written by | October 11, 2021

ஆன்லைன் வணிகத்தின் நன்மை தீமை

×

Table of Content


ஆன்லைன் வியாபாரத்தில் இருக்க கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் 

ஆன்லைன் விற்பனை என்றால் நம் நினைவுக்கு வருவது அமேசான், பிளிப்கார்ட், ஷாப்பிபை, அலிபாபா போன்ற பிரபலமாக இருக்கக்கூடிய 50 முதல் 100 வலைதளங்கள். ஆனால் உண்மையில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான இ-காமர்ஸ் வலைதளங்கள் இணையத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றது. இந்த ஆன்லைன் இணையதளங்கள் விற்பனை மூலமாக ஆண்டொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரையிலான விற்பனை வணிகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுனர்களின் கணக்கின்படி அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஆன்லைன் விற்பனை வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு இல்லை என்பதே ஆகும். இப்பொழுது நடைமுறையில் இருக்கக் கூடிய அனைத்து பொருட்கள் விற்பனையிலும் ஆன்லைன் வணிகம் என்பது ஆதிக்கம் செலுத்தி வருவதால் அனைத்து சிறு வியாபாரிகளும் இதற்கு மாறத் தொடங்கி உள்ளனர். 

மக்களிடையே மிக விரைவாக வளரும் ஆன்லைன் விற்பனை திட்டம் நாளடைவில் அதன் வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த ஆன்லைன் வர்த்தக தொழிலில் நன்றாக வளர்ச்சி அடைந்தவர்களின் ஆதிக்கம் பல சிறு புது வியாபாரிகளின் வளர்ச்சியை பெரிதும் தடுக்கிறது. இந்த ஆன்லைன் வியாபாரம் சம்பந்தமான தொழில் செய்யும் நபர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் ஆறு மாதங்களுக்குள் தங்களது தொழிலை நிறுத்தி விடுகின்றனர். ஒரே அளவு பரப்பளவு கொண்ட வட்டத்தை அதே பரப்பளவு கொண்ட சதுரத்தில் நுழைக்க முயற்சி செய்வது போன்ற சில ஒழுங்கற்ற திட்ட முறையால் இவர்கள் இவ்வாறு தோல்வியைத் தழுவ நேர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற, இந்த ஆன்லைன் விற்பனையிலும் பலதரப்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆன்லைன் விற்பனை வணிகத்தில் உள்ள நன்மைகள்  

குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு வரவேற்பு உலக மக்கள் அனைவரும் அளிக்கிறார்கள் என்றால் அத்தகைய வணிகத்தில் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். குறிப்பாக ஆன்லைன் வணிகம் வந்த பிறகு பெரிய கடைகளில் மக்கள் பில் போடுவதற்காக நெடுநேரம் காத்திருக்கும் நிகழ்வுகள் அரிதாகிவிட்டது. வணிக வளாக வாடகை, பார்க்கிங் இடத்திற்கான ஒப்பந்தம் இல்லாதிருப்பது போன்ற குறிப்பிட்ட சில முக்கிய ஆன்லைன் வர்த்தகத்தின் நன்மைகளைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம். 

1) குறைந்த முதலீடு 

ஆன்லைன் வியாபாரம் செய்பவருக்கு மிகப்பெரிய பரப்பளவில் நகரத்தின் மையத்தில் ஒரு கடை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை. இத்தகைய கடை எடுப்பதற்காக அவர்கள் வழங்கும் முன் பணத்தொகை மற்றும் வாடகை தொகை போன்றவற்றை பற்றிய கவலை கொள்ளத் தேவையில்லை. கடை வைத்து வணிகம் செய்பவர்கள் தங்களது கடையை அலங்கார படுத்த பல்வேறு வகையான செலவுகளையும் அந்த கடைக்கான வரி மற்றும் காப்பீட்டுத் தொகை போன்றவற்றிற்கு செலவழிப்பதால் தங்களது லாபத்தின் பெரும்பகுதி இழப்பை தவிர்க்க இந்த ஆன்லைன் விற்பனை உதவும். மேலும் நீங்கள் கடைக்கு செலவு செய்யும் தொகையை உங்களது பொருளில் அதிகமாக வைத்து விற்பதால் உங்கள் வாடிக்கையாளருக்கு மனநிறைவு கொள்ளும் வகையில் விலையை கொடுக்க இயலாமல் போகலாம். ஆன்லைன் விற்பனையில் இந்தவித முதலீட்டு செலவுகள் குறைக்கப்படுவது உங்களது பொருளுக்கு மார்க்கெட்டில் இருக்கும் அளவை விட சிறிய அளவு குறைத்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முடியும்.

2) வாடிக்கையாளர்களின் தரவுகள் மூலம் வியாபார வளர்ச்சி அடையலாம் 

உங்கள் கடைக்கு நேரில் வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரி மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களை நீங்கள் பெறுவது இல்லை. ஆனால் ஆன்லைன் விற்பனை வலைதளத்தில் விற்கப்படும் பொருளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த தரவுகளை வெளியிட்டால் மட்டுமே அந்த பொருள் அவர்களிடம் சென்றடையும். இத்தகவல்கள் உங்களது எதிர்கால பொருட்களின் விற்பனை மற்றும் புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் இடத்தை எளிதில் கொண்டு செல்லும். இந்த வகையான நேரடி தகவல்கள் மட்டுமல்லாது உங்களது ஈகாமர்ஸ் வெப்சிட் ஒரு வாடிக்கையாளர் பயன்படுத்தும் போது அவர் எந்த மாதிரியான பொருட்களை பார்க்கிறார் இந்த மாதிரியான பொருட்களை விரும்புகிறார் என்று உங்களால் ஊகிக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி பொருளை வாங்க வைக்க முடியும்.

3) சரக்கு இருப்பு தட்டுப்பாட்டால் வியாபாரத்தை இழக்க தேவையில்லை 

ஒரு வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு பொருளை வாங்க கடைக்கு செல்லும்போது, அந்தப் பொருள் அந்த கடையில் அந்நேரத்தில் இல்லை என்றால், அதற்கு இணையான வேறு ஏதேனும் பொருள் இருந்தால் வாங்க வேண்டியதிருக்கும் அல்லது அதே பொருள் ஸ்டாக் வரும் வரை காத்திருக்க வேண்டியது இருக்கும். இந்த இரண்டு செயல்பாடுகளும் வாடிக்கையாளர்களின் திருப்தி படுத்தும் என்பது உண்மை அல்ல. ஆன்லைன் விற்பனையில் இத்தகைய இடர்பாடுகள் எல்லா தீர்ப்பதற்கான காரணம் என்னவென்றால், பொருளை ஆர்டர் செய்த பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்களை வந்தடையும் என்ற மனப்பாங்குடன் ஆர்டர் செய்வார். அதற்குள் அந்த ஆன்லைன் விற்பனையாளர் வேறு எங்கும் அந்தப் பொருளை வாங்கி வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுவதால் இரு தரப்பினரும் மன நிறைவுக்கு உள்ளாவார்கள்.

4) அதிக இடங்களில் வணிக விஸ்தரிப்பு செய்ய முடியும் 

எவ்வளவுதான் பெரியகடை வைத்தாலும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு கடை வைத்திருக்கும் நபரின் வணிகம் என்பது அந்த நகரத்தை அல்லது அந்த மாநிலத்தை தாண்டிச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆன்லைன் வணிகம் என்பது அந்த தடைக்கு அப்பாற்பட்டு உலகத்தில் உள்ள எந்த மூலைக்கு வேண்டுமானாலும் பொருட்களை விற்பனை செய்யும் திறன் படைத்த தொழில்நுட்பமாக விளங்குகிறது. உலக அளவில் விற்பனை செய்யும் வாய்ப்பு கடைக்கோடியில் உள்ள சாதாரண குடிமகனுக்கும் கிடைக்கிறது என்றால் அது ஆன்லைன் விற்பனையில் வளர்ச்சியே காரணம். ஆர்வமுள்ள சில வணிகர்களை உலக அளவில் நட்பு வைத்துக் கொண்டு உங்களது பொருட்களையும் அவர்கள் வலைதளத்தில் விற்க முடியும்.

5) எளிதான மாற்றங்களுக்கு உகந்ததாக ஆன்லைன் விற்பனை உள்ளது 

ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை சேர்த்து வைத்த பிறகு உங்களது வணிகத்தில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் செய்து வேறு வகையான வணிகத்திற்கு மாறவேண்டும் என்றால் பெரும் இழப்பை நேரிடையாக சந்திக்கத் தேவையில்லை. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ற பலவிதமான பணபரிமாற்ற வசதிகளை உங்களது ஆணையத்தில் ஈடுபடுத்துதல் எளிதானது. உங்களது இ-காமர்ஸ் வெப்சைட்டில் உள்ள பொருட்களை எளிதாகவும் விரைவாகவும் இணைக்கவும் நீக்கவும் முடியும். ஒரு வணிக நிறுவனத்தை கடை வைத்து செய்பவர்களால் 24 மணி நேரமும் திறந்து வைத்திருப்பது என்பது சாத்தியமில்லாத காரியம். ஆனால் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விற்பனை நேரம் என்ற ஒரு குறிப்பிட்ட கால அளவே கிடையாது. ஆன்லைன் வணிகத்தின் இதர சிற்சில நன்மைகள் என்னவென்றால் கடைக்கு வேலையாட்களை வைத்து அவர்களுக்கு சம்பளமாக கொடுக்கும் செலவு மிச்சம், ரெஃபரன்ஸ் பாயிண்ட் முறைப்படி புதிய வாடிக்கையாளர்களை பெறுவது எளிது போன்றவையாகும்.

ஆன்லைன் விற்பனை வணிகத்தில் உள்ள தீமைகள்  

ஆன்லைன் தொழில் ஆரம்பிக்கும் நபர்களில் உலகளவில் உள்ள 90 சதவீதமான மக்கள் தோல்வியை தழுவுகிறார்கள் என்பதிலிருந்தே நமக்கு இதில் பலவிதமான சிக்கல்கள் மற்றும் வணிகர்களுக்கு தீங்குகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தொழில் தொடங்கும்போது இந்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்து ஆன்லைன் தீமைகளைக் களைந்து எவ்வாறு வெற்றி பெறுவது என்ற திட்டமிடுதல் செய்த பிறகு இறங்குவது நல்லது.

1) வணிகருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நம்பிக்கையான உறவு இருப்பதில்லை 

வணிக வளாகத்தில் ஒரு சிறிய கடை வைத்து நடத்துபவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் எந்த நேரத்திலும் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உதவி மனப்பான்மையுடன் வணிகம் செய்யும் வாய்ப்புகள் இருந்தது. அத்தகைய உதவி மனப்பான்மை இந்த ஆன்லைன் வணிக நடைமுறையில் எள்ளளவும் இருப்பதில்லை என்பதே உண்மை. வாடிக்கையாளர்களுக்கு தகுந்த உபசரிப்பு கொடுத்து கடையில் செய்யப்படும் வியாபாரத்தினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியை இந்த ஆன்லைன் வணிகம் கொடுப்பதில்லை. இத்தகைய வணிகம் ஒரு இயந்திரத்தனமான செயல்பாட்டு வாழ்க்கை முறைக்கே கொண்டு சென்று கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர் தாங்கள் அழைத்து வரும் குழந்தைகளுக்கு வணிக நிறுவன முதலாளி ஒரு சிறிய இனிப்பு வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இத்தகைய ஆன்லைன் விற்பனையின் சிக்கலாக உள்ளது.

2) உலக அளவில் தொழில் போட்டியாளர்களை உருவாக்குகிறது 

முந்தைய காலகட்டத்தில் ஒரு சிறு நகரத்தின் வீதியில் ஒரு கடையை நிறுவ வேண்டும் என்றால் அதை சுற்றியுள்ள ஒரு இரண்டு மூன்று கடைகளை மட்டும் சமாளித்து அவர்களுக்கு ஈடான விலையை உங்கள் கடையில் விற்கும் போது நீங்களும் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த உலக சந்தை மயமாக்கல் காரணத்தினால் உலகத்தில் உள்ள அனைத்து விதமான சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களிடம் போட்டிபோட்டுக்கொண்டு நடத்துவதாக உள்ளது. குறிப்பாக நாம் முன்பே சொன்னது போல் ஆன்லைன் பிசினஸ் என்றால் பல லட்சக் கணக்கான இணையதளங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் விற்பனை தளமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மட்டுமே உள்ளது. ஒரு சிறு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட உங்களால் இத்தகைய பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு வெற்றி அடைய முடியும் என்பது மிகக் குறைந்த சாத்தியமாக இருப்பதால்தான் 90% வர்த்தகர்கள் இதில் தோல்வியுற்று திரும்புகிறார்கள்.

3) ஏமாற்று மற்றும் மோசடி செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது 

ஆன்லைன் விற்பனை சிக்கல்களில் மிக முக்கியமாக கருதப்படுவது பல புதிய ஏமாற்றுப் பேர்வழிகள் பொருட்களின் அம்சத்தை தவறாக உள்ளீடு செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டுவிடுகின்றனர். இவ்வாறு நேரடி பரிசோதனை இல்லாமல் வாடிக்கையாளர்கள் வாங்கி ஏமாறுவது மற்ற நேர்மையான வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய தொழில் பாதிப்பை தவிர்ப்பதற்காக ரிட்டர்ன் வசதி செய்து பொருள் விற்கும் போது, சில ஏமாற்று பேர்வழிகள் பொருளை வாங்கி உபயோகித்து விட்டு ரிட்டன் செய்யும் இறுதி நாளன்று பொருளின் தரம் சரியில்லை என்று திருப்பி விட்டு விடுகிறார்கள். சில சமூக நயவஞ்சகர்கள் தவறான தகவல்களை அளித்து பொருட்களை ஆர்டர் செய்துவிடும் செய்திகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொருள் வாடிக்கையாளரிடம் சென்று சேரும் வரை நமது பொறுப்பில் இருப்பதால் பேக்கேஜ் மற்றும் போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் நாம் பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். 

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.