written by | October 11, 2021

கிராமப்புறங்களுக்கான சிறு வணிக யோசனைகள்

×

Table of Content


கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் செய்ய ஏற்ற 10 சிறு தொழில்கள்

ஏராளமான சிறு தொழில்கள் மூலம் அனைத்து இடங்களிலும் தொழில்  முனைவோர்கள் தங்களுடைய சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். கிராமப்பகுதிகளில் செய்யப்படும் பெரும்பாலான தொழில்கள் சிறுதொழில்கள் என்ற வகையில் உள்ளன. அரசாங்கமும் சிறு தொழில் தொடங்குபவர்களுக்கு, மாவட்ட அளவில் அமைந்துள்ள தொழில் மையங்கள் மூலம் பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில், ஸ்மால் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் ரூரல் ஏரியாஸ் இன் இந்தியா என்ற நிலையில் சிறிய நகரப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் செய்யக்கூடிய பத்து விதமான தொழில் பிரிவுகள் குறித்த செய்திகளை இங்கே பார்க்கலாம். 

1.கரும்பு ஜூஸ் தயாரிப்பு

தினசரி வருமானம் கிடைக்கும் சிறுதொழில் என்ற நிலையில் கரும்பு ஜூஸ் தயாரிப்பு உள்ளது. இந்த தொழிலை செய்ய சிறிய இயந்திரம் முதல் பெரிய எந்திரம் வரை ஆன்லைன் ஆர்டர் அளித்து பெற்றுக்கொள்ளலாம். ஒருவர் குடியிருக்கும் தெருவில் கூட தனது வீட்டு வாசலில் இந்த இயந்திரத்தை அமைத்து தொழிலை நடத்தலாம். அல்லது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய பேருந்து நிலையம், கடைவீதி, சாலை ஓரம் மற்றும் கோவில்கள் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் இந்த தொழிலை செய்யலாம். வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு சில நாற்காலிகள், கண்ணாடி டம்ளர்கள், ஸ்ட்ரா, மெஷினை வைப்பதற்கு ஏற்ற ஒரு டேபிள் ஆகியவை தொழிலுக்கான முதலீடுகள் ஆகும். 

ஆண்டு முழுவதும் வர்த்தக வாய்ப்பு கொண்ட இந்த தொழிலுக்கான மூலப்பொருளான ஜூஸ் தயாரிக்க ஏற்ற கரும்பு வகையை தகுந்த வேளாண் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிக்கே சென்று 3 நாட்களுக்கு ஒரு முறை தேவையான அளவு கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியதாக இருக்கும். 

2.மினி ரைஸ் மில்

ஸ்மால் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் ரூரல் ஏரியாஸ் இன் இந்தியா என்ற நிலையில் ஊர்ப்புறங்களில் மினி ரைஸ் மில் அமைத்து விவசாய மக்களுக்கு நெல் பாலிஷ் செய்யக்கூடிய தொழிலை செய்து வரலாம். அதாவது, கிராமம் அல்லது சிறிய நகரங்களில் உள்ள வேளாண் பெருமக்கள் உணவுக்காக சேமித்து வைக்கப்பட்ட நெல்லை பாலிஷ் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் விவசாய தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைத்த நெல்லை பாலிஷ் செய்து அரிசியாக மாற்ற வேண்டியதாக இருக்கும். மேலும், அரிசியையும் பாலிஷ் செய்ய வேண்டிய பணியையும் இந்த எந்திரம் செய்து முடிக்கிறது. அதனால், தொடர்ச்சியான வர்த்தக வாய்ப்புகள் இந்த தொழிலுக்கு உண்டு.

இந்த ரைஸ் மில் இயந்திரத்தை ஆன்லைன் முறையில் வாங்கிக் கொள்ள முடியும். அந்த எந்திரத்தில் அரிசி அல்லது நெல்லை எந்த அளவுக்கு பாலிஷ் செய்யவேண்டும் என்பதற்கான செட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையான அளவு டைம் செட் செய்து கொண்டு, எந்திரத்தின் மேற்பகுதியில் உள்ள வாய் அகன்ற பாத்திரத்தில் நெல் அல்லது அரிசியை இட்டு எந்திரத்தை இயக்க வேண்டும். அதற்கு தகுந்த வேகத்தையும் செட்டிங் செய்துகொள்ளலாம். இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சி பெற்ற தனிநபர்கள் அரசு உதவியுடன் இந்த தொழிலை மேற்கொள்ள முடியும். 

3.சமோசா தயாரிப்பு

சிற்றுண்டி வகைகளில் சமோசா என்பது பிரபலமான வகையாக மாறி இருக்கிறது. சமோசா தயாரிப்பு இயந்திரத்தில் மைதா மாவு மற்றும் மசாலா ஆகியவற்றை அவற்றிற்கு உரிய பகுதிகளில் சேர்த்துவிட்டால் போதும். அழகாக மடிக்கப்பட்ட சமோசா வெளியில் வந்துவிடும். அவற்றை எடுத்து எண்ணையில் பொறித்துவிட்டால் சமோசா விற்பனைக்கு தயார். இந்த இயந்திரத்தை பெரிய நகரங்களில் இருந்து ஆர்டர் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஆன்லைன் முறையிலும் வாங்க முடியும். இந்த இயந்திரத்தை இயக்கி மசாலா தயாரிக்க இருவர் இருந்தால் போதுமானது. வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் இந்த எந்திரத்தை அமைத்து சமோசா தயாரிப்பு சுலபமாக மேற்கொள்ள முடியும். அல்லது சிறிய கடை ஒன்றிலும் விற்பனையை தொடங்க முடியும். எல்லா காலங்களிலும் விற்பனை வாய்ப்பு உள்ள சமோசாவை அதன் சுவையின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள். 

4.லேபிள் பிரிண்டிங் தொழில்

சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளின் மீது அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் அல்லது விலை மற்றும் தயாரிப்பு விபரங்களை லேபிள் அல்லது ஸ்டிக்கர் வடிவத்தில் ஒட்டி வைத்திருப்பார்கள். மேலும் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் அவர்களுடைய நோட்டு புத்தகங்கள் மீது ஸ்டிக்கர் மற்றும் லேபிள் ஆகியவற்றை ஒட்டி இருப்பார்கள். இந்த லேபிள் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய எந்திரத்தை எளிதாக ஆன்லைன் முறையில் வாங்கி, வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் தொழில் செய்ய முடியும். அதற்கு கம்ப்யூட்டர் மற்றும் பிளைன் ரோல் லேபிள் ஸ்டிக்கர் ஆகிய இரண்டும் அவசியம்.

அதற்கான மினி ஸ்டிக்கர் பிரிண்டிங் மெஷின் பல்வேறு டிசைன்களில் சந்தையில் கிடைக்கிறது. தேவையான அளவில் மற்றும் டிசைனில் அந்த இயந்திரத்தை வாங்கி, முதலீட்டுக்கு ஏற்ப இந்த தொழிலை செய்து வரலாம். முன்னதாக தேவையான வடிவங்களில் ஸ்டிக்கர் தயாரிப்பை மேற்கொள்வதற்கான பயிற்சியை ஆன்லைன் முறையிலேயே பெற்றுக்கொள்ள இயலும். ஸ்டேஷனரி கடைகள், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகள் ஆகியவற்றில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம். 

5.பேண்டேஜ் துணி தயாரிப்பு

காயங்களில் கட்டுப் போடுவதற்கான சர்ஜிகல் பேண்டேஜ் துணி தயாரிப்பு என்பது போட்டி எதுவும் இல்லாத ஒரு தொழில் ஆகும். ஸ்மால் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் ரூரல் ஏரியாஸ் இன் இந்தியா என்ற நிலையில் சிறிய நகரங்களில் இந்த தொழிலை சுலபமாக செய்ய முடியும். சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது அருகில் உள்ள ஊர்களில் அமைந்துள்ள மருந்துக்கடைகள், மற்றும் மருத்துவமனைகளில் நேரடியாகவே ஆர்டர் பெற்று சப்ளை செய்ய இயலும். அதற்கு இரண்டு விதமான இயந்திரங்கள் தேவை. முதலாவது சர்ஜிகல் பேண்டேஜ் ரோலிங் மிஷின் ஆகும். இரண்டாவது சர்ஜிகல் பேண்டேஜ் கட்டிங் மெஷின் ஆகும். இவை இரண்டுமே ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் மூலம் வாங்க இயலும். 

மேலும், பேண்டேஜ் தயாரிப்பின் மூலப்பொருளான துணி, காக்கி பேப்பர் மற்றும் பசை ஆகியவற்றின் உதவியுடன்  இயந்திரங்களை பயன்படுத்தி பேண்டேஜ் ரோல் செய்து அதை கட்டிங் இயந்திரத்தில் பொருத்தி, 4 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை சரியான அளவுகளில் வெட்டி விற்பனைக்கு தயார் செய்து கொள்ளலாம். மேலும், டிரேட் லைசன்ஸ், டிரக் லைசன்ஸ், ஜி.எஸ்.டி ஆகிய உரிமங்கள் இதற்கு அவசியம்.

6.ஐஸ் கிரீம் தயாரிப்பு

கோடை காலத்தில் மட்டும் ஐஸ்கிரீம் சந்தை வாய்ப்பை பெற்றிருப்பதில்லை. பிராண்ட் நேம் மற்றும் சுவை கொண்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆண்டு முழுவதும் வர்த்தக வாய்ப்பை பெற்றிருக்கிறது. சிறிய கடையில் இந்த தொழிலை சுலபமாக தொடங்க இயலும். அதற்கு ஐஸ்கிரீம் மெஷின் மற்றும் அடிப்படை மூலப்பொருட்களான பால், ஐஸ் கிரீம் பவுடர், கலர் எஸென்ஸ்  மற்றும் கோன் கப் ஆகியவை தேவைப்படும். அவற்றை ஆன்லைன் முறையில் சுலபமாக வாங்கிக் கொள்ளலாம்.

சுத்தமான ஒரு பாத்திரத்தில் நான்கு லிட்டர் பால் விட்டு, அதில் ஒரு கப் ஐஸ்கிரீம் பவுடரை கலந்து அதை இயந்திரத்தின் உள்ளே ஊற்றி, வெண்ணிலா, மேங்கோ, ஸ்ட்ராபெரி போன்ற ஃப்ளேவர்களை இட்டு, குறிப்பிட்ட டைம் செட்டிங் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஐஸ்கிரீம் குறிப்பிட்ட நேரத்தில் தயாராகி விடும். எந்திரத்தில் உள்ள பட்டனை இயக்கி ஐஸ்கிரீமை வெளியிலெடுத்து தகுந்த கப் அல்லது கோன் மூலம் நிரப்பி, விற்பனைக்கு அனுப்பலாம்.

7.மாப் தயாரிப்பு தொழில்

ஸ்மால் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் ரூரல் ஏரியாஸ் இன் இந்தியா என்ற அடிப்படையில் மாப் என்ற தரை துடைப்பான் தயாரிப்பு என்பது எல்லா காலங்களிலும் வர்த்தக வாய்ப்பை பெற்றுள்ளது. வீட்டில் உள்ள ஒரு அறையில், இதற்கான தயாரிப்பை மேற்கொள்ளலாம். 

செமி ஆட்டோமேட்டிக் மாப் மேக்கிங் மிஷின் என்ற எந்திரத்தை பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் அதற்கான மூலப் பொருள் என்ற வகையில் காட்டன் மாப் யார்ன், மாப் ஸ்டிக் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டு மாப் தயாரிக்க தொடங்கலாம். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சரியான முறையில் பிளாஸ்டிக் கவர் மூலம் பேக்கிங் செய்ய வேண்டும். காட்டன் யார்ன் சரியான அளவில் கட்டிங் செய்து கொண்டு, அதன் மத்தியில் கிளிப் செட் செய்து, எந்திரத்தில் பொருத்தி, அழுத்தினால் கிளிப்பில் கயிறு செட் ஆகி விடும். அதில் கச்சிதமாக ஸ்டிக் பொருத்து மாப்பை தயார் செய்து விடலாம். உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு கொண்ட பிசினஸ் இதுவாகும்.

8.பொம்மை தயாரிப்பு

இந்த தொழில் பிரிவில் நல்ல கற்பனை வளமும், விதவிதமான மாடல்கள் உருவாக்கக்கூடிய திறமை பெற்ற தொழில்முனைவோருக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக் கூடிய தொழில் இதுவாகும். வீட்டில் உள்ள ஒரு  அறையை பொம்மைகள் தயாரிப்புக்கு என்று பயன்படுத்திக் கொள்ளலாம். மூலப்பொருட்கள் என்ற முறையில் சார்ட் பேப்பர், வெல்வெட் துணி வகைகள், கட்டிங் டேபிள், அலமாரி, பெரிய சைஸ் கத்தரிக்கோல், சிறிய சைஸ் கத்தரிக்கோல், பிளாஸ்டிக் டிரே, செல்லோ டேப் ஸ்டாண்ட், பைபர் காட்டன் மற்றும் ஃபர் கிளாத்  ஆகியவை  தேவைப்படும். மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

நாய், பூனை, கரடி, குரங்கு மற்றும் குழந்தை ஆகிய வடிவங்களில் பொம்மைகளை தயார் செய்ய சார்ட் பேப்பரில் அளவை வரைந்து கொள்ள வேண்டும்.அந்த அளவின்படி ஃபர் கிளாத் பின்புறமாக வைத்து மார்க்கிங் பேனா மூலம் வரைந்து கச்சிதமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் உட்புறமாக தையல் போட்டுக்கொண்டு, உள்ளுக்குள் பஞ்சு நிரப்பி அடைத்த பின்னர் பொம்மைகளுக்கான கண் மற்றும் மூக்கு பட்டன்களை அமைத்து உருவத்தை உருவாக்கி கொள்ளலாம். 

9.பினாயில் தயாரிப்பு

குறைந்த செலவில் கூடுதலான லாபம் அளிக்கக்கூடிய பினாயில் தயாரிப்பு என்பதை சுலபமாக வீடுகளிலேயே மேற்கொள்ள இயலும். கிராமப்புறங்களுக்கு ஏற்ற தொழில் இதுவாகும். காரணம் தண்ணீர் வசதி அங்கு நல்ல விதமாக கிடைக்கும். இந்த தயாரிப்பை மேற்கொள்வதற்கு மூலப் பொருள்களாக பெனாயில் காம்பவுண்ட், தண்ணீர், தேவையான கலர், வாசனைப் பொருள் ஆகியவை உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தையுமே கெமிக்கல்ஸ் ஸ்டோர் மூலம் வாங்கிக் கொள்ளலாம். தயாரிப்பு முறை என்பது மிகவும் எளிதானது பினாயில் காம்பவுண்ட் உடன் தண்ணீரை தேவையான அளவு நன்றாக கலக்கி, வாசனை பொருளை சேர்த்து, தயாரிக்கப்பட்ட பினாயிலை தகுந்த அளவு கொண்ட பாட்டில்களில் நிரப்பி நேரடியாகவே வாடிக்கையாளர்கள் வீடுகளில் விற்பனை செய்ய முடியும்.

10.கப் சாம்பிராணி தொழில்

ஸ்மால் பிசினஸ் ஐடியாஸ் ஃபார் ரூரல் ஏரியாஸ் இன் இந்தியா என்ற அடிப்படையில் அமைந்த சிறுதொழில், பூஜை செய்வதற்கு பயன்படக்கூடிய பொருள் கப் சாம்பிராணி தயாரிப்பு ஆகும். இது தற்போது சுலபமாக தயாரிக்க ஏற்ற இயந்திரம் சந்தையில் கிடைக்கிறது. அதன்மூலம் பல்வேறு நிறங்கள் கொண்ட வாசனை சாம்பிராணி தயார் செய்ய முடியும். அதற்கான மூலப்பொருள்கள் என்ற நிலையில் கரித்துகள், ஜிகட், மரத்தூள், சாம்பிராணி, வாசனைப்பொருள் மற்றும் தகுந்த ரசாயனம் ஆகியவை தேவைப்படும். இவை அனைத்தையும் நன்றாக காயவைத்து எடுத்துக்கொண்டு இயந்திரத்தின் கீழே உள்ள தட்டில் கரித்துகளை இட்டு, உலகில் மற்ற பொருட்களையும் போட்டு கைப்பிடியை சுற்றி அழுத்தி விட்டால் சாம்பிராணி தயார். ஊரில் உள்ள கோவில்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் எளிதாக இந்த சாம்பிராணியை விற்பனை செய்ய முடியும். மூலப் பொருள்கள் அனைத்துமே பூஜா கடைகளில் கிடைக்கின்றன. 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.