written by | October 11, 2021

ஹோம்ஸ்டே வணிகம்

×

Table of Content


லாபகரமாக ஹோம்ஸ்டே பிசினஸ் செய்வதற்கான வழிமுறைகள்

மனித மனம் எப்போதும் மாற்றங்களை நாடியே செல்கிறது. அன்றாட வாழ்க்கையில் தொடர்ச்சியாக செய்து வரும் பணி அல்லது தொழில் ரீதியான செயல் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்னால் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் ஒரு சலிப்பான அனுபவத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதன் காரணமாக தற்காலிக விடுப்பு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வது பலருடைய வருடாந்திர வழக்கமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் இந்த பழக்கம் இப்பொழுதுதான் மெதுவாக பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளில் 12 மாதங்கள் கொண்ட ஒரு ஆண்டில் முற்றிலும் ஒரு மாதத்தை, விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்வதற்காக பயன்படுத்துகிறார்கள். 

மது இந்திய நாடு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நிலைகளில் உலக அளவில் புகழ்பெற்றதாக இருக்கிறது. அதன் காரணமாக, ஆன்மிகம் மற்றும் மன நிம்மதி ஆகியவற்றை தேடி இந்தியா வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இந்தியா வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான குளிர் பிரதேசங்களில் அதாவது மலைப்பாங்கான ஊர்களில் தங்குகிறார்கள். மேலும், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் பல்வேறு பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்கள் அமைந்துள்ள ஊர்களில் தங்கி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை பார்வையிட்டு அல்லது தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள்.

ஹோம்ஸ்டே என்பது நவீன பிசினஸ் மாடல்

இந்தியா வரக்கூடிய வெளிநாட்டுப் பிரயாணிகள் பெரு நகரங்களில் அமைந்துள்ள உயர்தரமான தங்கும் விடுதிகளில் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து குறிப்பிட்ட கால அளவுக்கு தங்குகிறார்கள். இது பொதுவான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் கூட, ஒரு வெளிநாட்டவருக்கு இன்னொரு நாட்டினுடைய வித்தியாசமான வாழ்க்கை முறை, மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக ரீதியான தேடல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளக்கூடிய மனோபாவம் நிச்சயம் இருக்கும். அதன் அடிப்படையில் வெவ்வேறு இடங்களுக்கு ஆர்வத்துடன் சுற்றுலா செல்வார்கள். 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அவரது ஆர்வம் காரணமாக தொலைதூரத்தில் இருக்கக்கூடிய ஒரு வித்தியாசமான இடம் அல்லது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்துக்காக செல்லும் நிலையில் அவர் தங்குவதற்கான தகுந்த ஒரு இடத்தை அந்த இடத்தில் தேடிக்கண்டு பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். அப்போது சம்பந்தப்பட்ட பகுதியிலேயே அவர்கள் வசதியாக தங்குவதற்கு ஒரு வீடு அல்லது கிடைத்தால் அறை கிடைத்தால் நிச்சயம் அவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்திவிட்டு அதில் தங்கிக் கொள்ள விரும்புவார்கள். மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பெரிய வீடுகள், பல அடுக்குகள் கொண்ட மாடிவீடுகள், குடும்ப சொத்தாக அமைந்துள்ள பண்ணை வீடுகள் போன்ற பெரிய அளவிலான வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு ஹோம்ஸ்டே என்ற பிசினஸ் மாடல் ஒரு சிறந்த வழிமுறையாக அமைந்துள்ளது. அதாவது, பல அறைகள் கொண்ட ஒரு பெரிய வீட்டில் வசிக்கும் சிறிய குடும்பத்திற்கு இந்த பிசினஸ் மாடல் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு நவீன முறையாக இருக்கிறது. இந்த முறை ஹாஸ்டல் அல்லது ஹோட்டல் ரூம் போன்ற முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.

ஹோம்ஸ்டே என்ற பிஸினஸ் மாடல் பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட் (பி அண்ட் பி) அல்லது கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. ஒரு சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களுடைய வீடுகளை ஹோம்ஸ்டே என்ற முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக அனுமதி அளித்து இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய நாடு பொதுவாகவே விருந்தினர்களை தெய்வமாக மதிக்கும் பண்பாடு உடையது. அதன் காரணமாக இந்திய குடும்பங்களில் அவர்களில் ஒருவராக தங்கி, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பெரும்பாலான வெளிநாட்டவர்கள் விரும்புகிறார்கள். 

தொழில் ரீதியாக இந்தியா வருபவர்களும் கூட இவ்வாறு தங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. வெளிநாட்டவர் என்று மட்டுமல்லாமல் இந்திய அளவில் வேறு மாநிலங்களில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சுற்றுலா வருபவர்களும் இவ்வாறு தனிப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த வீடுகளில் தங்குவதை விரும்புகிறார்கள். இதற்கான காரணம் வெளிப்படையானது. அதாவது, அதே பகுதியில் குடியிருக்க கூடிய நபர்கள் என்பதால் புதிதாக அந்த பகுதிக்கு வந்து தங்கும் அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் அவர்களிடமிருந்து சுலபமாக கிடைத்து விடும். ஹோம்ஸ்டே என்ற பிஸினஸ் மாடலை பயன்படுத்த விரும்பும் தனிநபர்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கு தேவையான தகவல்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 

இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்கண்ட இரண்டு விதிமுறைகள் இந்த பிசினஸ் மாடலுக்கு அவசியமானவையாகும்.

  •  முதலாவது, ஹோம் ஸ்டே என்ற முறையில் அறைகள் மற்றும் தனி வீடுகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடும் தனிநபர்கள், குடும்பத்தவர்கள் அல்லது பில்டர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் குடியிருப்பது அவசியம். 
  • இரண்டாவது சம்பந்தப்பட்ட வீடு அல்லது குடியிருப்பு பகுதியில் குறைந்தபட்சம் ஒரு வசதியான அறை முதல் அதிகபட்சமாக ஆறு அறைகள் வரை இருக்க வேண்டும். 
  • மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட முறையிலான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்கள் ஹோம்ஸ்டே முறையில் அறைகள் மற்றும் வீடுகள் வாடகைக்கு விடுவதற்கான தர நிலையை சில்வர், கோல்ட் மற்றும் டைமண்ட் என்ற வகைகளில் பிரித்து அறிவித்துள்ளன. 
  • இந்த பிஸினஸ் மாடல் என்பது நவீன முறையாக இருப்பதாலும், இனிமேல்தான் பெரிய அளவில் நடக்க வேண்டும் என்பதாலும் அரசாங்க அளவில் பெரிய சட்ட திட்டங்கள் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அனுமதி மற்றும் பெறக்கூடிய கட்டணங்களுக்கான சேவை வரி செலுத்துவதற்கான அனுமதி ஆகியவற்றை பெற்றுக்கொள்வது அவசியமானது. 
  • இந்திய அளவில் பல மாநிலங்கள் ஹோம்ஸ்டே பிசினஸ் செய்ய விரும்பும் தனி நபர்களிடம் இருந்து முறையான விண்ணப்பங்களை பெற்று அதன்பின்னரே தகுந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை பார்வையிட்டு அவற்றின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட இதர வசதிகளை கணக்கில் கொண்டு அவற்றிற்கு மதிப்பீடுகளை அளிக்கிறார்கள். 

மனம் கவரும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு 

ஒரு சுற்றுலாப் பயணிகளை தங்களுடைய வீடு அல்லது அறைகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு விருந்தினராக தங்கவைத்து உபசரிக்க கூடிய ஹோம்ஸ்டே என்ற நவீன உபசரிப்பு முறையை வெறும் பொருளாதார ரீதியாக மட்டுமே கணக்கில் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கான மரியாதையும் அடங்கியிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் மொழிகள் மட்டுமே பேசத்தெரிந்த குடும்பத்தினர்கள் அவர்களுக்கு உதவியாக ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளை நன்றாக பேசத்தெரிந்த ஒருவரை தகவல் தொடர்புக்காக தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம். அவர் மூலம் தங்கியுள்ள வெளிநாட்டவர் அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம்.

மலைப்பிரதேசங்கள் அல்லது ஆன்மீக ஸ்தலங்கள் ஆகியவற்றில் இந்த பிஸினஸ் மாடலை செயல்படுத்துபவர்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட ஊரிலேயே குடியிருந்து வருவதால், தங்களுடைய எல்லாவிதமான கேள்விகளுக்கும் சரியான பதிலை நிச்சயம் அளிக்க முடியும். மேலும் எந்த நேரத்தில் சென்றால் எந்தெந்த இடங்களை பார்வையிட முடியும் என்ற தகவலை தருவதுடன், உணவு மற்றும் இதர சேவைகள் பற்றிய கவலைகளை தங்குபவர்களுக்கு ஏற்படாமல் செய்யவும் முடியும். 

வீட்டு உரிமையாளருடைய பொறுப்புகள்

ஒரு பிரபலமான சுற்றுலா தளத்தில் சொந்த வீட்டுமனை இருப்பவர்கள் அருமையான அமைப்பில், பல அறைகள் கொண்ட ஒரு வில்லா வீடு கட்டமைத்து, அதை ஹோம்ஸ்டே முறையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு அளிக்க முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்ப நபர்களில் ஒருவராவது அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது அவசியம்.

குறிப்பிட்ட மாநிலத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்கள், கோவில்கள் மற்றும் இதர ஆன்மீக சம்பந்தமான இடங்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை என்ற அளவில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு மனதிற்கு பிடித்தமான வகையில் அமைந்துள்ள தங்குமிடத்தை நிச்சயம் தேடி வருவார்கள். குறிப்பாக தனிப்பட்ட ஒரு குடும்பம் சார்ந்த வீடாக இருந்தால் அமைதியாக தங்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பது ஹோம்ஸ்டே பிஸினஸ் மாடலை மேற்கொள்பவர்களின் அனுபவமாக இருந்துவருகிறது. 

பெருநகரங்களில் மூன்று பெட்ரூம் கொண்ட வீடுகளில் தங்கியிருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்த முயற்சிக்கலாம். அவர்களின் வசதிக்கு ஏற்ப உள் அலங்காரம், படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதி, சுடுநீர் வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சிறப்பாக செய்திருந்தால் நிச்சயம் அது அனைத்து தரப்பு சுற்றுலா வாசிகளையும் கவரக் கூடியதாக இருக்கும்.

அதிநவீன வசதிகள் அவசியம்

வீடுகள் அல்லது அறைகளில் மின்சார வசதி இல்லாத நேரங்களில் பயன்படுத்தக்கூடிய யுபிஎஸ் வசதி, இணையதள பயன்பாட்டுக்கான இன்டர்நெட் இணைப்பு, கச்சிதமான லிப்ட் வசதி மேலும், தங்குபவர்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு தேவையான வாகன வசதிகளை அளிப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இந்த பிசினஸ் மாடலுக்கு சிறந்த சந்தை மதிப்பை அளிக்கின்றன. மேலும், சமையல் செய்வதற்கான பொருட்கள் மற்றும் ஒரு உதவியாளர் போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட தனிநபர்கள் தங்களுடைய வீடுகள் அல்லது அறைகளை ஹோம்ஸ்டே முறையில் தங்குவதற்கு அனுமதி அளிக்கும் விஷயத்தை சமூக வலைதளங்களில் தகவலாக அளிப்பது அவசியமாகும். மேலும், சம்பந்தப்பட்ட வீடு அவருக்கு சொந்தமானது என்பதற்கான சான்றுகளை பதிவிடுவது அத்தியாவசியமானது. ஏனென்றால், இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் எச்சரிக்கையாக செயல்படுவது எப்போதும் நல்லதாகும்.

வர்த்தக ரீதியான அணுகுமுறைகள்

அருகிலுள்ள நகரங்களில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு தங்குவதற்கான அறை அல்லது தனி வீடு இருப்பது பற்றிய தகவலை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். அதன்மூலம் தேவையான நபர்கள் எளிதாக அணுக முடியும். குறிப்பாக, ஏற்கனவே தங்கிய நபர்களிடமிருந்து போன் நம்பர்களை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தங்களுடைய போன் நம்பரை தரவேண்டும். அதன் மூலம் மீண்டும் அவர்கள் தங்குவதற்கு அல்லது வேறு நபர்கள் தங்க விரும்பினால் அவர்களுக்கு தகவல் அளிக்கலாம்.

ஹோம்ஸ்டே பிஸ்னஸ் மாடலில் சில பாதுகாப்பு அம்சங்களை தனிநபர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, வந்து தங்குபவர்களுடைய புகைப்பட அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை பெற்று முறையான தரவாக பராமரித்து வருவது, தங்கும் காலங்களில் சட்ட திட்டங்களின் படி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் தெளிவாக அவர்களுக்கு சொல்லுவது ஆகியவை அவசியமான அம்சங்களாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.