written by | October 11, 2021

உணவு வணிகம்

மிகச்சிறந்த உணவு சார்ந்த தொழில்களின் பட்டியல்

இந்தக் கட்டுரைகளில் தரப்பட்டுள்ள இருபது வகையான உணவு தொழில்களில் நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுத்து அதனால் ஆலோசனையின்படி உங்களது உணவு சார்ந்த வணிகத்தைத் தொடங்க முடியும். இந்த உணவு சார்ந்த வணிகங்களின் பட்டியல் நூற்றுக்கும் மேற்பட்ட வகையாக இருந்தாலும் மிக குறைந்த முதலீடு மற்றும் மிக எளிதான செயல் முறையை கொண்ட தொழில்களின் அடிப்படையில் கீழ்க்காணும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

20 உணவு சார்ந்த தொழில் பட்டியல் 

  1. உணவகம் (ஹோட்டல்)

உணவு சார்ந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முதலில் வருகின்ற யோசனையை ஒரு ஹோட்டல் திறப்பது. எல்லா வகையான சமையல் முறையை தெரிந்த சமையல்காரர் தேர்ந்தெடுத்து அவரை உங்களது ஹோட்டலில் பணி அமர்த்துவது மூலம் ஹோட்டல் தொழிலில் சமையல் முறையில் உள்ள நுணுக்கங்களை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் திறக்கும் உணவகத்தின் முதலீடு, இடம், வேலை ஆட்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாக திட்டமிட்டு இந்த ஆகச் சிறந்த உணவு சார் தொழிலை தொடங்கி வெற்றி பெற முடியும்.  

  1. பேக்கரி

உலக அளவில் ஹோட்டலுக்கு அடுத்தபடியாக உணவு சார்ந்த வணிகம் இருக்கும் தொழிலில் இரண்டாவதாக இருப்பது பேக்கரி தொழில் ஆகும். பிரட் பப்ஸ் கேக் போன்றவை அதிகமான மக்கள் விரும்பும் பேக்கரி உணவாக இருக்கிறது. பிறந்தநாள் விழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கல்யாண விழாக்களில் கேக் ஆர்டர் அதிகமாகவும் இதர நாட்களில் மற்ற பொருட்களின் விற்பனை அதிகமாகவும் இருக்கும். 

  1. கேட்டரிங் சேவைகள்

அதிகப்படியான நபர்களுக்கு ஒரே நேரத்தில் உங்களால் சமைத்துக் கொடுக்க முடியும் ஆனால் இந்த வகையான கேட்டரிங் சேவை நிறுவனத்தை தொடங்கி நீங்கள் நடத்தலாம். இந்த வகையான கேட்டரிங் துறையில் மாதத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உங்களுக்கு இருப்பதால் உங்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைக்கும். இந்த கேட்டரிங் தொழிலில் ஆர்டர்கள் பிடிப்பது ஆரம்ப காலகட்டத்தில் கடினமாக இருந்தாலும் படிப்படியாக உங்கள் உணவின் பசியை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர்ந்து படிப்படியாக முன்னேற முடியும்.

  1. சாக்லேட் தயாரித்தல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் அனைத்து காலகட்டங்களிலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரே பண்டமாக சாக்லேட்கள் திகழ்கிறது. இத்தகைய ஜாக்கெட் தயாரிக்கும் முறையை நீங்கள் ஒரு தொழிலாக செய்து மிகப்பெரிய லாபத்தை அடையக்கூடும். ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் இத்தகைய சாக்லெட் தொழில் மிகவும் குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக அதிகம் செய்யப்படுகிறது. உங்களது சாக்லெட்டில் அதிக சுவை மற்றும் தரம் இருந்தால் நீங்கள் ஏற்றுமதி செய்து அதிக பணம் பெற முடியும். 

  1. சமையல் வகுப்பு

உங்களுக்கு அதிகப்படியான ஆட்களை வைத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாமல் இருந்தாலோ தொழில் முறையாக தொடங்குவதற்கு எந்தவித முதலீடு இல்லாமல் இருந்தாலோ சமயல் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு சமையல் கற்றுக்கொடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். குறிப்பாக தனியாக உள்ள பெண்களுக்கு இந்த முறையில் சமையல் வகுப்புகளை ஆன்லைனில் எடுத்து யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து பணம் சம்பாதிக்க முடியும். 

  1. உணவு டிரக் – மொபைல் ஃபுட் 

மொபைல் உணவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதில் செய்யப்படும் உணவை விரும்பி உண்ணும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வருகிறது. இந்த மொபைல் ஃபுட் உணவகம் என்பது சாதாரண ஹோட்டலை போன்றதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலையான இடத்தை வாடகைக்கு எடுத்து செய்யாமல் ஒரு வாகனத்தில் முழு உணவக அமைப்பை நிறுவி அதன் மூலம் வியாபாரம் செய்வதாகும். தனியாக ஹோட்டல் நிறுவுவதை போலல்லாமல் இந்த வாகன உணவக தொழிலுக்கு மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படுகிறது. 

  1. ஐஸ்கிரீம் கடை

சாக்லேட்டுக்கு அடுத்தபடியாக அனைத்து குழந்தைகளையும் கவரக்கூடிய ஒரு உணவுப் பொருள் இருக்குமேயானால் அது ஐஸ்கிரீம் ஆகும். உணவு சார்ந்த தொழிலில் இந்த ஐஸ்கிரீம் கடையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது முக்கியமாக கோடை காலங்களில் இதன் வியாபாரம் பன்மடங்காகப் பெருகி இருக்கும். இந்த ஐஸ் கிரீமை நீங்கள் சொந்தமாக தயாரித்து விற்றாலும் நல்ல லாபத்தை பெற முடியும் அதே போல் பிரபல ஐஸ்கிரீம் விற்பனை உரிமை பெற்று அதன் கிளையை ஆகவும் செயல்பட முடியும்.

  1. பழச்சாறு கடை

ஐஸ்கிரீம் கடைக்கு அடுத்ததாக உணவு சார்ந்த தொழிலாளர்களின் விளங்குவது என்னவென்று பார்த்தால் பழச்சாறு என்றழைக்கப்படும் ஜூஸ் கடை ஆகும். இந்த ஜூஸ் கடையை தனியாகவும் நிறுவலாம் அல்லது மற்ற கடைகள் உடன் இணைத்து அதன் ஒரு பகுதியாக பழச்சாறு வழங்கும் கடையாக நடத்தலாம்.

  1. இனிப்பு கடை

மற்றுமொரு லாபகரமான மற்றும் எளிதான உணவு சார்ந்த தொழிலாக இந்த இனிப்பு கடை அமைந்து இருக்கிறது. வீட்டில் நடைபெறக்கூடிய அனைத்து விதமான விழாக்களுக்கும் பண்டிகைகளும் தங்களது சுற்றி உள்ளவர்களுக்கு தங்களது அன்பை தெரிவிக்கக் கூடிய ஒரு பொருளாகவும் இனிப்பு பலகாரங்கள் இருக்கிறது. இந்த ஒரு லாபகரமான இனிப்பு கடை தொழிலை செய்வதற்கு எந்த ஒரு படிப்பும் முன் அனுபவமும் தேவையில்லை. 

  1. பால் பண்ணை அல்லது விநியோகம் 

உங்களிடம் முதலீடு அதிகம் இருக்குமேயானால் பால் பண்ணை அமைப்பது பற்றிய யோசனை செய்யலாம் அல்லது அமுல் ஆரோக்கியா ஆவின் போன்ற பால்பண்ணை உற்பத்தியாளர்களின் விற்பனை உரிமத்தை பெரிய அளவில் உள்ள இடங்களுக்கு பெறலாம். பால் வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமான பொருளாக இருப்பதால் இந்த தொழில் எந்த காலகட்டத்திலும் தடையின்றி நடத்த முடியும்.

  1. துரித உணவு கடை

இந்த அவசர உலகில் அனைவரும் அவசர அவசரமான துரித வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் அனைத்து விதமான காரியங்களும் துரிதமாக செயல்பட விரும்புவதைப் போலவே உணவு பழக்க வழக்கத்திலும் துரித உணவை அதிகப்படியான மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இந்தத் துரித உணவகங்களில் மிக முக்கியமான உணவாக விளங்குவது சைனீஸ் உணவான நூடுல்ஸ் ஃப்ரைடு ரைஸ் போன்றவை ஆகும். முக்கியமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களது மாலை நேரங்களில் இத்தகைய துரித உணவுகளை அன்றாடம் வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

  1. ஆர்கானிக் உணவு கடை

உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்ற வகையான உணவு பழக்கங்களை தவிர்த்து ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உண்ணுகின்றனர். ஆகவே ஒரு மிகச்சிறந்த உடல்நல மருத்துவமனை அருகிலோ அல்லது உடற் பயிற்சி மையத்தின் அருகில் இத்தகைய ஆர்கானிக் உணவகத்தை அமைத்து உங்களது வியாபாரத்தை பெருக்க முடியும். 

  1. அப்பளம் தயாரித்தல்

இந்த அப்பளம் தயாரிக்கும் தொழில் சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டில் செய்ய கூடிய தொழிலாக பழங்காலமாக செய்து வருகிறார்கள். வீட்டில் உள்ள மகளிர் குழு ஒரு குழுவாக இணைந்து இத்தகைய அப்பளம் தயாரித்து கடை கடையாக விநியோகம் செய்து மிகச்சிறந்த லாபத்தை அடைகிறார்கள். உங்களுக்கும் இத்தகைய அப்பளம் தயாரிப்பில் ஆர்வம் இருந்தால் நீங்களும் இதை திறன்பட செய்து பயனடைய முடியும்.  

  1. ஊறுகாய் தயாரித்தல்

இந்திய மக்களின் உணவுக் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக ஊறுகாய் விளங்குகிறது. மாங்கா ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், கோவைக்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், பூண்டு ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், என பல விதமான சுவைகளில் இந்த ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஊறுகாய்க்கு அனைத்து வெளிநாடுகளிலும் மவுசு இருக்கிறது.

  1. பிஸ்கட் தயாரித்தல்

பேக்கரி தொழில் சம்பந்தப்பட்ட இந்த பிஸ்கட் தயாரிக்கும் தொழிலை நீங்கள் தனியாக செய்து பிஸ்கட்டை கடைகளுக்கு விநியோகம் செய்து பணம் சம்பாதிக்கலாம். இதுவும் வீட்டிலிருந்தே அல்லது தொழிற்சாலை அமைத்து செய்யக்கூடிய லாபகரமான உணவு சார்ந்த தொழிலாகும். 

  1. சாஸ் தயாரித்தல்

பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்ற உணவை சாப்பிடும் பொழுது தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், சோயா சாஸ் போன்றவை ஊற்றி சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடையே உள்ளது. நீங்கள் இத்தகைய சாஸ் தயாரித்து முறையாக விற்பனை செய்ய முடியுமானால் மிகச்சிறந்த உணவு சார்ந்த தொழிலாக இது விளங்கும். ஏனென்றால் காலத்துக்கு ஏற்ற வகையில் மிகக் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி அதை பயன்படுத்தி இந்த செய்து அதிக லாபத்தில் விற்க முடியும்.

  1. மளிகை கடை

இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விநியோக ஸ்தாபனமாக விளங்குவது மளிகைக்கடை மட்டுமே ஆகும். மக்களின் அன்றாட உணவுத் தேவைக்கு ஏற்ற அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கி விற்பது இந்த கடையின் சிறப்பம்சமாகும். ஒரு சிறிய இடத்தில் சிறியதொரு மூலதனத்தில் யார் வேண்டுமானாலும் இந்த மளிகைக் கடை ஆரம்பித்து வணிகத்தை பன்மடங்கு பெருக்க முடியும்.

  1. ஊட்டச்சத்து பயிற்சியாளர்

அனைத்து வயதான மனிதர்களுக்கு அனைத்து வகையான உணவு பழக்கவழக்கங்கள் ஒத்து வராது. முக்கியமாக சர்க்கரை நோய் போன்ற ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் உள்ளவர்கள் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவர்களின் உடல் அமைப்பு மற்றும் உடல் நலத்தை பொருத்து அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும். இதற்கு ஏற்ற மருத்துவ பயிற்சி உங்களுக்கு இருக்குமேயானால் நீங்களும் ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து பயிற்சியாளராக அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

  1. காபி மற்றும் தேநீர் கடை

தேநீர் குடிக்கும் கலாச்சாரம் நமது இந்திய மக்களிடம் காலம் காலமாக இருந்து வந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அதனுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக அலுவலகப் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது தேனீர் கடைக்கு சென்று தேநீர் அருந்துகிறார்கள். இத்தகைய தேநீர் கடையை நீங்கள் ஒரு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் நிறுவினால் உங்களது தொழில் வளம் பெருகும். 

  1. தானிய பதப்படுத்துதல்

அரிசி கோதுமை மாவு போன்றவை இந்தியாவின் அத்தியாவசிய உணவு பொருளாக விளங்குகிறது. இக்கட்டான சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கும் வெவ்வேறு இடங்களில் தகுந்த நேரத்தில் ஏற்றுமதி செய்வதற்கும் தானிய பதப்படுத்தும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இத்தகைய தானிய பதப்படுத்தும் இடத்தை தாங்கள் நிறுவி அதற்கு ஏற்றார்போல் உங்களது தொழிலை செய்ய முடியும் ஆனால் இத்தகைய ஆலை அமைக்க அதிகப்படியான செலவாகும்.   

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.