written by | October 11, 2021

பூட்டிக் வணிகம்

×

Table of Content


உங்கள் ஊரில் பொட்டிக் வணிகத்தை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் 

நகரங்களில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த பொட்டிக் என்ற வார்த்தையை பற்றிய விளக்கமும் புரிதலும் இருந்தாலும் இந்தியா போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய நாட்டில் இந்த பொட்டிக் சிறப்பு பல ஊர்களுக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை. கடை என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையை தான் பிரெஞ்சு மொழியில் போட்டிக் என்று கூறுகிறார்கள்.  இந்த பொட்டிக் இல் பலதரப்பட்ட ஆடை அணிகலன்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஒரு சாதாரண துணி கடைக்கும்  பொட்டிக் க்கும் ஒரு சில ஒற்றுமை இருந்தாலும் கூட பொட்டிக் அமைந்துள்ள இடம், விற்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் விலை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. பொட்டிக் இன் சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண துணிக்கடையில் கிடைக்காத சிறப்பம்சம் வாய்ந்த டிசைனர் முறையில் செய்ய புது ரக துணிகள் கிடைக்கும். மற்ற துணி விற்கும் கடைகளை விட இந்த பொட்டிக் இன் அளவு சிறியதாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால் பெரும்பாலான பொட்டிக் வணிகம் ஆன்லைன் விற்பனையை சார்ந்தே உள்ளது. பொட்டிக் இன் விற்பனை வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை தயாரித்துக் கொடுக்கும் இடமாகவும் திகழ்கிறது. 

சாதாரண துணிக்கடையை போல் அதிகபடியான ஆடைகளை ஸ்டோர் செய்து அதை விற்று லாபத்தை அடையாமல் குறைந்தபட்ச ஆடைகளை குறிப்பிட்ட ரகத்தில் மட்டும் வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு தகுந்த ஆடைகளை வடிவமைத்து விற்று லாபம் அடையக் கூடிய ஒரு தொழில் ஆகும். 5 முதல் 10 லட்சம் வரையிலான முதலீட்டைக் கொண்டு திறக்கப்படும் இத்தகைய பொட்டிக் க்கு இத வயது பெண்களிடம் அதிகப்படியான வரவேற்பு இருப்பதால் அதிகப்படியான வளர்ச்சியை கடந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அடைந்துள்ளது. இந்த பொட்டிக் வணிகத்தை தொழில்ரீதியாக செய்து பெரு வெற்றி அடைவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

எந்த வகையான பொட்டிக் வணிகம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுங்கள் 

அடிப்படையில் நான்கு வகையான முறையில் இந்த பொட்டிக் வணிகத்தை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள தகவல்களை பொறுத்து இந்த நான்கு வணிகத்தில் எந்த வணிகத்தை தேர்வு செய்து செய்யப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுங்கள் 

  1. I) கன்சைன்மெண்ட் பொட்டிக் என்றழைக்கப்படும் முறையில் வேறு ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஆடை நிறுவனங்களிடமிருந்து ஆடைகளை பெற்று அதில் கிடைக்கக்கூடிய லாபத்தில் மட்டும் உங்களது ஒரு சிறிய பங்கை எடுத்துக் கொள்வது ஆகும். இந்த முறையில் உங்களுக்கு முதலீடு எதுவும் செய்யத் தேவையில்லை, நீங்கள் அடுத்த நிறுவனத்திடமிருந்து ஆடைகளை விற்றால் மட்டும் போதும். இருப்பினும் இந்த முறையில் உங்களுக்கு அதிக லாபம் கிடைப்பது இல்லை. 
  2. II) இரண்டாவதாக பை அண்ட் செல் பொட்டிக் முறையில் வணிகம் செய்ய வாய்ப்புள்ளது. பெயருக்கு ஏற்றது போலவே இது பெரிய நிறுவனங்களிடம் இருந்து அல்லது தயாரிப்பாளர்களிடம் இருந்து ஆடைகளை வாங்கி இறுதி விலையை நீங்களாகவே நிர்ணயித்து விற்பதால் அதிக லாபம் அடைய முடியும். இந்த முறையில் வணிகம் செய்வதற்கு மிக அதிகமான முதலீடும் உங்களுக்கு ஆடை கொடுக்கும் நிறுவனத்திடம் சிறந்த உறவு வைத்து குறைந்த விலையில் கொள்முதல் செய்வது கட்டாயமாகும்.  

III) மூன்றாவதாக பிரான்சைஸ் பொட்டிக் என்று அழைக்கப்படும் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை அவர்களை பெயரை பயன்படுத்தி அவர்களின் பொருளை விற்கக்கூடிய வணிகம் ஆகும். இத்தகைய வணிகத்திற்கு நீங்கள் மார்க்கெட்டிற்கு செய்யும் தொகை மிகக் குறைவாக இருந்தாலும் முதலீடாக அந்த நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு நீங்கள் அளிக்கும் தொகை மிக பெரியதாக இருக்கும். பெரிய முதலீடு மற்றும் நிறுவன ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் கட்டுப்பாடுகள் போன்றவை இருப்பதினால் இந்த முறை அதிக அளவு வரவேற்பை பெறவில்லை.

  1. IV) நான்காவதாக மற்றும் இறுதியாக இருக்கும் பொட்டிக் வணிகம் என்னவென்றால் சொந்தமாக ஆடைகளைத் தயாரித்து அத்தகைய ஆடைகளை சொந்த இடத்தில் வைத்து விற்கும் முறை ஆகும். மற்ற மூன்று வணிக முறைகளை விட இந்த முறையில் இரட்டிப்பு லாபம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயத்தில் வேலையாட்கள், மூலப் பொருட்கள் வாங்குதல், இடம் ஏற்பாடு செய்தல், சந்தைப்படுத்துதல், மற்றும் பல்வேறு விதமான செலவுகள் அதிகமாக இருப்பதால் இதனுடைய முதலீடும் மற்ற மூன்று முறையை விட மிக அதிகமாக இருக்கும்.

ஏன் இந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள் 

நீங்கள் இந்த தொழிலை விருப்பப்பட்டு செய்பவர்களாக இருந்தாலும், வீட்டில் அதிக நேரத்தை கழிக்க முடியவில்லை என்று இந்த தொழில் ஆரம்பிக்க விரும்பினாலும், ஃபேஷன் சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன் ஆகவே இந்த தொழில் செய்ய விரும்பினாலும் உங்களது முழு நோக்கம் லாபம் அடைவதில் இருக்க வேண்டும். ஆகவே எந்த காரணத்திற்காக நீங்க இந்த தொழிலில் வந்தாலும் பொட்டிக் தொழிலில் லாபம் அடைய வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.

எந்த வகையான வாடிக்கையாளர்களை நோக்கி செயல்படப் போகிறீர்கள் என்று ஆராயுங்கள் 

ஆரம்ப காலகட்டத்தில் அனைத்து வகையான விருப்பமுள்ள வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த நினைக்காமல் ஒரு குறிப்பிட்ட வயதுள்ள வாடிக்கையாளரை மனதில் கொண்டு அவர்களுக்கு விருப்பமுள்ள ஆடைகளாக தேர்ந்தெடுத்து விற்பனை செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும். உங்களுக்கு எந்த மாதிரியான ஆடைகள் பிடித்துள்ளது என்பதை பற்றி சிந்திக்காமல் உங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதிரி ஆடைகள் வாங்க ஆர்வமாக உள்ளார்கள் என்பதை பற்றிய கள ஆய்வு மேற்கொண்டு அவ்வாறு விற்கக்கூடிய ஆடைகளில் எது அதிகமாக விற்பனையாகிறது அதன் லாப விகிதாச்சாரம் என்ன என்பதைப் பற்றிய ஆராய்வு தேவை.

தொழிலுக்கான முதலீடு எவ்வாறு திரட்ட போகிறீர்கள் என்று சிந்தியுங்கள் 

நீங்கள் தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்து குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை பெரியதொரு லாபத்தை அடையும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆகவே அத்தகைய செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உங்களது முதலீடு எவ்வளவு ஆகும் என்பதை தீர்மானித்து பொட்டிக் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். வங்கிகளிடமிருந்து தொழில் கடன் பெற போகிறீர்களா அல்லது உங்களது சொந்த சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து செலவு செய்யப் போகிறீர்களா அல்லது உறவினர் நண்பர்கள் போன்றவர்களிடம் உதவி கேட்கப் போகிறீர்களா என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும்.  ஆகவே சொந்த தொழில் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி முழு தகவல்களையும் சேகரித்து அதற்கேற்ற படியான திட்டங்களை வகுத்து அதன் பிறகு ஆரம்பிப்பது நல்லது.

சரியானதொரு இடத்தைத் தேர்ந்து எடுத்து எவ்வாறு வடிவமைப்பது பற்றி ஆராய்க 

இத்தகைய பொட்டிக் தொழிலில் வருமானம் நீங்கள் அதற்காக தேர்ந்து எடுத்த இடத்தை பொறுத்தும் அந்த இடத்தை எவ்வாறு அழகாக வடிவமைத்து ஆடை அணிகலன்களை காட்சிப் படுத்தி உள்ளீர்கள் என்பதை பொருத்தும் கண்டிப்பாக மாறுபடும். பெரிய மால்கள் போன்ற வசதியான மக்கள் நடமாட்டம் அதிகம் இடத்தில் இத்தகைய பொட்டிக் திறக்கும்போது அதிக வருமானம் கிடைத்தாலும் அதிகப்படியான வாடகை செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல் குறைந்த வாடகை உள்ள நகரத்தின் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்தால் வாடகை குறைவாக இருந்தாலும் வருமானம் தரும் வியாபார வாய்ப்பும் குறைந்து விடும். இந்த மாதிரி இடத்தை பல்வேறு தரப்பட்ட ஆராய்ச்சி பின்னர் முடிவு செய்து அந்த இடங்களின் வடிவமைப்பு வாடிக்கையாளர்களுக்கு கவரும் வகையில் ஸ்டாண்ட், பொம்மை, செல்ப், அலங்கார விளக்குகள் போன்றவை அமைத்து கண்கவர் ஆடையை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தி ஈர்க்க வேண்டும்.

ஆடைகளை எங்கே வாங்கலாம் என்ன விலைக்கு விற்கலாம் என்ற முடிவு செய்யவேண்டும் 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆடை சந்தையை ஆராய்ந்து எந்த இடத்தில் உங்களுக்கு தேவையான உடைகளை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்று முடிவு செய்ய வேண்டும். ஆடைகளை நீங்களே தயாரிப்பவர் ஆக இருந்தால் உங்கள் ஆடை தயாரிப்பு காண மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும் என்ற ஆய்வு செய்ய வேண்டும். பல லட்சங்களுக்கு கொள்முதல் செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கேற்ற போக்குவரத்து வசதி உங்களிடம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து பொட்டி-க்குற்கு தேவையான அனைத்து ஆடைகளையும் ஒருங்கே கொள்முதல் செய்து வரவேண்டும். இவ்வாறு மொத்தமாக கொள்முதல் செய்வதன் மூலமாக உங்களுக்கு குறைந்த விலையில் ஆடைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். 

ஆடைகளைக் கொண்டு வந்து சேர்த்த பிறகு அந்த ஆடைகளுக்கு சரியான விலையை உங்களது அனைத்து செலவுகள் ஆன போக்குவரத்து, வரி, வேலையாட்கள் சம்பளம், வாடகை, போன்றவற்றை கணக்கிட்டு விலை நிர்ணயித்து; அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்து வாடிக்கையாளருக்கு கொடுத்தாலும் லாபம் வரக்கூடிய விலையாக இருக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட அளவு விலையை வாடிக்கையாளருக்கு தள்ளுபடி செய்வது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயலாக இருக்கும். பெரும்பாலான வட்டிக் மற்றும் துணி கடைகள் தங்கள் நிறுவனத்தில் உள்ள ஆடைகளுக்கு, விலை நிர்ணயம் செய்யும்போது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு அதன் இரு மடங்கை இறுதி விலையாக நிர்ணயம் செய்யும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளார்கள்.

பொட்டிக் ஆரம்பிப்பதற்கான இறுதிகட்ட வேலைகள் 

மேலே குறிப்பிட்டபடி ஆடைகளை கொள்முதல் செய்து,  சரியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வடிவமைத்து பிறகு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் உங்களது கடைக்கு நல்லதொரு பெயரை வைத்து அதை பதிவு செய்வதாகும். உங்கள் கடையில் பல லட்சங்களுக்கு வியாபாரம் போகும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்றால் ஒரு நல்ல ஆடிட்டரை வைத்துக்கொண்டு பொட்டிக் அனைத்து கணக்கு வழக்குகளையும் சரியாக கையாள நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நல்லதொரு ஆடிட்டர் மூலம் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பது பிற்காலத்தில் ஏற்படும் வரி தொடர்பான சிக்கல்கள் வராதவாறு தடுக்க முடியும். அதன் பிறகு ஒரு நல்ல மார்க்கெட்டிங் ஏஜென்சியை அணுகி உங்களது கடைக்கு எந்தெந்த முறையில் மார்க்கெட்டிங் செய்யலாம் எந்தெந்த மார்க்கெட்டிங் எவ்வளவு செலவாகும் என்ற தகவல்களை முழுவதுமாக கேட்டறிந்து, உங்களுக்கு எது பயனளிக்கும் என்று புரிந்து அது உங்கள் பட்ஜெட்டின் கீழ் அமைகிறதா என்று ஆலோசித்து பயன்படுத்தி கொள்ளவேண்டும். 

தகுந்த அனுபவமுள்ள, அழகான, நேர்மையான, அறிவான ஆண்கள் மற்றும் பெண்களை உங்களது பொட்டிக் இல் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டிக் இல் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டர், ஸ்கேனர், டேபிள், கிரெடிட் கார்டு மெஷின், பிரிண்டர் போன்ற முக்கிய சாதனங்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பொட்டிக் நிறுவனத்தில் சிசிடிவி அமைப்பதே உங்களது பாதுகாப்பிற்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாறு மேலே குறிப்பிட்ட அனைத்து வகையான நல்ல செயல்களையும் செய்து ஒரு மிகச்சிறந்த நல்ல நாளில் பொட்டிக் ஓபனிங் மிகவும் பிரமாண்ட முறையில் செய்து வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்று தொழிலில் வளர்ச்சி அடையுங்கள்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.