இந்தியாவில் பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவது எப்படி?
உலக அளவில் இந்தியா பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்கல்வி நிறுவனங்கள் என உலக அளவில் இந்தியா கல்வி தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் இங்கு அதிக அளவிலான கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பலதரப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பயின்று செல்கின்றனர்.
இந்தியாவின் கல்வித் துறை கடந்த ஆண்டுகளில் மிக கம்பீரமான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் இன்று கண்கூடாகக் காணமுடிகிறது. இந்தியாவின் ஜனத்தொகை கூடி வரும் அதேவேளையில் அதற்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்களும் பெருகி உள்ளது. எனினும் இந்தக் கல்வி முறையில் மேலும்
பல மேம்பாடுகளை செய்ய இந்திய அரசு பல்வேறு வகையில் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில்
பயிற்சி நிறுவனங்கள் தொடங்க ஒரு சில வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது.
பயிற்சி நிறுவனங்களில் உரிமம் மற்றும் பதிவு செய்தல்!
இந்தியாவில் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க எண்ணுபவர்கள் அது சிறிய அளவிலானதா இல்லை, மிகப்பெரிய அளவிலானதா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி நிறுவனமானது மிக சிறிய அளவிலானதாக இருக்குமாயின் அதற்கு பெரிதாக உரிமமும் கட்டாய பதிவு செய்தலும் தேவைப்படுவதில்லை. ஆனால் மிகப்பெரிய அளவிலானதாக
பயிற்சி நிறுவனங்கள் தொடங்க கட்டாய உரிமம், பதிவு செய்தல் மற்றும் வரி உள்ளிட்டவைகள் முக்கியமான அங்கம் வகிக்கிறன. இவ்வாறு நீங்கள் தொடங்கும் பயிற்சி நிறுவனங்கள் ஒருவேளை ஒன்பது லட்சத்தை தாண்டுமேயானால் அந்த நிறுவனத்திற்கான முறையான சான்று பெறுவதோடு அதற்கான வரியை முறையாக குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டியது இருக்கும்.
எதற்கான பயிற்சி நிறுவனம் என்பதை தீர்மானித்துக்கொள்ளுதல்!
பயிற்சி நிறுவனங்களை தொடங்குவதற்கு முன், அது எந்த மாதிரியான பயிற்சி நிறுவனம் எதற்காக தொடங்கப்படுகிறது என்பதில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு தொடங்கிய பின் அதில் எந்தந்த மாதிரியான பாடப்பிரிவுகள் எந்தவகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான வயதினருக்கும் பயிற்றுவிக்கும் தரத்தில் இருக்கின்ற நிலையில், பயில்பவர்கள் ஒரு வேலை இளம் வயதினராகவும் வயது மூத்தவர்களாகவும் இருக்கக் கூடும்.
எல்லாவற்றையும் விட சிறந்தவையாக நாம் தொடங்கும் பயிற்சி நிறுவனத்தில் எந்த மாதிரியான பாடங்கள் மற்றும் அதன் முறைகள் மாணவர்களுக்காக எடுக்கப்படுகின்றது என்பதை பற்றிய முழு ஆராய்வு செய்து கொண்டு அந்தப் பகுதியில் இருக்கும் மாணவர்கள் எந்தெந்த பாடங்களை கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள் அல்லது தேவைப்படுகிறது என்பதை பற்றி மிக ஆழமாக அலசி ஆராயந்து அதற்கேற்றார்போல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் பாடம் கற்பிப்பவர்களையும் தேர்வு செய்வது ஆகச்சிறந்த வழிமுறையாகும்.
அவ்வாறு பயிற்சி நிறுவனத்தில் எடுக்கின்ற பாடங்களுடன் மேல்நாட்டு மொழிகளையும் எடுத்துக்காட்டாக பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் இந்தியாவில் உள்ள பலராலும் சமீபகாலமாக விரும்பிப் படிக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் இது போன்ற மேல்நாட்டு மொழிகளையும் கற்பிக்கும் பொழுது நிறுவனத்தின் மீதான மதிப்பு மேலும் கூடி நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு இதுவும் பெரும் துணையாக இருக்கும்.
பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் இடம்!
பயிற்சி நிறுவனங்கள் தொடங்கும் பொழுது அதில் எந்த மாதிரியான பாடங்கள் மற்றும் பயிற்றுவிக்கும் முறைகள் கற்க வேண்டும் என்பதை தெரிவுசெய்வது எவ்வளவு முக்கியமோ அதே போன்று பயிற்சி நிறுவனம் அமையப்பெறும் இடமும் மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் இடம் பலதரப்பட்ட மக்களும் மிக எளிதாக வந்து செல்லக்கூடிய மையப் பகுதியாக இருக்குமாயின் பலரும் இந்த நிறுவனத்தில் பயில ஆர்வம் காட்டப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பகுதியானது ஒவ்வொரு மாணவர்களின் இணைப்பை பலப்படுத்துவதோடு பயனுள்ளதாகவும் இருக்கும்.
பயிற்சி நிறுவனங்கள் பரபரப்பான மையப்பகுதியில் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று மாணவர்கள் மிக எளிதில் வகுப்பறையை வந்து அடையவும், ஒரு சில சிரமங்களை தவிர்க்கவும் மையப்பகுதி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்!
அவ்வாறு சிறந்த மையப்பகுதியை பயிற்சி நிறுவனம் தொடங்குவதற்காக தேர்ந்தெடுத்த பின் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, போதுமான அளவு இடவசதி மற்றும் இருக்கை வசதிகள், தேவையான அளவு மின் விளக்குகள் மற்றும் வெளிப்பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கான இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயிற்சி நிறுவனங்கள் தொடங்கும்போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நிறுவனத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளும் பல்வேறு வயதினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறபோது அவர்களுக்கு தேவையான மற்றும் சௌகரியமான இடவசதியும் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்டவைகள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மேலும் கூட்டும்.
இவ்வாறு ஒரு பயிற்சி நிறுவனத்தின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தபின் மாணவர்களின் சேர்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று அவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம். சில நிறுவனங்கள் தோல்வியில் சென்று முடிவதற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் தொடக்கத்திலேயே அதிகப்படியான கட்டணத்தை மாணவர்கள் மீது திணிப்பதே ஆகும். அவ்வாறெல்லாம் இல்லாமல் தொடக்கத்தில் நியாயமான கட்டணத்தை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திற்கு தகுந்தவாறு நிர்ணயித்தல் பயில வருவோரின் எண்ணிக்கை மிக எளிதாகவே அதிகரிக்கும். அவ்வாறு அனைத்து மாணவர்களும் வந்து பயிலும் வகையில் கட்டணத்தை நிர்ணயிக்கும் பொழுது அது மாணவர்களை மட்டுமல்லாமல் பெற்றோர்களையும் ஈர்ப்பதோடு அதிக அளவிலான மாணவர்கள் மிகக்குறைந்த காலகட்டத்திலேயே சேர்வதற்க்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு பயிற்சி நிறுவனங்கள் தொடங்கும் போது நாம் கவனிக்கும் சின்ன சின்ன விஷயங்களும் நிறுவனத்திற்கு ஆழமான அஸ்திவாரமாக இருப்பதோடு அதன் தொடர் வளர்ச்சிக்கும் பெரும் உந்துசக்தியாக இருக்கும். அவ்வாறு தொடக்கத்தில் மிக நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து விட்டு ஓர் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது அரை ஆண்டுக்கு ஒரு முறையோ கட்டணத்தை ஒரு குறிப்பிட்ட அளவு உயர்த்துவது மிகச்சிறந்த பயன் அளிப்பதோடு அதில் மாணவர்களின் சேர்க்கைக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது. இந்நிலையில் ஒரு சில பெற்றோர்கள் அதிக கட்டணத்தில் தங்களது குழந்தைகளை பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு தயங்கும் நிலையில், தொடக்கத்தில் நியாயமான அல்லது குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் பொழுது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பயிற்சி நிறுவனத்தில் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதோடு, அந்நிறுவனத்தின்
தரம் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப் பட்டாலும் தரத்தை கருத்தில்கொண்டு பயிற்சி நிறுவனம் நிர்ணயிக்கும் கட்டணம் எதுவாயினும் அவர்கள் செலுத்த தயாராக இருப்பார்கள்.
பயிற்சி நிறுவனத்தின் தரத்தை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கக் கூடாது!
பயிற்சி நிறுவனம் மட்டுமல்லாமல் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் தரத்தைப் பொறுத்தே வெற்றி பெறும். இந்நிலையில் பல பெற்றோர்கள் பயிற்சி நிறுவனத்தில் அதன் தரத்தை சற்று கூடுதலாகவே எதிர்பார்ப்பார்கள், அதில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இவ்வாறு கல்வி என வரும்பொழுது அதில் நிறுவனத்தின் தரம் என்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நிறுவனத்தின் தரம் என்பது சமுதாயத்தில் அதற்கான மதிப்பையும் நற்பெயரையும் ஏற்படுத்துகின்ற நிலையில் அது தவறும் போது நிறுவனத்தின் மீதான அடையாளத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. மேலும் தரமில்லாத பயிற்சி நிறுவனங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் சேர்ப்பதும் இல்லை சேருவதற்கு அனுமதிப்பதுமில்லை.
இவ்வாறு ஒரு பயிற்சி நிறுவனத்தின் தரம் என்பது அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருப்பதில்லை அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவர்கள் பயிற்றுவிக்கும் முறைகள் உள்ளிட்டவைகளும் அதன் மீதான நம்பிக்கையும் தரத்தையும் உயர்த்துகிறது. எனவே பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்களின் பயிற்றுவிக்கும் திறன் மாணவர்களை மிக எளிதில் சென்று அடைகிறதா என்பதை கவனித்து தேர்ந்தெடுப்பது நிறுவனத்தின் மீதான தரத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் பயிலும் திறனையும் அதன் தேவையையும் புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் அந்த ஆசிரியர்களை நியமிப்பது ஆகச் சிறந்த செயலாகும்.
அனுபவம் வாய்ந்த அதே சமயம் பயிற்றுவித்தலில் அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்களை பயிற்சி நிறுவனத்தில் நியமிக்கும் பொழுது மாணவர்கள் பலரும் பயன்பெறும் பொருட்டு நிறுவனத்தில் செயல்பாடுகளும் மிகச் சரியாக அமைந்து விடுகிறது. இவ்வாறு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது உயர்நிலை பதிப்புகளை அந்நிறுவனம் பெற்று வெற்றியுடன் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. மேலும் மாணவர்களாக இருந்தாலும் சரி பெற்றோர்களாக இருந்தாலும் சரி பயிற்சி நிறுவனத்தில் அவர்கள் செலுத்தும் கட்டணத்திற்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படுகின்றனவா அதற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை மிக நுண்ணிப்புடன் மதிப்பிட்டு அந்தப் பயிற்சி நிறுவனத்தினை தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறு மாணவர்களுக்கு பயிற்சி நிறுவனம் பயில கொடுக்கும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு மறைமுகமான பயனளிக்கிறது. ஆனால் இதனால் மட்டுமே பயிற்சி நிறுவனங்கள் உயர்ந்துவிடுகிறது என்று சொல்ல முடியாது அதையும் தாண்டி அந்த நிறுவனத்தின் மீது மாணவர் சமுதாயம் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது மேலும் பலரை தொடர்ந்து அந்த பயிற்சி நிறுவனத்தில் சேர ஊக்குவிக்கும் ஒன்றாகும்.
பயிற்சி நிறுவனத்தை விளம்பரப்படுத்துதலும் அதை சந்தைப்படுத்தலும் !
மக்கள் இப்படியொரு பயிற்சி நிறுவனம் இருக்கின்றது என்பதை அறிவதற்காக பல்வேறுவிதமான விளம்பரப்படுத்தும் முறை அதை சந்தைப்படுத்துதல் அந்த நிறுவனத்தின் மீது சமுதாயத்தின் பார்வை பட பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறான
விளம்பரப் படுத்தும் உத்திகள் மிக சிறப்பான முறையில் செயல்படுகையில் பலரும் இந்தப் பயிற்சி நிறுவனத்தை பற்றி அறிய தேவைப்படுபவர்கள் அதில் இணையவும் மிகப்பெரிய வாய்ப்பளிக்கிறது. இந்நிலையில் பொது இடங்களில் போஸ்டர்கள் பேனர்கள் உள்ளிட்ட விளம்பரங்களையும் தாண்டி தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் எந்த அளவிற்கு விளம்பரப் படுத்தப்படுகின்றதோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே பயனளிக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் தலைமுறைகள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களிலேயே பெரும்பாலும் மூழ்கி கிடப்பதால் அவர்கள் கண்ணில் இந்த விளம்பரங்கள் தென்படும்போது அந்த நிறுவனத்தை அணுகி பயன்பெற பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படுத்துவது பயிற்சி நிறுவனத்தின் பெயர் பெருமளவு மக்களை சென்று அடைவதோடு தொலைக்காட்சி, நாளிதழ் மற்றும் வானொலியில் உள்ளிட்டவைகளில் விளம்பரப்படுத்தல் முறையும் மிகச்சிறந்த சந்தைப்படுத்துதலுக்கு பெருமளவு பயன் அளிக்கிறது.