written by | October 11, 2021

பசுமை வீடு விவசாய தொழில்

×

Table of Content


கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் என்ற பசுமைக்குடில் விவசாயத்தை தொடங்குவதற்கான செயல்திட்டம்

தேசிய அளவில் விளைவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வயல் வெளிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில வகை பயிர்களை எல்லாவித தட்பவெட்ப  சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது என்ற நிலையில் பருவ மழை சில சமயங்களில் பொய்த்துப் போவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தடுக்கும் விதத்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய தொழில்நுட்பம் பசுமைக் குடில் தொழில் நுட்பம் அதாவது கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் என்பதாகும். வளர்ந்த நாடுகளான இஸ்ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து, சவூதி அரேபியா முதலிய நாடுகளில் இந்த தொழில் நுட்பத்தை பின்பற்றி விவசாயத்தை செய்து வருகிறார்கள். கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் என்பது பயிர்கள் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு சாதகமான சுற்றுபுறச்சூழலை அளிப்பதாகும். காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்ப நிலை, பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதல்களிலிருந்தும் செடிகளை பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் 

பசுமைக் குடில் என்ற கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் என்பது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் பிளாஸ்டிக் கூரை மூலம் போர்த்தப்பட்ட கூடார அமைப்பில் விவசாயத்தை மேற்கொள்வதாகும். அந்தக் கூடாரத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்பவெட்ப நிலை எளிதில் கிடைப்பதுடன், கரியமில வாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அது துணை செய்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெற்று விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்தில் தங்கி விடுவதால் ஈரப்பதமும் அதிகமாகி, குறைந்த நீர்ப்பாசன வசதியே போதுமானதாக இருக்கும். அதனால், சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர்ப்பாசனத்தை சிக்கனமாக செய்து கொள்ளலாம். பசுமை குடில் கட்டமைப்பு வகைகள் கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக உள்ளன.

1) குறைந்த அளவிலான மதிப்பு மற்றும் தொழில்நுட்பம் கொண்டவை

இந்த வகை கட்டமைப்புக்கு மூங்கில், மரக்கட்டைகள் முதலியவற்றை பயன்படுத்தலாம். இதில் தானியங்கி சிறப்பு கருவிகள் எதுவும் இருக்காது. மேலும் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம் குளிர்காலத்தில் பயிர்களுக்கு ஏற்ற வெப்பம் உருவாக்கப்படும். மேலும் வலைகள் போன்ற நிழல் தரும் பொருட்களைப் பயன்படுத்தி வெளிச்சத்தின் அடர்வினைக் கூட குறைக்கலாம். கோடைக்காலத்தில் பக்கத் தடுப்புகளை திறந்து விடுவதன் மூலம் வெப்பம் குறைக்கப்படுகின்றது. பயிர் சாகுபடியின்போது இத்தகைய அமைப்புகள் மழைக் காப்பிடமாகத் திகழ்கின்றது. இத்தகைய பசுமைக்குடில்கள் குளிர் கால நிலை மண்டலத்திற்கு ஏற்ற வகையாகும்.

2) மிதமான தொழில்நுட்பம் கொண்டவை

இதில் கட்டமைப்புக்கு இரும்பு தாது பூசப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பலரும், குறைந்த முதலீடு மற்றும் தானியங்கி முறையில் இயங்கும் கருவிகளை விரும்பும் நிலையில், வெப்பநிலை சீர் செய்யும் கருவி மற்றும் வெப்பத்தை வெளியேற்றும் விசிறிகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த அமைப்பானது வறட்சியான  நிலப்பகுதிக்கு ஏற்றதாக இருக்கும். இவ்வகை பசுமைக்குடில்கள் துத்தநாகம் பூசிய இரும்புக் குழாய்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. மேல் மூடாக்கானது திருகாணி மூலம் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது. கட்டமைப்பானது காற்றின் பாதிப்பினை தாங்கிக்கொள்வதற்காக நிலத்தில் திடமாகப் பொருத்தப்படுகின்றது.  வெப்பச்சீர் நிலைக் கருவியுடன், வெளியேற்றும் விசிறியும் பயன்படுத்தப்பட்டு தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. காற்றின் ஈரப்பத்தினைப் பசுமைக்கூடத்தில் பராமரிப்பதற்கு ஆவியாக்கிக் குளிர் தண்டுகள் மற்றும் மென்பனி அமைவு முறைகள் பொருத்தப்படுகின்றன. இம்முறைகள் பகுதி தானியக்க கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளதால் மிகுந்த ஈடுபாடும் கவனமும் தேவை. மேலும் பயிர்காலம் முழுவதும் ஒரே சீரான சுற்றுப்புறச் சூழ்நிலையை பராமரிக்கவும் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.  இப்பசுமைக்குடில்கள் வறண்ட மற்றும் கலப்பு காலநிலை மண்டலங்களுக்கு ஏற்ற வகையாகும்.

3) உயர் தொழில்நுட்பம் கொண்டவை

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் என்ற நிலையில் இந்த வகையான கட்டமைப்பில் வெப்பம், சூரிய ஒளி, கரியமில வாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீரின் தேவை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபார்மிங் ஹவுஸ் அமைப்பு

பசுமைக்குடிலின் வடிவம் தேவையான பாதுகாப்பு, பயன், கட்டமைப்பு ஒருங்கிணைப்பு கொண்டு உபயோகத்திற்கு ஏதுவானதாகவும் இருக்கவேண்டும்.  கட்டமைப்பானது தேவைக்கேற்ற அனைத்து உயிரற்ற, உயிருள்ள, காற்று மற்றும் இதர சுமைகளை தாங்க வல்லதாக இருக்கவேண்டும். அடித்தளம், தூண்கள் மற்றும் கிளைக் கம்பிகளும் இதற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தேசிய பசுமைக்கூட உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தரநிர்ணயம் (1994) கூறியுள்ளபடி பசுமைக்குடில்களை வடிவமைக்கவேண்டும்.

விவசாய தோட்டத்தில் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்ப கிழக்கு மேற்காக கட்டிடத்தையும், வடக்கு தெற்காக பயிர்களுக்கான பாத்திகளையும் ‘ஏரோ டைனமிக்’ முறையில் அமைப்பது அவசியம். அதன் மூலம், பயிர்களுக்கு போதுமான காற்று, வெளிச்சம் ஆகியவை கிடைக்கும். நிழலுக்கு கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் தட்பவெட்ப நிலையைக் கட்டுப்படுத்தலாம். நுண்ணீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்று சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால் 4 டிகிரி வரை வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. கட்டமைப்புகள், க்யோன்செட், வளைவான மேற்கூரை, கேபில் மேற்கூரை ஆகிய அமைப்புகளில் இருக்கலாம். மேற்கூரையாக, கண்ணாடி, கிளாஸ் ஃபைபர் ரீ-இன்ஃபோர்ஸ்டு பாலி எத்திலீன், சில்பாலின் ஆகியவை மூலம் சமபரப்பு உள்ளதாகவும், நெளிவு கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றன. 

கட்டிடத்தின் உயரம் 

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் முறையில் அதன் கட்டிட அமைப்பு 50 மீ x 50 மீ அளவு என்றால் அதன் உயரம் 5 மீ வரை இருக்கலாம். அளவு குறையும்போது உயரத்தையும் அதற்கேற்ப குறைத்துக் கொள்ளலாம். உயரம் அதிகரிக்கும்போது கட்டமைப்பிற்கும், மேல் கூரைக்கும் காற்றின் சுமை அதிகரிக்கிறது. பக்கவாட்டில் 2 மீட்டர் அகலத்திற்கும், மேற்கூரையிலிருந்து 1மீட்டர் அகலத்திற்கும் காற்றோட்ட வசதி இருக்கலாம். இயற்கை காற்றோட்ட வகை பசுமைக்குடிலானது 50 மீ x 50 மீ அளவிற்கும் அதிகமாக இருத்தல் கூடாது. பசுமைக்குடில்கள் மிகவும் பெரிதாக அமைக்கப்பட்டால் குறைவான காற்றோட்டம் ஏற்பட்டு அதனால் உட்புற வெப்பநிலை அதிகரித்துவிடும்.  ஆவியாக்குதலால் குளிரூட்டும் பசுமைக்கூடம் அளவு 60 மீட்டருக்கும் அதிகமாக இருத்தல் கூடாது. இந்திய சூழ்நிலைக்கு எளிமையான முறையில் குறைந்த செலவுடன் அமைக்கப்படும் க்யொன்செட் வகை, பல அடுக்கு பசுமைக்கூடமே சிறந்து விளங்குகிறது. அதற்கு, 200 மைக்ரான் அளவுள்ள அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் போர்வைகளே போதுமானதாக இருக்கும்.

பசுமைக்கூடங்களுக்கான இடைவெளி 

பசுமைக்குடில்களுக்கு இடையே 10 முதல் 15 மீ இடைவெளி இருக்கவேண்டும். அதன் மூலம் ஒரு பசுமைக்கூடத்திலிருந்து வெளியில் தள்ளப்படும் வெப்ப காற்று அடுத்த குடிலுக்குள் புகாதவாறு தடுக்கப்படுகிறது. பயிர் மற்றும் பயிர் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கும் திறந்த வெளியில் சாத்தியமில்லாத தரமான உற்பத்திக்கு பசுமைக்கூடம் உதவுகிறது. திறந்த வெளியில் செய்யப்படும் பயிர் சாகுபடியை விட இப்பசுமைக்கூடங்களில் செய்யப்படும் முறைக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், இதனால் கிடைக்கப்பெறும் லாபமும் அதிகமாக இருக்கவேண்டும். அதனால், செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு பசுமைக்குடிலின் கட்டமைப்பு, மேல் போர்வை மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியன சரியான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாகக் கோடைக்காலத்தில் வீசும் காற்றின் திசையிலிருந்து பசுமைக்குடிலின் அதிகபட்ச நீளம் செங்குத்தாக அமைந்திருக்கவேண்டும்.

இந்தியாவில் சமவெளி மற்றும் கடற்கரை பகுதிகளிலுள்ள பசுமைக்குடில்களுக்கு குளிர்ச்சி மிகவும் தேவை. மென்மையான காலநிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள பசுமைக்குடில்கள் இயற்கை முறையில் காற்றோட்ட வசதி பெற்றுள்ளன. வெப்பத்துடன் கூடிய கோடை காலநிலையைக் கொண்ட வடமாநிலங்களின் சமவெளியிலுள்ள பசுமைக்குடில்களை நீராவியாக்குதல் மூலமாகவோ அல்லது விசிறி மற்றும் திண்டு முறையிலோ குளிர்விக்க வேண்டும். வடமாநிலங்களில் உள்ள பசுமைக்கூடங்களுக்கு குளிரூட்டுதல் மற்றும் வெப்பமூட்டுதல் ஆகிய இரண்டுமே பயிரைப் பொறுத்து தேவைப்படுகிறது.

நோய்த்தொற்று தடுப்பு

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் என்ற நிலையில் பயிர் வளர்ப்பு அறை, கொள்கலன்கள், கத்திகள், பணித்தளம், நாற்காலிகள் போன்ற அனைத்தையும் ஒரு பகுதி ஃபார்மலினை ஐந்து பகுதி தண்ணீரில் கலந்து அல்லது ஒரு பகுதி சோடியம் ஹைப்போக்ளோரைட்டை 9 பகுதி தண்ணீரில் கலந்து உபயோகித்து நோய்த்தொற்றினை நீக்கலாம். டைக்ளோர்வாஸ் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை அழிக்கலாம். விதை மற்றும் நடவுப் பொருட்களை பசுமைக்குடிலுக்குள் எடுத்துச் செல்லும் முன் பரிந்துரைக்கப்பட்ட இரசாயனத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்தும், பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யவேண்டும். குறிப்பாக, கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் ட்ரைசோடியம் பாஸ்பேட் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் போன்ற தொற்று நீக்கும் கரைசலை வைப்பதன் மூலம் பசுமைக்குடிலின் உள்ளே நுழைபவர்களினால் ஏற்படும் நோய்தொற்று தடுக்கப்படலாம்.

நீர்ப்பாசன முறை  

பசுமைக்குடிலின் பயிர்களுக்கு சிறுவகை பாசன முறையே சிறந்ததாகும். தெளிப்பு நீர் அல்லது சொட்டு நீர்ப்பாசன முறைகளை இதில் பின்பற்றலாம். பொதுவாக, நீர்ப்பாசன முறையில், நீரானது இலைகளின் மேலும், பூக்களின் மேலும் விழாமல் பார்த்துக் கொள்வதால், நோய் மற்றும் இலை கருகும் பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. தெளிப்பு நீர்ப்பாசன முறையில், தொட்டியில் தனித்தனியாக உரங்கள் கரைக்கப்பட்டு பின்பு தேவையான விகிதத்தில் கலந்து செடிகளுக்கு சொட்டு குழாய்களின் வழியாக அளிக்கப்படுகின்றது.

கிடைக்கும் நன்மைகள்

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் முறையில் அமைக்கப்படும் உள்கட்டமைப்பு முறைகளால் பயிரில் சரியான ஈரப்பதத்துடன் ஒளிச்சேர்க்கை நடைபெற்று, வயல் வெளியில் 5 ஏக்கரில் எடுக்கும் மகசூலை இந்த முறையில் ஒரே ஏக்கரில் எடுக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும்,

  • கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்கள் வளர்வதால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் இருக்காது.
  • ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். பருவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவசியம் இல்லை. பூச்சிகள் மற்றும் நோய்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • தரமான காய்கறி, பழம், கீரை வகைகளை சாகுபடி செய்யலாம். மகசூல் 5 மடங்கு அதிகரிக்கும். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
  • குறைந்த காலத்தில் பயிர்கள் செழித்து வளரும். சொட்டு நீர்ப் பாசன முறை காரணமாக நீர்த்தேவை குறையும்.
  • செயற்கை உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் அதிக விளைச்சல் பெறலாம்.

கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பயிர்கள்

பப்பாளி, தர்பூசணி, வெள்ளரிக்காய், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகு, கேரட், இஞ்சி, மஞ்சள், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய், தக்காளி, பாகற்காய் உள்ளிட்ட பலவகையான காய்கறிகளையும், பூ வகைகளில் மல்லிகை, ரோஸ், ஆர்க்கிட் ஆகியவற்றையும், கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரைகளையும், மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், கருஊமத்தை, பல்வலிப்பூண்டு, பார்வதி தழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை ஆகிய வகைகளையும் வளர்க்கலாம். 

குடியிருப்புகளின் மாடியிலோ அல்லது தரையிலோ வெயில் படும்படியான இடவசதி இருந்தால் சிறிய அளவில் குடும்பத்துக்கேற்ற கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் செய்யலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்திற்கான காய்கறி வகைகள், பழங்கள் மற்றும் கீரை ஆகிய தேவைகளை அது பூர்த்தி செய்வதுடன், ஆண்டு முழுவதும் விளைச்சலை மேற்கொள்ள முடியும். கிரீன் ஹவுஸ் ஃபார்மிங் பிசினஸ் திட்டத்தின் பயனை அனைத்து விவசாயிகளும் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவற்றின் கொள்கைகளுக்கேற்ப 50 சதவிகிதம் வரையில் மானியம் வழங்குகின்றன. 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.