தனி உரிமையாளர் வணிகம் என்றால் என்ன? தனி உரிமையாளர் வணிகம் எவ்வாறு செயல்படுகிறது
தனி உரிமையாளர் வணிகம் என்றால் என்ன
இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நீங்களே கூட உங்களுக்கே தெரியாமல் தனி உரிமையாளர் வணிகத்தை நடத்திக்கொண்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனி உரிமையாளர் வணிகம் என்பது சிறு வணிகத்தை ஒரே ஆளாக தனியாக ஆரம்பித்து நடத்துவது ஆகும். இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த தனி உரிமையாளர் வணிகத்தை எடுத்து நடத்தக்கூடிய அனுமதி இருக்கிறது. இத்தகைய வணிகத்திற்கு எந்த ஒரு முதலீடு வரையறையும் அனுமதி சான்றிதழ்களும் தேவையில்லாமல் செய்யக்கூடிய தொழிலாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் இதனைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான வணிகம் நடத்துவதற்கு நடப்பு வங்கி கணக்கு இருத்தல் வேண்டும் என்ற அவசியம் இல்லாது இருப்பதும் சேமிப்புக் கணக்கிலேயே இத்தகைய வணிகத்தை நடத்த முடியும் என்பதும் இந்த தனி உரிமையாளர் வணிகத்தை மக்களிடம் விழிப்புணர்வு அடைய செய்யாது இருப்பதற்கு காரணமாகும். உங்களது நிறுவனத்தின் பெயரில் நடப்புகள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற பட்சத்தில் அரசாங்க அதாவது சான்றிதழ் பெற்ற பிறகு தொழில் சம்பந்தமான வங்கிக் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். தனி உரிமையாளர் வணிகத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக சிகையலங்கார கடை, மளிகை கடை, அழகுக்கலை நிலையங்கள் போன்றவற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.
தனி உரிமையாளர் வணிகத்திற்கான வரையரை
- பெயருக்கு ஏற்றார் போல் இது ஒரே ஒரு உரிமையாளர் மட்டும் இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களை கொண்ட நிறுவனங்களை இதில் சேர்க்க முடியாது.
- அவரது நிறுவனத்தில் வரக்கூடிய அனைத்து விதமான லாப நஷ்டங்களுக்கு அவர் மட்டுமே முழு பொறுப்பு ஏற்பார்.
- அவரது தொழில் சார்ந்த முடிவுகள் எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் அவர் ஒருவருக்கு மட்டுமே இருக்கும்.
- உங்கள் கடை அல்லது நிறுவனம் வழியாக ஏதேனும் கடன் பெற்றிருந்தால் அந்த கடனை கட்டத் தவறினால் உங்கள் மீது தனிப்பட்ட முறையில் வழக்குகளை தொடுக்க முடியும்.
- நிறுவனம் அல்லது கடையில் ஏற்பட்ட நஷ்டங்களை தனது சொந்த சொத்துக்களை விற்றாவது கட்டக்கூடிய பொறுப்பு அவருக்கு மட்டும் இருக்கிறது.
- உங்கள் வணிகம் மற்றும் நிறுவனங்களில் கிடைக்கும் லாபத்திற்காக தனி வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு ஊதியம் வாங்கும் தொழிலாளர் எவ்வாறு வரி செலுத்துவது அதேபோல் உங்கள் லாபத்திற்கு ஈடான தொகையை நீங்கள் செலுத்தினால் போதுமானது.
தனி உரிமையாளர் வணிகத்தின் சிறப்பு அம்சங்கள்
-
A) உடனடியாக களத்தில் இறங்கி தொழில் ஆரம்பிக்கலாம்
- தொழில் தொடங்குவதற்கு ஒரே ஒரு ஆள் போதும் ஆனதாலும் எந்தவித சான்றிதழ்களும் அவசியம் இல்லை என்பதாலும் உடனடியாக களத்தில் இறங்க முடியும்.
- சட்ட பூர்வமான சிக்கல்கள் மிகவும் குறைந்ததாக இத்தகைய தனி உரிமையாளர் வணிகம் விளங்குவதால் பெரும்பாலான சிறு தொழில் தொடங்க விரும்பும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
- மருந்தக நிலையம், நகை பட்டறை போன்ற குறிப்பிட்ட சில தொழில்களுக்கு மட்டுமே நீங்கள் சான்றிதழ்கள் பெற வேண்டியதாக இருக்கும்.
- உங்களுக்கு தொழில் தொடங்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல் அடுத்தவரிடம் இருந்து எந்தவித யோசனையும், அனுமதியும், அறிவுறுத்தலும் இல்லாமல் உங்களது தொழிலை நிறுத்தி கொள்ளவோ மாற்றிக் கொள்ளவோ முடியும்.
- தொழில் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு உரிமையாளர்களுக்கு வரம்பற்ற அதிகாரம் இருப்பதால் ஆபத்து மற்றும் தேவையான காலத்தில் அனைத்து விதமான முடிவுகளையும் விரைவாக எடுக்க முடியும்.
-
B) லாப நஷ்டங்களுக்கு முழுப்பொறுப்பு ஏற்கும் தன்மையுடையது
-
- தங்களது நிறுவனத்தில் கிடைக்கும் அனைத்து லாபங்களும் உரிமையாளர் ஒருவருக்கு கிடைப்பதால் தங்களது விற்பனை பொருட்களுக்கு என்ன மாதிரியான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது.
- கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கடன் வசூலிக்க தனி உரிமையாளர்களின் சொந்த சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொழில் கடன்களை வழங்க முன்வரும்.
- உதாரணமாக ஒரு மளிகைக் கடை வைப்பதற்காக கடன் வாங்கும் ஒரு நபரால் தனது கடை வியாபாரம் நஷ்டத்தினால் கடனை கட்டத் தவறினால் அவரது பெயரில் உள்ள வீட்டை ஏலம் விட்டு கடனை பெறக் கூடிய அதிகாரம் வாங்கியதற்கு உண்டு.
- தனிநபர் வருமானம் தொழில் வருமானம் என்ற இருவேறு வருமானத்தை நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை. உங்களது கடையில் அதே நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து வருமானமும் உங்களது தனிநபர் வருமானத்தின் அளவிலேயே வரும் என்பதால் அதற்கேற்றவாறு வரி சலுகையை பெற்று கொள்ள முடியும்.
- தனி உரிமையாளர் நடத்தும் வணிகத்தில் தலையிட எந்தவித நபர்களுக்கும் உரிமை இல்லை. அவர்களது வணிகத்தின் கீழ் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே நடக்கும் என்பதால் எந்த கூச்சல் குழப்பங்கள் இல்லை.
-
C) தொழில் ரகசியத்தை பாதுகாக்க முடியும்
- ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருப்பதாலும் அனைத்துவிதமான முடிவுகளையும் அவருக்கு எடுக்கும் அதிகாரம் இருப்பதாலும் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் வெளியில் செல்லும் என்ற ஐயப்பாடு இல்லை.
- தனி உரிமையாளர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழில்களின் வரவு செலவுகளை முழுவதுமாக மக்களின் பார்வைக்கு, அரசாங்கத்தின் பார்வை கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை.
- வியாபாரத்தில் முழு முதலீடும் உங்களது பெயரில் இருப்பதால் உங்களது நிறுவனத்தின் கீழ் வரும் லாபங்களை யாரும் பங்கு கேட்கும் வாய்ப்புகள் இல்லை. உரிமையாளரின் விருப்பத்தின் கீழ் மட்டுமே எந்த ஒரு செயல்பாடும் நிறுவனத்தில் நடக்க உள்ளதா மிகுந்த ஆளுமை மிக்க நபராக உங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
- உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் வாரிசுகளுக்கு இந்த முழு பொறுப்பையும் வழங்குவதற்கான வாய்ப்பு இத்தகைய தனி உரிமையாளர் தொழிலில் கீழ் அமைகிறது. யாரை உங்களது தொழில் வாரிசாக ஆக்க வேண்டும் என்ற முழு பொறுப்பும் உங்களிடம் மட்டுமே இருக்கிறது.
தனி உரிமையாளர் வணிகத்தை எவ்வாறு தொடங்குவது
நீங்கள் பொழுதுபோக்கிற்காக செய்யக்கூடிய சிறிய விஷயங்கள் தனி உரிமையாளர் தொழிலின் வரையறைக்குள் அமைய வாய்ப்புள்ளது. ஆகவே லாப நோக்குடன் செய்யக்கூடிய எல்லாவிதமான தொழில்களையும் பதிவு செய்து அதற்கேற்ற பலன்களையும் சலுகைகளையும் பெற முயற்சிப்பது உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் குழந்தைகளுக்கு பாட்டு நடனம் சொல்லிக் கொடுப்பதை பொழுதுபோக்காக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு செய்தால் நீங்களும் ஒரு தனி உரிமையாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்க. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமான வணிகத்திற்கு சில அனுமதி சான்றிதழ்களை பெறுவது அவசியமாக இருக்கிறது என்பதால் அனைத்து சரியான உரிமங்களையும் அனுமதிகளையும் பெறுங்கள். நீங்கள் செய்யும் தொழிலுக்கு நீங்கள் தான் முதலாளி என்ற ஆதாரம் இருந்தால் தான் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் செய்ய முடியும் என்பதால் இத்தகைய சான்றிதழ் பெறுவது நல்லதாகும்.
பெரும்பாலான மக்கள் தனிநபர் மட்டும் பிரீலன்ஸிங் ஆக செய்யக்கூடிய தொழிலை தனி உரிமையாளர் வணிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் நீங்கள் பணியாளர்களை ஊதியத்தின் அடிப்படையில் நியமித்து கொள்ள முடியும். உங்களது நிறுவனத்திற்கு வைக்கப்படும் பெயரை “டிரேட் நேம்” ஆக மாற்றிக் கொள்வதன் மூலம் உங்களுக்கான தனித்தன்மையை பெறுவதோடு மட்டுமல்லாமல் பிற்கால வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வணிகத்திற்கான தனியானதொரு வங்கி கணக்கு வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தாலும் உங்களுக்கான வரிச் சிக்கல்கள் மற்றும் கணக்கு வழக்குகளை புரிந்துகொள்ளும் எளிதாக புரிந்து கொள்வதற்கும் தனி ஒரு வங்கிக் கணக்கை நிறுவனத்திற்காக தொடங்க வேண்டும். உங்களது நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் லாப தொகையை முழுவதுமாக சொந்த அக்கவுண்டிற்கு மாற்றாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சம்பளமாக உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொண்டு அதன் மூலம் உங்களது தனி செலவுகளைச் சமாளிப்பது மூலம் உங்களது தொழில் கிடைக்கும் நிகர லாபத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது நிறுவனத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு நடைபெறும் அனைத்து விதமான வரவு செலவுகளை எளிதில் தெரிந்து கொண்டு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பதை யோசிக்க முடியும். பல வணிகங்கள் நீங்கள் நடத்துபவராக இருந்தால் ஒவ்வொரு வணிகத்திற்கும் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கவும், ஏனெனில் நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகத்திற்கும் பார்ம் C ஐ சமர்ப்பித்தல் அவசியம்.
தனி உரிமையாளர் வணிகத்திற்கு எடுத்துக்காட்டான தொழில்கள்
பெரிய பங்களாக்கள் மற்றும் ஆடம்பர மாளிகையில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கும் தொழிலை தனி நபராகவோ அல்லது தனிநபரின் கீழ் பணியாளர்களை அமர்த்தி செய்யக் கூடிய தொழிலாகும். இந்தத் தொழிலுக்கு என்று நீங்கள் எந்தவித கடையோ அலுவலகமோ வைத்துக் கொள்ள தேவையில்லை என்பதாலும் உடனடியாக செய்யக்கூடிய தொழிலாக இருப்பதாலும் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் வரும்.
வீட்டை சுத்தப்படுத்தி அலங்காரபடுத்தும் தொழில் இந்தியா போன்ற நாடுகளில் பெருநகரங்களில் மட்டுமே இருந்தாலும் இதுவும் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழே வரும். நம் வீட்டு வேலைக்காக பயன்படுத்தக்கூடிய பெண்களும் ஒரு தனி உரிமையாளர் வணிகத்தின் கீழே செயல்பட்டு வருகிறார்கள் என்பதைக் கூறினால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும்.
கேட்டரிங் நிறுவனங்கள் தகுந்த சான்றிதழ் பெறாமல் இயங்குவதற்கு காரணம் என்னவென்றால் அதுவும் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் வரக்கூடிய தொழிலாக அமைந்திருப்பது ஆகும். இது மட்டுமல்லாமல் நாம் முன்பே கூறியது போல் மளிகைக் கடைகள், ஹோட்டல்கள், அழகு நிலையங்கள், வாகனம் மற்றும் இயந்திரம் பழுது பார்க்கும் நிறுவனங்கள் போன்ற தொழில்களும் அடங்கும்.
இணைய வழி மூலமாக தொழில் செய்துகொண்டு வரும் அனைத்து ஃப்ரீலான்ஸர்கள், டெவலப்பர்கள், நகல் எழுத்தாளர்கள் என அனைத்து பிரிவினரும் தனி உரிமையாளர்களாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு வகையான ஆலோசகர்கள் மற்றும் மேடை பேச்சாளர்கள் போன்றவர்கள் பகுதி நேரமாக இந்த தொழில்களை செய்து வந்தாலும் அவர்களும் தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் செயல்படுபவர்கள் ஆகவே கருதப்படுவார்கள்.
தனி உரிமையாளர் வணிகத்தில் உள்ள சிக்கல்கள்
- தனி உரிமையாளர்கள் செய்யும் வணிகத்திற்கு வங்கிகள் நெடுங்கால திட்டங்களுக்கு ஏற்றவகையில் கடன்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதில்லை.
- தங்களிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உள்ள பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டே பல்வேறு தனி உரிமையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
- அரசாங்கத்திலிருந்து சரியான விழிப்புணர்வு தனி உரிமையாளர் வணிகத்தை ஆரம்பிப்பவர்களுக்கு போய் சேருவதில்லை.
- தங்களது வணிகத்தில் ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்டுவதற்காக, காலம் காலமாக வைத்திருக்கும் சொந்த சொத்துக்களையும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
- முழு பொறுப்பு மற்றும் அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் இருப்பதால் விபத்து மற்றும் அவசர காலங்களில் அடுத்தவர்கள் எத்தகைய முடிவும் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
- இத்தகைய தனி உரிமையாளர் வணிகத்தின் கீழ் மிகப்பெரிய அளவில் உள்ள நிறுவனங்களையோ அல்லது தொழிலையோ நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத காரணமாக இருக்கிறது.
- தனி உரிமையாளர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சான்றிதழ்களும் அங்கீகாரமும் இல்லாதிருப்பதால் உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு தகுந்த சதைகளை செய்து கொடுக்க முடியாமல், தரமான மற்றும் அனுபவம் உள்ள வேலையாட்களை இழக்க நேரிடும்.