பால் விநியோக வியாபாரத்திற்கான திட்டங்கள் மற்றும் நடைமுறை வழிகள்
பால் விநியோக வியாபாரம் செய்யும் தொழில் பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தை கொடுத்தாலும் சரியான திட்டமிடுதல் இல்லாமல் இறங்கினால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பால் பண்ணை என்பது அடிப்படையில் விவசாய, கால்நடை வளர்ப்பு தொழிலை சார்ந்ததாகும். பிற நாடுகளில் ஆட்டுப்பால் மற்றும் ஒட்டகப் பாலுக்கு சிறிதளவு வரவேற்பு இருந்தாலும் உலகளவில் மிக முக்கியமான வணிகமாக மாட்டுப் பால் மட்டுமே கருதப்படுகிறது. பால் நேரடி உணவுப் பொருளாக மட்டுமல்லாது பதப்படுத்தி தயாரிக்கப்படும் மற்ற உணவுப் பொருட்களான தயிர் வெண்ணெய் நெய் சீஸ் பால் சார்ந்த பலகாரங்கள் போன்ற பல வகையான பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உங்களது இலக்கை அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள்
- a) எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் அதற்கு தகுந்த வாடிக்கையாளர்களை பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் நீங்கள் திறக்கும் பால் விநியோகத்திற்கு, உங்கள் இடத்திற்கு அருகில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கும் உங்களது இலக்குக்கும் சரியான விகிதம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
- b) வாடிக்கையாளர்கள் என்பது புதிதாக நீங்கள் ஒன்றும் உருவாக்குவது இல்லை. தங்களது தேவைக்காக வேறு ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருப்பவர்களை உங்களது தொழில் சந்தைப்படுத்துதல் மூலம் ஈர்த்து உங்களிடம் பொருள் வாங்க வைக்க வைப்பதே ஆகும். இவ்வாறு வேறு ஒரு இடத்தில் தங்களது தேவைக்கான பால் வாங்கிக் கொண்டிருப்பவர்களை ஈர்த்து உங்களிடம் வாங்க வைப்பதற்கான திட்டங்கள் என்னென்ன உள்ளது என்று யோசித்து செயல்பட வேண்டும்.
- c) பால் பொருட்கள் விநியோகம் மட்டுமல்லாது மற்ற பிற அன்றாடத் தேவை பொருளான காய்கறி பழங்கள் மற்றும் மளிகை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யலாமா என்பதை பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். ஏனென்றால் பால் வாங்குவதற்காக மற்றும் ஒரு வாடிக்கையாளர் உங்களது கடை தேடி வருவார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது வீட்டிற்கு அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விரைவில் முன்னேற முடியும்.
- d) கடையில் மட்டும் வணிகம் செய்யாமல் வீட்டிற்கு நேரடியாக சென்று பொழுதை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றி ஆராய்ந்து செயல்படுங்கள். வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வயது மூப்பு காரணமாகவும் அலுவலக வேலை காரணமாகவும் பொருட்களை வாங்குவதற்காக கடையைத் தேடி செல்வதில்லை. இவர்களுக்காக நீங்கள் வீடு தேடி சென்று பால் விநியோகம் மட்டுமல்லாது இதர பொருட்களையும் நேரடிவிற்பனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- e) இளம் தலைமுறை இளைஞர்கள் பால் அன்றாடம் வாங்குவது பெரிதும் ஆர்வம் காட்டுவதாக தெரிவதில்லை. இதற்கு மாறிவரும் வேலை சூழ்நிலை மற்றும் மாறிவரும் உணவு பழக்க மாற்றங்களும் காரணம் ஆகும். இவ்வாறு இழக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற திட்டங்களை வகுத்து தொழில் நடத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
அன்றாட தொழில் நடவடிக்கையை திட்டமிட வேண்டும்
நீங்கள் எத்தனை மணிக்கு கடை திறக்க வேண்டும், எத்தனை மணிக்கு வாடிக்கையாளர் பால் விநியோகத்திற்கு ஆட்களை அனுப்ப வேண்டும், வசூல் செய்வதற்கு எப்போது செல்ல வேண்டும். சரியான கால அட்டவணை அமைத்து கால தாமதம் ஏற்பட்டு விடாமல் செய்ய வேண்டும். பால் வாங்கி வருவதற்கான மற்றும் விநியோகம் செய்வதற்கான வாகனம் தரமான நிலையில் தகுந்த எரிபொருள் உடன் அனைத்து நேரங்களிலும் நிரப்பப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பால் வினியோகம் செய்வதாக இருந்தாலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தகுந்த அளவான பால் தகுந்த நேரத்தில் சென்றடைந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் முன் பணம் எவ்வளவு பெற வேண்டும் வாராந்திர அல்லது மாதாந்திர முறையில் பணம் பெறுவதற்கான பட்டியல் போன்றவை சரியாக அமைத்து அதற்கு ஏற்ற பணம் வசூல் செய்தால் தான் பணப்புழக்கம் சரியாக அமைந்து உங்கள் தொழில் நடத்தி செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
எந்தெந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்கப் போகிறீர்கள் என்ற வரையறை தேவை
நாம் முன்பே கூறியது போல பல்வேறு வகையான பால் வகைகள் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் எந்தெந்த பொருட்கள் முதன்மையானதாக நீங்கள் விற்கப் போகிறீர்கள் என்ற வரையறையும் மற்ற என்னென்ன பொருட்கள் வாடிக்கையாளர் தேவைக்கேற்றவாறு வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றியும் சிந்தித்து சிறந்த வரையறை வகுக்க வேண்டும். உங்களது வாடிக்கையாளர்கள் கோடை விடுமுறை மற்றும் இதர விடுமுறை நாட்களில் ஊரில் இல்லாத நாட்களுக்கு தகுந்தவாறு அட்டவணை அமைப்பது மற்றும் அத்தகைய நாட்களில் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை எவ்வாறு சமாளிப்பது போன்றவற்றை ஊகித்து செயல்படவேண்டும்.
- முழு கொழுப்புள்ள பால்
- அரை கொழுப்பு நீக்கப்பட்ட பால்
- முழுக் கொழுப்பு நீக்கிய பால்
- யு.எச்.டி மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பால்
- சுவையூட்டப்பட்ட பால்
- மில்க் ஷேக்குகள்
- சோயா மற்றும் ஆட்டுப்பால்
- பனிக்கூழ்
- தயிர்
- புரோபயாடிக் பானங்கள்
- வெண்ணெய்
- மோர்
- சீஸ்
- நெய்
இவ்வாறாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பல வகையாக இருந்தாலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் இதை விற்க ஆரம்பித்து விட்டதால் தாங்களும் பால் வினியோகம் செய்யும்போது சூப்பர் மார்க்கெட்டிற்கு ஈடான மற்ற மளிகை, பிரட், கேக் மற்றும் காய்கறி பொருட்கள் நீங்களும் விற்க முனைவது அவசியமாக மாறிவிட்டது. இதுமட்டுமல்லாது பண்டிகை காலங்களில் பிரத்யேகமாக செய்யப்படும் பலகாரம் மற்றும் இனிப்பு வகைகளின் ஆர்டர்களை உங்களது பால் விநியோக வாடிக்கையாளர்களிடம் பெறுவதன் மூலமும் லாபம் அடையலாம்.
இவ்வாறு பெரும்பாலான பொருட்கள் விற்பதில் ஆர்வம் காட்டுவதாக இருந்தாலும் அவ்வாறு வாங்கும் பொருட்கள் எங்கு சேமிக்க வேண்டும் எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றிய தகவல்கள் மற்றும் அந்த பொருட்கள் வீணாகாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் போன்றவற்றிற்கான திட்டமிடுதல் அவசியம்.
ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்ட விநியோகத்தை வாங்கி நடத்துவதில் உள்ள பயன்கள்
நீங்கள் புதிதாக பால் விநியோக உரிமை பெற்று அதன் அடித்தளத்தில் இருந்து வேலையை ஆரம்பிப்பதை விட சில சொந்த காரணங்களுக்காக இத்தகைய தொழிலை தொடர முடியாமல் இருக்கும் விநியோகஸ்தர்களை அணுகி உங்களது விருப்பத்தை தெரிவித்து அவர்களிடம் உள்ள வியாபாரத்தை ஒரு மொத்த மதிப்பீட்டு முறையில் வாங்கி நடத்துவதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கின்றன.
- a) குறைந்தபட்ச வாடிக்கையாளர்கள் உங்களுக்கு வணிகம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கிடைப்பதால் ஓரளவு வருமானமும் மக்களிடம் நேரடியாக நீங்கள் உங்களை அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது.
- b) நீங்கள் பால் வினியோகம் செய்யும் இடம் ஏற்கனவே மக்கள் பால் வாங்குவதற்காக வந்து செல்லும் இடமாக இருப்பதால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமான கடைதிறப்பு தேவை தேவைப்படுவதில்லை.
- c) தங்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் அத்தொழிலை கொடுக்க முற்படுவதால் அதிகமான விலைக்கு விற்று லாபம் அடைய வேண்டும் என்ற மனப்பாங்குடன் இருக்கமாட்டார்கள்.
- d) அவர்களிடம் இருக்கும் வாகனங்கள் மற்றும் வேலையாட்களையும் சேர்த்தே உங்களது பால் விநியோக வியாபாரத்திற்கும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அவர்களிடம் அனுபவம் வாய்ந்த வேலை ஆட்கள் இருந்தால் உங்களது விநியோக வியாபாரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.
- e) நன்கு வளர்ந்த சிறப்பான சந்தைப்படுத்துதல் முறைகளை மேற்கொண்டு இருக்கின்ற பால் உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பகுதி விற்பனை உரிமத்தை வாங்கி செயல்படுத்துவதன் மூலம் உங்களுக்கு தனியாக மார்க்கெட்டிங் செய்வதற்கான தேவை இருப்பதில்லை.
பால் விநியோக வணிகத்திற்கான தேவைகள்
ஒரு வணிகத்தை வழிநடத்த தேவையான நிதி, திட்டமிடல், தொழில் சம்பந்தமான நபர்களின் நட்பு வட்டாரம், சந்தைப்படுத்தும் உத்திகள் போன்ற தகுதிகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை ஒரு முறை யோசித்து முடிவு எடுங்கள். மற்ற சில தொழில்களை போல பால் விநியோகத் தொழிலை பகுதிநேர தொழிலாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை என்பதை புரிந்து இருக்க வேண்டும். உங்களது முழு நேர உழைப்பும் இந்த பால் விநியோகத் தொழில் சம்பந்தமான முயற்சிகள் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மேலே குறிப்பிட்ட தகுதிகளில் ஏதேனும் ஒரு தகுதிகளை நீங்கள் இருந்தாலும் இந்த பால் விநியோக தொழிலில் இறங்கி வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்றாகிவிடும். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் வகையில் உள்ள இடத்தில் தொழிலை நடத்தி வாடிக்கையாளர் தங்களை எளிதில் அணுகும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது தொழில் வெற்றிக்கு முக்கியமான செயலாகும். பால் மற்றும் பால் பொருட்கள் குளிரூட்டப்பட்ட, சாதனங்களில் வைத்தால் மட்டுமே கெடாமல் இருக்கும் என்பதால் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் விற்பனை என்பது ஒரு ஊரில் ஒரு கடையை ஆரம்பித்து மக்களை வரவழைத்து விற்கும் தொழில் மட்டுமல்லாது இணையதள வாயிலாக வெவ்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கும் கொண்டு சென்று விற்பதையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் ஒரு சிறந்த விற்பனையாளராக இருக்க முடியும். இந்த இணையதள வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களது பால் விநியோக தொழில் உள்ளூர் அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செய்யும் நுட்பங்களை அறிந்திருத்தல் அவசியம்.
பால் விநியோக வியாபார சம்பந்தபட்ட அடிப்படை தகவல்கள்
- பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையிலும்
- எந்த வகையான பதப்படுத்தும் முறையை கையாள படுத்தப்படுகிறது என்பதை பொருத்தும்
- பால் உற்பத்தி செய்யும் கறவை மாடுகளின் அடிப்படையிலும் மூன்று பொது பிரிவுகளில் பால் வகைகள் பிரிக்கப்படுகிறது.
2.0-3.25% 0.5-2.0% 0.0-0.5% என்ற கொழுப்பு சதவீதத்தின் அடிப்படையில் பால் பொருள்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு சத்துள்ள பால் கைக் குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இன்றைய மார்க்கெட்டில் விற்கப்படும் அனைத்து பால் பாக்கெட்டுகள் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நன்கு பதப்படுத்தப்பட்ட பிறகே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இத்தகைய பால் பண்ணையில் இருந்து கொழுப்பு குறைக்கப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட, சர்க்கரை சத்து குறைவான மற்றும் விட்டமின் சத்துக்கள் அதிகரிக்கப்பட்ட பால் வகைகள் விற்கப்படுகிறது.
பல்வேறு முன்னணி பால் உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவாக இணைந்து சுத்தமான பாதுகாப்பான தட்டுப்பாடற்ற பால் விநியோக வணிகத்தை செய்து வருகிறார்கள். பால் விநியோக வியாபாரத்திற்காக பல்வேறு கட்டங்களில் பல்வேறு சோதனைகளை செய்து வெற்றியுடன் தொழில் நடத்துவதற்கான சில வரையறைகள் வைக்கப்பட்டுள்ளது.