written by | October 11, 2021

தேநீர் கடை வியாபாரம்

×

Table of Content


ഇന്ത്യയിൽ ഒരു ടീ സ്റ്റാൾ ബിസിനസ്സ് എങ്ങനെ ആരംഭിക്കാം

டீ ஸ்டால் பிசினஸ் என்றதும் சாதாரண ஓடு அல்லது கீற்று வேயப்பட்ட  சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தொழில் என்ற கருத்தே பலருக்கும் ஏற்படும். ஆனால், அந்த தொழிலின் பின்னால் கடும் உழைப்பு மறைந்திருப்பதை ஒரு சிலரே கவனித்திருப்பார்கள். அதிகாலையில் தொடங்கப்படும் அந்த தொழில்  முடிவடைய இரவு 9 அல்லது 10 மணி ஆகலாம். அதிகப்படியான தனிமனித உழைப்பினை அளித்து வாழ்க்கையில் முன்னேறிய பல மனிதர்களில் டீக்கடைக்காரர்களும் இருப்பார்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்த காலகட்டத்தில் எந்த ஒரு தொழில் முயற்சியும் அதனால் கிடைக்கக்கூடிய லாபத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு டீ ஸ்டால் பிசினஸ் தொடங்கி நடத்துவதில், கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் இருந்த  மக்களின் பொதுவான மனோபாவம் தற்போது பெரிதும் மாறி இருக்கிறது. காரணம்,  எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவமாக உழைத்து வாழ்க்கையில்  முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய சமூக அங்கீகாரம் ஒரு காரணமாகும். 

பேமிலி பிசினஸ்

இந்திய அளவில் டீ ஸ்டால் பிசினஸ் என்பது சுமார் ரூ.33,000 கோடி மதிப்பில் நடந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சிறிய அளவில் தொழில் நடத்தும் தனி மனிதர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களே என்பது கவனிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவை எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் மூன்று, நான்கு  டீக்கடைகளாவது இருக்கலாம். அன்றாட வாழ்வில் கிட்டத்தட்ட அனைவருமே குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு முறை டீ அல்லது காப்பி அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நுகர்வோர் உளவியல் மூலம் தொழில் ரீதியாக எவ்வாறு லாபம் பெற முடியும் என்பதை ஒரு சாதாரண டீ ஸ்டால் பிசினஸ் நடக்கும் இடத்தில் மிக எளிதாக கண்டுணரலாம். அதாவது, மொத்த ஜனத்தொகையில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது என்ற நிலையில், அதை ஒரு சாதாரணமான தொழிலாக நடத்தாமல் ஒரு பிராண்ட் வேல்யூ இருப்பது போல கவனமாக செய்தால் நிச்சயம் வளர்ச்சி அடைய முடியும். இதை நடைமுறையில் பலரும் நிரூபணம் செய்து காட்டியுள்ளனர். 

கைகொடுக்கும் தொழில்

உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்ப பெண்களின்  வாழ்வாதாரத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி புரியும் வகையில் கைகொடுக்கும் தொழில் முனைவு என்பது டீ ஸ்டால் பிஸினஸ் என்றால் அது மிகையில்லை. இன்றைய நவீன வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நாகரிக அணுகுமுறையுடன், கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு வழிகாட்டும் இந்த தொழிலை தொடங்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்திகளை இங்கே பார்க்கலாம். இந்த தகவல்கள் அனைத்தும் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் இந்த தொழிலை நடத்தி முன்னேற்றம் அடைந்தவர்களின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டதாகும்.

  • முதலில் தொழில் ஆரம்பிக்க  இருக்கும் பகுதி அல்லது ஏரியாவில் தொழில் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது, அருகருகே அல்லது நேர் எதிராக இரண்டு கடைகள் இருப்பது போல இந்தத் தொழிலில் ஈடுபடக்கூடாது.  அதனால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகலாம். எப்போதுமே, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளான மார்க்கெட், மருத்துவமனைகள், கடைவீதி, பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிச்சயம் டீ ஸ்டால் பிசினஸ் செய்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும்.தொழிலில் புதிதாக இறங்குபவர்கள், நன்றாக செயல்பட்டு வரக்கூடிய ஒரு டீக்கடையில் தொடர்ந்து ஒரு வார காலமாவது டீ  அருந்துவது மட்டுமல்லாமல், அங்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் விருப்பம், அந்த கடையின் நிர்வாக நடைமுறைகள், டீயின் சுவை, அது பற்றி வாடிக்கையாளர் கருத்து, டீ தவிர விற்கப்படும் இதர சிற்றுண்டி வகைகள் ஆகியவை பற்றி தெளிவாக ஆய்வு செய்து தீர்மானமான ஒரு முடிவை மேற்கொள்வது அவசியம்.
  • சொந்தக் கடை அல்லது வாடகை கடை எதுவாக இருந்தாலும் சுமார் 600 சதுர அடி இடம் நிச்சயம் தேவைப்படும். வர்த்தக ரீதியான நடவடிக்கை என்பதால் முறையான உரிமம் மற்றும் இதர அரசாங்க அனுமதிகளையும் பெற்று தொழிலை தொடங்குவது பாதுகாப்பானது. தனிப்பட்ட உரிமையாளர் அல்லது கூட்டாளிகள் மூலம்  செயல்படுவதாக இருந்தால் அதற்கேற்ப தொழில் உரிமம் பெற வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி  பதிவு எண், முனிசிபாலிட்டி அல்லது நகராட்சியிலிருந்து டிரேடு லைசன்ஸ், தொழில் நிறுவன பதிவு ஆகிய அனுமதிகளை பெற்றிருப்பது நல்லது. கூடுதலாக இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) மூலமாக சான்று பெற்று இருந்தால், வெவ்வேறு பகுதிகளுக்கு தொழில் விரிவாக்கம் செய்ய வசதியாக இருக்கும்.
  • டீ ஸ்டால் பிசினஸில் தொழில் ரீதியான லாபத்தை கணக்கிட ஒரு கப் டீயின்  உள்ளடக்கம், பொருள்கள் மற்றும் பணமதிப்பு ஆகியவற்றை மதிப்பிட வேண்டும். அதாவது சுமார் 40 மில்லி அளவு கொண்ட ஒரு டீயில் சுமாராக பால் மற்றும் தண்ணீர் ஆகியற்றுடன்  டீத்தூள், சர்க்கரை, சாயா மசாலா  உள்ளிட்ட பொருட்கள் கலந்திருக்கும். தோராயமாக, இன்றைய சந்தை நிலவரத்தில் அந்த பொருட்களின் மதிப்பை கணக்கிடும்பொழுது மொத்தமாக ஒரு கப் டீயின் உள்ளடக்க செலவு ரூ.5 ஆகலாம். அதற்குமேல் இதர செலவுகளையும் கணக்கிட்டு ஒரு கப் டீ  விலையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த நிலையில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ விற்பனை செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டையும் முடிவு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டியதுதான்.
  • பொதுவாக, கிரீன் டீ, லெமென் டீ, ஏலக்காய் டீ, மசாலா டீ, ஸ்பெஷல் டீ, இஞ்சி டீ, தம் டீ போன்ற வெவ்வேறு சுவை கொண்ட டீ வகைகள் மற்றும் இதர காபி வகைகள் இந்திய மக்களால் விரும்பி அருந்தப்படுகின்றன.இந்த வகைகளை சுவையாக மக்களுக்கு அளிக்கும்  கடைக்காரர்களே தொழிலில் நீடித்து நிற்கிறார்கள். டீ பிசினஸ் மட்டுமல்லாமல், உருளைக் கிழங்கு போண்டா, சாதாரண போண்டா, கஜுரா, வாழைக்காய்  பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, மெதுவடை, மசால் வடை, சமோசா, பிஸ்கட் வகைகள், கேக், பன் போன்றவற்றையும் படிப்படியாக தொழிலில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.  
  • இந்திய அளவில் கிட்டத்தட்ட 80 சதவிகித குடும்பங்களில் அன்றாடம் இரண்டு முறையாவது டீ அருந்தும் பழக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வீட்டில் டீ அருந்தினாலும் கூட கடைகளில் கிடைக்கும் டீயை பலரும்  விரும்புகிறார்கள். காரணம், ஒரு டீ ஸ்டாலில் கிடைக்கக்கூடிய பல வகைகளில், அவரது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப சுவையான டீயை பருக முடியும். புத்துணர்ச்சியும், சுவையும் உள்ள டீ பருகிய வாடிக்கையாளர் மீண்டும் மீண்டும் சம்பந்தப்பட்ட கடைக்கு வருவார் என்பது உறுதி.  

புதுமையான தந்தூரி டீ

அசைவ சாப்பாட்டு விஷயத்தில் தந்தூரி என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு டீ வகைக்கு தந்தூரி என்ற பெயர் இருக்கிறது. டீ அருந்தும்  அனைவருக்கும் பிடித்தமான சுவையைக் கொண்ட தந்தூரி டீ அதாவது தந்தூரி சாயா தயாரிப்பு பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம். தந்தூரி டீ தயாரிக்க, பால், டீ தூள், சர்க்கரை, இஞ்சி, ஏலக்காய் பொடி ஆகிய வழக்கமான பொருட்களைத் தவிர சிறிய  களிமண் கலயம் ஒன்றும் தேவைப்படும். இங்கு இரண்டு கப் அளவுள்ள டீ தயாரிப்புக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவை அடிப்படையாக கொண்டு தேவைக்கேற்ப கூடுதலாகவும் தயார் செய்து கொள்ளலாம்.  

முதலாவதாக, இரண்டு கப் பால் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர், மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். இறுதியாக, ஏலக்காய் பொடி மற்றும் இடிக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கொதிக்க விட்டு, அடுப்பை மிதமாக எரியவிட வேண்டும். பின்னர், களிமண் கலயத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்தி, தயாரான டீயை வடிகட்டி, சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். பானையில் ஊற்றும் போது டீ நன்றாக நுரைத்து பொங்கி, வழிந்து கீழே வரும். அதை கீழே ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து சேகரித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் தந்தூரி டீ தயார் ஆகி விட்டது. இந்த டீயின் சுவை என்பது வித்தியாசமாக இருக்கும் என்பதால் அருந்தும் வாடிக்கையாளர்கள் அதன் ரசிகர்களாக மாறிவிடுகிறார்கள் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். 

தொழில் ரகசியம்

டீ ஸ்டால் பிசினஸில் குறிப்பிட்ட கடை அல்லது நிறுவனத்தின் தரத்திற்காக மக்கள் ஏன் அங்கே போகிறார்கள் என்ற தொழில் ரகசியம் இப்போது வெளிப்பட்டு விட்டது. அதாவது, தேயிலை தோட்டத்திலிருந்து நேரடியாக பெற்ற டீத்தூளில் தயார் செய்த டீயின் சுவைக்கும், தேயிலை அறுவடை செய்து டீத்தூளாக பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, பல மாதங்கள் கழித்து நம்மிடம் வந்து சேரும் டீத்தூள் மூலம் தயாரிக்கப்படும் டீயின் சுவைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதாவது, உற்பத்தி செய்யப்பட்ட 24 அல்லது 72 மணி நேரத்திற்குள் தேயிலை தோட்டத்திலிருந்து நேரடியாக டீத்தூள் வாங்குவதன் மூலம் தரம் மற்றும் சுவை கொண்ட டீயை தயார் செய்ய இயலும்.

மாலை நேர வியாபாரம்

தேநீர் விற்பனை என்பது ஒரு நாளில் இரண்டு கட்ட வியாபார வாய்ப்புகளை கொண்டதாக இருக்கிறது. அதாவது, காலை நேரங்களில் டீ மற்றும் பிஸ்கட் வகைகள் மட்டுமே பெரும்பாலும் விற்பனை ஆகும். ஆனால், மாலை நேரங்களில் டீ மற்றும் இதர நொறுக்கு தீனிகளான  போண்டா, பஜ்ஜி, வடை, சுண்டல், அவித்த வேர்க்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப அந்த ஐட்டங்களை தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யலாம். 

தொழில் விரிவாக்கம் 

அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தினசரி டீ அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மெஷின் டீயை விட, சுடச்சுட தயாரிக்கப்பட்ட மணமான, சுவையான தேநீரை பணிபுரியும் இடத்துக்கே கொண்டு கொடுத்தால் வரவேற்பு அதிகம் இருக்கும் என்பதால் அதற்கேற்ப பணியாளர்களை நியமித்தும் கூட தொழிலை விரிவுபடுத்தலாம். அருகிலுள்ள முக்கியமான கார்ப்பரேட்  நிறுவனங்களை அணுகி டீ சப்ளை செய்வதற்கான ஆர்டர்களை பெறலாம்.

மேலும், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிகப் பூங்கா வளாகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் தேநீர் டிஸ்பென்சர்கள் மற்றும் அதிக வெப்பம் தாங்கும் பிளாஸ்க்குகளைப் பயன்படுத்தி  அங்குள்ள பணியாளர்களுக்கு சூடான டீயை  காலை, மாலை இரண்டு நேரங்களிலும் கிடைக்கும்படி செய்யலாம். குறிப்பாக,  பெரிய நிறுவனங்களில் நடைபெறக்கூடிய பார்ட்டிகளில்  டிஸ்பென்சர் எந்திரம் மூலம்  சுவையான டீ சப்ளை செய்யலாம். அதற்கேற்ப டீ ஸ்டால் தொழில் முனைவோரை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்வதற்கான வசதிகளையும் செய்துகொள்வது அவசியம். 

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.