written by | October 11, 2021

சிறு வணிக யோசனைகள்

×

Table of Content


மிகச் சிறந்த 25 சிறு வணிக வாய்ப்பிற்கான பட்டியல் 

பல நூற்றுக்கணக்கான தொழில் வாய்ப்புகள் நிறைந்து இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் எந்தத் தொழிலை எடுத்தால் வெற்றி பெறமுடியும் என்று தீர்மானிப்பதே உங்களது தொழில் வெற்றியின் முதல் படி ஆகும். இந்த முதல் வெற்றிப் படியை அடைவதற்கு எத்தனை வகையான தொழில்கள் உள்ளது அவற்றை உங்களுக்கு பிடித்த தொழிலை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை பற்றிய ஞானம் இருக்க வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சில சிறு வணிக வாய்ப்பிற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) மளிகை கடை

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தேவைப்படக்கூடிய இதுவரை பெரிய அளவில் தோல்வியை சந்திக்காத ஒரு தொழில் என்னவென்றால் மளிகை கடை ஆரம்பிப்பது ஆகும். வீட்டில் இருப்பவர்களின் துணையோடு சில லட்சங்களில் இந்தத் தொழிலை ஆரம்பித்து விட முடியும்.

2) பழம் மற்றும் காய்கறி கடை

கையிலிருக்கும் இருப்பிற்கு ஏற்ற காய்கறிகளை மார்க்கெட்டில் ஃப்ரெஷ்ஷாக வாங்கி வந்து உங்கள் ஏரியாவில் தொடர்ந்து விற்று வரும்போது உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் மிக விரைவில் அமைந்து நல்ல லாபத்தை அடைய கூடும். குறிப்பிட்ட அளவு மட்டும் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி விற்பனை செய்து சேதாரத்தை தவிர்ப்பது இந்த தொழிலின் வெற்றிக்கு முக்கிய தகுதியாகும். 

3) கைவினை வணிகம்

சிறந்த முதலீட்டில் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பொம்மைகள் போன்ற சிறுநீரக கைவினைப் பொருட்களை செய்து அருகிலுள்ள கடைகளுக்கோ அல்லது நேரடியாக மக்களிடம் விற்று நல்ல லாபம் அடைய முடியும். இத்தகைய விற்பனையை ஆன்லைன் மூலமும் நீங்கள் செய்தால் விற்பனையின் அளவு மற்றும் தொழில் வளர்ச்சியின் அளவு பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. 

4) ஆட்டோமொபைல் பாகங்கள் வணிகம்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் அடையக் கூடிய சிறந்த சிறு வணிக யோசனைகளில் ஒன்றாக விளங்கக் கூடியது இத்தகைய உதிரிபாகங்கள் விற்பனை கடை ஆரம்பிப்பது ஆகும். அனைத்து வீட்டில் அதிகரித்துவரும் மோட்டார் வாகன எண்ணிக்கையே இந்த தொழில் வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக நாம் அறிந்து கொள்கிறோம்.

5) ஒப்பனை வணிகம் – பியூட்டி பார்லர் 

அலுவலகம் செல்லும் பெண்கள் மட்டுமில்லாது வீட்டில் இருக்கும் பெண்களும் தங்களது அழகை பராமரிப்பு கொள்வதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆகவே நீங்கள் ஒரு பியூட்டி பார்லர் வைத்து அல்லது வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று அழகு படுத்தும் தொழிலை செய்வதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைய முடியும். 

6) மருந்து கடை வணிகம்

உணவு உடை இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு அடுத்த நிலையில் இருப்பது மருத்துவம் மட்டுமே. இத்தகைய மருத்துவம் சம்பந்தமான பொருள்களை விற்கக் கூடிய மருந்து கடையை சில லட்சங்கள் முதலீட்டில் ஆரம்பிக்க முடியும். பி-பார்ம் அல்லது அதற்கு இணையான படிப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே இத்தகைய மருந்து கடை விற்பனை உரிமம் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

7) சிற்றுண்டி வணிகம்

பெருநகரங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறியதொரு டிபன் சமைத்து விற்கும் கடைகளை பார்த்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. அத்தகைய சிறியதொரு சிற்றுண்டி கடை அமைப்பதற்கு சில ஆயிரங்கள் பணமும் நன்கு சமைக்கக்கூடிய கைப் பக்குவமும் இருந்தால் இத்தகைய நல்ல லாபம் தரக்கூடிய மிகச்சிறந்த வணிகத்தை ஆரம்பிக்க முடியும்.

8) காலணி வணிகம்

பழங்காலத்தில் கால் பாதுகாப்பிற்காக மட்டும் அணிந்திருந்த காலணிகள் இப்பொழுது அழகிற்காகவும் கௌரவத்திற்காகவும் பல்வேறு மக்களால் பலவிதமான வடிவங்களில் அணியப்படுகிறது. இத்தகைய காலணி விற்கும் கடையை சிறிய முதலீட்டில் உங்களது ஊரிலேயே ஆரம்பித்து லாபகரமான முறையில் நடத்த முடியும்.

9) தேநீர் கடை வியாபாரம்

கிராமங்களை விட சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் தேநீர்க்கடையில் வரவேற்பு அதிகமாக உள்ளது. அலுவலக வேலைக்காக தினம்தோறும் சென்று கொண்டிருக்கும் பல்வேறு வகையான மக்கள் தங்களது புத்துணர்ச்சியாக தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இத்தகைய தேநீர் கடையை ஒரு நல்ல இடத்தில் ஆரம்பித்த லாபகரமான முறையில் நடத்தி தொழில் வளர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம்.

10) மின் சாதனங்கள் விற்பனை வணிகம்

இந்தத் தொழில் ஆரம்பிப்பதற்கு சற்று முதலீடு அதிகமாக தேவைப்பட்டாலும் மிகவும் லாபகரமான தொழிலாக மின் சாதனங்கள் விற்பனை நிலையம் அமைகிறது. இன்றைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மின்சாரத்தை சார்ந்தே இருக்கிறது என்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த தொழிலின் வளர்ச்சி மேலும் மேலும் அதிகரிக்கும்.

11) ஆடை வணிகம்

மனிதனின் அத்தியாவசியத் தேவையான ஆடை இருக்கிறது என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். அத்தகைய அத்தியாவசியத் தேவையான ஆடை இப்பொழுது ஆடம்பர மற்றும் அலங்கார பொருளாக பல மக்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் இன்றைய காலகட்ட மக்களின் விருப்பத்திற்கு ரசனைக்கு ஏற்ற புதுப்புது ஆடைகளை வாங்கி விற்று மிகப்பெரிய லாபம் ஈட்டமுடியும்.

12) மசாலா பொருள் தயாரிப்பு வணிகம்

பல்வேறு வகையான சமையலுக்கு தேவையான விதவிதமான மசாலா வகைகளையும், ஊறுகாய், அப்பளம், திண்பண்டங்கள் போன்றவற்றையும் குடிசைத் தொழிலாக செய்து அருகில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்ட முடியும். கிராமங்களில் உள்ள மகளிர் குழுக்களாக இணைந்து இத்தகைய பொருட்கள் தயாரித்து விற்பதன் மூலம் சிறந்த வணிக வளர்ச்சி அடைய முடியும்.

13) புத்தக கடை வணிகம்

மொபைல் லேப்டாப் போன்ற சாதனங்கள் வந்த பிறகு புத்தகம் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்திருந்தாலும் பத்தகம் ரசித்து படிப்பதற்கான ரசிகர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களது ரசனைக்கேற்ற பல்வேறு விதமான புத்தகங்களையும் மாணவர்களின் படிப்புக்கு ஏற்ற புத்தகங்களையும் வாங்கி விற்று நல்ல லாபம் அடையக்கூடிய தொழிலாக இந்த புத்தக விற்பனை வணிகம் உள்ளது.

14) அலங்கார மற்றும் பரிசுப் பொருள் விற்பனை வணிகம்

பெண்களுக்கான வளையல்கள், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் விழாக்களுக்கு பரிசளிக்க கூடிய வகையிலான பொருள்கள் போன்றவற்றை விற்கும் கடையை ஆரம்பிப்பதற்கு சில லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் போதுமானது. விழாக் காலங்களில் மற்றும் பண்டிகை காலங்களில் இத்தகைய கடைகளில் அதிகமான வியாபாரம் இருக்கும். 

15) விளையாட்டு பொருள் விற்பனை வணிகம்

கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து என பல்வேறுவிதமான விளையாட்டுகளில் இன்றைய இளைஞர்கள் ஆர்வத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில் பொது புதுரக மற்றும் தரமான விளையாட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

16) ஆயுர்வேத மற்றும் நாட்டு மருந்து கடை

என்னதான் ஆங்கில மருத்துவம் பிரபலமாக இருந்தாலும் இன்றளவும் ஆபத்தான கொரோனா காலகட்டத்தில் கூட உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நாட்டு மருந்துகளை ஆதரிக்கின்றனர். மேலும் பல்வேறு தரப்பட்ட வியாதிகளுக்கு நாட்டு மருந்துகளை நாடக் கூடிய இன்றளவும் பெரும் அளவில் இருப்பதால் இத்தகைய தொழில் வளர்ச்சி அடையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

17) சேலை சில்லறை கடை

என்னதான் இன்றைய மார்டன் உலகில் பல்வேறு தரப்பட்ட உடைகளை அணிந்தாலும் பெண்களுக்கான சேலை மீதுள்ள மோகம் குறைந்தபாடில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சேலை விற்பனையை சிறு கடை மூலமாகவோ அல்லது வீடு வீடாக எடுத்துச் சென்று விற்று நல்ல ஒரு லாபத்தை அடைய முடியும். இத்தகைய தொழில் தொடங்குவதற்கு சில ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்தால் மட்டுமே கூட போதும்.

18) பொட்டிக் வணிகம்

இளைஞர்களைக் கவரும் வகையில் புதுப்புது மார்டன் மற்றும் டிசைனர் உடைகளை விற்கும் புதிய ரக ஜவுளிக்கடை வணிகத்தையே பொட்டிக் வணிகம் என்று கூறுகின்றோம். இந்த போட்டிக்கு வணிகத்தின் வளர்ச்சி ஆண்ட ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதால் இத்தகைய வணிகத்தில் நீங்கள் சில லட்சங்களை முதலீடு செய்து பல லட்சம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

19) பால் விநியோக வணிகம்

பால் மக்களின் அத்தியாவசியமான குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துப் பொருளாக கருதப்படுவதால் கொரோனா தடை காலகட்டத்திலும் எந்தவித தங்கு தடையும் இன்றி செயல்படும் புதிதாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆகவே இத்தகைய அத்தியாவசியமான பொருளை நீங்கள் வணிகமாக செய்யும்போது கண்டிப்பாக லாபத்தை ஈட்டி தொழில் வளர்ச்சி அடைவீர்கள்.

20) இன்டீரியர் டிசைன் வணிகம்

இன்றைய மக்கள் தங்கியிருக்கும் இருப்பிடத்தையும் வேலை செய்யும் அலுவலகத்தையும் அழகாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இத்தகைய அழகானதொரு வடிவத்தை கட்டிடங்களுக்கு தருவது இன்டீரியர் டிசைனிங் செய்யும் தொழிலின் ஒரு முக்கிய அம்சமாகும். இன்டீரியர் டிசைன் தொழிலில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு சில லட்சங்களில் முதலிடம் இதை பற்றிய அனுபவ அறிவும் முக்கியமாக தேவைப்படும் என்பதால் அனைவராலும் செய்துவிட முடியாது.

21) பான் ஷாப் – பெட்டிக்கடை வணிகம் 

பான் பொருட்களை தங்களது புத்துணர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் இந்தியாவில் இருக்கிறார்கள். முக்கியமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் பட்டதாரிகள் வேலை செய்யக்கூடிய இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கடைகளுக்கு பெருமளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

22) அச்சிடும் கடை (ஜெராக்ஸ் கடை) வணிகம்

பல விதமான தகவல் பரிமாறும் செயலிகள் இன்றைய காலகட்டத்தில் இருந்தாலும் முக்கியமான அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் விண்ணப்பங்கள் மற்றும் கோப்புகளுக்கு தேவையான படிவங்கள் அச்சிடுவதில் பெருமளவு இந்த வணிகத்தின் தேவை உள்ளது. அதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு அதிக நேரம் கணினி மூலமாக பாடம் கற்கும் வாய்ப்பை குறைத்து இத்தகைய அச்சிடப்பட்ட காகிதத்தின் மூலம் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளதால் இந்த ஜெராக்ஸ் கடை புத்துணர்வு பெற்றிருக்கிறது.

23) டிராவல் ஏஜென்சி வணிகம்

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவு போக்குவரத்து பெரும் முன்னேற்றம் அடைவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் மக்கள் பெரிதும் தொழிலுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். இத்தகைய பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் ஏஜென்சி நடத்தி லாபம் ஈட்ட முடியும்.

24) ஜிம் அல்லது உடற்தகுதி மையம்

ஒரு சில லட்சங்கள் செலவழித்து உடற்பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து மாதச் சந்தா மற்றும் வருடச் சந்தா பெற்று மக்களை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் நல்லதொரு லாபத்தை அடைய முடியும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட அனுபவ அறிவு இருக்குமேயானால் அதைப் பயன்படுத்தி உங்களது வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி கொடுத்து அதிகமான கட்டணத்தை வசூலிக்கலாம். 

25) ஜூஸ் ஐஸ்கிரீம் பார் வணிகம்

பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் உணவுப் பொருளாக ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் விளங்குவதால் இதற்கேற்ற வகையில் ஒரு கடையை தனியாக ஒரு சில லட்சங்கள் முதலீட்டில் நடத்தி லாபம் பெறமுடியும். கல்லூரி மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் அருகில் இத்தகைய கடையை நிறுவி அதன்மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து லாபம் அடையக் கூடிய மிகச் சிறந்த சிறுதொழில் வணிகமாக இது திகழ்கிறது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.