written by | October 11, 2021

கல்வி கற்றல் மையம்

×

Table of Content


சொந்தமாக கல்வி பயிற்சி மையம் தொடங்குவது எப்படி? 

 சமீபத்தில் உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுபோன்ற கல்வி மையங்கள் பெரும்பாலும் தொடங்குவதற்கு காரணம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தவும் சிறப்பான பயிற்சி பெற்று அதில் கைதேர்ந்தவராகவும் இதுபோன்ற கல்வி பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறனஇந்நிலையில் இதுபோன்ற கல்வி பயிற்சி மையங்களை சொந்தமாக தொடங்கிய பலரும் இன்று உயரிய நிலையை அடைந்து பல சிறந்த மாணவர்களை உருவாக்கி உள்ளனர்

 அவ்வாறு நாம் சொந்தமாக கல்வி பயிற்சி மையங்களை தொடங்கும்போது அது பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் மிகப் பெரிய உன்னத வாய்ப்பாக அமையும் பட்சத்தில் அவ்வாறு சொந்தமாக கல்வி பயிற்சி மையம்  தொடங்கும் முன் கீழ்கண்டவாறு கட்டாயமாக ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

 சொந்தமாக கல்வி பயிற்சி மையம் தொடங்குவது பற்றிய தெளிவான திட்டம்!

 கல்வி பயிற்சி மையம் தொடங்குவதற்கு  மட்டுமல்லாமல் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அதில் தெளிவான திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தொடங்கும் முன்னரே நாம் தெளிவான திட்டத்துடன் தொடங்கும்போது அந்தத் தொழில் சிறப்பாகவும் வெற்றியுடன் அமைந்து விடும். இந்நிலையில் அதேபோன்ற திட்டமிடல் சொந்தமாக கல்வி பயிற்சி மையம் தொடங்கும் போதும் இருக்கின்ற பட்சத்தில் எடுத்துக்கொண்ட குறிக்கோளை மிக விரைவிலேயே அடைந்து விடலாம்.

தொடங்கயிருக்கும் கல்வி பயிற்சி மையத்தை தொடங்குவது பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வுகளையும் என்னென்ன தேவை என்பதையும் தெரிந்துகொண்டுஎடுத்துக்காட்டாக எந்த மாதிரியான சேவைகள் இந்த பயிற்சி மையத்தில் கொடுக்கப்படுகின்றன அதேப்போன்று  இந்த மையம் எங்கு தொடங்கப்படுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் முதலில் முறையான திட்டமிடலை தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அவைகளை பின்பற்றி சுய கல்வி நிறுவனத்தை தொடங்கலாம்.

 சுய கல்வி பயிற்சி மையம் தொடங்க தேவையான நிதி !

 சொந்தமாக கல்வி பயிற்சி மையம் தொடங்குவதற்கு மிகப்பெரிய அளவிலான நிதி தேவைப்படாது என்றாலும்நிறுவனத்தை தொடங்குவதற்கு தேவையான அடிப்படை நிதி கண்டிப்பாக  தேவைஇந்நிலையில் இத்தொழிலில் நிதி ஒரு முக்கியமான பங்காற்றுவதை தொடர்ந்து உங்கள் நிறுவனத்தின் பெயரை பலருக்கும் அறியச் செய்ய ஒருசில விளம்பரங்களுக்காக குறிப்பிட்ட அளவு  நிதிகள் செலவிட வேண்டியது இருக்கும்இப்பொழுது பலரும் தங்களுக்கு ஏற்றவாறு கல்வி மையத்தை தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவ்வாறான போட்டி மிகுந்த தொழிலை தொடங்கும் நிறுவனத்தின் பெயரானது நிலைத்து நிற்க தேவையான அளவு நிதியும் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

எனினும் பலரும் ஆரம்பத்தில் நிறுவனத்தை தொடங்கும்  அளவிற்கு முதலீடு இல்லாத சமயத்தில் அவர்கள் வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றோர்களை அணுகி தேவையான அளவு நிதியை திரட்டி கொள்வார்கள். இந்த முறையில் கடன்பெற்று நிறுவனம் தொடங்குவதை விட வங்கியில் கடன்பெற்று நிறுவனம் தொடங்குவதே மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இவ்வாறு வங்கியில் கடன் பெற்று சொந்தமாக கல்வி பயிற்சி மையம் தொடங்கும்போது  அது நம்பிக்கைக்குரியதாகவும் அதேசமயம் தேவையில்லாத ஆபத்துகளில் சிக்குவதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு வங்கிக்கடன் மிகச் சிறந்த வழியாகும்.

 படித்தவர்களுக்கு வங்கியில் சுயதொழில் தொடங்க பல்வேறு கடன் வசதிகள் இருக்கின்ற நிலையில் அதில் தொடங்கும் தொழிலுக்கு ஏற்றவாறு கடன் தொகை அனுமதிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கும் கடன் தொகையை பெற வங்கியை அணுகும்போது கட்டாயமாக தேவையான ஆவணங்களை கொண்டு செல்வது சிறந்த செயலாகும். ஒருவேளை வங்கி மேலாளருக்கு உங்கள் மீது நம்பிக்கை பெருகும் பட்சத்தில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை விட உங்களுக்கு தேவையான அளவு அதிக கடன் பெறவும் வாய்ப்புள்ளது.

 கல்வி மையத்தை தொடங்க சரியான இடத்தை தேர்வு செய்தல்!

  தொழில் தொடங்க சரியான திட்டமிடல்,தேவையான நிதி மற்றும் சிறந்த வழி என  அனைத்தையும் தயார் செய்தபின் அடுத்த கட்டமாக கல்வி மையத்தை  தொடங்குவதில் மிக முக்கியமான பங்காற்றுவது பயிற்சி மையம் அமைய  இருக்கும் இடம்தொழில் தொடங்குவதற்கு நிதி எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று நாம் தேர்ந்தெடுக்கும் இடமும் மிக முக்கியமான ஒன்றாகும்அவ்வாறு தெரிவு செய்யும் இடமே உங்களின் தொழில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறதுஎனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தை அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கொண்டு வந்து சேர்க்கவும் அழைத்துச் செல்லவும்போதுமான  போக்குவரத்து வசதி என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கின்றவாறு  கல்வி மையம் அமைய இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

 அதேசமயம் கல்வி மையம் அமைய இருக்கும் கட்டிடமானது மிகச்சிறிய அறையாக இருந்து விடாமல் பல மாணவர்கள் வந்து பயிலும் வகையில் தேவையை விட சற்று அதிகமாகவே இடம் இருப்பின் அதில் பல்வேறு வகுப்புகளை எடுக்க சௌகரியமாக இருப்பதோடுமாணவர்கள் அவர்கள் தேவைப்படும் பயிற்சி வகுப்புகளை தேர்ந்தெடுத்து படித்து பயன்பெற எந்த ஒரு இட இடையூறும் இல்லாமல் இருக்க கொஞ்சம் தாராளமான இடமாகவும் அறையாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது.

 சிறந்த ஆசிரியர் அல்லது பயிற்சியாளரை தேர்ந்தெடுத்தல்!

 புதிதாக கல்வி பயிற்சி மையத்தை தொடங்கும் பொழுது பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது பெற்றோர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் நம்பகத் தன்மையை உருவாக்கும்அவ்வாறு ஆரம்பத்திலேயே தங்களது குழந்தைகளை பயிற்சி மையத்தில் சேர்க்க வரும் பெற்றோரின் நம்பிக்கையை பெற்று விட்டால் தொடர்ந்து அதன் மூலம் பல்வேறு மாணவர்களும் வந்து பயிற்சி மையத்தில் இணைய அந்த நம்பகத்தன்மை பேருதவியாக இருக்கும். இந்நிலையில் பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும்போது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்தால் அவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் தர வேண்டும் என அனுபவம் இல்லாத ஆசிரியர்களை அல்லது பயிற்சியாளர்களை நியமிக்க முற்படுவது மிகத் தவறான செயல். அவ்வாறு செய்ய முற்படும் போது மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் பயிற்சி மையத்தின் மீதான நம்பிக்கையை குறைப்பதோடு நற்பெயரையும் கெடுத்து விடும்.

 ஆக நேஷனல் டுடோரியல் அசோசியேஷன் உள்ளிட்ட சான்றிதழ் பெற்ற இடத்திலிருந்து பயிற்சி பெற்ற தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது மாணவர்களும் புதிய மற்றும் எளிய முறையில் தங்களது பாடங்களை கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர முறையான பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது  கல்வி மையத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

 பயிற்சி மையத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்குதல் !

 உபகரணங்கள்  என சொல்வதில் அதில் புத்தகங்கள்கணிப்பொறி, மேஜை நாற்காலிகரும்பலகை மற்றும் மாணவர்களின் கல்வி பயிற்சிக்கு தேவையான சில பொம்மைகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் இதில் அடங்கும். ஆரம்பத்தில் ஒரே ஒரு பயிற்சி மையத்தை மட்டும் தொடங்கும் எண்ணம் இருந்தால் உபகரணங்கள் வாங்குவது என்பது மிக கணிசமான எண்ணிக்கையிலேயே இருக்கும். ஒருவேளை பல்வேறு கிளைகளுடன் பயிற்சி மையத்தை தொடங்கும் போது அனைத்து மையத்திற்கும் தேவையான எண்ணிக்கையில் உபகரணங்களை வாங்க வேண்டியது இருக்கும்

 இருப்பினும் ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரும் தொகையுடன் வாங்கப்படும் உபகரணங்கள் தேவையில்லாதது என  நினைக்கும் பட்சத்தில் மாணவர்களின் வருகை எண்ணிக்கையைப் பொறுத்தவாறு அவர்களுக்கு தேவையான உபகரணங்களை மட்டும் வாங்கி பயன்படுத்திக்கொண்டு பின் மாணவர்களின் சேர்க்கையைப் பொருத்தவாறு சிறிது சிறிதாக உபகரணங்களை வாங்கிக் கொள்ளுதல் தேவையில்லாத செலவுகளை குறைப்பதோடு அது வீணாக்கப்படுவதும் குறைகிறது.

 பயிற்சி மையத்தை விளம்பரப்படுத்துதல் !

 ஏற்கனவே பல மையங்களில் இதே பயிற்சிக்கு  வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை விட சில சலுகைகளை ஆரம்ப சலுகையாக அளிப்பதன் மூலம் பலரின் கவனத்தையும் பெறுவதோடு  பயிற்சி மையத்தின் பெயரும் எளிதாகவே மக்களை சென்றடையும்இவ்வாறு  ஆரம்ப கால சலுகைகள் என வழங்கும் பொழுது பலரும் தங்களது சேர்க்கையை பதிவுசெய்ய முற்படுவார்கள்அதேசமயம் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை அணுகி அனுமதி பெற்று தொடங்கியுள்ள கல்வி மையத்தை பற்றியும் அங்கு வழங்கப்பட உள்ள சலுகைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய  முழுமையான தொகுப்பு அடங்கிய போஸ்டர்களை வினியோகிப்பதான் மூலம் ஒரே சமயத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் இந்த செய்தி சென்றடைவதுடன்பள்ளியின் அறிவிப்பு பலகையில் இந்த போஸ்டர்களை கண்ணுக்குத் தெரியும்படி காட்சி படுத்துவதன் மூலம் மாணவர்களின் சேர்க்கையில் கூடுதல் எண்ணிக்கை ஏற்படும்

 இவ்வாறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளம்பரப்படுத்தும் முறை ஒரு புறம் இருக்க நாளிதழ்கள்தொலைக்காட்சி மற்றும் ரேடியோ உள்ளிட்ட  அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்களை பரப்பிவிடுவதன் மூலம் அனைவரிடத்திலும் தவறாமல் கல்வி மையத்தின் பெயர் சென்றவதோடு அது தொழிலின் முன்னேற்றத்திற்கு நல்ல பயனளிக்கும்.

 டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளுதல் !

 மேலே கூறியவாறு வழக்கமான முறையில் விளம்பரப்படுத்துதல் தொழிலின் முன்னேற்றத்திற்கு மிகச் சிறந்த வழி என்றாலும் இப்போது உள்ள பலரும் தொழில்நுட்பத்தை அதிக அளவு கையாண்டு வருவதால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் விளம்பரப்படுத்துதல் என்பது மேலும் பல புதிய வாடிக்கையாளர்களை மிக விரைவிலேயே பெறவைக்கும். இவ்வாறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் விளம்பரப்படுத்தும்போது விளம்பரப்படுத்துவதற்கான நேரம், ஆற்றல் மற்றும் தேவையில்லாத அலைச்சல் என அனைத்திலிருந்தும் விடுபட்டு சௌகரியமாக இருக்கும் அதே சமயம் பயிற்சி மையத்தில் சேர ஆர்வம் இருப்பவர்கள் அவர்களாகவே தொடர்புகொண்டு தங்களுடைய சேர்க்கைகளை பதிவு செய்து விடுவார்கள்

 இதில் குறிப்பாக விளம்பரப்படுத்துவதில் சோசியல் மீடியாக்கள் எனப்படும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய பங்காற்றுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களை மிக சாதாரணமாக பயன்படுத்தும் நிலையில் இதன் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் பார்ப்பவர்களை ஈர்ப்பதோடு பொழுதுபோக்கு நேரத்தை பயனுள்ளதாக கல்வி பயிற்சி மையத்தில் இணைந்து உபயோகமானதாக மாற்ற வழிவகை செய்கிறது. அதேசமயம்  இங்கு ஏற்கனவே படித்த ஒரு சில மாணவர்களிடம் கல்வி மையத்தில் படித்த அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் பலரும் கல்வி மையத்தில் சேர தேடி வருவார்கள்அவ்வாறு வருபவர்களுக்கு சிறப்பு சலுகையாக கல்வி கட்டணம் மற்றும் புதிய பாட பயிற்சி வகுப்புகள் என அளிப்பதன் மூலம் கல்வி மையத்தின் வளர்ச்சிக்கு  உறுதியான பாலமாக அமைவதோடு  மிகக்குறுகிய காலத்திலேயே பயிற்சி மையத்தின் பெயர் பிரபலமாகி விஸ்வரூப வெற்றியை எட்ட செய்கிறது.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.