written by | October 11, 2021

உணவு பேக்கேஜிங் வணிகம்

×

Table of Content


வெற்றிகரமாக ஃபுட் பேக்கேஜிங் தொழிலை தொடங்கி நடத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் நடைமுறைகள்

நாகரிக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகிய வியக்கத்தகு மாற்றங்களின் அடிப்படையில் இன்றைய வாழ்க்கைச் சூழல் மிகவும் வசதியாக மாறி இருக்கிறது. ஆனால் அதே சமயம் பொருளாதார அடிப்படைகளை நோக்கிய அன்றாட வாழ்க்கை பயணம், சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. அதனால், நின்று நிதானமாக அமைதியாக உணவை சாப்பிட வேண்டிய முறைகள் துரித கதியில் செய்யப்பட வேண்டியதாகி விட்டன. அதாவது ஃபாஸ்ட் ஃபுட் என்ற அவசர வாழ்க்கைக்கான தீர்வு இன்றைய நகர்ப்புற மக்களின் உணவுத் தேவையை குறிப்பிட்ட சதவிகித அளவு பூர்த்தி செய்கிறது. அதனால், செல்லும் பாதையிலேயே உணவை வாங்கிக் கொண்டு, கிடைக்கும் நேரத்தில் அதை சாப்பிடுவது நகர வாழ்வின் வழக்கமாக மாறிவிட்டது. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 75 சதவிகித நகர்ப்புற மக்களுக்கு ரெடி டு ஈட் உணவு வகைகள் அவர்களது அன்றாட உணவுப் பழக்கமாக மாறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அளவு இனிவரும் காலங்களில் அதிகமாகலாம் என்பது ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

முந்தைய காலங்களில் உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பார்சல் செய்து எடுத்துக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. அந்த பார்சல் என்பது ஒரு வாழை இலையில் உணவை வைத்து கட்டப்பட்டு, அதை ஒரு பேப்பரில் மடித்து வைப்பு எடுத்து வருவதாக இருக்கும். இதே முறைதான் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் என்ற வகையில் பெரும் வர்த்தக வாய்ப்புகளை உள்ளடக்கிய தொழில் பிரிவாக மாற்றம் பெற்றுள்ளது. அதன் வளர்ச்சியானது காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வகைகளிலும் விரிவடைந்து இருக்கிறது. 

இந்திய பேக்கேஜிங் தொழில் துறை

சர்வதேச அளவில் இந்திய பேக்கேஜிங் தொழில் துறையானது தற்பொழுது 11 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பேக்கேஜிங் தொழில் துறையில் சுமார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் சுமார் 48 சதவிகிதம் அளவிலும், பர்சனல் கேர் பேக்கேஜிங் பிரிவானது சுமார் 27 சதவீதமும், மருத்துவ பொருட்கள் பேக்கேஜிங் என்பது சுமார் 7 சதவிகிதமும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. சர்வதேச நிறுவனத்தின் ஆய்வில் இந்தியா 2020 ஆம் ஆண்டில் சுமார் 47 மில்லியன் டன் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தொழில் பிரிவில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான பெரும் வர்த்தக வாய்ப்புகளை கொண்டுள்ள தொழில் பிரிவில் ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் என்பது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த தொழிலுக்கான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக அரசாங்கம் 100 சதவீத அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றி இருக்கிறது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களுக்கான பேக்கேஜிங் என்பது மிக அவசியமான ஒரு தொழில் பிரிவாகும். அதன்மூலம் குறிப்பிட்ட ஒரு பொருளை குறிப்பிட்ட ஒரு கால வரையறை முடியும் வரையில் அதன் தன்மைகள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். அதனால்தான் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளுக்கு பேக்கேஜிங் பிசினஸ் என்பது சிறந்த வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான உணவுத் தேவைகளை பாதுகாப்பான விதத்தில் நிறைவேற்றும் விதமாக அமைந்துள்ள இந்த தொழில் பிரிவு, அதற்கான வாய்ப்புகளை வரும் காலங்களில் இன்னும் கூடுதலாகவே பெறக்கூடும். அதன் அடிப்படையில் பேக்கேஜிங் பிசினஸ் தொழில் துறையில் காலடி எடுத்து வைத்து, வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக ஆக விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம். 

பேக்கரி பொருட்கள், பால் சம்பந்தமான தயாரிப்புகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு, சமைக்க தயார் நிலையில் உள்ள உணவுப் பொருள்கள், ஸ்நாக்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆரோக்கிய உணவு தயாரிப்புகள் மற்றும் குளிர் பானங்கள் ஆகிய பல்வேறு வகைகளில் ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் பரந்த வர்த்தக வாய்ப்புகளை இன்றைய சூழலில் பெற்றிருக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும்  பேக்கேஜிங் தொழில் பிரிவுக்கான வர்த்தக வாய்ப்புகளை அளிக்கும் புதிய நிறுவனங்கள் தொடங்கப் படுவதால் இந்தத் துறையானது பிரகாசமான தொழில் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

அடிப்படை விஷயங்கள் 

ஒரு தொழில் முனைவோர் தனது சொந்த நிறுவனமாக ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் நடத்த இருக்கிறாரா அல்லது லிமிட்டட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் என்ற முறையில் தொழிலை நடத்துகிறாரா என்பதை பொறுத்து நிறுவன உரிமம், அதற்கான டிரேடு மார்க் லைசன்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் ஆகியவற்றுக்கான பதிவை செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்த துறையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விதிக்கக் கூடிய வரி வகைகளை செலுத்துவதற்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசின் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் உரிமம் பெற்று தொழிலை செய்யும்பொழுது அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்கக்கூடும்.

ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் என்பது மத்திய தரம் கொண்ட நிறுவனமாக அமைந்து ஒரு ஆண்டுக்கான வருமானம் என்பது ரூ 12 முதல் 20 கோடிக்குள் இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ லைசன்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே நிறுவனம் பெரிய அளவில் வர்த்தக வாய்ப்புகளை பெற்று, அதன் ஆண்டு வருமானம் ரூ 20 கோடிக்கும் மேலாக இருக்கும் நிலையில் மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ லைசென்ஸ் பெற்றுக்கொள்வது அவசியமானது. இந்த உரிமம் தான் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கான அரசு அங்கீகாரம் ஆகும்.

தொழிலை தொடங்குவதற்கு முன்னர் நிறுவனம் செயல்படுத்தக் கூடிய பிரதானமான பேக்கேஜிங் செயல்திட்டம் என்ன என்பதையும், மெஷினரி அமைப்புகள், உள் கட்டமைப்புகள், வர்த்தக வாய்ப்புகள், ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட பொருட்கள் மற்றும் வேளாண் விளைபொருட்கள் ஆகியவற்றிற்கான தரநிலை பாதுகாப்பு மற்றும் சேமிப்பு வசதி முதலியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு பொருட்கள் எளிதாக பாதிக்கப்படக் கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான வேளாண் விளை பொருள்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தகுந்த குளிர்சாதன வசதி கொண்டதாக இருப்பில் வைக்கப்பட வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு வசதியும் மிக முக்கியம். மேலும், டார்கெட் ஆடியன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய வாடிக்கையாளர்கள் பிரிவு மற்றும் அதற்கான சந்தை அளவு மற்றும் மதிப்பு ஆகியவற்றை தகுந்த ஆய்வுகள் உடன் அறிந்து அதற்கேற்ப தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை கச்சிதமாக ஏற்படுத்திக் கொள்வது அவசியம். 

பேக்கிங் வகைகள் மற்றும் அதன் பிரிவுகள்

ஏர் டைட் பேக், அசெப்டிக் ப்ராசசிங், டிரே, பெட்டிகள், அட்டைப் பெட்டிகள், டின்கள், பேலட்டுகள், ஃபிளெக்சிபிள் பேக்கேஜிங், ரேப்பர் ஆகிய வகைகளில் பொருட்களை பேக்கிங் செய்ய இயலும். ஃபுட் பேக்கேஜிங் பிசினஸ் தொழில் முனைவோர் தங்களுக்கான வர்த்தக பிரிவை எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும். அவை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குழந்தை உணவு பேக்கேஜிங்

இந்திய அளவிலான குழந்தைகளுக்கான ஃபுட் பேக்கேஜிங் பிரிவு என்பது எதிர்வரும் 2020 நான்காம் ஆண்டில் கிட்டத்தட்ட 48 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக வளரக்கூடும் என்று ஆய்வு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி சதவிகிதம் என்பது சுமார் 6.5 என்ற அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

பேக்கரி பொருட்கள் பேக்கேஜிங்

இந்தப் பிரிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை அளிக்கக் கூடியது என்று குறிப்பிடலாம். காரணம், எளிதாக சிறுவர் முதல் பெரியவர் வரை வாங்க கூடிய வகையிலும் அன்றாட வாழ்வில் சாதாரணமாக பயன்படுத்தும் வகையிலும் இந்த பொருட்கள் இருப்பதால் இதற்கான சந்தையின் அளவு விரிவாக அமைந்திருக்கிறது. இந்த தொழில் பிரிவானது ஆண்டுதோறும் சுமார் 10 சதவிகிதம் அளவுக்கு வளர்ச்சி பெறுவதாக தெரியவந்துள்ளது.

காலை உணவு சிறுதானிய பேக்கேஜிங்

இந்த தொழில் பிரிவில் கார்ன்ஃப்ளேக்ஸ் என்ற மக்காச்சோள தானிய உணவானது கிட்டத்தட்ட 50 சதவீத சந்தை விற்பனையை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஓட்ஸ் மற்றும் கோதுமை உள்ளிட்ட மற்ற வெவ்வேறு சிறுதானிய வகைகள் சந்தை மதிப்பை கொண்டிருக்கின்றன. 

பால் பொருட்கள் பேக்கேஜிங்

அன்றாட வாழ்வில் அவசியம் பயன்படுத்தக்கூடிய பால் பொருட்களான மோர், தயிர், வெண்ணெய்போன்ற பொருட்களுக்கான சந்தை மதிப்பு நிரந்தரமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பிரிவில் செயல்பட வேண்டுமானால் கூடுதலான தர கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

சமையல் எண்ணெய் பேக்கேஜிங்

இந்த தொழில் பிரிவானது ஆண்டு முழுவதும் வர்த்தக வாய்ப்புகளை உள்ளடக்கிய பெரும் சந்தை மதிப்பு தொழில் துறை ஆகும். இறக்குமதி செய்யப்படும் பாம் ஆயில், சோயாபீன்ஸ் மற்றும் சூரியகாந்தி ஆயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வெவ்வேறு ஆயில் வகைகளை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி பேக்கேஜிங் செய்யப்படும் தொழில் பிரிவுக்கு ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக மதிப்பு அதிகரித்து வருகிறது.

பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறி பேக்கேஜிங்

இந்திய குடும்பங்களில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் பணி புரியும் சூழலில் சமையலுக்காக அதிக நேரத்தை செலவிடுவது என்பது சிக்கலாகிவிட்டது. மேலும் கூட்டுக் குடும்ப முறை தவிர்க்கப்பட்டு விட்டதால் உணவு தயாரிப்பதில் ரெடி டு ஈட் பொருட்களை வாங்கிவந்து பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அந்த அடிப்படையில் காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் ஆகியவற்றுக்கான பேக்கேஜிங் துறை நல்ல தொழில் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

இறைச்சி மற்றும் கடல் உணவு பேக்கேஜிங்

நான் வெஜ் பிரியர்களுக்கான வகைவகையான உணவுகளை சுலபமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்தப் பிரிவுக்கான பேக்கேஜிங் அமைந்திருக்கிறது. மிகுந்த தர கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இறைச்சி மற்றும் கடல் மீன் உணவு ஆகியவற்றை கச்சிதமாக பேக்கேஜிங் செய்ய வேண்டும். இதன் சுகாதாரமான தயாரிப்புக்காகத்தான் வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள்.

சிறு தானியங்களுக்கான பேக்கேஜிங்

பொதுமக்களிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டு வருவதால், ஆர்கானிக் முறைகளில் பல்வேறு சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாகவும் உணவு முறை மாற்றம் செய்துகொள்ள வேண்டும் அவர்கள் நாடுவது இந்த வகையான சிறுதானிய வகைகளை தான். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் சிறப்பான தொழில் வாய்ப்பை பெற்றுள்ள இந்த பேக்கேஜிங் பிரிவானது தொழில் முனைவோர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. 

ஸ்நாக்ஸ் பேக்கேஜிங்

இந்த தொழில் பிரிவு பற்றி அதிகமாக சொல்ல வேண்டியது இருக்காது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஸ்நாக்ஸ் ஐட்டங்களை விரும்பாதவர் இருக்க முடியாது. இந்த தொழில் பிரிவானது தேசிய அளவில், ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரத்து 500 கோடி சந்தை மதிப்பு கொண்டதாக வளர்ந்திருக்கிறது. இந்த பிரிவில் பிஸ்கட் மற்றும் சாக்லேட் வகைகளுக்கான வர்த்தக வாய்ப்பு என்பது, ஸ்நாக்ஸ் வகைகளை விடவும் மேலும் கூடுதலான சந்தை மதிப்பை உருவாக்கி இருக்கிறது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.