written by | October 11, 2021

ஜிஎஸ்டிஆர் 9 ஐ எவ்வாறு தாக்கல் செய்வது

×

Table of Content


ஜி.எஸ்.டி.ஆர் 9 வரி செலுத்தும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள்

நாட்டின் மறைமுக வரி விதிப்பு முறையில் மாற்றத்தை கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி-யில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கானது. மற்றது, மாநில அரசுக்கானது. உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தி வரிகள், உபரி வரிகள், சேவை வரி, ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை, சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி ஆகியவை மத்திய அரசின் சி.ஜி.எஸ்.டி-யில் அடங்கிவிட்டன. அதேபோல, வாட், கொள்முதல் வரி, நுழைவு வரி, சொகுசு வரி, கேளிக்கை வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி மீதான வரி, மாநில உபரி வரிகள் மாநில அரசின் எஸ்.ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்துவிட்டன. ஜி.எஸ்.டி. தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் அதிகாரம் படைத்தது என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 279 ஏ பிரிவு வரையறுத்துள்ளது. அதன்படி ஹவ் டு ஃபைல் ஜி எஸ்.டி.ஆர் 9 என்ற அடிப்படையில் வரி செலுத்தும் படிவத்தை தாக்கல்  செய்யும் வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். 

ஜி எஸ்.டி.ஆர் 9  வரி என்பது என்ன..? 

பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் ஆண்டிற்கு ஒருமுறை இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில் சி.ஜி.எஸ்.டி.எஸ்.ஜி.எஸ்.டி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி ஆகிய பல்வேறு வரி விதிப்புகளின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் பெறப்பட்ட வருமானம் மற்றும் அதற்கான தணிக்கை அறிக்கை ஆகியவற்றுடன் இந்த வரிக்கான தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு ஆண்டுக்கு ரூ2 கோடி என்ற அளவிற்கு மேல் வருமானம் பெறக்கூடிய வரி செலுத்துவோர் ஜி எஸ் டி ஆர் 9 சி என்ற தணிக்கை செய்யப்பட்ட வரி செலுத்தும் படிவத்தை ரீகான்சிலேஷன் ஸ்டேட்மெண்ட் என்ற சமரச அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜி எஸ்.டி.ஆர் 9  வரி விதிப்பின் வகைகள்

இந்த வரி விதிப்பு 4 வகைகளாக உள்ளது. முதலாவது வகை என்பது ஜி எஸ்.டி.ஆர் 9  வரி  ஆகும். இந்த பிரிவில், வழக்கமாக வரி செலுத்துபவர்கள் மற்றும் ஜி எஸ் டி ஆர் 1 மற்றும் ஜி எஸ் டி ஆர் 3 பி ஆகிய  அறிக்கைகளை தாக்கல் செய்த வரி செலுத்துவோர் ஆகியோர் வரிக்கான அறிக்கையை  அளிக்க வேண்டும். இதில் உள்ள இரண்டாவது வகை என்பது ஜி எஸ் டி ஆர் 9 ஏ என்பதாகும். இந்த பிரிவின் கீழ் காம்போசிஷன் ஸ்கீம் என்ற வகையில் வரி செலுத்தப்படும். மூன்றாவது வகை என்பது ஜி எஸ் டி ஆர் பி என்பதாகும். இந்த பிரிவின் கீழ் இ- காமர்ஸ் தொழில் பிரிவு சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் ஜி எஸ் டி ஆர் 8  படிவத்துடன் ஆண்டு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிரிவில் நான்காவது வகை என்பது ஜி எஸ் டி ஆர் 9 சி அடிப்படையில் ஆண்டு வருமானம் ரூ 2 கோடிக்கு மேல் உள்ள வரி செலுத்துவோர்களுக்கானது. ஹவ் டு ஃபைல் ஜி எஸ்.டி.ஆர் 9 என்ற கேள்விக்கான விடையை தொடர்ந்து பார்க்கலாம்.

யார் ஜி எஸ்.டி.ஆர் 9  வரிக்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்..?

  • தங்களுடைய பான் கார்டு அடிப்படையில் 15 இலக்க ஜி எஸ் டி என்  நம்பரை பெற்று பதிவு செய்துகொண்ட அனைத்து வரி செலுத்துவோர்
  •  தொழில் வருமானம் என்பது ஒரு ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேல் கொண்டவர்கள்
  • யூ ஐ என் என்ற  யூனிக் ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் பெற்றவர்கள் மற்றும் நான் ரெசிடென்ட் வகை வரியிலான வரி செலுத்துவோர்
  • வர்த்தக ரீதியாக ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வியாபார நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ரசீதுகள், குறிப்பிட்ட மாநிலத்திற்குள் நடந்த வர்த்தகம் மற்றும் இதர மாநிலங்களுக்கு நடந்த வர்த்தகம், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு செய்யப்பட்ட வர்த்தகம், ஒரு நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட சேவை, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை மாநில அளவில் வர்த்தகம் செய்ததற்கான விவரம் ஆகிய நிலைகளில் ஜி எஸ் டி ஆர் 9 வரி தாக்கல் செய்யப்பட வேண்டும். 

வரி தாக்கல் செய்யும் வழிமுறைகள்

ஹவ் டு ஃபைல் ஜி எஸ்.டி.ஆர் 9 என்ற கேள்விக்கான பதிலை 6 பகுதிகளாக பிரித்து வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதாவது, இந்த ஆறு பகுதிகளுக்குள் பல்வேறு உட்பிரிவுகளும் அமைந்துள்ளன. அவை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பகுதி 1- அடிப்படை விவரங்கள்

பார்ட்-1 என்ற இந்த முதல் பகுதியில்  வரி செலுத்துவோர் தன்னுடைய அடிப்படையான விபரங்கள், வரி செலுத்துவதற்கான நிதியாண்டு, ஜி எஸ் டி ஐ என், வர்த்தக நிறுவன பெயர்  ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

பகுதி 2 – குறிப்பிட்ட நிதியாண்டின் விற்பனை மற்றும் கொள்முதல் ஆகிய விவரங்கள்

இந்த இரண்டாவது பகுதியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவற்றில் பல்வேறு வகையான தொழில் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை குறிப்பிட வேண்டும். இதில் உள்ள பிரிவு 4 அதாவது செக்ஷன் 4 என்பதில் கீழ்க்கண்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • பதிவு செய்யப்படாத தனிநபர்களுக்கு செய்யப்பட்ட வர்த்தகம்
  • பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு செய்யப்பட்ட வர்த்தகம்
  • முன்னதாகவே வரி செலுத்தப்பட்ட பொருட்களுக்கான வர்த்தகம். இதில் ஸ்பெஷல் எக்கனாமிகல் ஜோன் பகுதியில் செய்யப்பட்ட வர்த்தகம் கணக்கில் கொள்ளப்படாது.
  • வரி செலுத்தப்பட்டு ஸ்பெஷல் எக்கனாமிகல் ஜோன் பகுதியில் செய்யப்பட்ட வர்த்தகம்
  • ஏற்றுமதி செய்யப்பட்ட வர்த்தக விபரம்
  • அட்வான்ஸ் வரி செலுத்தப்பட்ட நிலையில் அதற்கான ரசீது வர்த்தக இனங்கள்
  • ரிவர்ஸ் சார்ஜ் வரி விதிப்புக்கு உட்பட்ட கொள்முதலுக்கான சப்ளை
  • மேற்கண்ட இனங்களின் கூட்டுத்தொகை
  • வர்த்தக நடவடிக்கைகளில் அளிக்கப்பட்ட கிரடிட் நோட்
  • அளிக்கப்பட்ட டெபிட் நோட்
  • வரி திருத்தங்களுக்கு ஏற்ப வரி பெறப்பட்ட இனங்கள்
  • திருத்தங்களுக்கு ஏற்ப வரி குறைக்கப்பட்ட வர்த்தக இனங்கள்
  • மேற்கண்ட இனங்களின் கூட்டுத்தொகை
  • மேற்கண்ட இரு இனங்களின் கூட்டுத் தொகைக்கு ஏற்ப உள்ள வரி விகிதம் குறிப்பிடப்பட வேண்டும்.

பகுதி 1 என்பதில் உள்ள பிரிவு 5 என்பதன் கீழ் கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்

  • ஸ்பெஷல் எக்கனாமிகல் ஜோன் பகுதி என்ற சிறப்பு பொருளாதார மண்டல பிரிவிலிருந்து வரி செலுத்தப்படாமல் செய்யப்படும் ஏற்றுமதி இனங்கள்
  • ஸ்பெஷல் எக்கனாமிகல் ஜோன் பகுதியில் வரி செலுத்தாமல் செய்யப்பட்ட இதர வர்த்தக இனங்கள்
  • ரிவர்ஸ் சார்ஜ் டாக்ஸ் செலுத்தி வாடிக்கையாளர் பெற்றுள்ள வர்த்தக இனங்கள்
  • வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வர்த்தகம்
  • ஜி எஸ் டி வரி சம்பந்தப்படாத பொருட்கள் சப்ளை
  • மேற்கண்டவற்றின் கூட்டுத்தொகை
  • மேற்கண்ட இனங்களில் அளிக்கப்பட்ட கிரடிட் நோட் மற்றும் டெபிட் நோட்
  • வரி திருத்தங்களுக்கு ஏற்ப வரி பெறப்பட்ட இனங்கள்
  • திருத்தங்களுக்கு ஏற்ப வரி குறைக்கப்பட்ட வர்த்தக இனங்கள்
  • மேற்கண்ட இனங்களின் கூட்டுத்தொகை
  • மேற்கண்ட இரு இனங்களின் கூட்டுத் தொகைக்கு ஏற்ப உள்ள வரி விகிதம் குறிப்பிடப்பட வேண்டும்.

பகுதி – 3  நடப்பு நிதி ஆண்டுக்கான இன்புட் கிரெடிட் டாக்ஸ் குறித்த விபரங்கள்

இந்த பகுதியில் மேற்குறித்த மூன்று கேள்விகளுக்கான பதிலை தர வேண்டும்.  ஹவ் டு ஃபைல் ஜி எஸ்.டி.ஆர் 9 என்ற விபரங்களின் அடிப்படையில் பகுதி – 3-ல் உள்ள பிரிவு – 6 என்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்தப்பட வேண்டிய இன்புட் கிரெடிட் டாக்ஸ், இன்டக்ரேட்டடு டாக்ஸ் மற்றும் செஸ் இனங்கள் ஆகிய தகவல்களை அளிக்க வேண்டும்.

  • ஜி.எஸ்.டி.ஆர் 3பி -யின் கீழ் மொத்த இன்புட் கிரெடிட் டாக்ஸ் தொகை
  • எஸ்.இ.இசட் ஜோன் சப்ளை, ரிவர்ஸ் சார்ஜ் ஆகியவை தவிர எஸ்.இ.இசட் ஜோன் பகுதியில் அளித்த சேவைகள்
  • ரிவர்ஸ் சார்ஜ் உட்பட்ட இனங்களில் சப்ளை செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத தனி நபர்களுக்கான வர்த்தக விபரம்
  • இறக்குமதி செய்த பொருட்கள், எஸ்.இ.இசட் ஜோன் பகுதியில் செய்யப்பட்ட சப்ளை
  • இறக்குமதி செய்த பொருட்கள், எஸ்.இ.இசட் ஜோன் பகுதி தவிர
  • இன்புட் சர்வீஸ் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் பெற்ற இன்புட் டாக்ஸ்
  • சி.ஜி.எஸ்.டி சட்டப்படி பெறப்பட வேண்டிய இன்புட் கிரெடிட் டாக்ஸ்
  • மேற்கண்டவற்றின் கூட்டுத்தொகை
  • மேற்கண்ட விபரங்களின்படி பெறப்பட வேண்டிய ஐ.டி.சி

பகுதி – 3ல் உள்ள பிரிவு – 7 என்பதில் மத்திய, மாநில அரசு வரிகள், இண்டெக்ரேட்டடு வரி மற்றும் செஸ் ஆகிவற்றுக்கான விபரங்களை அளிக்க வேண்டும். அதாவது,

  • நான் பேமெண்ட் கன்சிடரேஷன் என்பதில் உள்ள ரிவர்ஸ் இன்புட் டாக்ஸ்
  • இன்புட் சர்வீஸ் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் அளிக்கப்பட்ட இன்புட் டாக்ஸ் இனங்கள்
  • இன்புட் சர்வீஸ் மற்றும் ரிவர்சல் ஆகியவற்றின் இன்புட் டாக்ஸ் 
  • கொள்முதல் செய்தவற்றுக்கான மற்றும் ரிவர்சல் ஆகியவற்றின் இன்புட் டாக்ஸ் 
  • ஜி.எஸ்.டி கீழ் வரக்கூடிய பிளாக்டு கிரெடிட் இனங்கள்
  • மேற்கண்டவற்றின் கூட்டுத்தொகை
  • மேற்கண்ட விபரங்களின்படி பெறப்பட வேண்டிய ஒட்டு மொத்த இன்புட் கிரெடிட் டாக்ஸ்

பகுதி – 3-ல் உள்ள பிரிவு – 8 என்பதில் ஜி.எஸ்.டி ஆர் -2ஏ அறிக்கை, குறிப்பிட்ட காலாண்டுக்கான இன்புட் கிரெடிட் டாக்ஸ் உள்ளிட்ட இதர தகவல்களின் அடிப்படைகளை குறிப்பிட வேண்டும்.

பகுதி – 4-ல் நடப்பு நிதியாண்டில் செலுத்தப்பட்ட வரி இனங்கள் பற்றிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

பகுதி – 5-ல் கடந்த நிதியாண்டின் இறுதி அறிக்கையுடன், கேட்கப்பட்ட காலகட்டத்துக்கான விபரங்களை அளிக்க வேண்டும். இதில் உள்ள பிரிவு 10-ல் கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கான சி.ஜி.எஸ்.டி.எஸ்.ஜி.எஸ்.டி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி போன்ற வரி இனங்களை குறிப்பிட வேண்டும்.

ஹவ் டு ஃபைல் ஜி எஸ்.டி.ஆர் 9 என்ற விபரங்களின் கீழ், பகுதி – 6-ல் இதர விபரங்கள் என்ற நிலையில், ஜி.எஸ்.டி.ஆர்-9 படிவத்துடன் தாமத கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். இதில் உள்ள பிரிவு – 15-ல் ரீ-பண்ட் கிளெய்ம், சான்க்‌ஷன் செய்யப்பட்டது, தள்ளுபடி செய்யப்பட்டது, மொத்த வரி விதிப்புகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகை அடிப்படையில் மீதம் இருப்பவை. இதில் பிரிவு – 16ல் காம்போசிஷன் டாக்ஸ் பேயர்ஸ், டீம்டு சப்ளைஸ், அப்ரூவல் அடிப்படையில் அனுப்பிய பொருட்கள் போன்ற விபரங்கலை அளிக்க வேண்டும். மேலும், பிரிவு – 17 மற்றும் 18-ல் 6 டிஜிட் எண்ணிக்கை கொண்ட எச்.எஸ்.என் கோட் அடிப்படையில் செய்யப்பட்ட சர்வதேச வர்த்தககங்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை அளிக்க வேண்டும். பிரிவு 19-ல் தாமத கட்டணங்கள் ஏதாவது இருப்பின் அதை தெரிவிக்க வேண்டும்.

இறுதியாக, மேற்கண்ட அனைத்து தகவல்களை உறுதி செய்கிறேன் என்று சான்றளித்து, இடம், நாள், நிறுவனத்தில் அவரது பதவி உள்ளிட்ட தகவல்கலை அளித்து வரி செலுத்துபவர் கையொப்பம் இட வேண்டும்.  

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.