written by | October 11, 2021

முத்ரா கடன்

×

Table of Content


முத்ரா கடன் என்றால் என்ன, முத்ரா கடன் பெறுவதற்கான தகுதி, வட்டி விகிதம் மற்றும் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது? 

முத்ரா கடன் 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பி.எம்.எம்.ஒய்) திட்டத்தின் கீழ் இந்திய அரசு வழங்கும் கடன் திட்டத்தை முத்ரா கடன் என்று சுருக்கமாக அழைக்கின்றோம். இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை (பி.எம்.எம்.ஒய்) 2015ஆம் ஆண்டு துவங்கியதற்கான முக்கிய குறிக்கோள் என்னவென்றால் சிறிய அளவிலான தொழில் நடத்தி வருபவர்களுக்கும் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஞாயமான முறையில் மிகக் குறைந்த வட்டியில் எந்தவித செக்யூரிட்டி இல்லாமல் கடன் வழங்குவதே ஆகும். இவ்வாறு சிறிய தொழில் தொடங்க முனைவோருக்கு கடன் வழங்குவதால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை குறைந்து நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்ற முன்னோக்கிய சிந்தனையுடன் இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் திட்டத்தால் கிடைக்கப்பெறும் நன்மைகள் 

  1. a) பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை என்பதால் பல்வேறு ஏழைத் தொழிலாளர்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு முத்ரா கடன் திட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  2. b) ஒருவேளை நீங்கள் செய்யும் தொழிலில் முழுவதுமாக தோல்வியுற நேர்ந்தால் கடனை திருப்பி செலுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
  3. c) பல்வேறு இளைஞர்கள் வேலைக்காக பெரிய நிறுவனங்களின் வாசலில் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தங்களது சொந்த முயற்சியின் மூலம் நேரக்கூடிய பாதையை இந்த முத்ரா கடன் திட்டம் வழங்குகிறது.
  4. d) புதிதாக தொடங்க கூடிய தொழிலில் மட்டுமல்லாமல்ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வணிகத்தை மேம்படுத்துவதற்கும் இந்த முத்ரா கடன் திட்டம் வாய்ப்பு வழங்கி இருப்பதால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி முன்னேற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
  5. e) பெரும்பாலான வங்கி நிறுவனங்கள் கிராமப்புறம் சார்ந்த சிறு வணிகர்களுக்கு கடன் தொகை வழங்குவதற்கு மிகப்பெரிய தயக்கத்தை கொண்டிருப்பதால் இத்திட்டம் அத்தகைய கிராமப்புற சிறு வணிகர்களுக்கு பயன்பெறும்.
  6. f) பெண்கள் சுய தொழில் குழுக்களுக்கு இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் பல்வேறு விதமான கடன் சலுகைகளை வழங்கியுள்ளது.
  7. g) கடனை திருப்பி செலுத்துவதற்கான அதிகபட்ச கால அளவாக 5 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை இருப்பதால் அதிகபட்ச இஎம்ஐ சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  8. h) நிறுவனத்தின் மூலதன பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு சொல்லாமல் முத்ரா டெபிட் கார்ட் பெறுவதன் மூலம் அத்தியாவசிய மற்றும் உடனடி தேவைக்கான பணத்தையும் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகள் மற்றும் தகுதிகள் 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரையிலான தொழில் கடன் பெறும் வாய்ப்பு இருந்தாலும் பல்வேறுவிதமான தொழில் அடிப்படையிலும் தொழில் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலும் சிஷு, கிஷோர், தருண் என மூன்று வித பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  

1) சிஷு

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளில் திருப்பிக் கட்ட கூடியவகையில் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க எந்தவித பணவசதியும் இல்லாதவர்களுக்கு தங்களது தொழிலை தொடங்க ஊக்குவிக்கும் வகையில் இந்த கடன் திட்டம் பயன்படுகிறது. உங்களது தொழில் நிறுவனத்திற்கு ஏதேனும் இயந்திரத்தை வாங்க வேண்டுமென்றால் உங்களது இயந்திரத்தின் தகவல்களையும் விற்பனையாளரின் தகவல்களையும் சமர்ப்பித்து அதற்கேற்ற கடனை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

2) கிஷோர்

ஏற்கனவே தொழிலை நடத்தி வரும் சிறு நிறுவனங்களுக்கு அடுத்த கட்ட முயற்சி எடுத்து வைக்கும் நோக்கில் 5 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை இந்த கிஷோர் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. முத்ரா கிரெடிட்டின் கீழ் கிஷோர் கிஷோர் திட்டத்தின் மூலம் வாங்கும் கடனாளிகளுக்கு திருப்பி செலுத்தக்கூடிய கால அளவை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நீங்கள் பயன் பெற வேண்டுமென்றால் உங்களிடம் கடந்த வருடத்திற்கான வங்கி பரிமாற்ற சான்றிதழ்கள், வருமானவரி சான்றிதழ்கள், தொழில் குறிக்கோள் அடங்கிய மெமோராண்டம் சான்றிதழ்கள் மற்றும் நடப்பு நிதியாண்டின் விற்பனை கணக்கு போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு சில தொழில் ஆரம்பிப்பதற்காக இந்த கிஷோர் திட்டத்தை பயன்படுத்த வாய்ப்பு இருந்தாலும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட வரையறையின் கீழ் கடன் பெற முடியும்.

  1. தருண்

பெரிய அளவிலான வணிக திட்டம் மற்றும் வணிக வளர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகை இந்த தரும் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும். கிஷோர் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் அனைத்துமே இந்த தருண் திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கும் பொருந்தும். பிரதான் மந்திரி முத்ரா கடன் நடவடிக்கைகளின் கீழ், தொழில்முனைவோர் சில தகுதி அடித்தளங்களை சந்தித்தால் தருண் ரூ .10 லட்சம் வரை ஒப்புதல் அளிக்கிறார்.

முத்ரா கடனை எந்தெந்த பயன்பாட்டிற்காக பெறலாம் 

1) போக்குவரத்து வாகனம்

போக்குவரத்தை சம்பந்தமான அனைத்து வகையான வாகனங்களின் முதலீட்டுத் தொகைக்கு இந்த முத்ரா கடன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆட்டோ ரிக்ஷாக்கள், பளு தூக்கும் கருவிகள், டாக்ஸிகள், டிராக்டர், மற்றும் இதர பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சிறிய வாகனங்கள் வாங்குவதற்கு இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் வணிகத்திற்கு டெலிவரி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனங்களின் கடன் தொகையையும் இத்திட்டத்தின்கீழ் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

2) தனிப்பட்ட சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள்

முடி திருத்தும் நிலையங்கள், அழகுக்கலை நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள், இருசக்கர வாகன பழுதுபார்க்கும் நிலையங்கள், பூக்கடைகள், புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் கடைகள், மருந்து கடைகள் மற்றும் கொரியர் நிறுவனங்கள் போன்ற பல்வேறு விதமான சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன் தொகை பெற முடியும்.    

3) உணவு பொருட்கள் 

அப்பளம் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், ஜாம் தயாரித்தல், இனிப்பு கடைகள், சோடா தயாரிக்கும் நிறுவனங்கள், பிரட் மட்டும் ரொட்டி தயாரிக்கும் தொழில்கள், பால் விற்பனை நிலையம் அமைத்தல். ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறு விற்பனை தொடங்குதல் மற்றும் பல உணவு சார்ந்த தொழில்களுக்கும் இத்திட்டத்தில் பயன் உள்ளது. 

4) கைத்தறி, நெசவு மற்றும் ஜவுளி தொழில் 

கைத்தறி, பவர் லூம், காதி, வழக்கமான நெசவு மற்றும் கைவேலை, வண்ணமயமாக்கல் மற்றும் அச்சிடுதல், ஆடை வடிவமைப்பு, தையல், காட்டன் ஜின்னிங், எலக்ட்ரானிக் நெசவு, மற்றும் பிற ஆடை பொருட்கள், சாக்குகள், வாகன பாதுகாப்பு கவர்கள், குடைகள் போன்ற ஜவுளி சம்பந்தமான தொழில் நடத்தும் நிறுவனங்களையும் இத்திட்டத்தின்கீழ் மேம்படுத்த முடியும்.

5) வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான திட்டம் 

நேரடி வேளாண் பொருட்கள் அல்லாத வணிக வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன் திட்டத்தை இந்த முத்ரா கடன் திட்டம் வழங்குகிறது. 

6) உபகரண நிதி திட்டம்

நீங்கள் நடத்திவரும் தொழில் நிறுவனங்களுக்கு ஏதேனும் முக்கியமான அதிக விலையுள்ள இயந்திரங்களை வாங்க நேர்ந்தால் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.  

7) கால்நடை வளர்ப்பு சம்பந்தமான வளர்ப்பு தொழில்கள் 

வேளாண்மை வணிகத்துடன் ஒன்றிணைந்த தொழில்களான அதேசமயத்தில் நேரடி வேளாண்மையிலிருந்து வேறுபட்டு இருக்கக்கூடிய கோழி பண்ணை அமைத்தல், கால்நடை பண்ணை அமைத்தல், மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், தேனி வளர்ப்புகள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கூட்டு வேளாண்மை நிறுவனங்கள் அமைத்தல் போன்ற தொழில்களுக்கு உதவும் வகையிலும் முத்ரா கடன் திட்டம் இருக்கின்றது.  

முத்ரா வங்கி கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் உள்ள 29 வெவ்வேறு வங்கிகளிலிருந்து முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த 29 வங்கிகளில் உங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியை தொடர்பு கொண்டு உங்களது தொழிலுக்கான முத்ரா கடன் தொகையை பெற முடியும். உங்கள் தொழில் நிறுவனத்துக்கு அருகில் உள்ள வங்கியை தேர்ந்தெடுங்கள். உங்கள் வணிகம் சார்ந்த முழு திட்டத்தையும் எழுத்து வடிவில் தயார் செய்து கொள்ளுங்கள். எவ்வளவு கடன் எந்த பயன்பாட்டிற்காக தேவை என்பதை தெளிவாக வங்கி அதிகாரிகள் இடம் விளக்கி கூறுங்கள்.

தேவைப்படக்கூடிய மற்ற சான்றிதழ்களான அடையாள அட்டை, உங்களது நிரந்தர முகவரி சான்றிதழ்கள், நிறுவன முகவரி சான்றிதழ், நிறுவனத்தின் பதிவு சான்றிதழ், எந்த வகையான தொழில் நிறுவனம் என்பதற்கான சான்றுகள், சொத்து அறிக்கைகள், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்த சான்றிதழ்கள், சமீபத்திய வங்கி பரிமாற்ற சான்றிதழ்கள், தொழில்களுக்காக பயன்படுத்தக் கூடிய வாகனங்கள் மற்றும் எந்திரங்களின் விவரங்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சான்றிதழ்களையும் சரியாக வைத்திருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு உட்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து உங்களது முத்ரா கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக முத்ரா கடன் திட்டத்தை பெறுவதற்கான வழிகள் 

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்ட அனைத்து விதமான 29 வங்கிகளின் வலைதளங்களிலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.

முத்ரா கடன் திட்டத்தை நேரடியாக பெறுவதைவிட ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறுவதன் மூலம் பல்வேறு விதமான காத்திருத்தலை தவிர்த்து விரைவாக கடன் தொகையை பெற முடியும். https://www.mudra.org.in/Home/PMMYBankersKit வலைதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது வங்கிகளால் அனுமதி அளிக்கப்பட்ட வலைதளங்களில் இருந்து முத்ரா கடனுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் முத்ரா கடன் விண்ணப்பித்தல் முறைக்கும் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்து கொள்வது அவசியமாகும்.

முத்ரா கடன் திட்டத்தை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முறை 

முத்ரா கடன் திட்டத்தின் ஒரு பிரிவான சிஷு கடன் பெறுவதற்காக தனி விதமான விண்ணப்பத்தையும் கிஷோர் மற்றும் தருண் பிரிவில் கடன் பெறுவதற்கான தனி விதமான விண்ணப்பத்தையும் கொண்டுள்ளது. கிஷோர் மட்டும் தருண் பிரிவில் ஒரேவிதமான விண்ணப்பம் இருப்பதால் மேலே நீங்கள் எந்த பிரிவின் கீழ் கடன் பெற விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு கொள்ளவும். நீங்கள் கடன் பெறவுள்ள வங்கியின் பெயர் மற்றும் வங்கிக் கிளையின் பெயரை தெளிவாக குறிக்கப்பட வேண்டும். உங்களது பெயர் மற்றும் உங்களது பெற்றோர்கள் பெயர், முகவரி, மதம் மற்றும் நேஷனலிடி, ஆதார் அடையாள எண், போன்றவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். இதற்கு முன்னர் உங்கள் நிறுவனத்தின் கீழ் ஏதேனும் கடன் தொகை பெற்று உள்ளீர்களா என்பதற்கான தகவல்களை தெரிவித்து கடன் தொகையை பெற்று இருந்தால் அதற்கு ஏற்ற சான்றிதழ்களையும் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் யாரேனும் நபருடன் கூட்டு சேர்ந்து உங்களது வணிகத்தை நடத்தினால் அவரது பெயர் மற்றும் இதர தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.