written by | October 11, 2021

ஒரு ஜவுளி வணிகத்தைத் தொடங்கவும்

×

Table of Content


             இதோ உங்கள் ஆடை நிறுவனத்தின் தொடக்கம்…

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகள் உள்ளது.

1.உயிர் வாழத்தேவையான உணவு

2.உடல் அங்கங்களை மறைப்பதற்காக உடை

3.நிலைப்பெற்று வாழ்வதற்கு இருப்பிடம்

காலத்திற்கு ஏற்றார்ப்போல் இந்த அடிப்படை தேவைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல பரிமாற்றங்கள் அடைந்து இன்னும் வருகிற காலங்களில் பற்பல மாறுதல்கள் அடைவதற்கு தயாரகி வருகிறது.

  இந்த தேவைகளை மையமாக வைத்து தொடங்கப்படும் தொழில்களுக்கு அழிவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதில் வெற்றிப் பெற்றவர்களை வரிசைபடுத்தினாலும் அதில் தோல்வி அடைந்தவர்களை நம்மால் தவிர்க்க இயலாது.

  அதனால் வெற்றிப்பெற்றவர்களின் பாதையை மனதில் வைத்து, தோல்வியை தழுவியவர்களின் தவறுகளை நம் சிந்தையில் வைத்தாலே உங்கள் பாதையை நீங்கள் தீர்மானித்துவிடலாம்.

  இந்த மூன்றில் இரண்டாவதாக உள்ள உடை சார்ந்த தொழில் தொடங்குவதைப் பற்றிய கட்டூரை தொகுப்புதான் இது. வாருங்கள் அதன் படிநிலைகளை சிறிது அலசலாம்.

  ஆடைகள் கலாச்சாரமானது அன்று தொட்டு இன்று வரை காலத்தின் வளர்ச்சிக்கேற்ப பல மாறுதல்கள் அடைந்துள்ளது.அதற்கேற்ப அதன் சார்ந்த நிறுவனமும் தன்னை தானே உருமாற்றி வருகிறது.அழிவில்லா இத்தொழிலில் புதுவரவை புகுத்துவதோடு பண்டைய வழக்கத்திற்கேற்ப பாரம்பரிய ஆடைகளும் இன்று வரை எல்லோராலும் விரும்பப்படுகிறுது. ஆடைகள் என்றாலே அனைத்து வயது உடையவர்களுக்கு தனித்த மகிழ்ச்சி தான்.அதனால் அத்தொழிலை உள் அன்போடும் மனநிறைவோடும் செய்வதில் பெரும் ஆனந்தம் அடையலாம். அதன் நவீன நுட்பங்களை கையாளும் அறிவுசார் திறமையை வளர்ப்பதிலும் என்றும் ஆர்வமாக இருத்தல் வேண்டும்.அதை பயில்வதால் இன்றைய போட்டி உலகில் அனைவரையும் விட சிறந்து விளங்க உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

 

  1.அமைவிடம்

   எந்த தொழிலை தொடங்குவதற்கு முன் அதற்கு தகுந்த இடத்தை தீர்மானிப்பது முக்கியமான ஒன்று.

   ஒவ்வொரு தொழிலுக்கும் வாடிக்கையாளரின் வருகையை பொருத்து அதன் அமைவிடத்தை நிர்மானிக்க வேண்டும். மக்களின் புழக்கம் அதிகமாகவும், வருகை தரும் இடமாகவும் இருந்தல் அவசியம்

  நம் ஆடை சார்ந்த தொழிலுக்கு மக்கள் வரவு கணிசமாக வரும் இடமாக இருத்தல் பயனுள்ளது. ரயில் நிலையம்,பேருந்து நிலையம் முக்கியமான சாலை ஊரங்கள் இது போன்ற இடங்களை தெரிவு செய்வதன் மூலம் மக்களின் பார்வை இயல்பாகவே நமது கடையின் மீது படரும்.

  அத்துடன் தங்கள் நிறுவனத்தின் அளவீட்டை கருத்தில் கொள்ளவேண்டும். நீளத்திற்கு ஏற்றார்போல் அகலத்தில் இருந்தால் மேலும் சிறப்புக்குரியது. அதனால் வாடிக்கையாளர் வருகைக்கும், அவர்தம் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அமைவதோடு விளம்பர பலகைகள் வைப்பதற்கும் ஏற்றவாறு அமைந்துவிடும். இன்றைய கால கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மென்மேலும் அதிகரித்து வருகிறது அதனால் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வாகனம் நிறுத்தும் வசதியோடு அமைத்தால் மக்களின் வருகையும் அதிகரிக்கும் அவர்களும் எந்தவித பய உணர்வுமின்றி தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் உடைகளை வாங்கி செல்வர்.

  உங்களுடைய ஆடை நிறுவனம் எந்த வித இடையூறும் அருகில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அருகில் வேறு எந்த ஆடை சார்ந்த கடைகளும் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். வருகை தருபவர்களுக்கு இடையூறு தருமாறு இருக்கும் எந்த கடை அருகிலும் அமைக்க கூடாது.அதனால் உங்கள் பாதையில் வெற்றி அடையாத சூழல் ஏற்படும். ஆதலால் அதற்கேற்ப உங்களது அமைவிடம் அமையப்பெறுவது மிகவும் முக்கியமான ஒன்று.

 

2.கட்டிட அமைப்பு

  ஆடை நிறுவனங்களுக்கு அதன் கட்டிட அமைப்பு மிகவும் பிரத்யேகமாக இருக்க வேண்டும்.அதன் அமைப்பே அனைவரையும் வருகை தர தூண்டும் அளவிற்கு இருத்தல் வேண்டும்.அனைத்து பிரிவுகளும் உள்ளடக்கிய தங்களின் இடத்திற்கேற்ப தகுந்த கடையை நிர்வகிக்க வேண்டும். ஆண்கள்,  பெண்கள், குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால் ஒருசாரரை திருப்தி படுத்துமாறு தங்கள் நிறுவனத்தை அமைத்தாலே நன்று.அதற்கேற்ப கட்டிடத்தையும் அழகாகவும் தரமானதாகவும் அமைக்க வேண்டும்.

  கடை முழுவதும் ஒளி விளக்குகளை பிரகாசமிட்டு கவரும்படியாக இருப்பதோடு கண்ணாடிகள் ஆங்காங்கே இருக்க வேண்டும்.உடை மாற்றும் அறை தனித்தனியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் மற்றும் ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் இருத்தல் மிக முக்கியமானது.கழிவறையின் வசதி யாருக்கும் எந்தவித இடையூறுமில்லாமல் பணிபுரிவருக்குக்கும் மற்றும் வாடிக்கையாளருக்கும் தனியாக அமைத்தல் சிறப்பானது. குடிநீர் வசதியும் ஆங்காங்கே அமைக்க முன் ஏற்பாடுடன் உங்கள் கட்டிட வடிவமைப்பில் சேர்க்க வேண்டும்.

  கட்டிடத்தின் முன் முகப்பு மிக அழகாக எழிலூட்டும் விதமாக அமைவிப்பதால் அனைவரின் ஈர்ப்பையும் பெறலாம்.கண்ணாடிகளால் அலங்கரிப்பதோடு, வண்ணமயமான விளக்குகளை ஒளிரவிட்டு உங்கள் நிறுவனத்தின் அடையாளத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் படியாக அமைத்தல் வேண்டும்.

 

3.நிறுவனத்தின் பெயர்

   உங்கள் நிறுவனத்தின் பெயர் இதற்கு முன் பயன்படுத்தாத பெயராகவும் உச்சரிக்க கூடியதாகவும் இருத்தல் அவசியம்.

அனைத்து மக்களையும் கவரக்கூடியதாகவும்,புதுமையாகவும் இருத்தல் மேலும் சிறப்புக்குரியது.

  ஆண்கள் சார்ந்த ஆடை நிறுவனங்களுக்கு அவர்களை கவரக்கூடியதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதற்கேற்றார்போல் அமைப்பது சாலச்சிறந்தது.

 

4.வாடிக்கையாளர் வருகை

   மக்களின் வருகைக்கு பல முறைகளை பலர் கையகப்படுத்தியுள்ளனர், உங்களுக்கென்று தனித்த அடையாளத்தை அறிமுகப்படுத்துவது சிறந்தது.

  குறிப்பாக;

                   இலவசம் – ஒன்று வாங்கினால் மற்றொன்று இது போன்று சலுகைகள் அளிக்கும் போது மக்களை எளிதில் கவர்ந்து அவர்களின் வருகையை தூண்ட முடியும். நீங்கள் அளிக்கும் இலவசமும் அதற்கேற்ப நம்பும் படியாக இருக்க வேண்டும்.

                   தள்ளுபடி- சதவிகித அடிப்படையில் ஒவ்வொரு ஆடைகளுக்கும் அதன் விலையில் எவ்வளவு தள்ளுபடி என்று அறிவிப்பதால் மக்களும் எந்தவித பேரமும் பேசாமல் மனநிறைவோடு வாங்கி செல்வர்.அதற்காக மிக அதிகவிலை நிர்ணயித்து விலையை குறைத்தல் பயணளிக்காது.

  இது போன்று சலுகைகள் அடிப்படையில் உங்கள் கடையை விளம்பரபடுத்தினால் மக்களிள் வரவேற்பு அதிகரிக்கும்.

  உங்கள் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளும், விளம்பரங்களும் அனைவரையும் சென்றடையுமாறு புதுமையான கண்ணோட்டத்துடன் அமைக்க வேண்டும்.

   இன்னும் சிலர் பிரபலங்களின் வருகை என அவர்களின் பொருளாதார தகுதிக்கு ஏற்றவாறு பிரபலபடுத்துவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் தனது அபிமான நட்சத்திரங்களையோ அல்லது நபர்களையோ காண மக்கள் அதிக அளவில் கூடுவர் இதுபோன்ற உக்தியை அனைவரும் அதிகமாக செய்து வருகின்றனர்.

 

5.உபசரிப்பு

   வருகை தரும் உறவுகளை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும்.ஏனென்றால் வருபவர்கள் பல மனநிலைகளில் மகிழ்ச்சியாக அல்லது கவலையாக கூட வரலாம், ஆதலால் அவர்களை எரிச்சலூட்டும் விதமாக இல்லாதிருத்தல் முக்கியமானது.

   அதன் உபசரிப்பு முறைகளை பணிபுரியும் ஊழியர்களுக்கும், நிறுவனத்தை சார்ந்த அனைவருக்கும் பயிற்றுவித்தல் இன்றியமையாதது.

   வாடிக்கையாளரின் நேரக்குறைப்பை எண்ணத்தில் கொண்டு அவர்தம் விருப்பத்தை பூர்த்தி செய்யுமாறு உங்கள் செயலை மேம்படுத்த வேண்டும்.

  வாடிக்கையாளரின் எண்ணத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றார்போல் துரிதமாக செயல்பட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும்.

  அவர்தம் குறைகளை கேட்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவேண்டும். அவர்களின் கவனத்தை ஈர்த்து உங்கள் ஆடைகளின் சிறப்பையும் தரத்தையும் அவர்தம் மனவிருப்பத்திற்கேற்ப நாகரீகமாக எடுத்து சொல்லி அனைவரையும் கவர வேண்டும்.

  வீண்விவாதங்களில் ஈடுபடாமல் வாடிக்கையாளரின் கருத்துக்கு இசைந்து போதல் மிகவும் நல்லது. அதுபோன்று செய்வதால் அவர்களின் வெறுப்பை பெறுவதோடு அல்லாமல் அவர் மூலமாக அடுத்து வர இருக்கும் வாடிக்கையாளர் வரவை கெடுக்கும் விதமாக அமைந்துவிடும்.ஆதலால் வீணான விவாதங்களை தவிர்த்து வருகை தருபவரின் நன்மதிப்பை பெறும் வகையில் இருக்க கற்றுக்கொடுங்கள்.

 

6.வரிசைப்படுத்துதல்

   குழந்தைகள், இளைஞர்கள்,பெரியவர்கள்,முதியவர்கள் என அனைத்த வயது ஒத்தவரையும் பிரித்து வகைப்படுத்துதல் வேண்டும் இதில் அனைத்திலும் ஆண்கள் பெண்கள் என வரிசைப்படுத்தி வருகை தருபவர்கள் புரியும் விதமாக வைக்க வேண்டும்.ஒவ்வொரு  பிரிவில் உள்ள ஆடைகளையும் விலைக்கேற்ப வரிசைப்படுத்துதல் எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர் எடுப்பதற்கு ஏதுவாக அமையும்.

  ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் பிரத்யேக ஆடை ரகங்கள் உண்டு.அதை மிகைப்படுத்தி அவர்கள் முன்னிலையில் வைக்க வேண்டும்.அனைத்து விதமான ரகங்களையும், அதன் வெவ்வேறு வர்ணங்களையும் பார்வைக்கேற்ப வரிசைப்படுத்துதல் வேண்டும். ஓவ்வொரு ஆடைகளிலும் தனித்துவமான தரம் சார்ந்த வடிவமைப்புகள் உண்டு அதன் வகைகளுக்கேற்ப அனைத்து ரகங்களையும் வரிசைப்படுத்தி வருபவர்களை கண்கவர் பிம்பத்தை உருவாக்க வேண்டும்.

  பெண்களுக்கான பிரிவில் தனி கவனம் செலுத்த வேண்டும்.அவர்களின் ஆடைகளில் தனித்துவமான விதம் விதமான நிறைய வகைகள் உள்ளது.அது அனைத்தையும் வயதுகேற்ப பார்வை படுத்துதல் மிக முக்கியமானது.பெண்கள் மனநிறைவு அடையும் விதமாக உங்கள் ஆடை ரகங்கள் அமைவதோடு அதன் சுவரொட்டிகள் அமைந்தால் இன்னும் சிறப்பானது.

 

7.கவனத்தை ஈர்த்தல்

   சிறிய கடையோ அல்ல பெரிய கடையோ வருபவர்களுக்கு சிறிதேனும் பிரமிப்பை ஏற்டுத்துங்கள்.

   எந்தவித குழப்பமில்லாமல் அவர்கள் தேடிவந்த இடத்தை அடைய வழிக்காட்டுதலும், அறிவிப்பு பதாகைகளும் அமையுமாறு வழிவகை செய்யுங்கள்.

   அனைத்து வித ஆடை ரகங்களையும் விலைக்கேற்ப தரமானதாக இருத்தல் வேண்டும்.

   பணிபுரிபவர்கள் துணிகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல் நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும்,திருப்திபடுத்தவும் அவர்களின் சேவையை உளமாற முகச்சுழிப்பில்லாமல் செவ்வண்ணமே செய்ய வேண்டும்.

  சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளும் அதன் விளம்பர பதாகைகளும் ஆங்காங்கே பிரசுரிக்க வேண்டும்.

  குழந்தைகளை கவரும் விதமாக கண்கவர் விளக்குகளும்,பொம்மைகளும் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.

  புதுவரவின் அறிவிப்பு சுவரொட்டிகளை அனைவரின் பார்வைக்கும் தென்படும்படி பிரசுரிக்க வேண்டும்.

 

8.வாடிக்கையாளரின் வருகயை தூண்டுதல்

   வருககை தந்தவர்களை மீண்டும் வரவழைக்க சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும்.

  உதாரணமாக;

      நீங்கள் விற்பனை செய்த ஆடைகளின் விலைக்கேற்ப பாயிண்ட்ஸ் அல்லது வருகையையும் விலையையும் குறித்து வைத்து மீண்டும் இத்தனை முறை (அ) எவ்வளவு விலைக்கு வாங்கினால் தள்ளுபடி அளிப்போம் என்று வாடிக்கையாரின் அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் மக்களின் வருகை தொடர்வது அதிகரிக்கும்.

   சுபதினங்களுக்கு வாழ்த்து மற்றும் புதுவரவுகளின் அறிமுக சலுகைகள் அனைத்தையும் குறுந்தகவலால் நினைவுகூர்தல் நுகர்வோரின் அன்பை பெறும் உக்த்தியாகும்.

  அவர்களின் தனிப்பட்ட சலுகைகள் பற்றிய அறிவிப்பை நினைவுகூர்தல் மூலம் மீண்டும் மீண்டும் நுகர்வோரின் வருகை தொடரும்.

 

9.வாடிக்கையாளரின் கருத்து

  விடைபெறும் வாடிக்கையாளரின் கருத்தை கேட்டறிந்து, குறைகள் இருக்குமேயானால் அதனை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளிப்பதுடன் அதற்காக தங்களின் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

  அவர்களின் புதுவித யோசனை இருந்தால் அதை பதிவு செய்ய வாய்ப்பை ஏற்படுத்துவது முன்னேற்றத்துக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்.

 

10.விளம்பரம்

   மக்கள் கூடும் இடங்களிலும்,தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளத்திலும் உங்கள் நிறுவனத்தின் பிம்பம் தொடர்ந்து விழும்படியாக தகவமைப்பை உருவாக்க வேண்டும்.

  சலுகைகள் தொடர்பான விளம்பரங்களும், ஒவ்வொரு கால இடைவெளிக்குள் புது புது சலுகைகளை அறிவித்து அதன் தொடர்பான அனைத்து செய்திகளும் மக்களை சென்றடையுமாறு விளபரபடுத்த வேண்டும்.

  இதுபோன்ற அறிவிப்புகளை தொடர்ந்து அறிவிப்பதன் மூலம் உங்கள் ஆடை நிறுவனத்தின் பெயர் என்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.

   மீண்டும் ஒரு கட்டூரை தொகுப்பில் சிந்தனையால் கலந்துரையாடலாம்.

வாழ்க பாரதம்!  வளர்க பாரதம்! என்றில்லாது,

நாம் முயற்சி செய்து நன்றாக வாழ்ந்தால், பாரதம் நன்றாக வளரும் என்ற நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

 

               

 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.