்.
சிமெண்ட், ஸ்டீல் பார்ஸ், அயன் ஷீட்ஸ் உள்ளிட்ட அடிப்படையான பொருட்களில் குறைந்த அளவு தள்ளுபடியையும், டோர் லாக்ஸ், சாண்ட்பேப்பர், ட்ரோவேல்ஸ் உள்ளிட்ட சிறிய பொருட்களில் குறைந்த லாபத்தையும் வைத்து விற்கலாம். இவ்வாறு அடிப்படையான பொருட்கள் மீது விலை ஏற்றி விற்கும்பொழுது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழப்பதோடு தொழிலும் பெருமளவு பாதிக்கும். எனவே நியாயமான லாபத்துடன் நியாயமான விலையில் பொருட்களை விற்பது சிறந்தது.
வாடிக்கையாளர்களின் வசதியை ஊக்குவித்தல்!
நீண்ட காலமாக தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப அதிக அளவிலான பொருட்களை வாங்கும்பொழுது டோர் டெலிவரி, டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் மிகவும் நெருக்கமான வாடிக்கையாளராக இருப்பின் பொருட்கள் வாங்கும்போது போதுமான அளவு பணம் இல்லாதபோது பணத்தை பிறகு செலுத்தும் வசதியையும் அளிக்கும்போது வாடிக்கையாளர்கள் திருத்திபடுவதுடன் தொடர்ந்து ஆதரவு அளித்து தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.