written by | October 11, 2021

மசாலா வணிகம்

×

Table of Content


இந்திய கான்டினென்டல் மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த உணவு வகைகளும் மசாலாப் பொருள்களைச் சேர்க்காமல் கிட்டத்தட்ட முழுமையடையாது. பொதுவாக, இந்திய மசாலா பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஹார்மோன் கோளாறுகளை சமநிலைப்படுத்துவதற்கும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மிகவும் அக்கறையுடன் இருக்கின்றனர். அதனால், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான இந்திய மசாலா நறுமணப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், இந்தியாவில் விளையும் நறுமணப் பொருட்களுக்கான தேவை இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவின் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு நிதியாண்டில் இந்திய அளவில் ஸ்பைஸ் பிசினஸ் ஏற்றுமதி என்பது சுமார் 231 பில்லியன் ரூபாய் மதிப்பிற்கு மேல்  செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.  மேலும், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை உள்ள காலகட்டத்தில் அமெரிக்கா, வியட்நாம், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மசாலா பொருட்களின் ஏற்றுமதியில் மிளகாய், மஞ்சள், சீரகம், மல்லி, மிளகு, கறிப்பொடி, பெருஞ்சீரகம், ஜாதிக்காய், ஏலக்காய், புளி மற்றும் பெருங்காயம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருள்கள் அடங்கியுள்ளன.

தேசிய அளவில் மசாலா பொருட்களுக்கான நுகர்வு என்பது  ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி  மதிப்புக் கொண்டதாக இருக்கிறது. அதனால் ஸ்பைஸ் பிசினஸ் செய்பவர்கள், ஏற்றுமதி செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும் என்று தொழில் துறை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக கடந்த 2018-19-ம்  நிதியாண்டில் மொத்தம் 11 லட்சம் டன் மதிப்புடைய மசாலா பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ.6,962.86 கோடி  மதிப்புள்ள, சுமார் 4,21,570 டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக்காட்டிலும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் 12 சதவிகிதமும், அதன் மதிப்பு 9 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஸ்பைசஸ் போர்டு தெரிவித்துள்ளது.

சரி.. ஸ்பைஸ் பிசினஸ் என்று சொல்லப்படும்  மசாலா பொருட்கள் வியாபாரத்தை தொடங்கி நடத்த விரும்பும் தொழில் முனைவோர் கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

இந்திய மாநிலங்களில் சுமார் 50 வகையான சமையலுக்கு தயாராக உள்ள மசாலா பொருட்களை  தனிநபர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை தயாரித்து வழங்குவதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மசாலா வகைகளை நன்றாக அரைத்து பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு குறைந்தபட்ச முதலீடாக ரூ.75 ஆயிரம் இருந்தால் கூட போதுமானது.  வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான இடப்பரப்பு என்பது குறைந்தபட்சம் 2500 சதுர அடி இடம் தேவைப்படலாம். முதலீட்டிற்கான வருடாந்திர லாபம் என்பது கிட்டத்தட்ட 40 முதல் 60 சதவிகிதம் இருக்கக்கூடும்.

ஸ்பைஸ் பிசினஸ்  தொழில் முனைவோர்கள் வழக்கம்போல சட்டரீதியான பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே தொழிலை தொடங்க முடியும். அதற்கு, முதலாவதாக நிறுவன பதிவு அவசியமானது. நிறுவனமானது தனிநபர் நிறுவனமா அல்லது கூட்டு நிறுவனம் என்பதற்கு ஏற்ப பதிவு செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் நிச்சயம் பெற வேண்டும். அத்துடன், சிறு தொழில் நிறுவனம் என்ற  சான்றிதழ் பெற்றிருக்கும்பட்சத்தில், அதன்மூலம் மாநில அரசுகளின் பல்வேறு நிதிச்சலுகைகளை பெற முடியும். அடுத்து, அக்மார்க் மற்றும் தேசிய தரச்சான்று அமைப்புகளின் அங்கீகாரம் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் ஆகியவற்றையும் பெற்றிருப்பது அவசியம்.

இந்த தொழிலில் மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் என்பது மூலப் பொருட்கள் கொள்முதல் என்பதாகும். சுவை மற்றும் மணம் ஆகியவை இந்த தொழிலுக்கு மிகவும் முக்கியமானவை என்பதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொருட்கள் விளைவிக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று கொள்முதல் செய்வது நல்லது.

மெசினரி வகைகள்

விளைநிலங்களிலிருந்து, நேரடியாக கொள்முதல் செய்த மசாலா பொருட்கள் வகைகளை தொழிற்சாலையில் நன்கு பதப்படுத்தி, கோல்டு கிரெயின் டெக்னாலஜி என்ற அதிநவீன கருவி மூலம் சுத்தமாக, கல் மண் ஆகியவை இல்லாமல் நேர்த்தி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், சி.ஜி பல்வரைசர் என்ற பொருட்களை அரைக்கும் இயந்திரம், ரோஸ்டர் என்ற மசாலாக்களுக்கு வாசனையூட்டும்  இயந்திரம், மிக்சர் மிஷின், ஸ்பைஸ் பிராசசிங் மெஷின், ஸ்பைஸ் மேக்கிங் மிஷின், ஆட்டோமேட்டிக் மிஷின் போன்ற வெவ்வேறு வகையான இயந்திரங்கள் தேவைப்படும்.

மேலும்,  தயாரிக்கப்பட்ட மசாலா பொடி வகைகளை பாக்கெட்டுகளில் அடைத்து வைக்க ஆட்டோமேட்டிக் ஆகர் பில்லர் மெஷின்,  ஆட்டோமேட்டிக் ஃபார்ம் ஃபில்லிங் மெஷின், ஹாட் ஏர் சாஷே மெஷின் உள்ளிட்ட நவீன ரக இயந்திரங்கள் தேவைப்படும்.  இந்த தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் முற்றிலும் தானியங்கி முறையிலும் ஆட்களை கொண்டு இயக்கப்படும் வகையிலும் இருக்கும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தயாரிப்பு நடைமுறைகள்

ஸ்பைஸ் பிசினஸ்  தயாரிப்பு முறைகளில் கீழ்க்கண்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. 

  • முதலாவது, மூலப்பொருட்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில், கற்கள் அல்லது தூசி அழுக்கு ஆகியவை இல்லாமல் சுத்தப்படுத்துவது அவசியம். 
  • இரண்டாவதாக, கச்சிதமான அளவில் அவற்றை நன்றாக உலர்த்துவது அவசியமானது. அவ்வாறு, உலர்த்துவதன் மூலமாக பாக்டீரியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் அகன்றுவிடும். 
  • மூன்றாவதாக, அவற்றை கச்சிதமான நிலைகளில் வறுப்பது அவசியம். அதன்மூலம் சம்பந்தப்பட்ட பொருட்களின் நிறம் மற்றும் மணம் ஆகியவை பாதுகாக்கப்படும். 
  • நான்காவதாக, கச்சிதமான கருவிகள் மூலம் அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். 
  • ஐந்தாவதாக, அரைக்கப்பட்ட பொருள்களை தகுந்த வகைகளின்படி பிரிக்க வேண்டும். 
  • ஆறாவதாக, அவற்றை நன்றாக சலித்து எடுக்க வேண்டும். 
  • இந்த தயாரிப்பு நடைமுறையில் கடைசியாக அவற்றை நன்றாக பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

தொழில் ரீதியான சவால்கள்

ஸ்பைஸ் பிசினஸ் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இருந்தாலும் கூட இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி  தொழில்முனைவோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மசாலா பொருள்கள் அரைக்கும் பொழுது அதனுடைய வாசனையானது சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதனால், ஒவ்வாமை இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம். மேலும், இந்த தொழிலில் கடனுக்கு வியாபாரம் செய்வது என்பது தவிர்க்க இயலாது என்ற நிலையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகை வசூல் செய்யப்பட வேண்டியதாக இருக்கலாம். மூன்றாவது சவால் என்னவென்றால் எவ்வளவுதான் பத்திரமாக பேக்கிங் செய்யப்பட்டாலும் கூட டேமேஜ் ஆன பாக்கெட்டுகள் ஒரு சில இருக்கத்தான் செய்யும். அதனால், சிறப்பான தொழில்நுட்பம் இந்த விஷயத்தில் அவசியம். மேலும், இன்றைய சூழ்நிலையில் இந்த தொழிலிலும் நிறைய போட்டிகள் இருப்பதால் விலையில் சிறிது குறைத்து அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

முக்கியமாக, ஸ்பைஸ் பிசினஸ் செய்வோர் சிறப்பான பிராண்டிங் செய்வது மிக மிக அவசியமானது. காரணம், அதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பிட்ட பொருளுக்கான லோகோ மற்றும் கவர்ச்சிகரமான வாசகங்கள் கொண்ட விளம்பரங்கள் உள்ளிட்ட நிறுவன செயல்திட்டங்கள் அனைத்தும் அந்த பெயரை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். மசாலா பொருட்கள் என்றாலே சுவை மணம் மற்றும் நிறம் ஆகியவை மிக அவசியம். அவற்றின் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்ட பொருளை வாடிக்கையாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அதனால், இந்த விஷயங்களில் குறிப்பிட்ட நிறுவனம் மேற்கொள்ளக்கூடிய தரச் சான்றுகளை விளம்பரங்களில் தெரியப்படுத்த வேண்டும். மேலும், வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான பேக்கேஜிங் என்பது மிக மிக அவசியமானது. மேலும், வெவ்வேறு விதமான விளம்பர யுத்திகளை கையாண்டும் ஸ்பைஸ் பிஸினஸ் விற்பனையை அதிகரித்து கொள்ள வேண்டும்.

ஸ்பைஸ் பிசினஸ் முயற்சியை வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்க நினைப்பவர்கள் முதலில் சாம்பார் பொடி, வத்தல் குழம்பு பொடி, ரசப் பொடி, பிரியாணி மசாலா பொடி இவற்றை கைப்பக்குவமாக தயார் செய்து பாக்கெட் போட்டு நண்பர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து ஆலோசனைகளை பெறலாம். அவர்களது கருத்துக்களை கவனித்து அதற்கேற்ப கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் சப்ளை செய்யலாம்.  மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி எண்ணெய், சீரக சம்பா அரிசியுடன் கலந்து பிரியாணி மிக்ஸ் தயாரிக்கலாம். ஜவ்வரிசி, பால் பவுடர், முந்திரிப் பருப்பு, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து பாயாசம் மிக்ஸ் தயாரிக்கலாம். மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி இறைச்சி மசாலா தயாரிக்கலாம். மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி சாம்பார் பொடி தயாரிக்கலாம். மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், குருமா பொடி, இட்லி பொடி, புளியோதரை மற்றும் லெமன் சாத மிக்ஸ், பாயாசம் மிக்ஸ் என மேலும், பல வகைகளில் மசாலாக்களை தயாரித்து, சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தும் தொழிலை விரிவு படுத்தலாம்.

ஏற்றுமதி வாய்ப்புகள்

இந்தியாவிலிருந்து மிளகாய், புதினா மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், சீரகம், மசாலா எண்ணெய்கள், மிளகு, மஞ்சள், மல்லி, கறி தூள் மற்றும் அதன் பேஸ்ட், சோம்பு, ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் மிளகாய் 1,61,000 டன், ரூ.1,547.30 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, புதினா மற்றும் சீரகம் ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.  

மட்டன் கறி, சிக்கன் கறி, மிளகு பவுடர், மிளகாய் பவுடர், குருமா பவுடர் போன்ற பலதரப்பட்ட மசாலாப் பொருட்கள் 100 கிராம், 250 கிராம் என பல அளவுகளில் பாக்கெட் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக, குழம்பு மிளகாய்த் தூள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. இந்த மசாலாவில் கூடுதல் சுவை இருக்கும் என்பதாலும், சைவம், அசைவம் என இரண்டு உணவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதாலும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

மசாலாப் பொருட்கள் ஏற்றுமதிக்கு நமது அரசு, ஏற்றுமதி செய்யும் மொத்த மதிப்பில் 5% வரை ஊக்கத் தொகை வழங்குகிறது. அதேபோல, மசாலாப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் அமைக்க மேற்கொள்ளும் முதலீட்டில் 40% மானியமும் வழங்குகிறது என்பதை ஸ்பைஸ் பிசினஸ் தொழில் முனைவோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.