written by | October 11, 2021

கலைஞர்கள் வணிகம்

×

Table of Content


ஓவியக்கலையை தொழிலாக நடத்துவதற்கான வழிமுறைகள்

அறிவியலும், தொழில்நுட்பமும் சம அளவில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மறைமுகமான தொழில் வாய்ப்புகள் கொண்ட துறைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆர்டிஸ்ட் பிசினஸ் என்று சொல்லப்படும் ஓவியக்கலை தொழில் என்பதாகும். காண்பவரைக் கவர்ந்திழுத்து, மனோரீதியாக தன்வயப்படுத்தும் ஓவியக்கலை மூலம் தெரிவிக்கப்படும் கருத்து இனம் மொழி மதம் நாடு ஆகிய நிலைகளை கடந்து நிற்பதாகும்.

சர்வதேச அளவில் பிக்காசோ,  லியனார்டோ டாவின்சி உள்ளிட்ட கலைஞர்களின் ஓவியங்கள் மிகுந்த மதிப்பைப் பெற்றிருக்கின்றன. இந்திய  அளவில் ரவிவர்மா முதல் இன்றைய காலகட்டத்தில் உள்ள ஓவியர்கள் வரை புகழ்பெற்ற பல்வேறு ஓவியர்களும் உள்ளனர். ஓவியங்களில் வெளிப்படும்  நுட்பமான உணர்வு மற்றும் கலைத் திறமை ஆகியவற்றுக்காகவே  அவற்றை வாங்கக்கூடிய உலக அளவிலான கலா ரசிகர்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள். அதனால், ஆர்டிஸ்ட் பிசினஸ் செய்ய  விரும்புபவர்களுக்கு நிச்சயம் கமர்சியல் ரீதியான வேல்யூ இருக்கவே செய்கிறது. அதற்கேற்ப ஓவியத்தில் திறன் பெற்றவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை மேலும் தொழில்நுட்ப பயிற்சி பெறுவதன் மூலமாக கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீடுகளில் ஓவியங்கள்

தங்களுடைய தனி அறைகள் வீடுகளின்  ஹால் ஆகிய பகுதிகளில் கலை அழகு மிளிர கூடிய ஓவியங்களை அழகாக பிரேம் செய்து மாட்டி வைப்பது பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பெருநகரங்களில் அமைந்துள்ள மாபெரும் ஷாப்பிங் மால்கள், பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற ஓவியர்களின் கலைப்படைப்புகளை பெரிய அளவில் பிரேம் செய்து காட்சிக்கு வைப்பது நாகரீகமாக கருதப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற ஓவியங்களின் தொகுப்புகளை  தகுந்த பணத்தை அளித்து அவற்றை வாங்கி சேகரித்து  வைக்கக்கூடிய ஹாபி என்ற பொழுதுபோக்கு கொண்ட பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் ஆர்டிஸ்ட் பிசினஸ் என்பது முயற்சி செய்பவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பாக அமையும்.

இயற்கை மற்றும் அழகியல் சார்ந்த ஓவியங்கள் மட்டுமின்றி, தெய்வ உருவங்கள், விளம்பர ஓவியங்கள், கட்-அவுட்கள், திரைப்படங்களுக்கு வரையப்படும் பிரம்மாண்ட போஸ்டர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான கட்-அவுட்கள், விளம்பரத் தட்டிகள்  ஆகியவற்றுக்கு இன்றும் மதிப்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியால் ஃபிளக்ஸ் பேனர் வகைகள் தற்போது பயன்படுத்தப்பட்டாலும், தனி மனிதருடைய கலைத்திறனை அவர் வரையும் ஓவியங்கள் மூலம் ரசிக்கக்கூடிய மனோபாவம் இன்னும் மறைந்து விடவில்லை. சிற்பக்கலைக்கு முன்னோடியான கலைவடிவமாக ஓவியம் இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருநகரங்கள் ஆகியவற்றின்  சாலை ஓரங்களில் நாம் பார்க்கக்கூடிய பல்வேறு பிரபல மனிதர்களின் சிலைகள் அனைத்துமே முதலில் ஓவியமாக வரைந்து அதன் தோற்றத்தை முடிவு செய்து கொண்ட பின்னரே சிலையாக அது வடிக்கப்பட்டதாகும்.

ஓவியர்களுக்கான மார்க்கெட் வேல்யூ

தனிப்பட்ட கலைத்திறன் கொண்ட தஞ்சாவூர் ஓவியம், கட்டிடங்களின் அமைப்புக்கு ஏற்றவகையில் சுவர்களில் வரையப்படும் மியூரல் ஓவியம், தனிப்பட்ட சுவர் ஓவியம், இலைகள் மற்றும் பூக்களின் சாறுகளை பயன்படுத்தி வரையக்கூடிய கலம்காரி ஓவியம், பாத்தி ஓவியம் என அழகியல் சார்ந்த பல்வேறு ஓவிய முறைகள் இன்றும் பிரபலமாக இருக்கின்றன. இயற்கை காட்சிகள், கற்பனைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை முறை, இதிகாசம் மற்றும் புராணக் கதைகள் ஆகியவை ஓவியத்துக்குரிய கருப்பொருட்களாக கொண்டு உருவாக்கப்படும் அனைத்து வகையான கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த ஓவியங்களுக்கு இன்றும் சந்தை மதிப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இல்லஸ்ட்ரேஷன் டிராயிங், லைஃப் ட்ராயிங், எமோஷனல் டிராயிங், அனாலிடிக் டிராயிங், பெர்ஸ்பெக்டிவ் டிராயிங், டயக்ராமேட்டிக் டிராயிங், ஜியோமெட்ரிக் டிராயிங் மற்றும் லைன் டிராடிங் என்ற தொழில்நுட்ப ரீதியான  விளக்கங்களை அளிக்கக்கூடிய ஓவியக் கலைக்கும் இன்றும்  பிரகாசமான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன.

விளம்பர போர்டுகள் எழுதுவது, சினிமா சிலைடுகள் தயாரித்தல், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் எழுதுதல், ஸ்டென்சில் விளம்பரங்கள், புத்தக அட்டைப் படம் வரைதல், சார்ட்டுகள், வாழ்த்து மடல்கள் வரைதல், பென்சில் ஓவியம், ஆயில் பெயிண்டிங், போஸ்டர் கலர் வேலைகள், புகைப்படத்திற்கு வண்ணம் தீட்டுதல், கமர்ஷியல் டிசைன்கள், பலவிதமான எழுத்துக்கள் எழுதும் முறை மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை வரைதல் ஆகிய வழக்கமான முறைகளில் ஆர்டிஸ்ட் பிசினஸ் அணுகுமுறைகள் இருக்கின்றன.

கலர் மிக்ஸிங், ஸ்டிக்கர் கட்டிங், வினைல் போர்டுகள், பிளக்ஸ் டிஜிட்டல் பிரிண்டிங், கிராபிக்ஸ், போட்டோஷாப் வேலைகள், கார்ட்டூனிங், டூட்லிங், தொழில்நுட்பம் சார்ந்த ஸ்கெட்ச் வரைவுகள், ரியாலிட்டி டிராயிங், கான்செப்சுவல் டிராயிங், லாண்ட்ஸ்கேப் டிராயிங், சிட்டிஸ்கேப், அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் உள்ளிட்ட கண்டெம்பரரி ஓவியங்கள் என்று பலதரப்பட்ட நிலைகளில் தொழில் வாய்ப்புகளை இன்றைய சூழலில் பெற முடியும். அதனால் ஆர்டிஸ்ட்  பிசினஸ் என்பது எப்போதும் தொழில் வாய்ப்புகளை கொண்டதாகவே இருந்து வருகிறது. இந்தத் துறையில் திறமை கொண்டவர்கள் தங்களுடைய திறமையை மிக சரியாக மார்க்கெட்டிங் செய்தால்  ஆர்டிஸ்ட் பிசினஸ் என்ற துறையில், ஆர்ட் டைரக்டர், கார்ட்டூனிஸ்ட்,  ஜுவல்லரி ஆர்டிஸ்ட், டாட்டூஸ் ஆர்டிஸ்ட், அட்வர்டைசிங் கம்பெனி ஆர்டிஸ்ட் மற்றும் பேஷன் டெக்னாலஜி, ஆர்ட் டீச்சர் ஆகிய துறைகளில் வர்த்தக ரீதியாக எளிதாக வெற்றி பெறலாம். 

இல்லஸ்ட்ரேஷன் டிராயிங் 

இந்த வகையில் வரையப்படும் ஓவியம் என்பது குறிப்பிட்ட ஒரு ஆவணம் அல்லது கட்டிடம் ஆகியவற்றின் உடைய மொத்த தோற்றத்தை வரைபடமாக காட்சிப் படுத்துவதாகும். சம்பந்தப்பட்ட பிராஜெக்ட் தொடர்புடைய அனைத்து விதமான தகவல்களையும் அதனுடைய வடிவம் நிறம் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கலை வடிவம் வெளிப்படுத்துகிறது.  இந்த பணிகளை தற்போது கம்ப்யூட்டர் மூலம் செய்யக்கூடிய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. ஆனால், அதைப் பயன்படுத்தி தேவைப்படக்கூடிய ஓவியங்களை உருவாக்குவதற்கு நிச்சயம் ஓவியக்கலையில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.

லைஃப் டிராயிங்

ஓவியக்கலையின் இந்த வடிவமானது பெயருக்கேற்ப முற்றிலும் இயற்கையான தன்மையை பிரதிபலிக்கும் கலையின் வெளிப்பாடாகும் அதாவது,  ஒரு தனி மனிதரோ அல்லது ஒரு நகரின் தோற்றமும் எதுவாக இருந்தாலும் உள்ளது உள்ளபடி அதன் தன்மையை பதிவு செய்வது இதன் தனித்தன்மையாகும்.  இந்த துறையில் நவீன வடிவங்களாக பெரிய மனிதர்களின் ஓவியங்களை வரைவது மட்டுமல்லாமல் போர்ட்ரெச்சர், ஸ்கல்ப்சர்,  மெடிக்கல் இல்லஸ்ட்ரேஷன், கார்ட்டூனிங் அண்டு காமிக்ஸ் புக் இல்லஸ்ட்ரேஷன் உள்ளிட்ட வெவ்வேறு தளங்களில் ஓவியக் கலையின் இந்த வடிவத்தில் ஆர்டிஸ்ட் பிசினஸ் மேற்கொள்வதற்கான வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

எமோஷனல் டிராயிங்

கலையின் இந்த வடிவத்தில்  மனிதர்களது விதவிதமான உணர்வுகள் காட்சிப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாகும். குறிப்பாக பெண்களின்  அழகிய மனோபாவங்களை இந்த ஓவியக் கலை வடிவத்தில் தற்கால ஓவிய கலை வல்லுனர்கள் அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.  நவீன பாணியிலான ஓவியங்களை வாங்க விரும்புபவர்கள் இதுபோன்ற எமோஷனல் டிராயிங் வகைகளை தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது. மனித சுபாவங்களை ஓவியமாக பார்ப்பது என்பது கண்ணாடியில் தெரியக்கூடிய ஒரு பிம்பத்தை பார்க்கும் உணர்வை உருவாக்கும் என்பதால் மனோதத்துவ ரீதியாக இவ்வகையிலான ஓவியங்கள் பலரது கவனத்தை கவர்ந்து உள்ளதாக குறிப்பிடலாம். 

அனாலிடிக் டிராயிங்

ஒரு திட்டம் அல்லது பொருள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் தெளிவான ஸ்கெட்ச் வடிவத்தில் வரையப்படும் ஓவியம் இதுவாகும். சம்பந்தப்பட்ட திட்ட வரைபடத்தில் சின்ன சின்ன விபரங்கள் கூட தெளிவான குறிப்புகளுடன் சொல்லப்பட வேண்டும் என்பது இந்த  வரைகலை ஓவியத்தின்  அடிப்படைத் தத்துவமாகும்.

பர்ஸ்பெக்டிவ் டிராயிங்

ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஓவியக் கலையை முப்பரிமாணம் கொண்ட தோற்று நிலைக்கு எடுத்துச் செல்லும் கலையின் நவீன வடிவம் இதுவாகும். இவ்வகை ஓவியங்கள் கண்காட்சிகள், ஃபைவ் ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் ஆகியவற்றில் முன்புறமாக காட்சிப்படுத்தப்படுகின்றன.  இந்த ஓவிய முறையில் பொருட்களுக்கு பின்னாலுள்ள வெற்றிடம், தூரம்,  காட்சிப்படுத்தப்படும் பொருளின் அளவுகள்,  லைட் அண்ட் ஷேடு மற்றும் இதர பொருள்கள் ஆகியவற்றை கச்சிதமான அளவுகளில் வரையப்படும்.

டயக்ராமேட்டிக் டிராயிங்

ஆடை வடிவமைப்பு கலைஞர்  அல்லது ஒரு ஆர்கிடெக்ட் ஆகியோரின் எந்த ஒரு கருத்தையும் அல்லது சிந்தனையையும் ஒரு காகிதத்தில் காட்சிப்படுத்த வேண்டுமானால் அதற்கு இந்த முறை பெரிதும் பயன்படுகிறது. சரியாக சொல்வதென்றால் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட நடவடிக்கை வரைபடம்  என்று இந்த முறையை குறிப்பிடலாம்.  இந்த முறையில் சிந்தனை மற்றும் கருத்திற்கு ஏற்ப மாற்றங்களை அவ்வப்பொழுது செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோமெட்ரிக் டிராயிங்

இந்த ஓவியக் கலை வடிவத்தின் பெயரிலேயே அதன் பொருள் உள்ளது. இவ்வகை ஓவியங்கள் பெரும்பாலும் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன.  ஒரு கட்டத்தில் அமைய உள்ள பில்லர், பீம், சுவர் பிரிவுகள் உள்ள்ட்ட பல்வேறு  கான்கிரீட் அமைப்புகளின் வடிவத்தை இந்த முறையில் துல்லியமாக வரைந்து காட்சிப்படுத்த முடியும்.

கேரிகேச்சர் ஆர்ட்ஸ்

இந்த வகையான ஓவியம் என்பது சற்று வேடிக்கையாகவும் வினோதமான தோற்றங்களும் குறிப்பிட்ட சம்பவங்கள் அல்லது மனிதர்களை ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்துவதாகும். பத்திரிக்கைகளில் வரக்கூடிய கேலிச்சித்திரம் என்பது இந்த வகையிலான கலை வடிவம் ஆகும்.  இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் ஒரு தனி மனிதனுடைய சுபாவத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களது உடல் அமைப்பை வித்தியாசமான கோணத்தில் அதாவது அதீதமான தோற்றம் அளிப்பது போன்று காட்சிப்படுத்துவதாகும்.  அச்சு ஊடகமான பத்திரிக்கை துறையில் கேரிகேச்சர் ஆர்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 

வீடியோ கேம் டிசைனர்

இந்த துறையை பற்றி அதிகமாக எதுவும் சொல்ல வேண்டியது இருக்காது.  தொழில்நுட்பமும் கலை உணர்வும் இணைந்த ஒரு நவீன காட்சிப்படுத்தப்படும் இந்த விளையாட்டு வகை  வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் கவரக் கூடியதாக இருக்கிறது. இதில் காட்சிப்படுத்தப்படும் கற்பனை உருவங்களை நிஜமாக நடமாட விடுவதில் ஒரு ஓவியருக்கு அசாதாரணமான திறமை அவசியம்.

கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் டிசைனர்

மல்ட்டி மீடியா சம்பந்தமான இந்தத் துறையில் வாய்ப்புகள் என்பது உலக அளவில் அமைந்திருக்கிறது.  கற்பனையும் ஓவியத் திறமையும் கொண்ட கலைஞர்களுக்கு இந்த வடிவமைப்பு துறையில் சிறப்பான எதிர்காலம் உள்ளது.  கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை பெற்று இந்த துறையில் காலடி எடுத்து வைக்கக்கூடிய ஓவியக் கலைஞர்கள் தொழில் ரீதியாக வெற்றி பெறுவது எளிதான விஷயம். 

ஆர்டிஸ்ட் பிசினஸ் துறை தொழில் முனைவோர்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவேண்டுமானால் அவர்களுக்கான தனிப்பட்ட இடத்தை கண்டறிய வேண்டும்.  ஓவியக்கலையின் எந்தப்பிரிவில் அவர்கள்  கால் பதித்து உள்ளார்களோ அந்த துறை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதே துறையைச் சார்ந்த பல்வேறு நிபுணர்கள் உடன் இணைந்து செயல்படும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே துறையை சார்ந்த நிபுணர்கள் ஒன்றிணைந்து சமூக அளவிலான சேவைகளை செய்வதன் மூலம் பொது மக்கள் கவனத்தை கவர முடியும்.  எல்லாவற்றையும்விட முக்கியமானது, ஆர்டிஸ்ட் பிசினஸ் செய்யும் ஓவியக் கலை வல்லுனர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட இணையதளத்தை சிறப்பாக வடிவமைத்து செயல்படுத்தி வர வேண்டும். அதன்மூலம் இதர தொழில் முனைவோர்கள் போல ஓவியக் கலை வல்லுனர்களும் தங்களுக்கான இடத்தை சமூகத்தில் பெறமுடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.