written by | October 11, 2021

கைவினை வணிகம்

×

Table of Content


சிறந்த 50 கைவினைப்பொருள் வணிக வழிகள்  

 

கைவினைப் பொருட்கள் செய்யும் திறன் இருந்தால் அல்லது அதை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் சொந்த தொழில் செய்யும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு வகையான கைவினைத் தொழில்கள் இப்போது நடைமுறையில் உள்ளது. மிகச் சிறந்த ஐம்பது கைவினைத் தொழில்கள் பற்றி இங்கு நாம் காண்போம்.

  1. நகை வடிவமைப்பாளர்

பெண்களுக்கு நகைகள் மீதான ஆர்வம் எப்போதும் குறைந்தது இல்லை. இன்றைய காலகட்ட பெண்கள் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட நகைகளை விட புதியதாக வடிவமைத்து கையால் செய்யக்கூடிய பல வகையான நகைகளை விரும்புகின்றனர்.  வளையல்கள் காதணிகள் நெக்லஸ்கள் போன்ற விதவிதமான நகைகளை இந்த முறையில் தயாரித்து விற்பனை செய்ய முடியும். 

 

  1. ஆடை வடிவமைப்பாளர்

கல்யாணம் மற்றும் இதர சுப விழாக்களுக்கு பெண்கள் இத்தகைய டிசைனிங் செய்யப்பட்ட ஆடைகளையே அணிய விரும்புகின்றனர். சுப நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களில் தொடர்பு அதிகமாக இருந்தால் இந்தவகையான தொழிலில் அதிகமாக பிரகாசிக்க முடியும்.

 

  1. டி-ஷர்ட் டிசைனர்

விளையாட்டுப் போட்டிகளில் ஆடுவதற்கும் உடற்பயிற்சி கூடங்களில் பயன்படுத்துவதற்கும் டி-ஷர்ட்கள் மற்றும் ஒத்த ஆடை பயன்படுத்தப் படுகின்றன.    லோகோக்கள் மற்றும் வாக்கியங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அல்லது பிற கிராபிக்ஸ் வடிவமைக்கபட்ட டி-ஷர்ட் செய்து விற்பனை செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய முடியும்.  

 

  1. வாழ்த்து அட்டை தயாரிப்பாளர்

காகிதப் பொருட்கள் மட்டும் அட்டைகளை வைத்து புதுப்புது டிசைன்களில் வாழ்த்து அட்டை மற்றும் அழைப்பிதழ்கள் செய்து விற்க முடியும். உங்கள் புதுப்புது டிசைன்களை கைகளால் செய்தே பிரபல படுத்த முடியும்.

 

  1. ஓவியர்

சிறப்பு வாய்ந்த ஓவிய கலைத்திறன் உங்களிடமும் இருக்குமேயானால் அதை பயன்படுத்தி மக்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது ஓவியங்களை வரைந்து விற்க முடியும். கண்ணாடியில் செய்யப்பட்ட குடுவைகள், மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள், காகிதங்கள் இவ்வாறு பல பொருட்களின் மீது உங்கள் ஓவியக்கலை திறனை வெளிப்படுத்த முடியும். 

 

  1. சிற்பி

உலோகம், மரம், மற்றும் களிமண் போன்ற பல்வேறு பொருட்களில் இருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த சிற்பங்களை செய்ய முடியும். இத்தகைய சிற்பங்களை செய்து விற்பது கைவினைத் தொழிலில் மிக முக்கியமான தொழில் ஆக கருதப்படுகிறது. 

 

  1. வீட்டு உபயோக பொருள் தயாரிப்பு

பீங்கான் கிண்ணங்கள் மண்பாண்ட குடுவைகள் மற்றும் பைபர் ஆல் செய்யப்பட்ட தட்டுகள் போன்ற வீட்டில் பயன் படுத்தக்கூடிய பொருட்களை உருவாக்கலாம். நீங்கள் அந்த பொருட்களை  ஆன்லைனில் அல்லது மொத்த சில்லறை விற்பனையாளருக்கு விற்பதன் மூலம் அதிகப்படியான லாபம் பெறலாம்.

 

  1. மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்

பல தரப்பட்ட மக்களால் இன்றைய காலகட்டங்களில் செய்யப்பட்டு வரும் கைவினைத் தொழில் இந்த மெழுகு வர்த்தி தயாரிக்கும் தொழில் ஆகும். புதுப்புது நறுமணங்கள் புதுப்புது வடிவங்களில்  மெழுகுவர்த்திகள் தயார் செய்து சந்தைப் படுத்த வேண்டும். மேலை நாடுகளில் மெழுகுவர்த்தி மிகச் சிறந்த பரிசுப் பொருளாக கருதப்படுகிறது ஆதலால் நீங்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் செய்தால் இன்னும் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்.

 

  1. சோப் மேக்கர்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப் தயாரித்து விற்பனை செய்வதும் முக்கியமான ஒரு கைவினை தொழில் ஆகும். வெவ்வேறு வாசனை சேர்க்கைகள் மற்றும் வடிவமைப்புகளுடன் சோப்பு மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்புக்கு இன்றைய சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.

 

  1. எம்பிராய்டரர்

எம்ராய்டரி ஒர்க் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் தங்களுடைய ஆடைகளில் புதுவிதமான பூ மற்றும் இதர டிசைன்களை ஆடைகளின் பிரதிபலிக்க ஆசைப்படுவார்கள். இத்தகைய எம்பிராய்டரி வேலையை வீட்டிலிருந்தே மிக சுலபமாக எந்தவித பணம் முதலீடு இல்லாமல் செய்ய முடியும்.

 

  1. பின்னலாடை பொருட்கள் விற்பனை

பின்னலாடை என்பது எம்ப்ராய்டரி வகையை சார்ந்ததாகும். எம்பிராய்டரி முறையில் சிறு டிசைன்கள் மட்டும் அல்லாமல் தொப்பி போர்வை போன்ற பொருட்களை கையால் பின்னி விற்க முடியும்.

 

  1. விளையாட்டுப் பொருள் தயாரிப்பது 

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மீதான அலாதி விருப்பம் உள்ளது. அத்தைய விளையாட்டுப் பொருட்களை செய்து நீங்களே விற்கலாம்.

 

  1. குழந்தைகளுக்கான ப்ராஜெக்ட் தயாரிப்பு  

பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறு சிறு ப்ராஜெக்ட் கொடுக்கப்படுகிறது. அந்தப் ப்ராஜெக்ட்க்கு  தேவையான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் அந்த பிராஜெக்ட் செய்வதற்கு உதவி செய்வதன் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

 

  1. கலை அச்சு விற்பனையாளர்

கலை ரீதியாக வரையப்பட்ட புகைப்படங்களின் நகல்களை கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் குடுவைகளில் அச்சிட்டு இருக்க முடியும். செயற்கை முறையில் இது அச்சிட படுவதால் விலையும் மிகக் குறைவாக இருக்கும். விலைக் குறைவாக இருப்பதால் அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

 

  1. கண்ணாடி கலை பொருட்கள் தயாரிப்பு 

உங்களிடம் சரியான உபகரணங்கள் மற்றும் அறிவு இருந்தால், கண்ணாடியை உருக்கி செய்யக்கூடிய அழகு சாதன பொருட்கள், மணிகள், குவளைகள் மற்றும் இதர கண்ணாடிப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.

 

  1. கை பை வடிவமைப்பாளர்

கடைகளில் அல்லது ஆன்லைனில் பர்ஸ்கள் மற்றும் கைப்பைகள் அதிகம் விற்பனை செய்யப் படுகின்றன. இத்தகைய பைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தொழிலை நீங்கள் சிறு அனுபவத்துடன் ஆரம்பிக்க முடியும்.

 

  1. கைவினைப் பொருட்கள் விற்பனை மையம் 

நீங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்ற கைவினைக் கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்ய ஒரு சிறு கடை ஆரம்பிக்கலாம். இந்த மாதிரி தாங்களே கடை திறந்து விற்பனை செய்வதன் மூலம் இரட்டிப்பு லாபம் அடைய முடியும்.

 

  1. புகைப்படக்காரர்

இயற்கை மற்றும் சமூக நிகழ்ச்சிகளை தத்ரூபமாக படம் படிக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் நீங்கள் இந்த புகைப்பட தொழிலை செய்யலாம். இந்த தொழில் செய்வதற்கு மிகக் குறைவான முதலீடு தேவைப்படுகிறது.

 

  1. தச்சுத்தொழில் 

தச்சு தொழில் பழங்காலத்திலிருந்தே செய்யப்பட்டு வரக்கூடிய ஒரு தொழிலாகும். இந்தத் தொழில் செய்வதற்கான நுணுக்கங்களை கற்று அறிந்து செயல் படுத்துவதன் மூலம் பல வகையான மர வேலை செய்யப்பட்ட பொருட்களை செய்து விற்பனை செய்ய முடியும்.

 

  1. பர்னிச்சர் விற்பனைகள் 

பலவகையான மேலைநாட்டு மற்றும் உள்நாட்டு பர்னிச்சர்களை விற்பனை செய்து மிகச் சிறந்த வணிக வளர்ச்சி பெற முடியும். இத்தகைய பர்னிச்சர் விற்பனை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் மிகச்சிறந்த லாபமும் அடையலாம்.

 

  1. வெல்டர்

வெல்டிங் தொழில் என்பது தனித்திறன் சம்பந்தப்பட்ட தொழில் ஆகும். வெல்டிங் தொழில் செய்ய பயிற்சியும் அறிவும் தேவைப்படுகிறது. இதற்கான தகுந்த பயிற்சி மேற்கொண்டு அதை நீங்கள் தனித் தொழிலாக செய்யலாம்.

 

  1. கேலிச்சித்திர-மீம்ஸ் கலைஞர்

இத்தகைய கேலிச்சித்திரம் மற்றும் மீம்ஸ்களை வடிவமைத்து சமூக வலைதளங்களில் இடும் போது, உங்களுக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அவர்களின் மூலம் உங்களது கேலிச்சித்திர படங்களை விற்பனை செய்ய முடியும்.

 

  1. கேட்ஜெட்ஸ் தயாரிப்பாளர்

தொலைபேசி, மடிக்கணினிக்கு தோல்கள், ரப்பர் மற்றும் ஃபைபர் செய்யப்பட்ட உரைகளை தயாரித்து விற்பனை செய்ய முடியும். அனைவரும் கைபேசி மற்றும் மடிக்கணினி வைத்து உள்ளதாலும் அவர்கள் தங்களது பொருட்களை பாதுகாப்பாகவும் அழகாகவும் வைக்க நினைப்பதாலும் உங்களது வியாபாரம் குறுகிய கால கட்டத்தில் அதிகரிக்கும்.

 

  1. பிரத்தியேக ஆடை தயாரிப்பாளர் 

அன்றாடம் அணியக்கூடிய ஆடைகள் மட்டுமல்லாமல் பிரத்தியேக சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிக்காக பயன்படுத்தக் கூடிய ஆடைகளை தயாரித்து அதை விற்பனை செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய வாய்ப்பு உள்ளது. 

 

  1. வண்ண புத்தக கலைஞர்

அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை அனைத்து குழந்தைகளும் தங்களது பொழுதுபோக்கு நேரங்களில் புத்தகங்களில் உள்ள படத்தில் வண்ணங்களைத் தீட்டி கொண்டிருப்பார்கள். இத்தகைய வண்ணப் புத்தகங்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.

 

  1. மலர் கலைஞர்

பூங்கொத்துகள் மற்றும் மலர் அலங்கார பொருட்கள் பல வகையான சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. மலர் வளையங்கள் மரியாதை நிமித்தமாக இறுதிசடங்கில் வைக்கப்படுகிறது. மலர்களைப் பயன்படுத்தி இத்தகையப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்ய முடியும்.

 

  1. கைவினைப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 

உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் தனித் திறமை இல்லை என்றாலும் பலவித கைவினை கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளராக செய்ய வேண்டும். 

 

  1. கூடையில் தயாரிப்பாளர் 

பல்வேறு வகையான கூடைகள் பல்வேறு மூலப்பொருட்கள் ஆகிய பிளாஸ்டிக், நைலான், பனை ஓலை போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இத்தகைய பலதரப்பட்ட பல வடிவிலான கூடைகளை செய்து கண்காட்சிகளில், கடைகளில் அல்லது ஆன்லைனில் விற்கலாம்.

 

  1. தையல் கலைஞர் 

உங்களுக்கு தையல் கலையில் திறமை இருந்தால் பழைய மற்றும் புதிய ஆடைகளை தைத்துக் கொடுத்து சம்பாதிக்க முடியும்.

 

  1. பேட்டர்ன் மேக்கர்

இதுவும் தையல் கலையை சார்ந்த தொழிலே ஆகும். மற்ற கலைஞருக்கு ஒரு குறிப்பிட்ட வடிவிலான துணியைத் தொடர்ந்து தைத்துக் கொடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

 

  1. துணி கடை உரிமையாளர் 

நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் ஆரம்ப காலகட்டத்தில் மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கடைகளே ஆகும். நீங்களும் அதே போன்று உங்களுடைய சிறிய முதலீட்டின் மூலமாக ஒரு துணிக் கடை ஆரம்பித்து வெற்றி பெற முடியும். 

 

  1. குயில்டர்

குயில்டிங் ஒரு சிறந்த வணிக வாய்ப்பை வழங்கக்கூடிய மற்றொரு பாரம்பரிய கைவினை. பல்வேறு விதமான அடுக்குகளைக் கொண்ட போர்வையே குயில்டர் என்று அழைக்கின்றோம். மேலை நாடுகளில் இந்த வகையான போர்வைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் குளிர் பிரதேசங்களில் இந்தத் தொழில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

  1. ரப்பர் ஸ்டாம்ப் மேக்கர்

அனைத்து அலுவலகங்களிலும் வியாபார வணிகத்திலும் தங்கள் அலுவலக, கையெழுத்து முத்திரைகளை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ரப்பர் ஸ்டாம்புகளைத் தயாரித்து விற்கும் தொழிலில் மிகுந்த லாபம் அடைய முடியும்.

 

  1. சுவரோவிய கலைஞர்

பெரிய அளவில் உள்ள சித்திரங்களை சுவற்றில் உருவாக்க முடியும் என்றால் நீங்கள் இந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது வியாபார ரீதியாக விளம்பரங்களை செய்ய இத்தகைய தொழில் முனைவோர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள்.

 

  1. கலைப் பட்டறை ஆசிரியர்

நீங்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில் ரீதியான நடவடிக்கைகளை பற்றிய அனுபவ அறிவு இருந்தால் அதை மற்றவர்களுக்கு பாடமாக எடுத்துக் கூறி அதன்மூலம் வருவாய் பெற முடியும்.

 

  1. ஆன்லைன் பாடநெறி உருவாக்கியவர்

உங்களது கைவினை திறமைகளை ஆடியோவும் வீடியோவாகவும் எடுத்து அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

 

  1. கைவினை புத்தக ஆசிரியர்

உங்களது திறமைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு கைவினைத் தொழில் சம்பந்தப்பட்ட புத்தகத்தை வடிவமைத்து பிரசுரித்து வருவாயை ஈட்ட முடியும்.

 

  1. மேக்கப் செட் தயாரிப்பு 

சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான மொத்த மேக்கப் செட்டையும் ஒன்றாக தயாரித்து அதை விற்பனை செய்ய முடியும்.

 

  1. சிறிய அளவிலான டிரோன் தயாரிப்பு 

இன்றைய கால கட்டங்களில் அதிகமான டிரோன் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய பயிற்சி  மூலம் இதை தயாரிக்கும் முறையை அறிந்து கொண்டு சொந்தமாக நீங்கள் இதை தயாரித்து விற்பனை செய்யலாம்.

 

  1. பாக்கு மட்டை தட்டு உற்பத்தி 

பெரும்பாலான இடங்களில் ப்ளாஸ்டிக் உற்பத்தியை மற்றும் அதன் பயன்பாடு முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இத்தகைய பாக்கு மட்டை தட்டுகள் பண்பாட்டில் உள்ளன.

 

  1. பினாயில் உற்பத்தி 

மிகக் குறைந்த செலவில் வீட்டிற்கு சுத்தம் செய்யப் பயன்படும் பினாயில் உற்பத்தி செய்து கடைகளில் விற்கலாம்.

 

  1. பூஜை பொருட்கள் தயாரிப்பு 

பெரும்பாலான வீடுகளில் அன்றாடம் பூஜை செய்யப்படுகிறது. இதற்கு தேவையான சூடம் சாம்பிராணி ஊதுபத்தி போன்ற பொருட்களை வீட்டில் தயாரித்து விற்பனை செய்யலாம் 

 

  1. மொசைக்ஸ் உருவாக்குதல் 

கண்ணாடி துண்டுகளைப் பயன்படுத்தி மொசைக்ஸ் உருவாக்கும் எளிதான வழி மிகச்சிறந்த கைவினை தொழிலாக உள்ளது. கண்ணாடித் துண்டுகளின் மேல் பெயிண்டிங் செய்து அழகான மொசைக் கல்லை உருவாக்கலாம் 

 

  1. மறுசுழற்சி காகித ஓவியக்கலை   

உங்களிடம் நிறைய பழைய பத்திரிகைகள் இருந்தால் அவற்றுள் சில படங்களை எடுத்து நேர்த்தியான புதுப்புது வடிவங்களை அதன் மூலம் அமைக்க முடியும். இந்த வேலை எளிதானது மட்டுமில்லாமல் கண்ணைக் கவரும் வகையிலும் அமையும். 

 

  1. செல்லப் பிராணிகளுக்கான படுக்கை தயாரிப்பு

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தை போலவே பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பக்கத்தில் அடைக்கப்பட்ட பிரத்யேகமான படுக்கைகள் உள்ளன. இதை வீட்டில் தயாரித்து விற்பனை செய்யலாம்.

 

  1. மீன் தொட்டி தயாரிப்பு  

பெரும்பாலான வீடுகளிலும் நிறுவனங்களிலும் மீன் தொட்டி வைக்கப்பட்டு உள்ளன. சிறு கண்ணாடித் துண்டுகள் மற்றும் பசைகளைக் கொண்டு இந்த மீன் தொட்டிகளை எளிதாகத் தயாரிக்க முடியும்  

 

  1. பாத்திரம் கழுவும் ஸ்க்ரப் தயாரிப்பது  

அனைத்து வீடுகளையும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய எளிதான சாதனமாகும். மிகக் குறைந்த விலையில் இதனை தயாரித்து விற்பனை செய்யலாம் 

 

  1. கொசுவர்த்தி தயாரிப்பு 

பெரும்பாலன இந்திய நகரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுத் தொல்லையில் இருந்து மீள்வதற்கு பெரும்பாலும் கொசுவத்தி பயன்படுத்துகின்றனர். இந்த கொசுவர்த்தி வீட்டிலேயே தயாரிக்க கூடிய மிக எளிதான கைவினை தொழிலாகும்.  

 

  1. முக கவசம் தயாரிப்பு 

கொரோனா கால கட்டத்திற்குப் பின்னர் அனைவரும் முக கவசத்தை அன்றாடம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இத்தகைய முக கவசத்தை செய்து விற்பனை செய்வதன்மூலம் சிறந்த கைவினை தொழில் அதிபராக ஆகலாம். 

 

  1. புகைப்பட சட்டகம் தயாரித்தல்  

விதவிதமான அளவுகளில் பல வகையான வண்ண வேலைப்பாடுகளுடன் அடங்கிய புகைப்பட சட்டங்களை தயாரித்து விற்பனை செய்யலாம் 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.