written by | October 11, 2021

ஆடை வணிகம்

×

Table of Content


தகவல் தொடர்பு வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட நல்ல விஷயங்களில் ஒன்று வீட்டிலிருந்தபடியே தேவையான பொருட்களை ஆன்லைன் டெலிவரி மூலம் பெற முடியும் என்பதும் ஒன்றாகும்.  இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் அதிகமாகும் என்று  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக, ஆன்லைன் ஆர்டர் மூலம் ஆடை வகைகளை பெண்களைவிட ஆண்களே அதிகம் வாங்குவதாக ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்கும் பழக்கம்  மக்களிடையே அதிகமாகி வரக்கூடிய நிலையில், மனதிற்கு பிடித்த ஆடை வகைகளை வீட்டிலிருந்தபடியே சுலபமாக வாங்குவதற்கு ஆன்லைன் ஷாப்பிங்  என்பது எளிமையான வர்த்தக அணுகுமுறையாக மாறி  வருகிறது. ஆன்லைன் பொருட்கள் விற்பனை மூலமாக செல்போன்களுக்கு அடுத்தபடியாக ஆடைகள் உள்ளிட்ட காலணி, பை போன்ற பேஷன் பொருட்கள் விற்பனை இரண்டாம் இடத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையில் ஆண்களுக்கான ஆடை  விற்பனை என்பது 58  சதவீதமாகவும், பெண்களுக்கான ஆடை விற்பனை 36 சதவிகிதமாகவும் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் வரப்போகும் திருமணம் உள்ளிட்ட வெவ்வேறு வகையான சுப நிகழ்ச்சிகளுக்கு வகைவகையான ஆடைகளை அணிந்து பங்கு கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள். அதனால்  மனதிற்கு பிடித்தமான உள்ள ஆடை வகைகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் அளித்து  டோர் டெலிவரி ஆக பெற்றுக் கொள்வதன் மூலமாக அவர்களது நேரம் சேமிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு  சூழ்நிலையிலும் ஆன்லைன் மூலம் ஆர்டர்  அளித்து துணிமணிகளை  வாங்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் கூட இ-காமர்ஸ் முறையில் தங்களுடைய சேவைகளை, ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார்கள்  என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக தற்போதைய  கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதால் ஆன்லைன் வர்த்தக  முறைகளையே பலரும் விரும்புகிறார்கள். 

கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைகள்

ஆன்லைன் முறையில் குளோத்திங் பிசினஸ் செய்ய விரும்புவார்கள் கீழ்கண்ட தகவல்களை அவசியம் அறிந்திருக்க வேண்டும். 

  • வர்த்தக நடவடிக்கைகளுக்கான கையில் உள்ள முதலீடு,  அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு,  வங்கி கடன் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொண்ட பின்னர் இடத்திற்கான வாடகை, பொருட்கள் கொள்முதல் மற்றும் உள் அலங்கார பணிகள் ஆகியவற்றை செய்ய வேண்டும்.    
  • சிறு அளவிலான நிறுவனமாக இருந்தாலும் கூட ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான பதிவை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வீடுகளில்  ஸ்டாக் வைத்து வியாபாரம் செய்யாமல், தனிப்பட்ட முறையில் வாடகைக்கு இடம் தேர்வு செய்யும் பொழுது அதற்கான உள்ளாட்சி அனுமதிகளையும் பெற்றுக் கொள்வது அவசியம்.
  • சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் அங்கு போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் வருகை ஆகியவற்றுக்கு தக்க வசதிகள் இருக்க வேண்டும்.
  • முதலில் எந்த ஒரு வியாபாரத்தையும் சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாகவே அதை விரிவு படுத்தவேண்டும். விரிவுபடுத்தும்பொழுது தேவையான முதலீட்டு உதவிகளுக்கு பார்ட்னர்களை அணுகலாம்.  
  • சந்தையில் தொழிலுக்கு போட்டியாக உள்ளவர்கள் யார் என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  
  • வாடிக்கையாளர்கள் ஆர்டர் தரக்கூடிய பொருட்களை டெலிவரி செய்வதற்கு சரியான கால அளவுகளை தீர்மானம் செய்து இருக்க வேண்டும்.  வாடிக்கையாளர் எளிதில் தொடர்புகொண்டு ஆடை வகைகளை வாங்குவது போன்று வியாபார நடவடிக்கைகள் இருக்க வேண்டும். குறிப்பாக விடுமுறை காலங்களிலும் ஆன்லைன் வர்த்தகம் செயல்பட வேண்டும். வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் திரும்ப வர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
  • தொழிலில் எப்பொழுதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்தி எப்பொழுது முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.  
  • குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் கேட்கும் எந்த ஒரு ஆடை வகையையும் ஸ்டாக் இல்லை என்று சொல்வது மிகவும் தவறான முறையாகும். வாடிக்கையாளருக்கு எவ்விதத்திலாவது அந்த ஆடை வகையை டெலிவரி செய்வது மிக முக்கியமானது. 
  • எல்லாவற்றிலும் உள்ள மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒவ்வொரு நாளும் பதிவேட்டில் குறித்து வைப்பது ஆகும்.  

வியாபாரத்தில் நேர்மை

ஸ்மார்ட்போன் வந்த பிறகு ஆன்லைன் மூலம் இ-காமர்ஸில் பொருட்கள் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு கிளிக் செய்வதன் மூலமாக விரும்பிய பொருட்களை, ஆடைகளை  வாங்க முடியும். ஆனால், இதற்கு பின்னால்  திட்டமிட்ட தொழில்நுட்பம்  மற்றும் அதிக உழைப்பை தரவேண்டிய லாஜிஸ்டிக்ஸ்  ஆகிய கூட்டு முயற்சிகள் அடிப்படையாக அமைந்துள்ளன. நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் குளோத்திங் பிசினஸ் செய்பவர்கள் நேர்மையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். அந்த உணர்வுக்கு மதிப்பு தரும் தொழில் முனைவோர் வெற்றி பெறுவது நிச்சயம். 

ஈ-காமர்ஸ் முறை

ஆன்லைன் வர்த்தகச் சந்தை எல்லோருக்குமானதாக மாறி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில் வெற்றியாளர்களாக திகழ விரும்புவோர் மக்களுக்கான சேவையை தருவதற்கு, தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு அணுகுவது என்ற விதிமுறையை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இன்று, குளோத்திங் பிசினஸ் என்ற வர்த்தக சந்தையானது உலக மயமாக்கலின் காரணமாக மிகவும் போட்டியை கொண்டதாக இருப்பதால், சந்தை இலக்கை அடையக்கூடிய வியாபார நுணுக்கங்களை அறிந்திருப்பது அவசியம்.  ஆடை வகைகளின் அளவு, வண்ணம்,  விலை  உள்ளிட்ட வகைகளில் பல்வேறு வகையாக தரம் பிரித்து வேறுபடுத்தி தெளிவான புகைப்படங்களை இணையதளத்தில் கச்சிதமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.  அத்துடன் குறிப்பிட்ட ஆடை வகைகள் அளவுகள், நிறம் மற்றும் விலை ஆகிய விளக்கங்களை சரியாக அளிக்க வேண்டும். 

குளோத்திங் பிசினஸ்  தொழில் முயற்சியில் அனைத்து வகையான துணிகளையும் விற்பனை செய்வது இயலாது. அதனால் குறிப்பிட்ட வகைப்பாட்டுக்கு உட்பட்ட  துணிகள் அல்லது ஆடை வகைகளை மட்டுமே விற்பனை செய்ய இயலும். அவ்வாறு வரையறை செய்து கொண்டால்தான், சரியான முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு  வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முடியும். புதிதாக குளோத்திங் பிசினஸ்  செய்பவர்களுக்கு  உதவியாக இருக்கும் வகையில் பல்வேறு  துணிமணி வகைகள் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

  • ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான  சட்டை மற்றும் பேண்ட், கோட்-சூட், உள்ளாடை, இரவு ஆடை, ஆப்-பேண்ட் வகைகள். 
  • பெண்கள் மற்றும் சிறுமியருக்கான சகலவித துணிகள், புடவைகள், டாப்ஸ், சுரிதார், பேண்ட், ஸ்கர்ட், இரவு உடையான நைட்டிகள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள்.
  • தொப்பி, குல்லா, மிருகங்களின் மிருதுவான ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் உடைகள்.
  • தண்ணீர் புகாத மேலாடைகள், தோல் ஆடைகள், கைக்குட்டை மற்றும் இதர உடைகள்.
  • ஜன்னல் திரைகள், கதவு திரைகள், துணிப்பைகள், கேன்வாஸ் வகை துணிகள், அலங்கார தையல்கள் அல்லது எம்ப்ராயிடரி செய்யப்பட்ட அலங்கார துணி வகைகள். 

பண்டிகைக்கால விற்பனை 

இந்திய அளவில் விழாக்காலம் மற்றும் பருவ காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப வியாபார ரீதியாக நிறைய வாய்ப்புகள் வருடம் முழுவதுமே அமைந்திருக்கின்றன. அதற்கேற்ப வருடத்தின் எந்த மாதத்தில், எந்த திருவிழா அல்லது பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதற்கேற்ப ஆடை வகைகளை சேல்ஸ் செய்யலாம். கோடைகாலம், குளிர்காலம், மழைக்காலம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், புது வருடம், பொங்கல், தீபாவளி, காதலர்கள் தினம், ஒருவருடைய பிறந்த நாள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ தினங்களுக்கான ஆடைகளை கண்கவரும் விதத்தில் ஆன்லைனில் விளம்பரங்கள் மூலமாக காட்சிப்படுத்தி  விற்பனை செய்ய முடியும். 

பண்டிகைக்கால விற்பனையை அதிகரிக்க சந்தை நடைமுறை மற்றும் மக்களின் தேவைகளை துல்லியமாக முன்கூட்டியை கணித்திருக்க வேண்டும். மேலும், பொருளின் சந்தை நிலவரம் மற்றும் அதற்கான தேவை ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கில் கொள்வது முக்கியம். சில சமயங்களில் நடைமுறையில் இருக்கும் குறிப்பிட்ட நாகரீக ஆடையானது ஒரு குறிப்பிட்ட வகையான வாடிக்கையாளர்களை மட்டுமே கவரக் கூடியதாக இருக்கும். அதேசமயம் அனைத்து  சமயங்களிலும் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய ஆடை வகைகளையும் அறிந்து அவற்றையும் டெலிவரி தருவதற்கு ஏற்ப இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.  திடீரென  குறிப்பிட்ட ஒரு ஆடைக்கு கூடுதலான ஆர்டர்கள் வரும் நிலையில் அவற்றை,  வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப எவ்வாறு டெலிவரி அளிப்பது என்ற தொழில்ரீதியான ரகசியத்தையும் அறிந்திருப்பது அத்தியாவசியமானதாகும். 

ஒரு வெற்றிகரமான குளோத்திங் பிசினஸ் தொழில் முனைவோர் என்பவர் அதிகப்படியான ஸ்டாக் சேர்ந்துவிட்டால்,  அவற்றை எவ்வாறு  விற்பது என்பதை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். அதாவது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் மற்றும் டிஸ்கவுண்ட் சேல்ஸ் என்ற வெவ்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி, அதிகப்படியான ஸ்டாக் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முறையானது ஆன்லைன் விற்பனைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். பொதுவாக ஆண்டு முழுவதும் வியாபாரம் ஆகக்கூடிய துணிமணி வகைகள் ஒரு வகையாகவும்,  குறிப்பிட்ட பண்டிகைக் காலத்தில் மட்டும் விற்பனையாக கூடிய ஆடை வகைகள் இன்னொரு வகையாகவும் இருக்கும். அவற்றை அதற்கேற்ப தரம் பிரித்து ஸ்டாக் செய்து வைத்திருந்து, அந்தந்த சமயங்களுக்கு ஏற்ப விற்பனை செய்வதும் ஒரு வியாபார தந்திரமாகும்.

செலவினங்கள்

ஆன்லைன் முறையில் வர்த்தகத்தில், சில குறிப்பிட்ட வகையான செலவினங்களை செய்தாக வேண்டியது கட்டாயம். அந்த செலவினங்கள் ஒவ்வொரு நிறுவனத்தைப் பொறுத்தும் சில மாற்றங்களை கொண்டதாக இருக்கும். விற்பனை நிறுவனம் என்ற ரீதியில்  செய்யவேண்டிய சில அவசியமான  செலவினங்கள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  • முதலீட்டுக்கான வட்டி  மற்றும் வாடகை 
  • மறைமுக ஊழியர்கள் மற்றும் கூலியாட்கள்,
  • ஸ்டாக் வைக்கப்படும் இடத்திற்கான பராமரிப்புகள் 
  • நிறுவனத்தின் சேவை ஊழியர்கள், தரக்கட்டுப்பாட்டுத் துறை ஊழியர்கள், பொருட்களை கையாள்பவர்கள், பழுதுபார்க்கும் ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் 
  • வாடகை, தேய்மானங்கள் காப்பீடுகள், சொத்து வரிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் 
  • விளம்பர செலவுகள் மற்றும் டெலிவரி போக்குவரத்து செலவுகள்.

டிசைனிங் அனுபவம் கைகொடுக்கும்

டிரஸ் டிசைனிங் துறையில் அனுபவம் பெற்றவர்கள் தரமான மெட்டீரியல் கொண்டு விதவிதமான டிசைன்களில் பெண்களுக்கான கிராப் டாப்ஸ் உள்ளிட்ட ஸ்டிட்ச் கார்மெண்ட்ஸ் ஐட்டங்களை தயாரித்து சிறப்பாக விற்பனை செய்யலாம். மேலும், லெஹங்கா, மணப்பெண்கள் லெஹங்கா,  கேஷுவல் டிரஸ்,  சின்ன பெண்களுக்கான  நவநாகரிக ஆடைகள்  என்று தொழில்நுட்ப அனுபவத்துடன் ஆடைகளை தயாரித்தால் சிறந்த விற்பனை வாய்ப்புகள் அமையும். இன்றைய சூழலில் குளோத்திங் பிசினஸ் செய்பவர்கள்  நல்ல டிசைனராக இருந்து அவர்களது ஆடை வடிவமைப்பு மக்களுடைய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவர்களது வடிவமைப்பு பிறரால் காப்பி அடிக்கலாம். அதனால்,  நல்ல முறையில் விற்பனையாகும் ஒருவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்புக்கு  பேட்டன்ட் ரைட்ஸ்  பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதாகும். 

சமூக வலை தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றை விளம்பரங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக, பெண்கள் அவர்களது தேர்வுகளை பிரத்தியேகமாக அமைத்துக்கொள்ள விரும்புவதால் தனிப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் கஸ்டமர்களை ஒன்றிணைத்து நியூ கஸ்டமர்ஸ், ரெகுலர் கஸ்டமர்ஸ், ரீசேலர்ஸ், கம்ப்ளைண்ட்ஸ் என பல வகையாக பிரித்து, ஒவ்வொருருக்கும் தனி கவனம்  அளிப்பது வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக அமையும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.