written by | October 11, 2021

சட்டை வடிவமைப்பு வணிகம்

×

Table of Content


டி-ஷர்ட் வடிவமைப்பு மற்றும் விற்பனை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிமுறைகள் 

இன்றைய காலங்களில் டீசர்ட்டுகள் சாதாரண நேரங்களில் மட்டும் அணியும் சட்டையாக மட்டுமல்லாமல் நம்முடைய உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையாகவும் நாம் யார் என்ற அடையாளத்தை தெரிவிக்கும் வகையிலும் நம்முடைய ஆர்வங்களை பிறருக்கு தெரிவிக்கும் வகையிலும் உள்ள வாசகங்களை மற்றும் பிம்பங்களை  பயன்படுத்தும் சட்டையாக உள்ளது. அலுவலகத்திலும் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபட்டு வெளியில் செல்லும்போதும் டீசர்ட் போன்ற சட்டைகளை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அணியக்கூடிய வகையில் விலையும் மலிவாக இருப்பதால் டி-ஷர்ட் மவுஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இத்தகைய மிகவும் பிரபலம் வாய்ந்த டீசர்ட் களை தயாரித்து விற்கும் யோசனை உங்களது வணிக வளர்ச்சிக்கு முக்கியமான ஆதாரமாக விளங்கும் என்பதில் எந்தவித பிரச்சினையில்லை. 

டி-ஷர்ட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழில் தொடங்குவதற்கு மிகப் பெரிய முதலீடு தேவை என்பது இல்லாமல் இருப்பதால் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் பல்வேறு இளைஞர்கள் ஆர்வமாக மற்றும் புதிய தொழில் நுட்பங்களுடன் செயல்பட்டு வெற்றியை அடைந்து வருகிறார்கள். இவ்வாறு ஆர்வத்துடன் பல்வேறுபட்ட மக்கள் டீசர்ட் தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலில் இறங்குவது மற்ற தொழிலைப் போலவே அதிகப்படியான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட வயதுடைய அல்லது குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உங்களது டி ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களது டி-ஷர்ட் வடிவமைப்பு மற்றும் விற்பனைக்கு ஏதுவாக இருக்கும். இந்தக் கட்டுரையில் ஒரு டி ஷர்ட் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அந்த டீசர்ட் எவ்வாறு சந்தைப்படுத்தி வெற்று வளர்ச்சி அடைவது போன்ற தொழில் நுணுக்கங்களை பற்றிப் பார்ப்போம்.

லாபகரமான டி-ஷர்ட் வடிவமைப்பு மற்றும் விற்பனைக்கான படிநிலைகள் 

  1. எந்த வகையான வாடிக்கையாளர்களை குறிவைத்து செயல்பட வேண்டும் என்ற தெளிவு வேண்டும் 
  2. உற்பத்திக்கான மூலப்பொருட்களை வாங்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் 
  3. சிறந்த வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பை உடைய டி-ஷர்ட் டிசைன் தயாரிக்கவேண்டும் 
  4. வாடிக்கையாளர்கள் விரும்பும் சித்திரங்கள் மற்றும் வாசகங்கள் தேர்வு செய்ய வேண்டும்
  5. உங்களது டீசர்ட் க்கு மார்க்கெட்டில் தேவை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
  6. ஆன்லைன் ஸ்டோர் மூலம் பிரபலமான நிறுவனங்களுடன் இணைந்து விற்பனை செய்யவும் 

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து உள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் இயந்திர பயன்பாட்டிலுள்ள தெளிவின் காரணமாக டீ-சர்ட்டை வடிவமைத்து அச்சிட்டு வெவ்வேறு விற்பனை இடங்களுக்கு அனுப்பி வைத்து தொழில் வெற்றி பெறுவது எளிதாக தெரிந்தாலும் அதிகமான போட்டியின் காரணமாக உங்களது பிராண்ட் டி-ஷர்ட்டுக்கு  வரவேற்பு பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இத்தகைய அதிகப்படியான போட்டியின் காரணமாக நீங்கள் விற்கும் டி-ஷர்ட் களுக்கு ஆரம்பத்திலேயே அதிகப்படியான வரவேற்பை பெறுவது மிக முக்கியம். 

  1. எந்த வகையான வாடிக்கையாளர்களை குறிவைத்து செயல்பட வேண்டும் என்ற தெளிவு வேண்டும் 

உலகத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டு நீங்கள் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களது முதலீடு மற்றும் வியாபாரத்திற்காக நீங்கள் எடுத்த எடுப்பிலேயே செய்யக்கூடிய தொகை மிகவும் அதிகமாக அமையும். அவ்வாறு அல்லாமல் ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர்களை மட்டும் குறிவைத்து அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை தீட்டி அவர்களை கவரும் வகையில் டிசைன்களை வடிவமைத்து வியாபாரம் செய்வதால் உங்களது முதலீட்டுத் தொகை மிகப்பெரிய அளவில் குறைவது உறுதி. வெற்றிகரமான டீ ஷர்ட் வியாபாரத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தனித்து நிற்கும் திறன், அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து விற்பனை செய்வதன் மூலம் உங்களது தனித்திறன் உலகத்திற்கு வெளிப்படும். மொழி, சினிமா, நகைச்சுவை, காதல், சமூக அக்கறை கொண்ட வாசகங்களை டி-ஷர்ட் களில் பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய குறிப்பிட்ட ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமையும். 

  1. உற்பத்திக்கான மூலப்பொருட்களை வாங்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் 

மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து டி-ஷர்ட்களும் ஒரே மாதிரி துணியினால் தயாரிக்கப்பட்டவை அல்ல அதுமட்டுமல்லாது அவற்றில் உள்ள வாசகங்கள் மற்றும் படங்கள் அச்சடிக்க பயன்படுத்தப்படும் பிரிண்டர்கள் பல்வேறு வகையில் உள்ளன. ஆகவே நீங்கள் உங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்படுத்தக்கூடிய துணி மற்றும் பிரிண்டரை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கிய கவனம் கொண்டிருப்பது அவசியம். தரமான துணி வகைகள் தெரிந்து கொள்வதற்கும் அதன் பிரிண்டர் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்வதற்கும் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் உள்ள டீசர்ட்களைத் தயாரித்து விற்க முடியும். முதலீட்டு தொகையை குறைப்பதற்காகவும் அதிகமான லாபத்தை பெறுவதற்காகவும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தயாரிப்புகளில் ஏதேனும் சமரசம் செய்து வந்தால் உங்களது வாடிக்கையாளர்களுக்கு உங்களது பிராண்ட் மீது உள்ள நம்பிக்கையை மிக விரைவாக இழக்க நேரிடும். நீங்கள் டீசர்ட் தயாரிக்க பயன்படுத்தும் துணியின் எடை, மிருதுத்தன்மை, சாயம் பூச பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற விலை கொடுத்து வாங்கவேண்டும். டி-ஷர்ட் இல் வரைபடங்கள் மற்றும் வாக்கியங்களை அச்சடிப்பதற்கு மூன்று வகையான பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பழமை வாய்ந்த ஸ்கிரீன் பிரின்டிங் தொழில்நுட்பம், ஹீட் ட்ரான்ஸ்ஃபர் தொழில்நுட்பம் மற்றும் நேரடி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் போன்ற மூன்று வகையான பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் இன்றைய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஒவ்வொரு தொழில்நுட்பத்திற்கும் சில நன்மைகள் மற்றும் தீமைகள் இருப்பதால் உங்களுக்கு எந்த மாதிரியான தொழில் நுட்பமும் தேவை என்பதை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். 

  1. சிறந்த வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பை உடைய டி-ஷர்ட் டிசைன் தயாரிக்க வேண்டும் 

டி-ஷர்ட் வடிவமைப்புகளில் ஆரம்பக்கட்டத்தில் ஒருசில வடிவங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தாலும் நாளடைவில் நாகரீக வளர்ச்சியின் காரணமாகவும் தொழில் போட்டியின் காரணமாகவும் விதவிதமான டிஷர்ட்டுக்குள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன. கழுத்தில் காலர் வைத்த டி-ஷர்ட்கள், பல்வேறு வடிவங்களில் கை அளவுகொண்ட டி-ஷர்ட்கள் போன்ற வடிவங்களில் உள்ள டி-ஷர்ட் டுகளை வாடிக்கையாளர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு தயாரித்தால் மட்டுமே உங்களது பிராண்ட் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணங்களில் இன்றைய டிஷர்ட்டுக்குள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆகவே இதில் உள்ள அனைத்து வண்ணங்களிலும் டீசர்ட் களை கிடைக்காவிட்டாலும் மக்கள் அதிகமாக விரும்பும் வண்ணங்களால் ஆன கருப்பு மஞ்சள் சிவப்பு போன்ற வண்ணங்களை கொண்ட டீசர்ட்  அதிகமாக தயாரித்து விற்பது அவசியமாகும். நீங்கள் வடிவமைக்கும் ஸ்மால் மீடியம் லார்ஜ் போன்ற வடிவங்களில் சிறிதளவும் மாற்றம் இல்லாமல் அனைத்து வகையான திசைகளிலும் ஒரே மாதிரியான அளவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

  1. வாடிக்கையாளர்கள் விரும்பும் சித்திரங்கள் மற்றும் வாசகங்கள் தேர்வு செய்ய வேண்டும்

வேடிக்கையான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் விரும்பும் நபர்களை குறிவைத்து டி-ஷர்ட் டுகளை தயாரித்தல் அல்லது காதல் சம்பந்தப்பட்ட வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் விரும்பும் நபர்களை குறிவைத்து டி-ஷர்டை தயாரித்தல் மூலமாக உங்களது வாடிக்கையாளர்களை மிகவும் எளிதில் திருப்தி படுத்த முடியும். மேலும் சமூகத்தில் நடக்கக்கூடிய செய்திகள் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் நீங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருவீர்கள் என்றால் பல்வேறுபட்ட பிரிவுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.  இதை இன்னும் கொஞ்சம் இறுக்க விரும்புகிறீர்கள். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் அண்மையில் மொழிப்பற்று சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்க்கு மிகவும் அதிகமான வரவேற்பு இருந்தது என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். இத்தகைய வாக்கியங்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றவர்கள் உருவம் பொதித்த டி-ஷர்ட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நகைச்சுவை உணர்வு மிக்க படங்களை கொண்ட ஆடைகளை இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக அதிகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 

  1. உங்களது டீசர்ட் க்கு மார்க்கெட்டில் தேவை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்

உங்களது நிறுவனத்தை தயாரிக்கப்படும் டீசர்ட்டில் மிகுந்த தரம் வாய்ந்ததாக இருந்தாலும் அதை மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு சந்தைப்படுத்தி விற்கும் போது மட்டுமே உங்களது லாபத்தை அதிகரிக்க முடியும். ஆகவே அவ்வப்போது வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான மன நிலைமையில் இருக்கிறார்கள் எந்த மாதிரியான விருப்பங்களை தேர்வு செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். 

நீங்கள் எந்த வகையான வாடிக்கையாகவே குறிவைத்து செயல்பட வேண்டும் என்பதற்கு சில நடைமுறை வழிகள் உள்ளன, அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • உங்கள் சப்ரெடிட்களைப் பார்வையிட்டு, சந்தாதாரர்களின் எண்ணிக்கை மற்றும் ஈடுபாட்டின் அளவை மதிப்பீடு செய்வதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை அறிய முடியும்.
  • பேஸ்புக்கில் போன்ற சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் உள்ள தகவல் நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தவும்.
  • விக்கிப்பீடியா போன்ற வலைதளங்களில் மக்கள் அதிகமாக விரும்பும் பொழுதுபோக்கு மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும்.
  • உங்களுக்கு எந்த மாதிரியான டீ சர்ட் அணிய விருப்பம் என்பதை சிந்தித்து உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பற்றி தெரிந்து கொள்வதும் உங்களது தயாரிப்பின் வடிவமைப்பிற்கு உறுதுணையாக இருக்கும். 
  1. ஆன்லைன் ஸ்டோர் மூலம் பிரபலமான நிறுவனங்களுடன் இணைந்து விற்பனை செய்யவும்

உங்களுக்கென்று தனி ஒரு வலைதளத்தை உருவாக்கி ஆன்லைன் மூலம் உங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யலாம் அல்லது மிகவும் பிரபலமாக உள்ள அமேசான் ஃப்ளிப்கார்ட் மிந்த்ரா போன்ற வலைதளங்களில் ஆன்லைன் ஸ்டோர் உருவாக்கி அதன் மூலம் உங்களது டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம். உங்களது டீசர்ட் தயாரிப்பு உலகத் தரம் வாய்ந்ததாகவும் வெகுஜன மக்களை ஈர்க்கக் கூடியதாகவும் இருந்தால் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும். பிரபலமான மாடல்களை உங்களது டீசர்ட் விற்பனைக்கு பயன்படுத்துவது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பயன்படுத்திய விளம்பரம் செய்வதன் மூலம் அதிகப்படியான மக்களை கவர முடியும். அதே நேரத்தில் நீங்கள் அதிகப்படியான தயாரிப்புகளை தயாரித்து வைத்துக் கொண்டு மார்க்கெட்டில் வரவேற்பு இல்லை என்றால் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்த கூடிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதனால் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்கெட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி ஆர்டர்களை பெற்று அதற்கு ஏற்ற வகையில் மட்டுமே டி-ஷர்ட் உற்பத்தியில் இறங்குவது மிகவும் உசிதமானது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் மிகவும் எளிதானதாக இருந்தாலும் சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் நல்ல அனுபவம் வாய்ந்த நபர்களை அருகில் வைத்து இயங்குவதே நல்லது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.