written by | October 11, 2021

சிற்றுண்டி வணிகம்

×

Table of Content


படித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு தொழிலை சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் இன்றைக்கு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. தவிர, பல்வேறு தொழில்களுக்கும் தற்போது பிரகாசமான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன என்பது வெளிப்படை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளாக சிப்ஸ்,  ஸ்வீட் ஐட்டங்கள், முறுக்கு, தட்டை முறுக்கு, சீடை, ரிப்பன் பக்கோடா  உள்ளிட்ட பல்வேறு வகைகள் இருக்கின்றன. மேலும், முறுக்கு, தட்டை முறுக்கு, சீடை, ரிப்பன் பக்கோடா  ஆகியவற்றை நல்ல தரமாகவும், சுவையாகவும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தயார் செய்து, ஆன்லைன் மூலம்  சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்து வியாபாரத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரலாம். அதற்கான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் தொழில் முனைவோருக்கான அடிப்படை விஷயங்களை இங்கே பார்க்கலாம். 

 

ஸ்நாக்ஸ் பிஸினஸ் சந்தை

சமீபத்திய புள்ளி விபரங்களின்படி இந்திய அளவில் பேக்கேஜ் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் துறை  என்பது  ரூ 55,000 கோடி   வருடாந்திர வர்த்தக மதிப்பு கொண்டதாக  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு ஒவ்வொரு வருடமும் சுமார் 7 சதவிகித அளவுக்கு வளரக் கூடும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எப்.எம்.சி.ஜி வகைப்பாட்டில் அமைந்துள்ள இந்தத் துறையில் அமைப்பு சாரா செயல்பாடுகள்  கொண்ட  தனி நபர்களுடைய பங்களிப்பு அதிகம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஸ்நாக்ஸ் வர்த்தக சந்தை நிலவரத்தில் அமைப்பு ரீதியான நிறுவனங்கள் 40 சதவீதம் பங்களிப்பு  செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த அளவு, மேலும்  படிப்படியாக அதிகரிக்கும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

 

பிரபல ஸ்நாக்ஸ் வகைகள் 

இந்திய அளவில் பிரபலமாக உள்ள சில ஸ்நாக்ஸ் வகைகளில் முதலாவதாக வருவது சிப்ஸ் வகைகளாகும். அதன் பின்னர் நம்கீன்,  ஸ்டிக்ஸ் அண்ட் பப்ஸ்,  பாப்கார்ன்,  உலர் பழங்கள்  மற்றும் பிஸ்கட் வகைகள் ஆகியவை முன்னணியில் உள்ளன. மேலும், மிளகு சேவு, ஓமப்பொடி, நைஸ் சேவு, தட்டை, மிக்சர், பாம்பே மிக்சர், சீடை, கார முறுக்கு போன்ற மாநில வாரியான வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்நாக்ஸ் பிசினஸ் தொழில் முனைவோர் முதலில் பேஸ்புக்,  வாட்ஸ்அப்,  ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களது நிறுவனம் சார்பாக அவை பற்றிய சுவாரசியமான தகவல்களை பதிவு செய்து வரவேண்டும். எப்போதும் ஒரு நிறுவனத்திற்கு ஆரம்ப கட்ட  விளம்பரமும்,  நல்ல பெயரும்  அடிப்படையாக இருக்க வேண்டும் அல்லவா..? 

 

பிராண்ட் நேம் முக்கியம்

ஆன்லைன் ஸ்நாக்ஸ் பிசினஸ் செய்ய விரும்புபவர்கள்  தங்களுக்கென்று ஒரு மிகச்சரியான பிராண்ட் நேம் தேர்வு செய்து அவற்றின் மூலம் தயாரிப்புகளை மக்களுக்கு சென்று சேரும்படி செய்ய வேண்டும். குறிப்பிட்ட பிராண்ட் நேம்  கொண்ட ஒரு இணைய தளத்தை தொடங்கி அதில் பொதுமக்களுடைய கவனத்தை கவரும் வகையில் தங்களுடைய ஸ்நாக்ஸ் பற்றிய சுவையான தகவல்களை அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வரலாம்.  தங்களுடைய பிராண்ட் நேம் மற்றும் ஸ்நாக்ஸ் தயாரிப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான உற்பத்தி செயல்பாட்டு முறைகள் பற்றி யூ-டியூப் மூலம் வீடியோ காட்சிகளாக அவ்வப்பொழுது பதிவிட்டு வருவதும் மிக முக்கியமானது.  சரியான விளம்பரங்களை, சரியான கால இடைவெளிகளில் மக்கள் மத்தியில் சென்று சேரும்படி செய்யும் தொழிலதிபர்கள் அவர்களுடைய பிராண்ட் நேம் மற்றும் தயாரிப்புகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி லாபம் அடைகிறார்கள் என்பதை விளம்பரத்துறை வல்லுனர்கள் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். 

 

விலை நிர்ணயம்

எந்த ஒரு பொருளுக்கும் விலை என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும்.  விலை என்பது பல்வேறு மதிப்பீடுகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். அதாவது மூலப்பொருள்களுக்கான செலவு, உற்பத்தி செய்யப்பட்ட செலவு, விளம்பரங்களுக்கான செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை  உள்ளடக்கியதாகவே ஒரு பொருளுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு பொருளுக்கும்,  அதிலும் குறிப்பாக விரைவில் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ள உணவுப் பொருள்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் அதன் சந்தை மதிப்பீடான  விலையை நிர்ணயம் செய்யலாம். 

 

வர்த்தக வாய்ப்புகள்

இந்திய அளவிலான வாடிக்கையாளர்களுடைய விருப்பம் பல்வேறு மாற்றங்களை அடிக்கடி சந்தித்து வருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக உணவுப் பொருள்கள் அந்தந்த மாநில வாரியாக பல்வேறு விதங்களில்  வகை வகையாக இருக்கின்றன. அதில் குறிப்பாக ஸ்நாக்ஸ் வகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் விதவிதமான வகைகள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில்  வசிக்கும் மக்களின் உணவு நடைமுறை ஆகியவற்றை கணக்கில் கொண்டு கச்சிதமாக திட்டமிட்டு ஸ்நாக்ஸ் பிஸினஸ் ஆரம்பித்தால் நிச்சயம் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும். குறிப்பாக ஆன்லைன் மூலம் ஸ்நாக்ஸ் பிசினஸ் செய்பவர்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசவேண்டும்.  அதற்கேற்ப பல மொழிகள் தெரிந்த விற்பனையாளர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு தயாரிப்புகள் பற்றிய தகவல்களை தெளிவாக தெரிவித்து அதை வாடிக்கையாளர்களிடம் கச்சிதமாக தெரிவிக்கும்படி செய்ய வேண்டும்.

 

மேலும் வர்த்தக வாய்ப்புகளை  இணையதளம் மூலமாக செய்பவர்கள் கண்டிப்பாக அடிப்படையில் கம்ப்யூட்டர் இயக்கக்கூடிய திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெறுவது, மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது,  கூகுள்-பே, போன்-பே  உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் பற்றி தெளிவாக அறிந்த விற்பனையாளர்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவார்கள். 

 

நிறுவன பதிவு  மற்றும்  உரிமம் 

ஆன்லைன் மூலம் வியாபார வாய்ப்புகளை ஸ்நாக்ஸ் பிசினஸ் மூலம் பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலை குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடங்க வேண்டும். எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு சட்ட ரீதியான பதிவு மற்றும் உரிமம் அவசியமானது. ஸ்நாக்ஸ் பிஸினஸ் என்பது உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வரக்கூடியது ஆகும். அதனால் சுத்தமான, சுகாதாரமான இடத்தில் அமைவது அவசியம்.  மேலும், சம்பந்தப்பட்ட  மாவட்ட மற்றும் மாநில நிர்வாக அனுமதிகள், உரிமங்கள் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு பதிவு எண் ஆகியவற்றையும் பெறுவது முக்கியமானது. மேலும், உணவு பதப்படுத்தல் மற்றும் உணவு கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழைப் பெறுவதுபோல, தயாரிப்புக்கு பி.ஐ.எஸ் (பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச்சான்றிதழ் வாங்குவதன் மூலம் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.

 

அதன்பிறகே பொருட்களுக்கான தயாரிப்பு முறைகளில் மேற்கொள்ளக்கூடிய தரக்கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் ஆகியவை பற்றி சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகளாக தரவேற்றம் செய்யலாம்.  ஆன்லைன் வியாபாரம் என்பது குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் சார்ந்ததாக இருக்காது.  அது உலகளாவிய வியாபாரமாக மாறக்கூடிய வாய்ப்புகளை உள்ளடக்கியது.  குறிப்பாக குறிப்பிட்ட மாநில மொழிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மக்களிடையே சென்று சேர்க்கும் பொழுது சம்பந்தப்பட்ட மாநில அளவில் மட்டுமே அதனுடைய வியாபார வாய்ப்புகள் அடங்கியிருக்கும்.  ஆங்கிலம் போன்ற பொது மொழிகளை குறிப்பிட்ட ஒரு  பிராண்ட் விளம்பரங்களை செய்ய பயன்படுத்தும் பொழுது அது தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பலரது கவனத்தை கவரக்கூடியதாக அமைந்திருக்கும். 

 

சரியான  அமைவிடம் 

எந்த ஒரு  நிறுவனமும் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி கச்சிதமான இடத்தில் அமைந்திருப்பது முக்கியம். அப்போதுதான் வியாபாரம் லாபகரமாக நடக்கும். மேலும், மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் பகுதியில் நிறுவனம் அமைந்திருந்தால் வியாபாரத்தில் தொய்வு ஏற்படாது.  குறிப்பாக கண்களைக் கவரும் விதத்தில் ஷோகேஸ் அமைத்து ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை அழகாக அடுக்கி வைத்திருப்பது அடிப்படையான விஷயமாகும். அப்போதுதான் வீடியோ காட்சிகளில் கடையின் தோற்றம் பற்றிய நல்ல அபிப்பிராயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். 

 

மூலப்பொருள் கொள்முதல்

ஸ்நாக்ஸ்  பிசினஸ் என்பது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள் வகையை சார்ந்தது என்ற நிலையில் கண்டிப்பாக அதன்  தரத்தில்  எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. முக்கியமாக மூலப்பொருள்களை சம்பந்தப்பட்ட  விவசாய விளைபொருள் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்குச் நேரடியாக சென்று கொள்முதல் செய்வதே நல்லதாகும். அவ்வாறு வேளாண் பகுதிகளுக்கு சென்று மூலப் பொருள் கொள்முதல் செய்வதை அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளாக வெளியிட வேண்டும். அவற்றின் மூலம் மக்களின் நன்மதிப்பை மற்றும் நம்பிக்கையை எளிதாக அடைய முடியும். 

 

உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் எந்திரங்கள் 

ஸ்நாக்ஸ் பிசினஸ் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதில் அதன் தயாரிப்பு முறைகளில் பல்வேறு எந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றில் சரியான அளவுகளில் வெட்டுவது,  சுத்தம் செய்வது,  ஈரப்பதத்தை அகற்றுவது,  வேக வைப்பது,  மசாலா வகைகளை சேர்ப்பது,  சரியான அளவுகளில்  பேக்கிங் செய்வது  போன்ற பல்வேறு நடைமுறைகளை செய்வதற்கான எந்திரங்களை தரமான நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்க வேண்டும்.  அவற்றின் வாராந்திர,  மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்புகள் உள்ளிட்ட சோதனை நடவடிக்கைகளை தகுந்தமுறையில் செய்துவருவது தொழில் வெற்றிக்கு அவசியமான ஒன்றாகும்.  குறிப்பாக, தயாரிப்பு நடவடிக்கைகளில் எந்திரங்களை பயன்படுத்தும்பொழுது அவற்றை இயக்கும் அனுபவம் பெற்றவர்களே பணிகளை செய்வது அவசியம்.

 

பாலித்தீன் பேக்கேஜிங், பேப்பர் பேக்கேஜிங், டின் பேக்கேஜிங் மற்றும் டெட்ரா பேக் பேக்கேஜிங் முறைகளின் மூலம் உணவு பண்டங்களை ரசாயன பொருட்களை கலக்காமல் பாதுகாப்பாக வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  ஒரு தொழில் முனைவோர் பாதுகாப்பான பேக்கேஜிங் முறைகளை நிச்சயம் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஆன்லைன் ஸ்நாக்ஸ் பிசினஸ் செய்பவர்கள் மேற்கண்ட தொழில் நடவடிக்கைகளை கச்சிதமான முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லும் கலையை அறிந்திருப்பது அவசியமானது. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் மனப்போக்கை அறிந்துகொண்டு கூடுதலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றில் இணைய தள விளம்பரம் மற்றும் இலவச பரிசுகள் போன்ற கவர்ச்சிகரமான திட்ட அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை கவரும் நடவடிக்கைகள் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

 

டிஜிட்டல் முறை சந்தைப்படுத்தல்

இன்றைய ஸ்மார்ட் போன் உலகத்தில் அனைத்து விஷயங்களும் சுலபமாக உள்ளங்கைகளில் வந்து சேர்கின்றன. அதனடிப்படையில் பல்வேறு வியாபார யுக்திகளையும், நூதனமான விளம்பரங்களையும் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் சந்தித்து வருகின்றனர். அதனால் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மொபைல் அப்ளிகேஷன் மூலமும் வர்த்தக வாய்ப்புகளை உலகளாவிய வகையில் மாற்றிக்கொள்ள முடியும் என்பது மார்க்கெட்டிங் துறை வல்லுநர்களின் கருத்தாகும். பெரும்பாலான ஸ்நாக்ஸ் வகைகள் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகின்றன.  பெரியவர்களும் ஸ்நாக்ஸ் வகைகளை விரும்பி உண்ணுகிறார்கள் என்றாலும்கூட சிறுவர்களை கணக்கில்கொண்டுதான் பெரும்பாலான ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.  அதனால் மக்களிடையே குறிப்பிட்ட பிராண்டை விளம்பரம் செய்ய மென்மையான அணுகுமுறையே நல்லது. எதிர்மறையான விஷயங்களை விளம்பரங்களில் உள்ளடக்கமாக சொல்வது நீண்டகால நன்மைக்கு ஏற்றது அல்ல என்பது விளம்பர துறை வல்லுனர்களின் கருத்தாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.