written by | October 11, 2021

வர்த்தக முத்திரை பதிவு

×

Table of Content


சிறு தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் டிரேடு மார்க் பதிவு செய்வதற்கான வழிவகைகள்

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட பெயர் மற்றும் அதற்கான மதிப்பு இருக்கிறது. அது உயிருள்ள மனிதராக இருந்தாலும் சரி. உயிரற்ற ஒரு ஜடப்பொருளாக இருந்தாலும் சரி. எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அதற்கு என்று குறிப்பிட்ட ஒரு பெயர் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் அனைவருக்கும் நிச்சயம் பெயர் உள்ளது. பெயர் இல்லாமல் உள்ள ஒரு மனித சமூகத்தை நினைத்துப் பார்க்கவே இயலாது. அதன் அடிப்படையில் அனைத்து விதமான பொருள்களுக்கும் அடையாளப்படுத்த கூடிய பெயர் நிச்சயம் அவசியமாக உள்ளது. உலக அளவில் ஆயிரக்கணக்கான தொழில்கள் மற்றும் அவற்றிலுள்ள ஆயிரக்கணக்கான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கான பெயர்கள் ஏராளமாக நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

எவ்வளவு பெயர்கள் இருந்தாலும் கூட அதன் தனிப்பட்ட அடையாளத்தை ஒருவர் எளிதாக, ஒரு பெயரைச் சொன்னவுடன் அறிந்துகொள்ள முடிகிறது. அதுதான் ஒரு பெயருக்கான தனித்தன்மையாக உள்ளது. இதே அடிப்படையை கணக்கில் கொண்டுதான் ஒரு தொழில் நிறுவனத்துக்கான பெயர் மற்றும் அந்த நிறுவனம் தயாரிக்கக்கூடிய பொருளுக்கான பெயர் ஆகிய நிலைகளில் தனிப்பட்ட அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கும், வர்த்தக மதிப்பீடுகளை உருவாக்குவதற்கும் பெயர் என்ற அடையாளத்தை குறியீடாக தேர்வு செய்து சட்டப்படி அதை டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ளப்படுகிறது. 

ஒரு நிறுவனத்திற்கான வர்த்தக கட்டமைப்பை உறுதியாக அமைத்து சந்தைப்படுத்தும் நடைமுறைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்வதற்கு ஒரு பிராண்ட் நேம் அதாவது வணிக அடையாள பெயர் என்பது மிகவும் அவசியமானது. குறிப்பாக, இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்தில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அந்த நிறுவனம் வாடிக்கையாளர் மத்தியில் ஒரு மதிப்பீட்டை பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், மற்ற போட்டியாளர்கள் ஒரு நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவதில் இருந்தும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை போலியாக தயார் செய்வதில் இருந்தும் குறிப்பிட்ட பெயர் தான் அந்த நிறுவனத்தை பாதுகாக்கிறது. ஏனென்றால் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயரை அல்லது ஒரு தயாரிப்பின் பெயரை சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றவர்கள் அதனை பயன்படுத்துவது சட்ட ரீதியான குற்ற நடவடிக்கையாக கணக்கில் கொள்ளப்படும். 

எந்த ஒரு தொழில் முனைவோரும் குறிப்பாக சிறு தொழில் முனைவோர்கள் தங்களுடைய நிறுவனம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றுக்கான டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் என்ற உரிமை பதிவு தவறாமல் செய்து கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பு அல்லது நிறுவனம் ஆகியவற்றுக்கான டிரேட்மார்க் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். 

பிராண்ட் என்பது அறிவு சார் சொத்து

பொதுவாக, டிரேட் மார்க் என்பது அறிவு சார்ந்த சொத்து என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு தயாரித்து வழங்கக்கூடிய பொருள் அல்லது அளிக்கக்கூடிய சேவை எந்த பிரிவில் அமைந்துள்ளது என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெயர் ஏற்கனவே மற்றொருவரால் தேர்வு செய்யப்பட்டு பதிவுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் இண்டலெக்சுவல் பிராப்பர்ட்டி இந்தியா என்ற இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அவ்வாறு தெரிந்து கொண்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை டிரேட்மார்க் பதிவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விண்ணப்பம் ஆனது பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிராண்ட் எழுத்துக்களுடன் டி..எம் என்ற எழுத்துக்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் கிடைத்தவுடன் அந்த பிராண்டுடன் பதிவு செய்யப்பட்டது என்பதற்கான ஆர் என்ற எழுத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எந்த வகையிலாவது விளம்பரங்கள் இடம் பெற்றிருப்பதை அன்றாட வாழ்வில் அனைவருமே கண்கூடாக பார்த்திருக்கலாம். அதன் அடையாளம் என்னவென்றால்  வாடிக்கையாளர் மனதில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவது மட்டுமல்லாமல், அவற்றை வாங்கக்கூடிய உள்ளுணர்வை உருவாக்குவதும் விளம்பரங்களுக்கான அடிப்படை அம்சமாகும். அதனால், பொருத்தமான டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் என்பது சிறுதொழில் நிறுவனங்களுக்கு மிகவும் இன்றியமையாதது. 

பதிவு செய்யும் வழிமுறைகள் 

ஒரு டிரேட்மார்க் என்பதை எந்தெந்த வழிமுறைகளில் பதிவு செய்துகொள்ள முடியும் என்பதை ஒரு தொழில் முனைவோர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். இன்றைய உலகம் அனைவரது உள்ளங்கைகளிலும் அடங்குவதாக இருக்கிறது. தகவல் தொடர்புகள் காரணமாக ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெரும் முதலீடு, உழைப்பு, இரவு பகல் பாராமல் செய்த சேவை ஆகிய நிலைகளில் வளர்க்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது அதன் தயாரிப்பு ஆகியவற்றுக்கான வர்த்தக ரீதியான மதிப்பீட்டை, வாடிக்கையாளர்கள் மத்தியில் உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் பல்வேறு வகையான குறியீடுகளை அல்லது அடையாளங்களை டிரேட்மார்க் என்ற வகையில் பதிவு செய்து உதவுகிறது. அதனால், அந்த நிறுவனம் அல்லது ஒரு தயாரிப்புக்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் உறுதி செய்கிறது. அவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்ட விதங்களில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பின் பெயர் பதிவு

ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாக அளிக்கப்படும் ஒரு நுகர்பொருளை சரியான மற்றும் கவர்ச்சிகரமான ஒரு பெயர் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ மூலமாக செய்யப்படும் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைகின்றன. 

வடிவம் சார்ந்த பதிவு

குறிப்பிட்ட ஒரு நுகர்பொருள் எந்த வடிவத்தில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறதோ, அந்த வடிவத்தையே அதற்கான அடையாளமாக பதிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பொருளுக்கான வர்த்தக வாய்ப்புகள் தொடர்ந்து இருந்து வரும். குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு பிஸ்கட் குறிப்பிட்ட வடிவத்தில் விற்பனைக்கு கிடைப்பதை உதாரணமாக குறிப்பிடலாம். அந்த வடிவத்தை வேறு பிஸ்கட் தயாரிப்பாளர்கள் சட்டப்படி பயன்படுத்த இயலாது. 

சேவை அடிப்படையில் பதிவு

இந்த முறையானது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லும் பொழுதே, அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையிலான சேவைகளை அளித்து வருகிறது என்பது தெரிய வரும். இதற்கு உதாரணமாக பிரபலமான ஓட்டல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஒலி அதாவது சப்தம் பதிவு

ஒரு நிறுவனம் அதன் வர்த்தக நிலைப்பாட்டை வாடிக்கையாளருக்கு சப்தம் மூலம் குறிப்பிடுவதற்காக ஏதாவது ஒரு இசை வடிவத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தப்படும் இசை வடிவத்தை பிரத்தியேக டிரேட்மார்க் ஆக பதிவு செய்து கொள்ள முடியும்.

வண்ணங்களின் பதிவு

இந்த முறையானது காட்சி சம்பந்தப்பட்ட பிரத்தியேக டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் ஆகும். அதாவது, ஏதாவது ஒரு வண்ணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட முறையில் ஒரு நிறுவனம் அல்லது ஒரு தயாரிப்பு ஆகியவற்றை வாடிக்கையாளர் மனதில் இடம்பெற செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய வகையில் இந்த பதிவு துணை செய்கிறது.

வார்த்தைகள் பதிவு

ஒரு பிரபலமான நிறுவனம் அல்லது தொடக்க நிலை நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட ஓரிரு எழுத்துக்கள் மூலம் வாடிக்கையாளரிடம் அடையாளப்படுத்த கூடிய முறை இதுவாகும். அந்த எழுத்து நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தின் மொழியாகவும் இருக்கலாம். அல்லது பொது மொழியான ஆங்கிலத்தில் கூட இருக்கலாம். அப்படி குறிப்பிட்ட எழுத்தை பதிவு செய்து கொள்வதன் மூலம் வர்த்தக ரீதியாக  சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே அந்த எழுத்தை வரையறைக்கு உட்பட்ட நிலைகளில் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

லோகோ முறையில் பதிவு

இந்த முறையானது மிகவும் பொதுவான ஒன்றாகும். ஏனென்றால், லோகோ என்ற குறியீடுகள் என்பது மனித நாகரிகத்தின் தொடக்க காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. அதனால், இனம், மொழி, மதம், நாடு ஆகிய எந்தவிதமான வரையறைகளுக்குள்ளும் கட்டுப்படாமல் ஒரு சாதாரண குறியீடு மூலமாகவே, ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தின் தயாரிப்பையோ வாடிக்கையாளரிடம் நேரடியாக அதனுடைய பிரதிபலிப்பை உருவாக்க முடியும். இதற்கான உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது வெளிப்படை.

சொற்றொடர்கள் பதிவு

இந்த முறையானது மிகவும் நுட்பமான ஒன்றாகும். அதாவது, வாடிக்கையாளர் உடைய மனதில் இரண்டு விதமான கருத்தை உருவாக்குவதன் மூலமாக குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை அல்லது தயாரிப்பை வர்த்தக ரீதியாக நிலை நிறுத்தும் வணிக யுக்தி ஆகும். அதாவது, அந்த சொற்றொடரில் உள்ள அடிப்படை கருத்தை மனதில் பதிப்பது மற்றும் அந்த கருத்தை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஒரு தயாரிப்பு பற்றிய எண்ணத்தை மனதில் தோன்ற வைப்பதும் அதன் செயல்பாடாக அமைகிறது. 

தொழில் முனைவோர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ள டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் நடைமுறைகளை மேற்கொள்வது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  • நேரடியாக விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு சென்று அளிக்கும் நிலையில் பதிவுக்கான கிளாசஸ் என்ற வகைப்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது கிளாசஸ் 1 முதல் 34 வரை பொருட்களுக்கான பதிவை குறிப்பிடுகிறது. அதே சமயம் கிளாசஸ் 35 முதல் 45 வரை சேவைகளுக்கான பதிவை குறிப்பிடுகிறது.
  • குறிப்பிட்ட ஒரு எழுத்து அல்லது லோகோ ஆகியவற்றுக்கான பதிவை மேற்கொள்ள தனிப்பட்ட விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் ஆதார் கார்டு, நிறுவனம் பற்றிய தகவல்கள் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும். 
  • டிரேட் மார்க் வேண்டி விண்ணப்பம் செய்யும் தொழில் முனைவோர் அல்லது நிறுவனம் சார்பாக ஒரு லாயர் மூலம் பவர் ஆப் அட்டர்னி நியமனம் செய்யப்பட்டு விண்ணப்பம் அளிக்கப்படவேண்டும்.
  • விண்ணப்பம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட லாயருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், டிரேட்மார்க் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் குறிப்பிட்ட கால வரையறைக்கு பின்னர் அது ட்ரேட் மார்க் ஜர்னல் மூலம் பப்ளிஷ் செய்யப்படும். டிரேட்மார்க் பயன்படுத்துவதற்கான காலவரையறை பத்து வருடம் ஆகும். அதன் பின்னர் தக்க கட்டணத்தை செலுத்தி மறுபதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் நடைமுறைகள் பூர்த்தி அடைவதற்கு 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம். 
  • டிரேட்மார்க் பதிவு குறித்து யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதுபற்றிய தகவல் அனுப்பப்படும். அந்த நிலையில் தகுந்த விளக்கத்தை அளித்து பதிவை மேற்கொள்வது அவசியம். அதனால், தொழில் முனைவோர்கள் இந்த பணியை செய்து தரக்கூடிய ஆலோசகர்கள் மூலம் பதிவை மேற்கொள்வது சிக்கல்களை எளிதாக கையாள வசதியாக இருக்கும். 
  • ஆன்லைன் மூலமாக டிரேட்மார்க் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய விரும்புபவர்கள் அரசின் இணையதளத்தை அணுகி அவர்களுக்கென்று ஒரு கணக்கை தொடங்க வேண்டும். அதன் பின்னர் அதில் கேட்கக் கூடிய தகவல்கள் அனைத்தையும் முறையாக ஒரே தடவையாக பூர்த்தி செய்வது அவசியம். அதன் பின்னர் கட்டணம் செலுத்துவதற்கு எந்த வகையான முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து செலுத்த வேண்டும். அதன் பின்னர் செலுத்தப்பட்ட தொகைக்கான ரசீது அனுப்பப்படும். அந்த ரசீதை பத்திரமாக வைத்திருந்து இதர தகவல் தொடர்புகளில் கேட்கப்படும் பொழுது சமர்ப்பிக்க வேண்டும். 
  • அரசின் எம்.எஸ்.எம்.இ அமைப்பில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்கள் மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது. தனியாக எந்த பிணையமும் தேவை இல்லை. அந்த நிறுவனங்களுக்கு பேட்டன்ட், டிரேடு மார்க் ஆகியவற்றின் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.