உணவகங்கள் மற்றும் டிபன் சர்வீஸ் சென்டர்களை தொடங்கி வழி நடத்த தேவையான நெறிமுறைகள்
டிபன், கேட்டரிங் சேவைகளை வழங்குகின்ற வணிகம் மிகவும் இலாபகரமானதாக இருப்பதால் வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. சமையல் கலையில் உள்ள ஆர்வமும், ஈர்ப்பும், மற்றும் அனுபவமம் மட்டுமே இந்த டிபன் சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்தது வெற்றிகரமாக இயக்க உதவும். முறையான திட்டமிட்டு அதை ஒழுங்கு முறையில் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான மாற்றங்களை தேவைப்படும்போது செய்து கஷ்டமான சூழ்நிலையில் வளைந்து கொடுத்து நடத்தினால் மட்டுமே இத்தகைய வணிகத்துறையில் நீங்கள் நல்ல பெயர் எடுக்க முடியும். வாடிக்கையாளர் மூலமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும் கூட அதை வாடிக்கையாளர்களிடம் காட்டாமல் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வைக்க வேண்டும். மற்ற வணிக துறைகளைப் போல் இந்த டிபன் சர்வீஸ் செய்யும் தொழிலிலும் லாப நோக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
உணவகங்கள் ஆரம்பிக்கும்போது பார்க்க வேண்டிய அம்சங்கள்
1) இதை ஆரம்பிக்க உங்களுக்கு தேவையான பொருட்கள் என்ன:
- சமையல் பாத்திரங்கள்
- தடையற்ற சமையல் எரிவாயு இணைப்பு
- உணவக மேசை மற்றும் நாற்காலிகள்
- உணவு பரிமாற தேவைப்படும் பாத்திரங்கள்
- பார்சல் செய்ய தேவைப்படும் பாத்திரங்கள்
2) எந்த வகையான உணவு வழங்க இருக்கிறீர்கள் பற்றிய தேர்வு வேண்டும்:
இரவு நேர உணவு கூடம், காலை சிற்றுண்டி உணவகம், மதிய சாப்பாடு வழங்கும் உணவகம், பிறந்தநாள் போன்ற வீட்டில் நடைபெறக்கூடிய விழாக்களுக்கு சமைத்துத் தரும் சேவை, முழு நேர உணவகம் இவ்வாறான பல வகையான வாய்ப்பு இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அதை நீங்கள் சிறப்பாக செய்யலாம்.
3) உங்க டிபன் சர்வீஸை பதிவு செய்ய வேண்டும்:
இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்களது தொழிலை பதிவு செய்து அதற்கான தொழில் உரிமத்தை அவர்களிடமிருந்து பெற வேண்டும். இத்தகைய உணவக உரிமை பெறுவதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களை தவிர்க்கலாம்.
4) கேட்டரிங் உரிமத்தை பெற வேண்டும்:
உள்ளூர் சுகாதார துறையிலிருந்து இந்த கேட்டரிங் உரிமத்தை பெறலாம். மாநில உணவு பராமரிப்பு சட்டங்களுக்கு ஏற்றவாறு உங்களது செயல்பாடு இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் அலுவலகங்கள் மற்றும் வளாகங்களின் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் மட்டுமே உங்களுக்கு இந்த உரிமம் வழங்கப்படும்.
5) உங்கள் உணவகத்திற்கு காப்பீடு பெறுவது நல்லது:
உங்களிடம் வேலை செய்யும் வேலை ஆட்களுக்கும் உங்களது உணவாக உபகரணங்களும் சரியானதொரு காப்பீட்டு திட்ட முறையில் பதிவு செய்து கொள்வது நல்லதாகும். அசாதாரண சூழ்நிலை ஏற்படும் இடர்பாடுகளுக்கு இந்த காப்பீட்டு திட்டம் உதவி செய்த உங்களது உணவகத்தை சீரான சேவை புரிவதற்கு வழி வகுக்கும். வணிக காப்பீட்டு முகவர்கள் அதிகமான அளவில் உள்ளனர் சிறந்ததொரு வணிக காப்பீட்டை பெறுவது இழப்பீடாக பெரும் தொகையில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருக்க உதவும்.
6) தேவையான உபகரணங்களை பெற வேண்டும்:
நீங்க இத்தொழிலை புதியதாக எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் செய்வீர்களானால் அனைத்து பொருட்களையும் சொந்தமாக வாங்காமல் வாடகைக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை பார்த்து வாங்கி கொள்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய முதலீட்டு தொகையை குறைக்க முடியும். நீங்கள் இந்த தொழிலில் ஏற்படக்கூடிய வளர்ச்சியை பொருத்து அனைத்து விதமான உபகரணங்களையும் பிற்காலத்தில் சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். முழு முதலீட்டுத் தொகை யையும் இத்தகைய உபகரணங்களுக்கான செலவிடாமல் மற்ற காரியங்களான விளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு உபயோகிக்கலாம்.
7) சிறந்ததொரு உணவு மெனு தயார்செய்ய வேண்டும்:
மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு காலை உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவகங்களில் அத்தகைய கால சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு உணவு தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாறு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உணவு நீங்கள் தயார் செய்யும் போது அவர்களுக்கு ஏற்ற உணவை அவர்கள் விரும்பி வாங்கி மகிழ்வார்கள். மினி உணவு, துரித உணவு, குளிரூட்டப்பட்ட உணர்வு, உணவு இழைமங்கள், போன்ற வண்ணமயமான உணவுகள் சமைத்து வழங்க வேண்டும். இவ்வாறு பலவிதமான உணவுகளை சமைத்து தருவதோடு மட்டுமல்லாமல் அது மார்க்கெட்டில் எந்த விலைக்கு விற்கப்படுகிறது என்பதை பற்றிய புரிதலும் இருக்க வேண்டும். ஏனென்றால் நமது முக்கிய இலக்கு இத்தகைய உணவு வணிகத்தின் மூலம் பொருளீட்டுவது ஆகும். ஒவ்வொரு உணவும் சமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களின் விலையை கொண்டு அதற்கேற்றவாறு உணவின் விலையை நிர்ணயித்து லாபத்தை பெற வேண்டும்.
உணவு வணிகம் பிரபலமடைந்தற்கான முக்கிய காரணம்:
உணவு தேவை என்பது பெரு நகரங்கள் சிறு நகரங்கள் கிராமங்கள் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கும் தேவைப்படுகிறது. முக்கியமாக பெருநகரங்களில் வாழும் மக்கள் அலுவலக பணிச்சுமை காரணமாக இயந்திரம் போன்றதொரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காலை சிற்றுண்டியை பெரும்பாலான தங்களது அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்திலும் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரம் மிக விரைவாக ஆரம்பிப்பதால் அவசரமாக அவசரமாக கிளம்பி சென்று காலை சிற்றுண்டியை தவிர்த்து விடுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு நகரங்களில் ஆங்காங்கே அமைக்கப்படும் சிற்றுண்டி உணவகம் மூலமாக தான் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. நீங்களும் ஒரு தொழில் முனைவோராக இருந்தால் உங்களுக்கும் இதைப் போன்றதொரு சிற்றுண்டி உணவகம் திறக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருந்தால் அதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.
பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த கிராமத்தை விட்டுவிட்டு பணியின் நிமித்தமாக இங்கு வந்து குடியேறியவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் நகரத்துக்குள் அடிக்கடி இடம் பெறவேண்டும் என்பதால் வீட்டு சமையலை செய்து சாப்பிட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இவ்வாறாக அவர்களை உணவு சரியாக உட்கொள்ளாமல் இருப்பதாலும் ஆங்காங்கே கிடைக்கும் ஜங்க் புட் எனப்படும் உணவை அடிக்கடி உண்ணுவதாலும் அவர்களின் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய உணவு பழக்கவழக்கங்கள் பிற்காலங்களில் அவர்களுக்கு பாதகமான நோய்களின் மூல காரணியாக விளங்குகின்றது. அதே சமயத்தில் அவர்களின் இயந்திர வாழ்க்கை அலுவலகப் பணிச்சுமையை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது தினசரி வீட்டில் சமைத்த உணவு கொள்வதும் சாத்தியமில்லை. இதேபோன்றதொரு சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் நன்கு தரமுள்ள வீட்டு சமையல் முறையில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி உணவை நாடுகின்றனர். அத்தகைய சிற்றுண்டி உணவகத்தை திறக்க விரும்புவோருக்கு இந்த கட்டுரை சிறந்த வழிகாட்டியாக அமையும்.
வீட்டு சமையல் முறையில் உள்ள உணவுக்காக ஏங்கும் தனிமையில் இருப்பவர்களுக்கும் அன்றாட அலுவலக வேலைக்காக ஊர் ஊராகச் சுற்றும் நடுத்தரவயது இருப்பவர்களுக்கும் சுவையான உணவை சுவைக்க தயாராக இருக்கும் பள்ளி வயது குழந்தைகளுக்கும் இந்த வகை உணவு வணிகம் பெரும் ஆறுதலை தருகின்றது. மேலும் இத்தகைய டிபன் சர்வீஸ் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தகுந்தார்போல் உணவு வகையில் மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்கும் வாய்ப்புகளை கொண்டுள்ளது. அனைத்து வயதில் உள்ள மக்களுக்கும் அனைத்து இடங்களில் உள்ள மக்களுக்கும் இத்தகைய உணவு எளிதில் சென்றடையும் வகையில் அமைந்திருப்பதால் ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுள்ளது. சரியான நேரத்தில் மதிய உணவு தயார் செய்து வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட கொண்டு சென்று ஒப்படைப்பதற்கு முக்கிய பொறுப்பு உள்ள நபர்களாக தேவைப்படுகிறார்கள். இவ்வாறு செல்பவர்களுக்கு எந்தப் போக்குவரத்து முறையை பின்பற்றி எந்த வழியாக சென்றால் சரியான இடத்தை சரியான நேரத்தில் அடையலாம் என்பதை பற்றிய அறிவு அதிகமாகவே இருக்கும்.
அலுவலகத்தில் வழங்கப்படும் உணவை தவிர்த்து டிபன் சர்வீசை நாட காரணம் என்னவென்றால்:
- கேன்டீனில் இலவசமாக வழங்கப்படும் உணவு அவ்வளவு தரமாக இருக்கும் என்று கூற முடியாது.
- சில சமயங்களில் பழைய உணவுகளை பரிமாறி லாபங்களை சம்பாதிக்கின்றனர்
ஆனால் டிபன் சர்வீஸ் மூலமாக வழங்கப்படும் உணவு புத்தம் புதிதாக தயார் செய்யப்பட்டு சிறந்த முறையில் பேக் செய்யப்பட்டு வழங்கப் படுவதால் மக்களின் பிரதான விருப்பத்தை பெறுகிறது. இத்தகைய உணவு சுவையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மிகுந்த ஆரோக்கியமான உணவாகவும் நமது விருப்பத்திற்கு ஏற்ப உணவாகவும் இருக்கிறது.
உணவக தொழிலை மேம்படுத்தி நடத்தி செல்ல தேவையான வழிமுறைகள்
1) வாடிக்கையாளரிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்:
எந்த ஒரு உணவாக இருந்தாலும் உங்களது உணவை வாடிக்கையாளர்கள் மீது திணித்து வெற்றி பெற முடியாது. வாடிக்கையாளர்களே நமது தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ற கடவுளாக விளங்குவதால் வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும் கருத்தையும் கேட்டு அறிந்து அவர்களுக்கு தேவையான உணவை தயார் செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உணவில் மாற்றங்களை செய்தே வழங்குவதால் உங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். இத்தகைய கருத்து கணிப்பு கேட்கும் முறையே இரு வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ செய்து உணவு தயாரிப்பு முறையில் புதுபுது மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
2) உடல்நலம் சார்ந்த உணவுகளை சேர்க்க வேண்டும்:
உங்களது உணவக வாடிக்கையாளரின் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆதலால் அவர்களுக்கு தகுந்த ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கு ஏற்ற உணவு மெனுவை தயார் செய்து அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆரோக்கிய உணவு உண்பது குறித்து விழிப்புணர்வை உங்களது வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
3) சிறந்த பார்சல் மற்றும் டெலிவரி சேவை வேண்டும்:
அனைத்து வாடிக்கையாளர்களும் உங்களை உணவகத்திற்கு நேரில் வந்து சாப்பிட்டுச் செல்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. சில வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து கொடுக்கும் உணவகத்தை விரும்புவார்கள். ஆகவே நீங்களும் சிறந்ததொரு உணவு டெலிவரி சேவையை உங்களது வாடிக்கையாளருக்கு கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்ய டெலிவரி செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள் மிகவும் அழகானதாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
4) வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுக்க உதவுங்கள்
ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு விதமான உணவு பாரம்பரிய முறையை விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்றார் போல் அனைத்து விதமான உணவு வகைகளையும் அவர்களுக்கு அளித்தாள் உங்களது வணிகம் மிகவும் சிறந்து விளங்கும். இவ்வாறு வாடிக்கையாளரின் குறிப்பறிந்து உணவு வழங்கும் போது வாடிக்கையாளருக்கும் உங்களது உணவு நிறுவனத்திற்கும் சிறந்த இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஒரே மாதிரியான உணவும் எனவே எல்லா நேரத்திலும் பின்பற்றக்கூடாது. வாடிக்கையாளர்கள் எந்த அளவு ஆரோக்கியமான உணவு எதிர்பார்க்கிறார்களோ அதே அளவு புதுவிதமான சுவையான உணவை சுவைத்து பார்க்க விரும்புவார்கள். ஆகவே அவர்களுக்கு ஏற்ற பொருள் அனைத்து விதமான சுவையான தரமான புதுவிதமான உணவை தயாரித்து வழங்குவதன் மூலம் நீண்ட நெடு நாட்களுக்கு நீங்கள் இந்த உணவக சேவையில் நிலைத்து இருக்க முடியும். மனிதர்கள் இருக்கும் வரை அவர்களின் அத்தியாவசியத் தேவையாக உணவு இருக்கும் வரை இத்தகைய தொழில் முறையில் வளர்ச்சி அடைவது மிகவும் சாத்தியமான ஒன்றாகும்.