written by | October 11, 2021

ஹோம் மேட் பிசினஸ்

×

Table of Content


இன்றைய நிலையில் வீட்டிலிருந்து தொடங்கி செய்வதற்கான தொழில் வாய்ப்புகள் 

வாழ்க்கை எந்த அளவுக்கு நவீனமாக மாறி இருக்கிறதோ அதே அளவுக்கு செலவுகள் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. வெவ்வேறு சூழ்நிலைகள் பல்வேறு தேவைகள் என்ற அடிப்படையில் அதன் பாதை ஒவ்வொரு நாளும் புதிய தேவைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் ஏராளமான தொழில்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்கு அனைத்து விதமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு சேவைகளை அளிப்பதில் ஒரு நிறுவனமாக அல்லது தனி நபராகவோ செயல்பட்டு தொழில் அல்லது வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவது சுய பொருளாதார அடிப்படையை அமைத்துக் கொள்ளவும் உதவியாக அமைகிறது. இந்திய அளவில் சிறு தொழில்களை எடுத்துக்கொண்டால் தேசிய அளவிலான மொத்த உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அவற்றின் பங்களிப்பு அமைந்துள்ளது. அதாவது, நூற்றுக்கு நாற்பது நபர்கள் சிறு தொழில் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார்கள். எந்த ஒரு பெரிய நிறுவனமும் அதன் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டு தான் காலப்போக்கில் பிரம்மாண்டமான நிலைகளை எட்டுகிறது. ஏராளமான சிறு தொழில் வாய்ப்புகள் அமைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் சொந்தக்காலில் இன்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற தனிநபர்களுக்கு வீட்டிலேயே ஆரம்பித்து நடத்தக் கூடிய வகையில் சிறு தொழில் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அவை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். 

ஹோம் மேட் பிசினஸ் என்ற நிலையில் செய்யக்கூடிய சிறு தொழில் வகைகளை தொடங்குவதற்கு பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் தேவைப்படாது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் செய்யப்படுவதால் முழு ஈடுபாடு மற்றும் அக்கறை கொண்டு செயல்பட்டால் நிச்சயம் சம்பந்தப்பட்ட தொழில் துறையில் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மேலும், சிறு தொழில் வாய்ப்பு என்ற நிலையில் அரசின் சலுகைகளையும், கடன் உதவிகளையும் பெறவும் இயலும். ஒரு சில தொழில்களுக்கு நகராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலக அனுமதி ஆகிய சட்டபூர்வமான உரிமங்களை பெறுவது முக்கியம். வீட்டிலேயே செய்யக் கூடியது என்ற நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தேவையான உதவிகளை எளிதாக அளிக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்களுடன் நேரடியான தொடர்பில் இருப்பதால் அவர்களுடைய தேவைகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ப தொழில் வியூகங்களை மாற்றியும் அமைத்துக் கொள்ள முடியும். 

மேலும், ஹோம் மேட் பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ள தொழில் முனைவோர்கள் சில முன்னேற்பாடுகளை வீடுகளில் செய்து கொள்ள வேண்டும். நகர்ப்புற குடியிருப்புகளில் வசிப்பவர்கள் என்றால் அந்தப் பகுதிகளில் செய்யக்கூடிய சில விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட குடியிருப்பு நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியதாக இருக்கும். தனி வீடாக இருந்தால் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி வாங்க வேண்டியதாக இருக்கலாம். சொந்த வீடு அல்லது விலைக்கு வாங்கப்பட்ட அடுக்கு மாடி வீடாக இருந்தால் இதுபோன்ற தொல்லைகள் இருக்காது. எந்த வீடாக இருந்தாலும் செய்யக்கூடிய தொழிலுக்கு ஏற்ற வசதிகளை மற்றும் தனிப்பட்டஇடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ப நல்ல சாலை அமைந்துள்ள பகுதியாக இருப்பதும் அவசியம். சம்பந்தப்பட்ட தொழில் அல்லது ஒரு துறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும்கூட மேற்கண்ட அடிப்படை நிலைகளை கட்டமைத்துக் கொண்ட பின்னரே தொழிலை ஆரம்பித்து செய்ய இயலும். அதன் பின்னர் ஹோம் மேட் பிசினஸ் செய்பவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஆரம்பிக்க வேண்டியது தான்.

நெட்வொர்க் மார்க்கெட்டிங்

இந்தியா அளவில் வளர்ச்சி பெற்றுள்ள சமீபத்திய தொழில் முயற்சிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்பதும் ஒன்றாகும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் கூட இந்த தொழிலில் முக்கியத்துவம் எட்டப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் உலக மயமாக்கல் என்ற மாபெரும் வாய்ப்பு காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் உடல் நலம், அழகு சாதன பொருட்கள், சரும பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான துணை உணவுப் பொருட்கள் ஆகிய நுகர்வோர் பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. அதாவது, அன்றாட வாழ்க்கையில் எளிதாக பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து அல்லது அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றை எளிமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முடியும். குறிப்பாக கேசப் பராமரிப்பு, சரும பராமரிப்பு, உடல் ஆரோக்கியத்தை பேணுதல், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான உடல் நலம் சார்ந்த பொருட்களுக்கான வர்த்தக மதிப்பு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் ஹோம் மேட் பிஸ்னஸ் என்ற வகையில் இந்த பிரிவு ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

கேட்டரிங்

நகர் பகுதிகளுக்கு பொருத்தமான ஹோம் மேட் பிசினஸ் மாடல் இது என்பதை பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், அவசரமாக அலுவலகம் செல்வது அல்லது வர்த்தகரீதியான சந்திப்புகள் உள்ளிட்ட அவசர சூழல்களில் உடனடியாக வீட்டைவிட்டு வெளியே கிளம்புகிறார்கள் போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு பகுதியில் வீட்டு தயாரிப்பாக சுவையான உணவு வகைகள் கிடைக்கும் என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரிந்தால்  அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை தொடர்ந்து அணுகுவது நிச்சயம். ஹோம் மேட் பிசினஸ் என்ற வகையில் சுலபமாக வீட்டில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து இந்த தொழிலை செய்யலாம். இதன் இன்னொரு பிரிவான பாரம்பரிய உணவு வகைகளுக்கு இன்றைய சூழலில் சிறப்பான வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. 

பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங்

சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றிற்கு அருகாமையில் குடியிருப்பவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங் ஆகிய பிரிவு வழங்குகிறது. அதாவது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தயாரிப்புகளை பெற்று அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் முறையாக அடுக்கி பெரிய தொட்டிகளில் அடைத்து கச்சிதமாக பேக்கிங் செய்யும் தொழில் இதுவாகும். பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படாத இந்த தொழிலை ஆர்வமுள்ள தனிநபர்கள் எளிதாக மேற்கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் மையம்

இந்த தொழில் பிரிவுக்கான வர்த்தக வாய்ப்புகள் பற்றி அதிகமாக சொல்ல வேண்டியதில்லை. பள்ளிக்கூட மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாக ஒரு நகரத்தின் ஒரு ஏரியாவில் உள்ளவர்களை கணக்கு எடுத்துக்கொண்டால் சுமார் 65 முதல் 75 சதவிகிதம் வரை கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சம்பந்தமான ரிப்பேர் மற்றும் சர்வீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்களை அணுகுவதில்லை. நம்பிக்கைக்கு உரிய தனிநபர்களை அல்லது அவர்களது சிறிய நிறுவனங்களை அணுகுகிறார்கள். அந்த அடிப்படையில் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் சுலபமாக இந்த தொழில் பிரிவை வீட்டின் ஒரு பகுதியில் செய்யலாம்.

ஆடைகளுக்கான எம்பிராய்டரி

தையல் கலையில் அடிப்படை நிலைகளை அறிந்தவர்களுக்கு இந்த தொழில் பிரிவானது ஹோம் மேட் பிசினஸ் என்ற நிலையில் பிரகாசமான வாய்ப்பை இன்றைய சூழலில் அளிக்கிறது. அதாவது, பெண்களுக்கான ஆடை வகைகளில் எம்பிராய்டரி வேலைகளை செய்வது சம்பந்தப்பட்ட தையல் கடைகளில் செய்யப்படுவதில்லை. அதனால் தனிநபர்கள் அல்லது ஒரு நிறுவனத்தில் தைக்கப்பட்ட ஆடைகள் எம்பிராய்டரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பெண்களுக்கான சில குறிப்பிட்ட ஆடை வகைகளில் செய்யப்படக்கூடிய எம்பிராய்டரி மற்றும் ஜிமிக்கி வேலைகள் என்பது தையல் கூலியை விடவும் அதிகமாக இருக்கக்கூடும். மேலும், சுடிதார் மற்றும் ஜாக்கெட் வகைகள் ஆகியவற்றில் எம்பிராய்டரி செய்யப்படுவதை அனைத்து தரப்பு வயது கொண்ட பெண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக திருமண விழாக்களில் மணப்பெண் அணியக்கூடிய ஆடைகளில் எம்ப்ராய்டரி வொர்க் நிச்சயம் இருக்கும். சிறிது கால பயிற்சியை மேற்கொண்ட பின்னர் இந்த தொழிலில் இறங்கி எளிதாக வெற்றி காண முடியும். 

யோகா மற்றும் தியான வகுப்பு

மன இறுக்கம், உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளை அளிக்கக்கூடிய யோகா என்ற இந்திய பாரம்பரிய முறையின் மீது தற்போது ஏராளமானோர் நம்பிக்கை வைத்துள்ளார்கள். யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் இந்த துறையில் நல்ல வாய்ப்பை பெறுகிறார்கள். மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியோர்கள் போன்றவர்கள் இதுபோன்ற பயிற்சி அளிக்கும் தகுதி வாய்ந்த தனிநபர்களை நாடி வருவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. அதனால் சுலபமாக வீட்டின் மேல் மாடியில் இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்வது மன நிறைவு தரும் தொழில் வாய்ப்பு என்றே குறிப்பிடலாம். 

கிராபிக்ஸ் டிசைனிங்

நிச்சயமான வர்த்தக வாய்ப்புகள் கொண்ட ஒரு தொழில் பிரிவு இதுவாகும். ஹோம் மேட்  பிசினஸ் என்ற வகையில் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரிவும் இதுவாகும். காரணம் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களுக்கும் விளம்பரம் அவசியம் என்ற நிலையில் அவற்றிற்கான விஷுவல் வடிவமைப்பை தொழில்நுட்ப ரீதியாக செய்துவருபவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேடி வருகின்றன. இந்த தொழில் பிரிவில் பயிற்சி பெற்ற தனி நபர்கள் தங்களுடைய அனுபவத்தை வளர்த்துக்கொண்டு ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை பெற முடியும். குறிப்பாக தொலைக்காட்சி அல்லது பத்திரிக்கை ஆகிய  நிறுவனங்களுக்கான வரிகளை வடிவமைப்பு பணிகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் செய்து கொடுக்கலாம். 

சரும பராமரிப்பு சோப் தயாரிப்பு

தற்போதைய சந்தையில் ஏராளமான சோப்புகள் கிடைக்கும் நிலையில் இந்த தொழில் பிரிவுக்கு அப்படி என்ன வாய்ப்பு இருந்து விடக்கூடும் என்று சாதாரணமாக நினைத்து விட இயலாது. ஏனென்றால், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கக்கூடிய பொருட்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், சிறப்பான முறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, மூலிகை வேர், மூலிகை தைலம், மூலிகை மற்றும் தரமான தாவர எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சிறு தொழில் முறையில் தயாரிக்கப்படும் சருமப் பராமரிப்புக்கான சோப் அதற்கான சந்தை மதிப்பை நிச்சயம் பெறும். இந்த முறையுடன் இணை தயாரிப்பான கேசத்தை பராமரிக்கும் கூந்தல் பராமரிப்பு ஆயில் தயாரிப்பையும் மேற்கொண்டு இரட்டை வர்த்தக வாய்ப்பை பெறலாம்.

தனிப்பட்ட சேவைகள்

இந்த சேவை பிரிவானது நகர பகுதிகளில் தனிப்பட்ட நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது.  அரசு வேலைவாய்ப்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை, பாஸ்போர்ட் அப்ளிகேஷன், பான் கார்டு அப்ளிகேஷன், ரேஷன் கார்டு சம்பந்தமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட சேவைகளில் விஷயம் அறிந்த தனி நபர்கள் தங்களுடைய வெளிவட்டார தொடர்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றை தொழில் வாய்ப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

மேற்கண்ட தொழில் பிரிவுகள் தவிரவும் ஆன்லைன் முறையில் டியூசன் எடுப்பது, பெண்களுக்கான மேக்கப் செய்வது, விழாக்களுக்கான போட்டோகிராபி, பகுதிநேர எழுத்தாளர், ப்ரூஃப் ரீடிங், சுற்றுலா வழிகாட்டி, மலர்க்கொத்து மற்றும் பூச்செண்டு தயாரிப்பு உள்ளிட்ட நிறைய தொழில் பிரிவுகளில் ஏராளமான வாய்ப்புகள் இன்றைய சூழலில் அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட ஏரியாவுக்கு தகுந்தார்போல் செய்யக்கூடிய தொழில் பிரிவுகளும் நகர்ப்புறங்களில் இருக்கின்றன. ஹோம் மேட் பிசினஸ் முயற்சியில் ஈடுபடும் தனிநபர்கள் சிறந்த சிறு தொழில் முனைவோராக ஆக வேண்டுமானால்  டார்கெட் ஆடியன்ஸ், வாடிக்கையாளர் சேவை, பெறப்படும் கட்டணங்கள், அரசு உரிமங்கள் மற்றும் சரியான விளம்பரங்கள் ஆகிய நிலைகளில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.