written by | October 11, 2021

கேட்டரிங் வணிகம்

×

Table of Content


கேட்டரிங் தொழில் ஆரம்பிப்பதற்கான நெறிமுறைகள் 

சுப விழாக்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு கேட்டரிங் சர்வீஸ் செய்ய தேவையான முழு திட்டமிடலையும் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். உணவுத் தயாரிப்பு சார்ந்த மற்றுமொரு தொழிலாகிய ஹோட்டல் தொழிலை விட இந்த கேட்டரிங் தொழில் உள்ள நன்மைகள் என்னவென்றால்,

  1. ஒவ்வொரு நேரத்திற்கும் சாப்பிடக்கூடிய ஆட்களையும் இன்னிக்கு முன்னமே ஓரளவு கணித்து வைத்து அதற்கேற்ற மூலப்பொருட்கள் மட்டும் வாங்கி சமைப்பதால் பெரும்பாலான பொருள் நஷ்டம் பண நஷ்டமும் தவிர்க்கப்படும்.
  2. இந்த கேட்டரிங் சர்வீஸ் தொழில் மாதத்தின் 30 நாட்களும் உங்களுக்கு இருக்கப் போவதில்லை. ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டுமே உங்களுக்கு இருக்கும் அனைத்து விதமான பாத்திரங்களும் சொந்தமாக வாங்கி வைக்கத் தேவையில்லை. வருகின்ற ஆர்டருக்கு தகுந்தவாறு பாத்திரங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேட்டரிங் சர்வீஸ் முடிந்தவுடன் திருப்பி அளிப்பதன் மூலமாக உங்களது பெரும் முதலீடு தவிர்க்கப்படுகிறது. 
  3. இதைப்போலவே உங்களிடம் சமையல் செய்ய மற்றும் பரிமாற நிரந்தர வேலையாட்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர்கள் இருந்தால் மட்டும் அவர்களை வரவைத்து அதற்கேற்ற ஊதியம் மற்றும் கொடுப்பதன் காரணமாக பெரும் லாபம் உங்கள் கையில் சேரும்.

உங்கள் சுற்றி உள்ள சமூக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டு முறையும் பொருத்து இந்த தொழிலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. கேட்டரிங் தொழில் செய்ய விரும்புவோர் அதற்கான முக்கிய சிறப்பம்சங்கள் கொண்ட பல்வேறு படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. இந்தியாவில் இந்த கேட்டரிங் தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது பற்றிய புரிதல் வேண்டும்:

இந்தியாவைப் பொருத்தவரை இந்த கேட்டரிங் தொழில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு தோறும் ஆறு சதவீதத்திற்கும் மேலாக வணிக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த கேட்டரிங் தொழில் சம்பந்தமான அனைத்து தொழில்களான திருமண ஏற்பாட்டாளர்கள், விழாக்களுக்கான புகைப்பட கலைஞர்கள், அழைப்பிதழ்கள் அச்சடிக்க கூடிய நிறுவனங்கள், திருமண விழாக்களில் செய்யக்கூடிய இசைக்கச்சேரி கலைஞர்கள் மற்றும் இவர்கள் தொடர்பாக இணையதள வடிவமைப்பை செய்து விளம்பரம் செய்யக்கூடியவர்கள் என அனைத்து தரப்பினர்களும் நல்லதொரு வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்த கேட்டரிங் சம்பந்தமான தொழில்களில் இந்தியாவில் புரள்கிறது. ஆகவே இத்தகைய வணிக வளர்ச்சி கொண்ட கேட்டரிங் சர்வீஸ் உங்களது முதன்மையான தொழிலாக எடுத்து நடத்த எந்த ஒரு ஐயப்பாடும் தேவையில்லை.

  1. கேட்டரிங் சர்வீஸ் தொடங்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும் முதலீடும் இருக்கிறதா என்பதை அறியுங்கள்:

உங்களுக்கு உண்மையாகவே உணவு தயாரிப்பதில் ஆர்வம் இருக்கிறதா, பல்வேறு வகையான உணவுகளை சமைக்கும் திறமை இருக்கிறதா, நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை ஒரே நேரத்தில் உங்களது உணவின் மூலம் திருப்திபடுத்தும் வேட்கை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு இந்தத் தொழிலில் இறங்குவது நல்லது. சமையல் கலை போன்ற மிகச்சிறந்த கலையை பொழுதுபோக்கிற்காகவும் லாப நோக்கத்துடனும் செய்து மக்களை திருப்தி அடைய செய்வது என்பது சாத்தியம் இல்லாத காரியம். நீங்கள் உணவு தயாரிக்கும் போது உங்களது மனதில் பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற முயற்சியுடன் செய்வீர்களானால் இந்த கேட்டரிங் தொழிலில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. 

என்னதான் உங்களுக்கு சமயக் கலை மீது ஆர்வமும் வேட்கையும் இருந்தாலும் கூட இதை தொழில்முறையாக செய்வதற்கு உங்களுக்கு ஒரு பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமையல் எரிவாயு வாகனங்கள் பாத்திரங்கள் வேலையாட்கள் சந்தைப் படுத்துதல் போன்றவற்றிற்கு நீங்கள் பெரியதொரு முதலீட்டை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி இட வேண்டியதாகும். வெளியிலிருந்து பார்க்கும் அளவிற்கு இந்த கேட்டரிங் தொழில் அவ்வளவு எளிமையானது அல்ல, நீங்கள் இந்த தொழிலில் வெற்றியடைய வேண்டுமென்றால் கடின உழைப்பு அயராத முயற்சி பல்வேறு உணவு கலாச்சாரங்களின் பற்றிய புரிதல்கள் போன்றவை கண்டிப்பாக தேவை. இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு கையாளுவீர்கள் என்பதே முக்கியம் எடுத்துக்காட்டாக 200 பேர் மட்டும் எதிர்பார்த்து சமைத்து வைத்த நிலையில் கூடுதலாக ஒரு நூறுபேர் வந்துவிட்டால் அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதை எல்லாம் பொறுத்து தான் உங்களுக்கு வெற்றி தீர்மானிக்கப்படும். ஆகவே இந்த கேட்டரிங் சர்வீஸ் துறையில் இறங்குவதற்கு முன்பாக நன்கு யோசித்து அதில் உள்ள உட்பிரிவுகளை புரிந்துகொண்டு தகுந்த வேலையாட்களை நியமித்து செயலாற்ற வேண்டும்.

  1. அனுபவ அறிவைப் பெற்றுக் கொண்ட பிறகு சொந்த தொழிலில் ஈடுபடுங்கள்: 

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறப்பான மற்றும் இலகுவான தொழிலாகவே மற்றவர் கண்களுக்கு புலப்படும். ஆனால் அந்த தொழிலில் இறங்கி செய்யும்போது மட்டுமே அந்தத் தொழிலில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள், நஷ்டங்கள், பிரச்சினைகள் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஆகவே நீங்களும் இந்த கேட்டரிங் தொழிலில் இறங்கி முழுநேர தொழிலாக ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட காலம் மற்றவரிடம் இதைப்பற்றிய வேலை செய்து அனுபவ அறிவு பெறுவது மிக முக்கியமான ஒன்றாகும். மற்றுமொரு கேட்டரிங் சர்வீஸ் எனக்கு இங்க வேலை செய்யும் போது ஏற்படக்கூடிய தவறுகள் மற்றும் புது புது வகையான உணவு தயார் செய்யப்படும் வழிமுறைகள் போன்றவற்றை அனுபவரீதியாக அறியும்போது உங்கள் தொழிலில் அத்தகைய தவறுகளை சரிசெய்து விரைவில் முன்னேற வழிவகுக்கும். அடுத்தவர்களிடம் சென்று வேலை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு லாப நோக்கத்துடன் அல்லாமல் இலவசமாக உணவு சமைத்து கொடுத்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப காலகட்டத்திலேயே நீங்கள் இத்தகைய உணவுகளை உங்கள் கையாலேயே சமைத்துக் கொடுக்கும் போது அது பிற்காலத்தில் தொழில் நுணுக்க வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  1. முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு தொழில் திட்டங்களை பட்டியலிடுங்கள்:

இந்த கேட்டரிங் தொழிலின் வளர்ச்சி, இத்தொழிலின் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் அனுபவம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து கொண்ட பிறகு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றால் என்னவென்றால் அனைத்து வகையான தொழில் போட்டிகளையும் சமாளித்து உங்களால் எப்படி தனித்து நிற்க முடியும் என்பதற்கான திட்டமிடுதல் ஆகும். உங்கள் கேட்டரிங் சர்வீஸில் எந்த வகையான உணவு கலாச்சாரத்தை பின்பற்றிய மெனுக்கள் அமைக்கப் போகிறீர்கள், உங்களது போட்டியாளர்கள் யார், எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து ஆர்டர் பெறுவீர்கள்  போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமிடல் ஆகும். குறிப்பாக உங்களது போட்டிகளை சமாளித்து அவர்களுக்கு ஏற்ற வகையிலான மெனுவில் உள்ள உணவை உங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகவும்  குறைந்த செலவில் வழங்கும் பொழுது அதிகப்படியான கவனத்தை ஈர்ப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் இத்தொழிலுக்கு இணையாக செய்யக்கூடிய மற்ற தொழிலான மற்ற தொழிலிலும் கவனத்தை செலுத்தி லாபம் அடைய முடியும். ஒரு குறிப்பிட்ட வகையான உணவு பிரபலம் ஆகிறது என்றால், ஏன் பிரபலமாகிறது, ஏன் அந்த உணவை அனைவரும் விரும்புகிறார்கள் போன்றவை பற்றி சிந்தித்து அதிலுள்ள ரகசியத்தை புரிந்து அதற்கேற்ற செயல் செய்ய வேண்டும்.

  1. சிறந்ததொரு கேட்டரிங் மெனுவை தயார் செய்ய வேண்டும்: 

நீங்கள் எந்த வகையான உணவு சமைப்பதில் வல்லவர்கள் என்பதை பிரபலப்படுத்த வேண்டும். குறிப்பாக சைவ உணவுகள், அசைவ உணவுகள், சைனீஸ் உணவுகள். மேற்கத்திய கலாசார உணவுகள் என ஏதோ ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் வல்லவர்களாக திகழ வேண்டும். உங்களது கேட்டரிங் நிறுவனத்தில் அனைத்து வகையான உணவுகளைத் தயார் செய்து வழங்க விரும்பினால் அதற்கு ஏற்ற ஒரு சிறந்த மெனுவை தயார் செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் தகுந்த வல்லுநர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களின் பொறுப்பின் கீழ் செயல்படுமாறு அமைக்க வேண்டும். பெருநகரங்களில் உங்களது தொழில் இருக்குமேயானால் அங்கு உள்ள நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களுக்கு உங்களது மெனு தயாரிக்கும்போது மிகச் சிறந்த தரமான மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட மெனு கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உங்கள் தொழில் இருக்குமேயானால் அதற்கு ஏற்ற வகையில் விலை குறைந்த மற்றும் தரம் உள்ள பாரம்பரிய கலாச்சார உணவு மெனுவை கொடுக்க வேண்டும். இந்த ஒரு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும் அத்தொழிலில் அன்றாட உலக வளர்ச்சி பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அவ்வாறாக உலகத்தோடு ஒன்றி உள்ள புதுப்புது உணவு கலாச்சாரத்தை நீங்கள் உங்களது உணவு முறையில் புகுத்தி செயல்படுத்தினால் மட்டுமே இத்தகைய தொழிலில் காலம் இருக்க முடியும்.  உங்களது கேட்டரிங் சர்வீஸ் இல் வழங்கக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் விலையும் மற்ற கேட்டரிங்கை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் இருந்தால் பெரும்பாலான வாடிக்கையாளர்களை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். 

  1. போக்குவரத்து வசதி உள்ள இடத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும்:

உணவகம் திறப்பதை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இடம் தேவைப் படாவிட்டாலும் உங்களது பாத்திரம் மற்றும் மற்ற பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு தகுந்த போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் வாடிக்கையாளர் எளிதாக உங்களை அணுகக்கூடிய இடமாகவும் இருத்தல் அவசியம். குறிப்பாக பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வாகனங்களை ஒப்பந்த அடிப்படையிலான வாடகை ஆகவும் அல்லது நிரந்தரமாகவும் வைத்துக் கொள்வது உங்களது தொழிலுக்கு நல்லது. மேலும் எரி பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு இடங்களுக்கு எரிபொருட்களை எடுத்து செல்லும் போது அதற்குரிய சான்றிதழ்களை வாகனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு காப்பீடு மற்றும் பொருட்களுக்குத் தேவையான காப்பீடு போன்றவற்றை சிறந்ததொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சமையல் தொழில் என்பது எப்பொழுதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருந்து செய்யக்கூடிய தொழில் ஆகும். அகவே உங்களிடம் வேலை செய்யும் சமையல் உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆபத்துக் காலத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும். 

  1. சிறந்த மார்க்கெட்டிங் உத்திகளை கையாள வேண்டும்: 

பாரம்பரியமிக்க பல சிறந்த சமையல் வல்லுனர்கள் தங்களது சமையல் தொழிலில் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு  காரணம் அவர்களிடம் சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள் இல்லாமல் இருப்பதாகும். இன்றைய இளைய தலைமுறைகள் சிறந்த மார்க்கெட்டிங் கையாண்டு பத்து ரூபாய் பெருமானமுள்ள பொருளை நூறு ரூபாய்க்கு விற்று அதிகப்படியான லாபங்களை சம்பாதிக்க கற்றுக் கொண்டு விட்டனர். ஆகவே அவர்களுக்கு இணையாக நீங்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு சிறப்புற வேண்டும் என்றால் அத்தகைய மார்க்கெட்டிங் உத்திகளை நீங்களும் பயன்படுத்தி செய்தால் மட்டுமே மிகச் சிறந்த வெற்றியை அடைய முடியும். பத்திரிக்கைகள், வலைதளங்கள், விளம்பரப் பதாகைகள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், உணவு விழாக்களில் பங்கேற்பது, இலவச உணவு ஏற்பாடு திட்டத்தை செய்வது என கிடைக்கும் அத்தனை மார்க்கெட் வாய்ப்புகளையும் பயன்படுத்தி உங்களது கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் ஆணித்தனமாக பதிய வைப்பதன் மூலமே இத்தொழிலில் வெற்றிக்கனியை ருசிக்க முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.